சென்னையில் பைக்ரேஸில் ஈடுபட்டவர்கள் கைது

 


*♦சென்னையில் பைக் ரேஸ் நடத்திய 100 இளைஞர் மீது வழக்கு... பெற்றோரை எச்சரித்த போலீஸ்*


*📍சென்னையில், பிரதான சாலைகளில் பைக் ரேசில் ஈடுபட்ட, 100 வாகனங்களை பறிமுதல் செய்து, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.*


*📍சென்னையில், விடுமுறை நாட்களில், காமராஜர் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, டி.ஜி.எஸ்., தினகரன் சாலை உள்ளிட்ட சாலைகளில், இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபட்டு வருகின்றனர்.* 


*📍அவர்களை, அவ்வப்போது போலீசார் பிடித்து, நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, ராதாகிருஷ்ணன் சாலையில், இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற மெரினா போலீசார், ரேசில் ஈடுபட்ட, 63 பேரை மடக்கி பிடித்தனர்.*


*📍பிடிபட்ட வாகன ஓட்டுனர்கள் மீது, வழக்கு பதிவு செய்த போலீசார், வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.ரேசில் ஈடுபட்ட இளைஞர்களின், பெற்றோரை அழைத்து, போலீசார் எச்சரித்தனர்.*


*📍மேலும், அண்ணா சாலையில், பைக் ரேசில் ஈடுபட்ட, 37 வாகன ஓட்டுனர்கள் மீது, அண்ணா சாலை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.*


*📍பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை தினம் என்பதால், தினசரி இரவு நேரங்களில், முக்கிய பிரதான சாலைகளில் பைக் ரேஸ் நடப்பது வாடிக்கையாகிவிட்டது.* 


*📍போலீசார், சிறப்பு குழுக்களை அமைத்து கண்காணித்து, இதை தடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.*


 


Comments