தேதி
3/12/2025
🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷
*குறள்* : *537*
அரியவென் றாகாத இல்லைபொச் சாவாக்
கருவியாற் போற்றிச் செயின்.
மறவாமை என்னும் கருவிகொண்டு (கடமைகளைப்) போற்றிச் செய்தால், செய்வதற்கு அரியவை என்று ஒருவனால் முடியாத செயல்கள் இல்லை.
பேனாமுள் Karthick
✍️ *டிச-03*
*பெட்ரோல் விலை*-100.80
*டீசல் விலை*-92.39
*சி.என்.ஜி* - 91.50
பேனாமுள் Karthick
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
*நிப்டி : 26032.20*
*பேங்க் நிப்டி : 59273.80*
*சென்செக்ஸ் : 85138.27*
பேனாமுள் Karthick
✍️ *தங்கம் விலை*
*24 Kதங்கம்/ g. : ₹ 12983*
*22 Kதங்கம்/ g. : ₹ 11905*
*வெள்ளி /g : ₹ 196.00*
பேனாமுள் Karthick
✍️ *ரஷிய அதிபர் புதின் நாளை இந்தியா வருகை*
டெல்லியில் நடைபெற உள்ள இந்தியா-ரஷியா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷியா அதிபர் புதின் நாளை (வியாழக்கிழமை) இந்தியா வருகிறார்.
2 நாள் பயணமாக டெல்லி வரும் புதின் பிரதமர் மோடி ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
பேனாமுள் Karthick
✍️ *வீட்டு வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்ய வேண்டும்: விரைவில் நடைமுறை*
வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025 விரைவில் அமலுக்கு வர இருக்கிறது. வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025-ன் படி வாடகைக்கு குடியேறுவோர் மற்றும் வீடுகளை வாடகைக்கு விடுவோருக்கு புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
பேனாமுள் Karthick
✍️ *ரயிலில் கற்பூரம் ஏற்றினால் 3 ஆண்டுகள் சிறை*
சபரிமலை செல்லும் பக்தர்கள் சிறப்பு ரயில்களில் பயணிக்கும்போது விளக்கு மற்றும் கற்பூரங்களை ஏற்றி வைத்து வழிபடுவதை, தவிர்க்க வேண்டும்.
மீறினால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே பாதுகாப்பு படை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *முதல்வருடன் காங்.குழு இன்று சந்திப்பு*
வரும் சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக அமைத்துள்ள காங்கிரஸ் குழு முதல்வர் ஸ்டாலினை இன்று சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *சென்ட்ரல் - அரக்கோணம் இரவு ரயில் சேவை குறைப்பு*
அரக்கோணம் ரயில்வே பணிமனையில் மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளதால் சென்ட்ரல் - அரக்கோணம் இரவு 10:55 மணி ரயில் இன்றும் 6ம் தேதியில் திருவாலங்காடு வரை மட்டுமே இயக்கப்பட உள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது*
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. 2,668 அடி உயரமுள்ள மலை மீது இன்று மாலை மகாதீபம் ஏற்றப்படவுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *ஓமியோபதி மருத்துவ கல்லூரிகளில் சேர 2ம் கட்ட மாணவர் சேர்க்கை*
ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் சேர 2ம் கட்ட மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.ஏ.எம்.எஸ், பி.எஸ்.எம்.எஸ், பி.யு.எம்.எஸ், பி.எச்.எம்.எஸ் மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான தகவல் தொகுப்பேட்டினை www.tnhealth.tn.gov.in www.tnayushselection.org என்ற வலைதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பம் இன்றும், நாளையும் பதிவு செய்யலாம்.
பேனாமுள் Karthick
✍️ *அச்சக பணியாளர்கள் குடியிருப்பு திறப்பு*
தண்டையார்பேட்டை காமராஜர் நகரில் கட்டப்பட்டுள்ள அரசு அச்சக பணியாளர்கள் குடியிருப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
பேனாமுள் Karthick
✍️ *காசி தமிழ் சங்கமம் 4.0 தொடக்கம்*
வாரணாசி: காசி தமிழ் சங்கமம் 4.0 நேற்று தொடங்கியது.
பேனாமுள் Karthick
✍️ *ரயில் ஓட்டுநர்கள் போராட்டம் தொடங்கியது*
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் ஓட்டுநர்கள் 48 மணி நேரம் உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று துவக்கினர்.
பேனாமுள் Karthick
✍️ *நவம்பர் மாத ரேஷன் பொருட்கள் இம்மாதம் சேர்த்து தர முடிவு*
கனமழையால் கடந்த மாதம் ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் வாங்காத கார்டுதார்களுக்கு இம்மாதம் பொருட்களை சேர்த்து வழங்க உணவுத்துறை முடிவு செய்துள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *குப்பையில் வீசப்பட்ட 25 சவரன் மீட்பு*
மதுரை : மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்த 25 சவர நகைகளை விவசாயி தன் தலையணைக்குள் வைத்து பாதுகாத்து வந்த நிலையில் அதை குடும்பத்தினர் குப்பையில் வீசியபின் தூய்மை பணியாளர்கள் உதவியுடன் நகையை மீட்டுள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *சிபிஎஸ்சி பள்ளியில் வந்தே மாதரம் நிகழ்ச்சி நடத்த உத்தரவு*
சிபிஎஸ்சி பள்ளிகளில் அடுத்த ஆண்டு நவம்பர் வரை வந்தே மாதரம் பாடல் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்த இயக்குனர் பிரக்யாசிங் உத்தரவிட்டுள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *மின் விபத்து ஏற்பட்டால் ஒரே நாளில் இழப்பீடு வழங்க அறிவுரை*
மின்விபத்தில் சிக்கி உயிரிழப்பு போரின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையை ஒரே நாளில் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி தலைமை பொறியாளர்களை மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *மின்தடை புகார்களை தெரிவிக்கலாம்*
மின்தடை குறித்த புகார்களுக்கு 24 மணி நேரமும் 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *முன்னாள் கடற்படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம்*
கடலோர பாதுகாப்பு குழுமத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு முன்னாள் கடற்படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
விண்ணப்பதை
கடலோர பாதுகாப்பு குழுமம் காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலக வளாகம்,
டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர் சென்னை-4
என்ற முகவரிக்கு டிசம்பர் 17ஆம் தேதிக்குள் அஞ்சல் மூலம் அனுப்பலாம்.
பேனாமுள் Karthick
✍️ *அம்பத்தூர் மண்டல அலுவலகம் முற்றுகை*
அம்பத்தூர் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேனாமுள் Karthick
✍️ *2-வது போட்டி: இந்தியா-தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல்*
2-வது ஒரு நாள் போட்டி சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.
செய்தி
*பேனாமுள் பாடி பா.கார்த்திக்*