தேதி
6/12/2025
🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷
*குறள்* : *540*
உள்ளிய தெய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளிய துள்ளப் பெறின்.
ஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி (சோர்வில்லாமல்) இருக்கப் பெற்றால், அவன் கருதியதை அடைதல் எளிதாகும்.
பேனாமுள் Karthick
✍️ *டிச-06*
*பெட்ரோல் விலை*-100.80
*டீசல் விலை*-92.39
*சி.என்.ஜி* - 91.50
பேனாமுள் Karthick
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
*நிப்டி : 26186.45*
*பேங்க் நிப்டி : 59777.20*
*சென்செக்ஸ் : 85712.37*
பேனாமுள் Karthick
✍️ *தங்கம் விலை*
*24 Kதங்கம்/ g. : ₹ 13065*
*22 Kதங்கம்/ g. : ₹ 11980*
*வெள்ளி /g : ₹ 196.00*
பேனாமுள் Karthick
✍️ *இலங்கை மக்களுக்கு 950 டன் நிவாரண பொருட்கள்: முதல்வர் இன்று அனுப்பி வைக்கிறார்*
இலங்கை மக்களுக்கு தமிழக அரசு சார்பில் சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் இருந்து கப்பல் மூலம் நிவாரண பொருட்கள் இன்று (சனிக்கிழமை) அனுப்பி வைக்கப்பட உள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *இன்று பாபர் மசூதி இடிப்பு தினம்: தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு*
மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ன
பேனாமுள் Karthick
✍️ *பான் மசாலாவுக்கு கூடுதல் வரி விதிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்*
பான் மசாலா பொருட்கள் தற்போது 40 சதவீதம் ஜி.எஸ்.டி.யின் கீழ் வகைப்படுத்தப்பட்டு உள்ளது என்று நிர்மலா சீதாராமன் கூறினார்
பேனாமுள் Karthick
✍️ *18 வயதை கடந்தோர் ஒன்றாக வாழலாம்*
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் முழு சம்மதத்துடன் திருமணம் செய்யாமல் லிவிங் டு கெதர் முறையில் ஒன்றாக வாழ உரிமை உண்டு என ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.
பேனாமுள் Karthic
✍️ *45 வயதான பெண்களுக்கு லோயர் பெர்த் கிடைக்க ஏற்பாடு*
டிக்கெட் முன் பதிவு செய்யும் போது மூத்த குடிமக்கள் 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண் பயணியருக்கு ரயிலில் லோயர் பெர்த் எனப்படும் கீழ் படுக்கை வசதி தானாகவே கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *எக்ஸ் நிறுவனத்துக்கு ரூ.1,259 கோடி அபராதம்*
தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான எக்ஸ் சமூக ஊடக நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஒன்றிய ஒழுங்குமுறை ஆணையம் 1,259 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *முதல்வர் இன்று இரவு மதுரை பயணம்*
மதுரை - தொண்டி சாலையில் நெடுஞ்சாலைத் துறை வாயிலாக 150 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்க உள்ளார். அங்கு நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார்.
பேனாமுள் Karthic
✍️ *37 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்*
டில்லி மும்பை உட்பட பல்வேறு வழித்தடங்களில் செல்லும் 37 விரைவு ரயில்களில் கூடுதலாக ஏசி, ஸ்லீப்பர் பெட்டிகள் இன்று முதல் இணைத்து இயக்கப்பட உள்ளன.
பேனாமுள் Karthick
✍️ *ஓட்டுப்பதிவு மிஷின்களில் சோதனை*
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் கருவிகளை இயக்குவது தொடர்பான பயிற்சி சென்னையில் நேற்று நடந்தது.
பேனாமுள் Karthick
✍️ *அல்வா விற்பனை 6 கடைகள் மூடல்*
திருநெல்வேலிக்கு வரும் ஐயப்ப பக்தர்களை ஏமாற்றி போலியான ஒரே பெயரை பயன்படுத்தி அல்வா விற்பனை செய்த 6 கடைகளை மூடி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
பேனாமுள் Karthick
✍️ *பிரதமரிடம் ஆலோசிக்கலாம்*
தேர்வெழுதுவது குறித்த ஆலோசனைகளை பிரதமர் மோடியிடம் இருந்து பெறும் வகையிலான பரிக் ஷா பே சர்ச்சா நிகழ்ச்சியில் பங்கேற்க ஆர்வமுள்ள மாணவர்கள் வரும் ஜன.11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
https://innovateindia.mygov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் 6 வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ - மாணவியர், அவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் தங்களின் கேள்விகளை அனுப்பலாம்.
பேனாமுள் Karthick
✍️ *லாரி குடிநீர் விலை உயர்வு*
அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக பயன்பாட்டுக்கு முன்பதிவு செய்து பெறப்படும் குடிநீர் லாரி நீரின் விலையை சென்னை குடிநீர் வாரியம் உயர்த்தி உள்ளது.
6,000 மற்றும் 9,000 லிட்டர் லாரி தண்ணீரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
12,000, 18,000 லிட்டர் லாரி குடிநீரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
பேனாமுள் Karthick
✍️ *வெள்ள பாதிப்பு நிவாரணம் ரூ.5000 வழங்க அரசு முடிவு*
மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள திருவள்ளூர் மற்றும் வடசென்னைக்கு 5000 ரூபாய் நிவாரணம் வழங்குவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.
பேனாமுள் Karthick
✍️ *ஆவடியில் ஆக்கிரமிப்பு அகற்றம்*
நேற்று மதியம் ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் பட்டாபிராம் தெற்கு பஜாரில் உள்ள மழைநீர் வடிகாலை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கறிக்கடை செருப்பு கடை ஒரு காலி கடை என 10க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மழை நீர் வெளியேற வழிவகை செய்தனர்.
பேனாமுள் Karthick
✍️ *தி.நகரில் நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றம்*
தி.நகர் நடேசன் பூங்காவை சுற்றியுள்ள நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
பேனாமுள் Karthick
✍️ *துாய்மை பணியாளர்கள் கைது*
பிராட்வே குறளகம் என்.எஸ்.சி.போஸ் சாலையில் நேற்று 800 துாய்மை பணியாளர்கள் திரண்டனர்.
பேரணியாக செல்ல முயன்ற அவர்களை 300க்கும் மேற்பட்ட போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 15 பேருந்துகளில் ஏற்றி ராயபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அவர்களை தங்கவைத்து மாலையில் விடுவித்தனர்.
பேனாமுள் Karthick
✍️ *லலிதா சஹஸ்ரநாம பாராயணம் நிகழ்ச்சி*
மயிலாப்பூர் வெங்கடேஷ் அக்ரஹாரம் சாலையில் உள்ள வேதாந்த தேசிகர் அரங்கில் ஸ்ரீ வித்ய கோடி குங்குமார்ச்சனை மகா யாகம் என்ற லலிதா சஹஸ்ரநாம பாராயணம் செய்யும் இரு நாள் நிகழ்ச்சி துவங்கியது.
காலை 8:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை நடக்கிறது.
பேனாமுள் Karthick
✍️ *வீடு வாங்குவோர் பயனடைய கண்காட்சி*
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வீடு வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களின் தேடலுக்கு உதவும் வகையில் நம்ம சென்னை பிராப்பர்டி பேர் என்ற பெயரில் வீட்டுவசதி கண்காட்சி நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் நேற்று துவங்கியது.
5 லட்சம் ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரை பல்வேறு விலைகளில் வீடு மனை திட்ட விபரங்கள் கிடைக்கும்.
நாளை வரை நடக்கும் இந்த கண்காட்சியை காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை மக்கள் பார்வையிடலாம்.
பேனாமுள் Karthick
✍️ *ரயில் பாதைகளில் வீடியோ எடுத்தால் 3 ஆண்டு சிறை*
ரயில் நிலையங்கள் பாதைகளில் வீடியோ எடுத்தால் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *தன்னார்வலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி*
சென்னையில் சங்கரா கண் மருத்துவமனை அறங்காவலர் குழு சார்பில் தன்னார்வலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று காலை 10:30 மணிக்கு நடக்கிறது.
சென்னை பம்மல் பகுதியில் உள்ள சங்கரா கண் மருத்துவமனையில் நடக்கிறது.
பேனாமுள் Karthick
✍️ *சென்னை புத்தகக்காட்சி*
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், ஜன.7ம் தேதி 49வது சென்னை புத்தக்காட்சி துவங்க உள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *திருவண்ணாமலையில் 14ம் தேதி திமுக இளைஞரணி சந்திப்பு நிகழ்ச்சி*
திமுக இளைஞர் அணியின் வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு வரும் 14ம் தேதி மாலை 4 மணிக்கு திருவண்ணாமலை கலைஞர் திடலில் நடக்கிறது. இதில் முதல்வர் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்
பேனாமுள் Karthick
✍️ *சிறப்பு மலை ரயில் சேவை*
கிறிஸ்துமஸ் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊட்டி- மேட்டுப்பாளையம், குன்னூர்- ஊட்டி, ஊட்டி- கேத்தி இடையே சிறப்பு மலை ரயில் வரும் 25ம் தேதி முதல் ஜனவரி 26ம் தேதி வரை இயக்கப்படுகிறது.
பேனாமுள் Karthick
✍️ *மறுகூட்டல் விண்ணப்பிக்க 8ம் தேதி வரை அவகாசம்*
தொடக்க கல்வி பட்டயத் தேர்வுக்கான விடைத்தாள் நகல்கள் மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்ய 8ம் தேதி வரை அவகாசம் அளித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு சட்ட விதிகள் உருவாக்கம்*
கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு சட்ட விதிகளை உருவாக்கம் செய்து தமிழக அரசு அரசிதழில் வெளியீடு செய்துள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *காவல்துறை பறிமுதல் செய்த வாகனங்கள் டிச.22, 23ல் பொது ஏலம்*
48 வாகனங்கள் வரும் 22ம் தேதி 11.00 மணிக்கு மதுரையிலும் மற்றும் 24 வாகனங்கள் 23ம் தேதி 11.00 மணிக்கு திருச்சியிலும் பொது ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏலம் எடுக்க விரும்புவோர் 07.12.2025 ம் தேதி முதல் 21.12.2025 ஆம் தேதி வரை திருச்சி (9498158708), கன்னியாகுமரி (9444580750), தேனி (9788924045), திண்டுகல் (7904065255), சிவகங்கை (8300063466), மதுரை (9585511010), நாகப்பட்டினம் (7904548453), கோயம்பத்தூர் (9498173282), சேலம் (7200008025), மற்றும் விழுப்புரம் (9894378470) ஆகிய போதை பொருள் நுண்ணறிவு பிரிவு அலுவலகங்களில் நேரடியாக சென்று பார்வையிட்டு கொள்ளலாம்.
பேனாமுள் Karthick
✍️ *மு.க.ஸ்டாலின் சுற்றுச் சூழல் சுற்றுலா பூங்கா திறப்பு*
துணை முதல்வர் உதயநிதி திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் நெடுஞ்சாலைத்துறையால் அமைக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் சுற்றுச் சூழல் சுற்றுலா பூங்காவினை நேற்று திறந்து வைத்தார்.
பேனாமுள் Karthick
✍️ *புதுச்சேரியில் டிசம்பர் 9 விஜய் பொதுக்கூட்டம்*
தவெக தலைவர் விஜய் வரும் 9 தேதி புதுச்சேரியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *நாஞ்சில் சம்பத் தவெகவில் இணைந்தார்*
நாஞ்சில் சம்பத் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார்.
பேனாமுள் Karthick
✍️ *நடைப்பயண கொடியை அறிமுகம் செய்தார்: வைகோ*
திருச்சியில் தொடங்க உள்ள தனது நடைப்பயணத்துக்கான கொடியை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் கொடியை அறிமுகம் செய்தார்.
பேனாமுள் Karthick
✍️ *100 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு : நாம் தமிழர் கட்சி*
நாம் தமிழர் கட்சி சார்பில் முதல் கட்டமாக 100 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *ரிசர்வ் வங்கி 0.25% வங்கி வட்டி விகிதம் குறைப்பு*
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 0.25% குறைக்கப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்துள்ளது.
அதாவது ரெப்போ வட்டி விகிதம் 5.50 சதவீதத்திலிருந்து 5.25 சதவீதமாக குறைந்துள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *கண்ணாடி பொருள் தொழிற்சாலை முதல்வர் திறந்து வைத்தார்*
ஸ்ரீபெரும்புதூர் பிள்ளைப்பாக்கம் சிப்காட் பகுதியில் ரூ.1003 கோடியில் மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடி பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் நேற்று திறந்து வைத்தார்.
பேனாமுள் Karthick
✍️ *அம்பத்தூரில் மின்கம்பி உரசியதால் கன்டைனர் லாரி தீப்பிடித்து எரிந்தது*
அம்பத்தூர் அடுத்த பட்டறைவாக்கம் பகுதியில் உள்ள 5 வது பட்டாலியன் போலீஸ் குடியிருப்பு அருகில் மின் கம்பியில் உரசியதால் கண்டைனர் லாரி முன்பகுதி தீப்பிடித்து எரிந்தது. மேலும் சாலை ஓரம் நடந்து சென்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலியானார்.
பேனாமுள் Karthick
✍️ *இம்மாத இறுதியில் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு*
வடகிழக்கு பருவமழை காலத்தின் 3-வது புயல் சின்னம் தெற்கு வங்கக்கடலில் 23-ந்தேதிக்கு பிறகு உருவாவதற்கான சாதகமான சூழல் நிலவி வருகிறது.
பேனாமுள் Karthick
✍️ *முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சென்னையில் தொடங்கியது*
தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சென்னையில் நேற்று தொடங்கியது.
பேனாமுள் Karthick
✍️ *இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை*
கோப்பையை வெல்வதற்கான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
செய்தி
*பேனாமுள் பாடி பா.கார்த்திக்*