தேதி
4/12/2025
🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷
*குறள்* : *538*
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யா
திகழ்ந்தார்க் கெழுமையும் இல்.
சான்றோர் புகழ்ந்து சொல்லியச் செயல்களைப் போற்றிச் செய்யவேண்டும், அவ்வாறு செய்யாமல் மறந்து சோர்ந்தவர்க்கு ஏழுப் பிறப்பிலும் நன்மை இல்லை.
பேனாமுள் Karthick
✍️ *டிச-04*
*பெட்ரோல் விலை*-100.80
*டீசல் விலை*-92.39
*சி.என்.ஜி* - 91.50
பேனாமுள் Karthick
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
*நிப்டி : 25986.00*
*பேங்க் நிப்டி : 59348.25*
*சென்செக்ஸ் : 85106.81*
பேனாமுள் Karthick
✍️ *தங்கம் விலை*
*24 Kதங்கம்/ g. : ₹ 13054*
*22 Kதங்கம்/ g. : ₹ 11970*
*வெள்ளி /g : ₹ 201.00*
பேனாமுள் Karthick
✍️ *வீட்டில் இருந்தபடியே பத்திரப்பதிவு புதிய திட்டம் விரைவில் தொடக்கம்*
புதிய அடுக்குமாடி குடியிருப்பு வீடு மனை பிரிவு வாங்க விற்க வீட்டில் இருந்தபடியே பத்திரப்பதிவு செய்யலாம் இதற்கான புதிய திட்டம் தமிழக அரசால் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *கவுன்டர்களில் நேரடி தக்கல் டிக்கெட் பெற விரைவில் ஓ.டி.பி. முறை*
ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள கவுன்டர்களில் நேரடியாக தக்கல் டிக்கெட் வாங்குபவர்களின் மொபைல் போனுக்கு ஓ.டி.பி.எனப்படும் ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் வழங்கும் முறையை அறிமுகப்படுத்த ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க மறுத்தால் புகார் அளிக்கலாம்*
மருத்துவ பயனாளர்கள் காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்தால் 104 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *தொழில் முனைவோர் தங்கி பயில புதிய தங்கும் விடுதி*
சென்னை கிண்டியில் தொழில் முனைவோர் சான்றிதழ் படிப்பை தங்கி பயில ரூ.2.34 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தங்கும் விடுதியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று திறந்து வைத்தார்.
பேனாமுள் Karthick
✍️ *ஓராண்டு தேர்வுக்கான கால அட்டவணை வெளியிட்டது TNPSC*
2026ம் ஆண்டுக்கான ஓராண்டு தேர்வு அட்டவணையை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது
பேனாமுள் Karthick
✍️ *தூயமல்லி அரிசி, கவுந்தபாடி நாட்டு சர்க்கரைக்கு புவிசார் குறியீடு*
தூயமல்லி அரிசி மற்றும் கவுந்தபாடி நாட்டு சர்க்கரைக்கு வேளாண் விளைபொருட்களுக்கு தனித்துவ புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *கால அவகாசம் நீட்டிப்பு*
தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் கட்டணம் இன்றி உறுப்பினராக சேர்வதற்கான கால அவகாசத்தை 2026 மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் விடுவிப்பு*
தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 2023-24ம் ஆண்டில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை ஈடுசெய்யும் வகையில் ரூ.424 கோடியே 98 லட்சம் தொகையை விடுவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பணியாளர்கள் நாளை ஆர்ப்பாட்டம்*
டாஸ்மாக் தொழிற்சங்ககளின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி தீவிரம்*
சென்னையில் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்தததை தொடர்ந்து மழைநீரை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி தீவிரம் காட்டிருவகிறது. இதற்காக 22 ஆயிரம் ஊழியர்களை களம் இறக்கியுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *ரஷ்ய அதிபர் புடின் இன்று டெல்லி வருகை*
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் 2 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று டெல்லி வர இருக்கிறார். இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு டெல்லி வருகிறார்.
பேனாமுள் Karthick
✍️ *தேர்தல் கமிஷன் அறிவுறுத்தல்*
கடைசி நாள் வரை காத்திருக்காமல் வாக்காளர் கணக்கிட்டு படிவுகளை உடனே சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *ஸ்டான்லி மருத்துவமனையில் பரபரப்பு*
சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஸ்டாலின் அரசு மருத்துவமனையில் உள்ள பி பிரிவில் சுவற்றில் ஒட்டப்பட்டு இருந்த டைல்ஸ் கற்கள் பெயர்ந்து நோயாளிகளின் மீது விழுந்ததில் மூன்று பேர் காயமடைந்தனர்.
பேனாமுள் Karthick
✍️ *திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றம்*
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 2668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் நேற்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது.
பேனாமுள் Karthick
✍️ *9 ஆம்தேதி வரை மழை தொடர வாய்ப்பு*
வங்கக் கடலில் சென்னை அருகே நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி நோக்கி நகர்ந்துள்ளது. இதன் காரணமாக வட மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *ஆன்லைன் படிப்புக்கு அனுமதி தரும் விதிகளில் பல்கலைகள் தளர்வு*
பல்கலைகள் தங்கள் கல்வி நிறுவனங்களில் ஆன்லைன் மற்றும் தொலைதூர வழியில் தொழில் நுட்ப பட்டப் படிப்புகள் துவங்க வேண்டுமானால் அப்பல்களை இரண்டு கல்வி ஆண்டுகளை நிறைவு செய்திருக்க வேண்டும் என்ற நிலையில்
2026-27ஆம் கல்வி ஆண்டு முதல் இந்த விதியில் தளர்வு வழங்கி ஒரு கல்வியாண்டு நிறைவு செய்திருந்தால் போதுமானது என ஏ.ஐ.சி.டி.இ கூறியுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *அமித்ஷா தமிழகம் வருகை*
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 7 ஆம்தேதி தமிழகம் வருகிறார்.
பேனாமுள் Karthick
✍️ *விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலர்கள் பட்டியல் டிச.6ல் வெளியீடு*
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலர்கள் பட்டியல் நாளை மறுநாள் அம்பேத்கர் நினைவு நாளான டிசம்பர் 6ல் வெளியிடப்படும் என அக்கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *பிரதமரின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்*
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர் மரபினர் பிரிவை சேர்ந்த 9ஆம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை பயிலும் மாணவ மாணவியர் பிரதமரின் கல்வித் தொகைக்கு வரும் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
https://scholarship.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.
பேனாமுள் Karthick
✍️ *பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ மாணவியர் பெயர் பட்டியல் திருத்தங்கள் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு*
தற்போது வரும் 6,7 ஆகிய 2 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் மாணவர்கள் பெயர்களை சேர்க்க நீக்க திருத்தம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *வாக்காளர் பட்டியல் டிசம்பர் 16 வெளியிட முடிவு*
தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் கணக்கெடுப்பு பணி வரும் 11 ம்தேதி நிறைவடையும். வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 16ஆம் தேதி வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *செல்லப் பிராணிகள் உரிமம் பெற அவகாசம் நீட்டிப்பு*
செல்லப் பிராணிகள் உரிமம் பெற வரும் 14ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *சைபர் வழக்குகளில் ரூபாய் 2.04 கோடி மீட்பு*
நவம்பர் மாதத்தில் சைபர் கிரைம் குற்றவாளியிடம் இருந்து மீட்கப்பட்ட 2.04 கோடி ரூபாய் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பேனாமுள் Karthick
✍️ *ரூ.16 கோடி இழப்பீடு பெற்ற நபர் கைது*
போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து அரசிடமிருந்து 16 கோடி ரூபாய் இழப்பீடு பெற்ற நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.
பேனாமுள் Karthick
✍️ *பார்வையற்றோர் ஆர்ப்பாட்டம்*
வேலை வாய்ப்பு வழங்க கோரி பார்வை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் 100க்கும் மேற்பட்டோர் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பேனாமுள் Karthick
✍️ *விம்கோ நகர் மெட்ரோ கார் பார்க்கிங் மூடல்*
விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தின் நான்கு சக்கர வாகன நிறுத்தம் பார்க்கிங் பகுதியில் மழைநீர் தேங்கியால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *விம்கோ நகர் மெட்ரோவில் கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்*
விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையத்தில் வணிக நிறுவனங்கள் கடைகள் அமைக்க மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் வெளியிட்டுள்ளது. eprocure.gov.in என்ற இணையதளம் வழியாக ஒப்பந்தம் வாயிலாக இந்த இடம் வழங்கப்படும்.
ஒப்பந்த படிவங்களை டிசம்பர் 18க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு marketing@cmrl.in என்ற
இ-மெயிலில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம்.
பேனாமுள் Karthick
✍️ *அண்ணா நகர் தண்டையார்பேட்டை தூய்மை பணி ஒப்பந்தம் ரத்து*
இரு மண்டலங்களிலும் வழங்க வேண்டிய தூய்மைப் பணிகள் தரமாக அமைக்க வேண்டி உள்ளதால் முன்னதாக தயாரிக்கப்பட்ட ஒப்பந்த ஆவணம் தற்போது நிலவும் தேவைகளுக்கு முறையாக பொருந்தாமல் உள்ளதால் கூறப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து திருத்தப்பட்ட புதிய ஒப்பந்தம் வெளியிடப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *பிக்டெக் தொழிற்சாலை நாளை முதல்வர் திறக்கிறார்*
ஸ்ரீபெரும்புதூர் வட்டம் பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில் ரூ.200 கோடி முதலீட்டில் பிக்டெக் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை நாளை காலை 9 மணியளவில் முதல்வர் திறந்து வைக்கிறார்.
பேனாமுள் Karthick
✍️ *எனது பூத் த.வெ.க பூத் சிறப்பு பயிற்சி தமிழகம் முழுவதும் 6 தேதி நடக்கிறது*
த.வெ.க பூத் நிர்வாகிகளுக்கு சிறப்பு பயிற்சி கட்சி சார்பில் வருகிற 6 மற்றும் 7 தேதி தமிழக முழுவதும் நடைபெற உள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *ராஜீவ் காந்தி மருத்துவமனையில் புதிய நரம்பியல் பிரிவு கட்டிடம் விரைவில் திறப்பு*
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.65 கோடியில் கட்டப்பட்டுள்ள நரம்பில் கட்டிடத்தை முதல்வர் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க உள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *ஆவடியில் நாளை மின் குறைதீர் கூட்டம்*
செயற்பொறியாளர் அலுவலகம், துணை மின் நிலைய வளாகம், எஸ்.எம்.நகர், முருகப்பா பாலிடெக்னிக் அருகில், ஆவடி
நாளை காலை 11:00 மணிக்கு மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம் நடைபெற உள்ளது.
மின்தடை, மீட்டர் பழுது, கூடுதல் மின்கட்டணம் வசூல் உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான குறைகளை மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து மக்கள் பயன்பெறலாம்.
செய்தி
*பேனாமுள் பாடி பா.கார்த்திக்*