தேதி
5/12/2025
🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷
*குறள்* : *539*
இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.
தாம் தம் மகிழ்ச்சியால் செருக்குக் கொண்டு கடமையை மறந்திருக்கும் போது, அவ்வாறு சோர்ந்திருந்த காரணத்தால் முற்காலத்தில் அழிந்தவரை நினைக்க வேண்டும்.
பேனாமுள் Karthick
✍️ *டிச-05*
*பெட்ரோல் விலை*-100.80
*டீசல் விலை*-92.39
*சி.என்.ஜி* - 91.50
பேனாமுள் Karthic
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
*நிப்டி : 26033.75*
*பேங்க் நிப்டி : 59288.70*
*சென்செக்ஸ் : 85265.32*
பேனாமுள் Karthick
✍️ *தங்கம் விலை*
*24 Kதங்கம்/ g. : ₹ 12961*
*22 Kதங்கம்/ g. : ₹ 11885*
*வெள்ளி /g : ₹ 200.00*
பேனாமுள் Karthick
✍️ *2 நாள் அரசு முறைப்பயணமாக இந்தியா வந்தடைந்தார் ரஷிய அதிபர் புதின்*
ரஷிய அதிபர் புதின் 2 நாள் அரசு முறைப் பயணமாக நேற்று மாலை இந்தியா வந்தார். தலைநகர் டெல்லிக்கு வந்த புதினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பேனாமுள் Karthick
✍️ *2-வது புதிய சரக்கு ரெயில் முனையம் தொடக்கம்*
பொன்னேரிக்கு அருகில் உள்ள அனுப்பம்பட்டு கிராமத்தில் 2-வது புதிய சரக்கு ரெயில் முனையம் ரூ.70 கோடியில் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *நினைவூட்டல்: தொழில் துவங்க பெண்கள் விண்ணப்பிக்கலாம்*
ஆண்டுக்கு 20,000 பேருக்கு 10 லட்சம் ரூபாய் வரை வங்கிகளில் கடனுதவி வழங்கப்பட உள்ளது.
உற்பத்தி, சேவை, வணிகம் ஆகிய பிரிவுகளில் தொழில்களை துவங்கலாம்.
விண்ணப்பிக்கும் நபரின் பெயர், ரேஷன் கார்டில் இருப்பதுடன், வயது, 18 முதல், 55க்குள் இருக்க வேண்டும். கல்வி தகுதி கிடையாது.
www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
பேனாமுள் Karthick
✍️ *புதுவையில் விஜய் பொதுக்கூட்டம் போலீஸ் அனுமதி கேட்டு மீண்டும் தவெக மனு*
புதுவை உப்பளம் மைதானத்தில் 9 ஆம் தேதி விஜய் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு போலீஸிடம் தவெக வினர் மீண்டும் மனு கொடுத்துள்ளனர்.
பேனாமுள் Karthick
✍️ *பெண் போலீசாருக்கு தானியங்கி இயந்திரம் மூலம் 5 ரூபாயில் சானிடரி நாப்கின்*
சென்னை பாதுகாப்பு காவல் பிரிவு அலுவலகம் உட்பட 43 இடங்களில் சானிட்டரி நாப்கின் விநியோகிக்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்டது.
சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் இந்த எந்திரத்தின் பயன்பாட்டை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகா நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த எந்திரத்தில் 5 ரூபாய் நாணயத்தை போட்டால் நாப்கின் கையில் கிடைத்துவிடும். இந்த புதிய திட்டத்தின் மூலம் 5900 பெண் போலீசார் மற்றும் அதிகாரிகள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் வெள்ளி கவசம் திறப்பு*
திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜர் கோவிலில் ஆதிபுரீஸ்வரர் மீதான வெள்ளிகவசம் நேற்று திறக்கப்பட்டது. ஆண்டுக்கு 3 நாள் மட்டுமே நடைபெறும் இந்த நிகழ்வில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனர்.
இன்று மற்றும் நாளை பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
பேனாமுள் Karthick
✍️ *வெளிநாட்டு கரன்சியை வீட்டில் இருந்தபடியே மாற்றலாம்*
வெளிநாட்டுப்பயணம் செல்ல விரும்புவோர் வாரத்தின் 7 நாட்களும் வெளிநாட்டு கரன்சியை வீட்டில் இருந்தபடியே பெரும் வசதியை புக் மை போரக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *ஜெயலலிதா- இன்று 9-வது நினைவு தினம்*
1991, 2001, 2011, 2016 என 4 முறை முதலமைச்சர் பொறுப்பை ஜெயலலிதா வகித்தார்.
அவர் இந்த மண்ணைவிட்டு மறைந்து இன்றோடு 9 ஆண்டுகள் ஆனாலும் அ.தி.மு.க. தொண்டர்களால் என்றென்றும் போற்றப்பட்டு வருகிறார்.
பேனாமுள் Karthick
✍️ *பாடியநல்லூர் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர் அகற்றும் பணி: கலெக்டர் பிரதாப் ஆய்வு*
மகாமேரு பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியை, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் நேற்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது, தேங்கியிருக்கும் மழைநீரை உடனுக்குடன் உடனடியாக அகற்றிட வேண்டுமென அங்கிருந்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
செங்குன்றம் அடுத்து பாடியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட மகா மேரு பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. கடந்த 3 நாட்களாக பெய்த மழையால், தாழ்வான பகுதிகளிலும் தெருக்களிலும் மழைநீர் தேங்கி குளம்போல் இருந்ததால், அப்பகுதி மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் பாடியநல்லூர் ஊராட்சி சார்பில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மின் மோட்டார்கள் மூலம் மழைநீர் அகற்றும் பணி விறு விறுப்பாக மேற்கொள்ளப்பட்டது.
பேனாமுள் Karthick
✍️ *6 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் சப் இன்ஸ்பெக்டர்கள் 5 பேருக்கு பதவி உயர்வு*
பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த 5 பேருக்கு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. மற்றும் 6 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்து ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *ஆவடி மாநகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கினார்: அமைச்சர் நாசர்*
மழையால் பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள் நரிக்குறவர்கள் உட்பட 1200 பேருக்கு நிவாரண பொருட்களை
அமைச்சர் சா.மு நாசர் நேற்று வழங்கினார்.
நிகழ்வில் ஆட்சியர் மு.பிரதாப், ஆவடி மேயர் கு.உதயகுமார். துணை மேயர் எஸ்.சூரியகுமார், ஆணையர் ரா.சரண்யா, துணை ஆணையர் மாரிச்செல்வி மண்டல குழு தலைவர் ஜி.ராஜேந்திரன், துப்புரவுஅலுவலர் முகைதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பேனாமுள் Karthick
✍️ *டிச.12 முதல் மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை*
வரும் 12ம் தேதி முதல் இன்னும் கூடுதல் மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
பேனாமுள் Karthick
✍️ *நாளை முதல் தாயுமானவர் திட்டத்தில் ரேஷன்பொருள் விநியோகம்*
தாயுமானவர் திட்டத்தில் நாளை முதல் 10ம் தேதி வரை முதியோர், மாற்றுத் திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *கிளாசிக் செஸ் தொடர்: பிரக்ஞானந்தா முதலிடம்*
லண்டனில் கிளாசிக் செஸ் தொடரில் இங்கிலாந்தின் அமீத் காசி, பிரக்ஞானந்தா தலா 7.0 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர்.
பேனாமுள் Karthick
✍️ *காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்தது: 3 மாவட்டத்தில் மழை நீடிக்கும்*
வட தமிழகத்தில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுவிழந்தது. இதனால் தமிழகத்தில் 3 மாவட்டத்தில் மட்டும் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செய்தி
*பேனாமுள் பாடி பா.கார்த்திக்*