தேதி
8/12/2025
🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷
*குறள்* : *542*
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோனோக்கி வாழுங் குடி.
உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.
பேனாமுள் Karthick
✍️ *டிச-08*
*பெட்ரோல் விலை*-100.80
*டீசல் விலை*-92.39
*சி.என்.ஜி* - 91.50
பேனாமுள் Karthick
✍️ *வந்தே மாதரம் பாடல் விவாதம்: மக்களவையில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்*
வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழா குறித்த விவாதத்தை பிரதமர் மோடி மக்களவையில் இன்று தொடங்கி வைக்கிறார்.
பேனாமுள் Karthick
✍️ *மனித விலங்கு மோதலை தடுக்க குழு அமைத்தது வனத்துறை*
கோவை மாவட்டம் வால்பாறையில் மனித விலங்கு மோதலை தடுப்பதற்கான வழிமுறைகளை பரிந்துரைக்க உயர்நிலைக் குழு அமைத்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் 6.34 கோடி படிவங்கள் பதிவேற்றம்*
தமிழகத்தில் 6.34 கோடி வாக்காளர்களின் விபரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
பேனாமுள் Karthick
✍️ *பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்*
எல்லை பாதுகாப்பு படை மத்திய ரிசர்வ் காவல் படை இந்து திபத்திய எல்லை காவல் படை போன்ற பணியிடங்களுக்கு 18 வயது நிரம்பிய 10-ஆம் வகுப்பு முடித்தோர் https://ssc.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். ஜனவரி 1 விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
பேனாமுள் Karthick
✍️ *சர்வீஸ் சாலையை கட்டாயமாக்க முடிவு*
தியேட்டர்களுடன் கூடிய மால்கள் மற்றும் திருமண மண்டபங்களுக்கு 7மீட்டர் அகல சர்வீஸ் சாலை கட்டுப்பாடு வர உள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *பாரதியார் பிறந்த நாள் விழா பள்ளிகளில் கொண்டாட உத்தரவு*
பாரதியார் பிறந்தநாள் விழாவை வரும் 11ஆம் தேதி வரை கொண்டாடலாம் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *ஜாக்டோ ஜியோ ஸ்டிரைக்*
ஜனவரி 6 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *சேதமான சாலைகளை விரைவாக சீரமைக்க வேண்டும்*
சேதமான சாலைகளை ஜனவரி மாதத்திற்குள் சீரமைக்க வேண்டும் என நெடுஞ்சாலை நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *விடியல் பயணம் விரைவில் வயதான ஆண்களுக்கும்*
60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இலவச பஸ் பயணத் திட்டத்தை அரசு விரைவில் செயல்படுத்த உள்ளது. ஓரிரு மாதங்களில் இது குறித்து அறிவிப்பு வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பேனாமுள் Karthick
✍️ *போலீசார் கையை கடித்த தவெக தொண்டர்*
பாலக்கோட்டில் புதிதாக திறக்கப்பட்ட மதுக்கூடத்தை முற்றுகையிடும் போது அதை தடுத்த போலீஸ்காரரின் கையை தவெக தொண்டர் ஒருவர் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பேனாமுள் Karthick
✍️ *பினோ பேமெண்ட்ஸ் பேங்க் : ஸ்மால் பைனான்ஸ் பேங்க் ஆகிறது*
பினோ பேமென்ட் பேங்க் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் எனப்படும் சிறு நிதி வங்கியாக செயல்பட ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *தூய்மைப் பணியாளர்கள் மருத்துவமனையில் அனுமதி*
இரண்டாம் கட்ட உண்ணாவிரத போராட்டம் கடந்த 1ஆம் தேதி துவங்கப்பட்டது. போராட்டத்தின் 7 வது நாளான நேற்று திருவிக நகர் மண்டலத்தை சேர்ந்த தூய்மை பணியாளர் சரஸ்வதி என்பவர் உடல்நிலை மோசமடைந்து மயங்கியதால் அவர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பேனாமுள் Karthick
✍️ *ஜி எஸ் டி அலுவலகத்தில் தீ*
திருமங்கலத்தில் அமைந்துள்ள ஜிஎஸ்டி கமிஷனர் அலுவலகத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
பேனாமுள் Karthick
✍️ *மாவட்ட கிரிக்கெட் கல்லூரிகளுக்கு அழைப்பு*
மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அம்பத்தூரில் உள்ள மாவட்ட கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் நாளை முதல் பெற்றுக் கொள்ளலாம். 31 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
பேனாமுள் Karthick
✍️ *காளிகாம்பாள் கோவில் ராஜகோபுரம் உயற்றும் பணி*
சென்னை மண்ணடி தம்பு செட்டி தெருவில் உள்ள காளிகாம்பாள் கோவிலின் கிழக்கு ராஜகோபுரத்தை 40 லட்சம் ரூபாயில் உயர்த்தும் பணி நேற்று துவங்கியது.
பேனாமுள் Karthick
✍️ *செல்லப் பிராணிகள் பதிவு*
சென்னையில் உள்ள 7 நாய் இன கட்டுப்பாட்டு மையங்களில் உரிமம் தடுப்பூசி மைக்ரோ சிப் தினமும் பொருத்தப்படுகிறது. வரும் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கடைசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. மக்கள் பயன்படுத்தி கொள்ளவும் என அறிவுறுத்தப்படுகிறது.
பேனாமுள் Karthick
✍️ *தூய்மை பணியாளர்களுக்கு சூடான உணவு*
காலதாமதம் உணவு ஆறிபோவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து வரும் 15ஆம் தேதி முதல் தூய்மை பணியாளர்களுக்கு சூடாக உணவு பரிமாற பெரிய ஹாட்பாக்ஸில் உணவு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *திருத்தணியில் பக்தர்கள் தங்க அடுக்குமாடி கட்டிடம்*
திருத்தணி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இலவசமாக தங்குவதற்கு அடுக்குமாடி கட்டடம் கட்டும் பணி தொடங்கியுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *மாநகராட்சி காப்பகத்தில் மாடுகளை பராமரிக்க விருப்ப மனுக்கள் வரவேற்பு*
சென்னை மாநகராட்சியில் உள்ள நவீன காப்பகத்தில் மாடுகளை பராமரிக்கவும் உணவு வழங்கவும் விருப்பமுள்ள தன்னார்வலர்களிடமிருந்து விருப்ப கடிதங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதேசி விழா டிசம்பர் 19 தொடக்கம்*
ஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதேசி விழா டிசம்பர் 19ஆம் தேதி தொடங்குகிறது. பரமபதவாசல் திறப்பு டிசம்பர் 30-ல் நடைபெறுகிறது.
செய்தி
*பேனாமுள் பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்