12/12/2025 இன்றைய பேனாமுள் பத்திரிகை செய்திகள்
🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷

*குறள்* : *546*
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.

ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின்.

 பேனாமுள் Karthick
✍️  *டிச-12*
*பெட்ரோல் விலை*-100.80
  *டீசல் விலை*-92.39
   *சி.என்.ஜி* - 91.50

 பேனாமுள் Karth
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
*நிப்டி : 25898.55*
*பேங்க் நிப்டி : 59209.85*
*சென்செக்ஸ் : 84818.13*

 பேனாமுள் Karthick

✍️ *தங்கம் விலை*
*24 Kதங்கம்/ g. : ₹ 13070*
*22 Kதங்கம்/ g. : ₹ 11985*
 *வெள்ளி    /g   : ₹ 209.00*

 பேனாமுள் Karthick
✍️ *விஜயை முதல்வராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி: த.வெ.க*

சென்னை - பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் நேற்று மாவட்டச் செயலர்கள் கூட்டம் நடந்தது.

ஊழல் மலிந்த தி.மு.க. ஆட்சியை அகற்றி புதியதோர் தமிழகத்தை சிறப்புற உருவாக்க வேண்டும். அதற்காக விஜயை முதல்வராக ஏற்று அவரது தலைமையை விரும்பி வருவோரை கூட்டணிக்கு அரவணைப்போம். த.வெ.க.வின் கூட்டணி குறித்து அனைத்து இறுதி முடிவுகளையும் எடுக்க கட்சியின் தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *ஆசிட் வீசினால் இனி கொலை முயற்சி வழக்கு*

ஆசிட் வீச்சில் ஈடுபடுபவர்கள் மீது சாதாரண பிரிவுகளின் கீழ் அல்லாமல் இனி கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *SIR படிவம் சமர்ப்பிக்க மேலும் 3 நாள் அவகாசம்*

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். கணக்கெடுப்பு படிவங்களை ஒப்படைக்க வரும் 14ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வரும் 16ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 19ம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *டி.ஜி.பி.யாக அபய்குமார் சிங் பதவியேற்பு*

காவல் துறை படைத்தலைவர் மற்றும் சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி.யாக அபய்குமார் சிங் பொறுப்பேற்றார்.

 பேனாமுள் Karthick
✍️ *8 மாவட்டங்களில் 20 ஊராட்சிகள் புதிதாக உருவாக்கம்*

தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில் 17 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்பட்டு 20 கிராம ஊராட்சிகள் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ளன.

பேனாமுள் Karthick
✍️ *ஏர்டெல் நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு*

டிடிஎச் சேனல் சேவைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த புகாரில் ஏர்டெல் நிறுவனம் அதன் வாடிக்கையாளருக்கு 67 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *டிச.14ம் தேதி அதிகாலை 3 மணி முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம்*

இந்திய கடற்படை மாரத்தானை ஒட்டி டிச.14ம் தேதி அதிகாலை 3 மணி முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ துறையில் பல் சுகாதார நிபுணர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்*

3% விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ துறையில் பல் சுகாதார நிபுணர் பணிக்கான விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

விளையாட்டு வீரர்கள் தங்கள் விண்ணப்பத்தை www.sdat.tn.gov.in ல் பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இணையவழி விண்ணப்பத்தை 06.01.2026 அன்று சமர்ப்பிக்க கடைசி தேதி ஆகும்.

 பேனாமுள் Karthick
✍️ *உதவிப்பேராசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு*

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப்பேராசிரியர் தேர்வு வரும் 27ம் தேதி நடத்தப்பட உள்ளது.

நுழைவுச் சீட்டு (Hall Ticket) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் https://www.trb.tn.gov.in பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *அதிகாலை 3.30 மணிக்கு ராமநாதசுவாமி கோயில் நடை திறக்கப்படும்*

ராமேஸ்வரம்: டிச.16 முதல் ஜன.14ம் தேதி வரை அதிகாலை 3.30 மணிக்கு ராமநாதசுவாமி கோயில் நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *பாமக சார்பில் போட்டியிட டிச.14 முதல் விருப்பமனு: அன்புமணி அறிவிப்பு*

சட்டமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட டிசம்பர் 14 முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும் என அன்புமணி அறிவித்துள்ளார். டிசம்பர் 14 முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்படவுள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *அதிமுக சார்பில் போட்டியிட 15ஆம் தேதி முதல் விருப்பம் மனு*

 சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் 15ஆம் தேதி முதல் விருப்பம் மனு அளிக்கலாம் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

பேனாமுள் Karthick
✍️ *டபுள் டக்கர் பஸ் சோதனை ஓட்டம்*

 டபுள் டக்கர் பஸ் சோதனை ஓட்டம் சென்னை அடையாறில் இருந்து மாமல்லபுரம் வரை கிழக்கு கடற்கரை சாலை வழியாக நடந்தது.

 பேனாமுள் Karthick
✍️ *அம்பத்தூர் மேனாம்பேடு கருக்கு சாலையில் திடீர் பள்ளம்*

 அம்பத்தூர் பகுதியில் மேனாம்பேடு அருகே கருக்கு சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த லாரி சிக்கியது.

 பேனாமுள் Karthick
✍️ *மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்*

 செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்கள் கல்வி உதவித்தொகை பெற இ சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சினேகா தெரிவித்துள்ளார்.

 பேனாமுள் Karthick
✍️ *செல்லப் பிராணிகளுக்கு மூன்று நாட்கள் சிறப்பு முகாம்*

 இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 14 வரை 3 நாட்கள் சிறப்பு முகாம்கள் 8 இடங்களில் நடைபெறுகிறது.

 பேனாமுள் Karthick
✍️ *நாளை குடிநீர் குறை தீர் கூட்டம்*

 சென்னை குடிநீர் வாரியம் சார்பில் குறைதீர்க்க கூட்டம் அனைத்து குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் சனிக்கிழமை டிசம்பர் 13 காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை  நடைபெற உள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *இன்டர்ன்ஷிப் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்*

 டி ஆர் டி ஓ வின் பாதுகாப்பு புவி தகவல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வகத்தில் இன்ஜி-அறிவியல் மற்றும் முதுகலை பட்டதாரிகள் 6 மாத ஊதியத்துடன் இன்டர்ன்ஷிப் பயிற்சி பெறலாம். director.dgre@gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

 பேனாமுள் Karthick
✍️ *ஆவடியில் புதிய சாலை பணி*

 ஆவடியில் மாநகராட்சி 2 மற்றும் 3 வது மண்டலங்களில் உள்ள 13 வார்டுகளில் 81 இடங்களில் சாலைகளை சீரமைக்க ரூ.6.77 கோடியில் புதிய சாலை பணிகளுக்கு அமைச்சர் சா.மு நாசர் நேற்று துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மேயர் கு.உதயகுமார், ஆணையர் ரா.சரண்யா, 
மண்டல குழு தலைவர் ஜி.ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 பேனாமுள் Karthick
✍️ *திருவள்ளூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் நாளை மற்றும் நாளை மறுநாள் சிறப்பு முகாம்*

 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்ய நாளை மற்றும் 14ஆம் தேதி அனைத்து ஓட்டு சாவடி மையத்திலும் சிறப்பு முகாம் நடக்கிறது. 

 வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்ய விரும்புவோர் அதற்குரிய படிவத்தை பூர்த்தி செய்து ஓட்டு சாவடி நிலைய அலுவலர் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலகத்திலும் https://voters.eci.gov.in   என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.

செய்தி
*பேனாமுள் இதழ்*
Comments