தேதி
29/11/2025
🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷
*குறள்* : *533*
பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத்
தெப்பானூ லோர்க்குந் துணிவு.
மறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் வாழும் தன்மையில்லை, அஃது உலகத்தில் எப்படிப்பட்டநூலோர்க்கும் ஒப்ப முடிந்த முடிப்பாகும்.
பேனாமுள் Karthick
✍️ *நவ-29*
*பெட்ரோல் விலை*-100.80
*டீசல் விலை*-92.39
*சி.என்.ஜி* - 91.50
பேனாமுள் Karthick
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
*நிப்டி : 26202.95*
*பேங்க் நிப்டி : 59752.70*
*சென்செக்ஸ் : 85706.67*
பேனாமுள் Karthick
✍️ *தங்கம் விலை*
*24 Kதங்கம்/ g. : ₹ 12841*
*22 Kதங்கம்/ g. : ₹ 11775*
*வெள்ளி /g : ₹ 183.00*
பேனாமுள் Karthick
✍️ *சென்னையை நோக்கி நகரும் ‘டிட்வா' புயல்*
வங்கக் கடலில் இலங்கை அருகே உருவான டிட்வா புயல் சென்னை மற்றும் வட மாவட்டங்களை நோக்கி நகர்கிறது. இதனால் செங்கல்பட்டு உட்பட 4 கடலோர மாவட்டங்களில் இன்று அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய இறுதி வாய்ப்பு*
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 5ந்தேதிக்குள் விவரங்களை சரிபார்க்கவும் திருத்தங்கள் இருந்தால் அதனை மேற்கொள்ளவும் விவரங்களை பின்னர் பதிவேற்றம் செய்யவும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *ஒரே நாளில் 4.60 லட்சம் பேர் முன்பதிவு*
திருப்பதி: வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்காக ஒரே நாளில் 4.60 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
பேனாமுள் Karthick
✍️ *சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 7 பாடங்கள்*
சி.பி.எஸ்.இ. அடுத்த கல்வியாண்டு முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 7 பாடங்களுக்கு நடத்த உள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *ஆம்னி பஸ்கள் மீண்டும் இயக்கம்*
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருடன் நடந்த பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதால் மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பஸ்களின் சேவை 18 நாட்களுக்கு பின் நேற்று முதல் மீண்டும் துவங்கியது.
பேனாமுள் Karthick
✍️ *தினமும் 500 பேருக்கு பாஸ்*
சபரிமலை: எருமேலியில் இருந்து பெருவழிப்பாதை வழியாக வரும் பக்தர்கள் 500 பேருக்கு தினமும் ஸ்பாட் புக்கிங் கூப்பன் வழங்கப்படும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் கே.ஜெயக்குமார் கூறினார்.
பேனாமுள் Karthick
✍️ *டிட்வா புயல் : வெள்ளம் நிலச்சரிவால் இலங்கையில் 56பேர் உயிரிழப்பு*
கொழும்பு: வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயலால் இலங்கையில் கனமழை பெய்து வருகிறது. அங்கு மழை தொடர்பான விபத்துகளில் இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர்.
பேனாமுள் Karthic
✍️ *பா.ஜ.செயற்குழு உறுப்பினராக நமீதா நியமனம்*
தமிழக பா.ஜ.வில் மாநில செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதா நியமிக்கப்பட்டுள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *AC அல்லாத ஸ்லீப்பர் பெட்டிகளிலும் இனி படுக்கை வசதி*
ரயில்வேயில் முதல் முறையாக AC வசதி இல்லாத ஸ்லீப்பர் பெட்டி பயணியருக்கும் ஜனவரி 1 முதல் படுக்கை விரிப்பு வசதி வழங்கப்பட உள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *மகளிர் கிரிக்கெட் தேர்வுக்கு அழைப்பு*
திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் பிரேயர் மகளிர் கிரிக்கெட் லீக் போட்டிகள் டிசம்பர் மாதம் துவங்க உள்ளன. மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்கின்றன. வரும் 30ம் தேதி நாளை பட்டாபிராம் இந்து கல்லுாரியில் காலை 7:00 மணிக்கு நடக்க உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 13 வயதுக்கு மேற்பட்டோர் பங்கேற்கலாம்.
பேனாமுள் Karthick
✍️ *திருவண்ணாமலைக்குள் வாகனங்கள் செல்ல தடை*
தீபத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 2 முதல் 5ஆம் தேதி வரை திருவண்ணாமலைக்குள் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *இன்று சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது*
டிட்வா புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் இன்று மாணவ மாணவியருக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *இன்று விமானங்கள் ரத்து*
டிட்வா புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட இருந்த 22 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பேனாமுள் Karthick
✍️ *தவெக போலீசார் தள்ளுமுள்ளு*
அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தும் இடத்தில் அனுமதி இன்றி பந்தல் அமைத்த தவெக வினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பேனாமுள் Karthick
✍️ *திமுக வினர் உதவ வேண்டும் முதல்வர்*
டி ட்வா புயலால் பாதிக்கப்படும் மக்களுக்கு திமுகவினர் உதவ வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *லாட்டரி சீட்டு விற்ற வியாபாரி கைது*
வில்லிவாக்கம் கணேஷ் நகர் முதலாவது தெருவில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு விற்ற பாக்கியநாதன் என்பவரை ராஜமங்கலம் போலீசார் கைது செய்தனர்.
பேனாமுள் Karthick
✍️ *49 சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் சென்னையில் திறப்பு*
காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில் சென்னை காவல்துறையில் உள்ள 12 காவல் மாவட்டங்களிலும் அந்தந்த துணை ஆணையர் தலைமையில் 12 காவல் கட்டுப்பாட்டுறைகள் மழை பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபடும் வகையில் 49 சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன.
பேனாமுள் Karthick
✍️ *டிட்வா புயல் முன்னெச்சரிக்கை :தயார் நிலையில் தீயணைப்பு படையினர்*
சென்னை முழுவதும் மற்றும் புறநகர் பகுதிகளிலும் சுமார் 900 தீயணைப்பு படையினர் உபகரணங்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
பேனாமுள் Karthick
✍️ *மாநகராட்சி பொறியாளர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்*
சென்னையில் அதிக அளவில் தண்ணீர் தேங்கும் பகுதிகளாக 140 க்கும் மேற்பட்ட இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதிக மழைப்பொழிவு இருக்கும் நிலையில் இப்பகுதிகளில் நீரை வெளியேற்றுவதற்காக சென்னை மாநகராட்சி பொறியாளர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *மருத்துவர்கள் முழு நேரம் பணியில் இருக்க அறிவுறுத்தல்*
டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் முழு நேரமும் பணியில் இருக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *அண்ணாமலை பல்கலை தேர்வு ஒத்திவைப்பு*
புயல் எச்சரிக்கை முன்னிட்டு இன்று சனிக்கிழமை நடைபெறவிருந்த அண்ணாமலை பல்கலை தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்*
டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம்.
பொதுமக்கள் தேவை இன்றி வெளியில் செல்லாமல் இருக்க வேண்டும்.
பால்,குடிநீர்,மெழுகுவர்த்தி மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் புகார்களை 1913 கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
பேனாமுள் Karthick
✍️ *எஸ் ஐ ஆர் படிவத்தை வி ஏ ஓ க்களிடம் தரலாம்*
பூர்த்தி செய்யப்பட்ட
எஸ் ஐ ஆர் கணக்கெடுப்பு படிவத்தை கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைக்கலாம் என திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *எஸ் ஐ ஆர் படிவம் இன்றும் நாளையும் சிறப்பு முகாம்*
திருவள்ளூர் மாவட்டத்தில் எஸ் ஐ ஆர் படிவம் பூர்த்தி செய்து அளிக்க இன்றும் நாளையும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடக்கிறது.
பேனாமுள் Karthick
✍️ *போக்குவரத்து போலீசார் மீது ஆவடி மேயர் உதயகுமார் காட்டம்*
ஆவடி மாநகராட்சி கூட்டம் மேயர் உதயகுமார் தலைமையில் நேற்று காலை நடந்தது. மாநகராட்சி ஆணையர் சரண்யா, கவுன்சிலர்கள் ,புதியதாக நியமிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலர் ஜெயந்தி ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது
ஆவடி மாநகராட்சி அலுவலகம் எதிரில் அபராதம் விதிப்பதை போக்குவரத்து போலீசார் நிறுத்த வேண்டும். போலீசார் அபராதம் விதிப்பதால் மாநகராட்சிக்கு வரி செலுத்த வருவோர் அவதிப்படுகின்றனர் என ஆவடி மேயர் உதயகுமார் பேசினார்.
பேனாமுள் Karthick
✍️ *ஆவடி மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்*
ஆவடி மாநகராட்சியில் மொத்தம் 105 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஆவடி மாநகராட்சியில் சாலையில் திரியும் மாடுகளுக்கு இதுவரை ரூ.10.000 அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் இனிமேல் ரூ.5000அபராதம் விதிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கொசு,புழுக்கள் உற்பத்தி கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு ரூ.100 மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ரூ .10.000 வரை அபராதம் விதிக்கப்படும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வளர்ப்பு நாய்களுக்கு ரூ.300 செலுத்தி மாநகராட்சி உரிமம் பெற வேண்டும். மற்றும் ராட்வைலர், பிட்புல் போன்ற நாய்களுக்கு வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
செய்தி
*பேனாமுள் பாடி பா.கார்த்திக்*