பெருநகர சென்னை மாநகராட்சி ஆரம்ப சுகாதார அதிகாரிகள் பார்வைக்கு

 


*பெருநகர சென்னை  மாநகராட்சி ஆரம்பசுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டி*


சென்னை 
முகப்பேர் ஜெ ஜெ நகர் கிழக்கு விரமாமுனிவர் சாலை 
வார்ட் - 93
மண்டலம் 7 உட்பட்ட மருத்துவமனையின் திங்கல்  முதல் சனிக்கிழமை வரை தினம் தினம் மாலை 4.30 மணிமுதல் இரவு 8.30 மணிவரை கூடுதலாக பல்துறை சிறப்பு மருத்துவர்களை நியமனம் செய்து  மக்கள் பயன் பாட்டிற்கு வந்தது 
 இதில் முகப்பேர் ஜெ ஜெ நகர் 93 வது வார்டில் உள்ள மருத்துவமனையில் ஒரு நாளைக்கு 30 பேர் மட்டும் தான் பார்க்கப்படும் என்றும்
 அதற்கு மேல் வருபவர்களை திருப்பி அனுப்புவதுமாக இருந்து வருகிறார்கள் அங்கு பணிபுரியும் செவிலியர்கள்


 சரி நான்கு மணி நேரத்தில் 30 பேர்கள் தான் பார்க்க முடியும் என்று நினைத்து பார்த்தால் அங்கு வரும் மருத்துவர் 5.00 மணிக்கு மேல் தான் வருகிறாராம் வந்த அரை மணிநேரத்தில் வந்த அனைவரையும் பார்த்து அனுப்பிவிடுகிறார் 6.30 மணிக்கு லேல் வேலையில்லாமல் சமுகவலய தலங்களை பார்த்துவருவதாகவும் அப்படி இல்ல என்றால் அவர்களுக்கு தெரிந்தவர்களை வர சொல்லி மருத்துவம் பார்ப்பதாகவும் கூறுகிறார்கள் அங்கு வரும் நோயாளிகள்


19/12/2019 அன்று மாலை 6.30 மணிக்கேள்ளால் நோயாளிகள் இல்லை என்று மருத்துவர் வீட்டிற்கு சென்று விட்டதாக அங்கு பணிபுரியும் செவிலியர் கூறுகிறார் 
ஒரு நாளைக்கு 30 இருந்து 40பேர் வரை தான் பார்க்க முடியும் என்ற தகவலை சம்மந்தப்பட்ட மருத்துவர் தான்  கூறுகிறார் என்று பார்த்தால்
 இங்கு பணியில் இருக்கும் செவிலியர் தான் கூறிவருகிறார் உடனடியாக சம்மந்தபட்ட பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கவனித்து உடனடியாக ஒரு நாளைக்கு இவ்வளவு நபர்களை தான் பார்க்க வேண்டும். என்ற நிலையை மாற்றி மருத்துவர்கள் சரியாக வருகிறார்களா என்பதையும் சரிபார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அங்கு வரும் முதியவர்கள் மற்றும் நோயாளிகன் குமரலாக உள்ளது.


Comments