30/4/2024 இன்றைய பேனாமுள் பத்திரிகை செய்திகள்
🇮🇳🇮🇳✒️✒️✒️✒️✒️✒️✒️🇮🇳🇮🇳

*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*

🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏

தேதி : 30/4/2024

*ஆசிரியர்- பாடி பா.கர்த்திக்*
9381157520

குறள் : 7
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது

*பேனாமுள் செய்திகள்*
✍️இன்றைய 
பெட்ரோல் விலை:100.75
டீசல் விலை : 92.34

*பேனாமுள் செய்தி* 
✍️ கடலுக்குள் கார்பன்- டை- ஆக்சைடை திட வடிவில் சேமிக்கலாம்: ஐ.ஐ.டி., தகவல்

'தொழில் துறை வளர்ச்சியால், கார்பன் டை ஆக்சைடு அதிகரித்து, பூமி பாதிப்புக்குள்ளாகும் நிலையில், கார்பன்- டை- ஆக்சைடை, கடலுக்குள் திட வடிவில் சேமித்தால் பாதிப்பு குறையும்' என, சென்னை ஐ.ஐ.டி., ஆய்வில் தெரிய வந்துள்ளது.

 *பேனாமுள் செய்தி*
✍️ தண்ணீர் பற்றாக்குறையால் குறைந்தது நீர் மின் உற்பத்தி

தமிழக மின் வாரியத்திற்கு, 2,321 மெகா வாட் திறனில், 47 நீர் மின் நிலையங்கள் உள்ளன. மழை பெய்யும் போது, அந்த மின் நிலையங்களை ஒட்டியுள்ள அணைகளில் தண்ணீர் தேக்கப்பட்டு, மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது.
இதில், ஒரு யூனிட்மின் உற்பத்தி செலவு சராசரியாக, 75 காசுக்கு குறைவாக உள்ளது

*பேனாமுள் செய்தி*
✍️ கழிவுநீர் தொட்டியில் மனிதர்கள் இறங்கும் நடைமுறையை ஒழிக்க அரசுக்கு உத்தரவு

கழிவுநீர் தொட்டி மற்றும் பாதாள சாக்கடைகளில், மனிதர்கள் இறங்கும் நடைமுறையை முழுமையாக ஒழிக்க, அனைத்து முயற்சிகளையும் எடுக்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டிகளில் அடைப்பை நீக்கி, சுத்தம் செய்யும் பணிகளில், மனிதர்களை நேரடியாக ஈடுபடுத்தக் கூடாது; விஷ வாயுவால் பலியானவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், 'சபாய் கர்மாச்சாரி அந்தோலன்' என்ற அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

*பேனாமுள் செய்தி*
✍️ 16 அம்ச பாதுகாப்பு விதிகள் பள்ளி வாகனங்களில் ஆய்வு

வாகனங்களில் அவசர கால கதவு, ஜன்னல்கள், படிகள், தீயணைப்பு கருவிகள், முதல் உதவிப் பெட்டி, ஹேண்ட் பிரேக், ஓட்டுனர்களின் கண் பார்வை, வேகக் கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட, 16 அம்சங்கள் குறித்து, ஆய்வு நடத்தப்படும். வரும் கல்வி ஆண்டுக்கான ஆய்வு பணிகள், மே முதல் வாரத்தில் துவங்கி, ஜூன் முதல் வாரத்தில் முடிக்கப்படும்

வாகனங்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், எப்.சி., எனப்படும் தகுதிச் சான்று அளிக்கப்பட மாட்டாது. பெரிய அளவில் குறைபாடுகள் இருந்தால், அனுமதி ரத்து செய்யப்படும்.
இவ்வாறு போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறினர்.

 *பேனாமுள் செய்தி* 
✍️ பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தமிழக அரசு திடீர் நிபந்தனை

அரசு பள்ளிகளுக்கு அருகில் வசிக்கும் ஏழை குழந்தைகளுக்கு, கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை வழங்கக் கூடாது என, திடீர் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

மாணவர் வசிப்பிடத்தில் இருந்து, 1 கிலோ மீட்டர் துாரத்திற்குள் இருக்கும் பள்ளிகளில் முதலில் சேர்க்கை வழங்க வேண்டும். இந்த துாரத்துக்குள் அரசு பள்ளிகள் இருந்தால், சம்பந்தப்பட்ட மாணவர்களை, அரசு பள்ளிகளில் சேர அறிவுறுத்த வேண்டும் என்றும், மாவட்ட கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்

*பேனாமுள் செய்தி*
✍️ திருச்செந்துார் கோவிலில் விதிகளை மீறி கட்டடம் அரசு பதிலளிக்க உத்தரவு

திருச்செந்துார் கோவிலில் விதிகளை மீறி கட்டடங்கள் கட்டப்படுவது குறித்த வழக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நிலுவையில் உள்ளது. அதன் விபரங்களை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை, ஜூலை 8ல் நடக்கும். அதற்குள் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர், ஹிந்து சமய அறநிலையத் துறை, சுற்றுச்சூழல் துறை மற்றும் தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

*பேனாமுள் செய்தி*
✍️ வெளிநாட்டு உயிரினங்களை வளர்க்க உரிமை சான்று இனி கட்டாயம்

'அயல்நாட்டு உயிரினங்களை வைத்திருப்போரும், வாங்குவோரும், இணையதளத்தில் பதிவு செய்து, உரிமைச் சான்று பெறுவது கட்டாயம்' என, தமிழக தலைமை வன உயிரினப் பாதுகாவலர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை 20ம் தேதி சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு இனி செல்லாது. அதற்கு பதிலாக, பிப்., 28ல் வெளியான உயிருள்ள விலங்கு இனங்கள் விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

*பேனாமுள் செய்தி*
✍️ சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகுங்கள்! கட்சி தொண்டர்களுக்கு அண்ணாமலை 'எனர்ஜி'

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும், 500 நாட்களே உள்ளன. அதற்கான பணிகளை இப்போதே துவக்க வேண்டும்,” என்று, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு கட்டளையிட்டு உள்ளார்.

*பேனாமுள் செய்தி*
✍️ ஐ.பி.எல்., டிக்கெட் பிளாக்கில் விற்ற 8 பேர் கைது

சென்னை சேப்பாக்கம், எம்.ஏ., சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில், நேற்று முன்தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி நடந்தது. ஆன்லைன் வழியாக டிக்கெட்டுகள் விற்கப்பட்டன.

மைதானத்தை சுற்றி ஒரு கும்பல் பிளாக்கில்கிரிக்கெட் டிக்கெட்டுகள் விற்பதாக, திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

மைதானத்தை சுற்றியுள்ள வாலாஜா ரோடு, பெல்ஸ் ரோடு, விக்டோரியா ஹாஸ்டல் சாலை, ரயில்வே ஸ்டேஷன் ஆகிய பகுதிகளில், போலீசார் தீவிரமாக கண்காணித்து, பிளாக்கில் டிக்கெட்டுகள் விற்றதாக எட்டு பேர் கும்பலை கைது செய்தனர்.

*பேனாமுள்செய்தி*
✍️ சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் மேயர் வார்டில் சுகாதார சீர்கேடு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி, 9வது வார்டில் கவுன்சிலராக வெற்றி பெற்றார். இவரது சொந்த வார்டான நிமந்தகார ஒற்றைவாடை தெருவில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, நேற்று காலையில், கழிவுநீர் சாலையில் வழிந்தோடியது.

இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளதாக அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.

*பேனாமுள்செய்தி*
✍️ மாவட்டம் கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னையில் 2.96 லட்சம் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் கையிருப்பில் உள்ளதாகவும், பேருந்து நிலையம், பூங்காக்கள் உள்ளிட்ட 158 இடங்களில் குடிநீருடன் ஓஆர்எஸ் கரைசல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

*பேனாமுள் செய்தி*
✍️ தங்கம் விலையில் மாற்றம்: சவரனுக்கு ரூ240 குறைந்தது

ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் கிராமுக்கு ரூ30 குறைந்து ஒரு கிராம் ரூ6,740க்கும், சவரனுக்கு ரூ240 குறைந்து ஒரு சவரன் ரூ53,920க்கும் விற்கப்பட்டது.

*பேனாமுள் செய்தி*
✍️பங்கு சந்தை நிலவரம் : 
நிப்டி : 22643.4
நிப்டி பேங்க் : 49424.05
சென்செக்ஸ் : 74671. 28

*பேனாமுள் செய்தி*

✍️ டெல்லியை வீழ்த்தியது நைட் ரைடர்ஸ் 

கொல்கத்தா: டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

*பேனாமுள் செய்தி*
✍️ விளையாட்டு மும்பை – லக்னோ இன்று பலப்பரீட்சை

லக்னோ: ஐபிஎல் டி20 தொடரின் 48வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

*தினம் தினம் உங்களுக்கான செய்திகளை வழங்குவது உங்கள் பேனாமுள் பத்திரிகை*

*பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
Comments