தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் கோரிக்கை
*வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையில் இருந்து பத்திரிகையாளர்களுக்கு விலக்கு அளிக்க தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் வலியுறுத்துகிறது.*

விரைந்து செய்தி சேகரிக்கவும், கேமரா உள்ளிட்ட  ஒளிப்பதிவு கருவிகளை பாதுகாப்பாக வாகனத்தில் கொண்டு செல்லவும்,  தங்களை அடையாளப் படுத்தும் வகையிலும் செய்தியாளர்கள் தங்கள் வாகனங்களில் பிரஸ், மீடியா என ஸ்டிக்கர் ஒட்டுக் கொள்வது வழக்கம்.

இந்நிலையில் போலீஸ், பிரஸ், வழக்கறிஞர் மருத்துவர், தலைமை செயலகம் என வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்று சென்னை போக்குவரத்து காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் போலீஸ், பிரஸ், வழக்கறிஞர் மருத்துவர், தலைமை செயலகம் என்று வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு சிலர் சமூகவிரோத குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக போக்குவரத்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

காவல்துறை முறையாக வாகன பரிசோதனை செய்து இதை தடுக்க முடியும். அதை விடுத்து பத்திரிகைத்துறை சார்ந்தவர்கள் வாகனத்தில் ஸ்டிக்கர் ஓட்ட கூடாது என்ற அறிவிப்பு பத்திரிகையளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையில் இருந்து பத்திரிகையாளர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

ஒரு சிலர் எந்த சம்மந்தமும் இல்லாமல் போலீஸ், பிரஸ், தலைமை செயலகம், வழக்கறிஞர் மருத்துவர் என்று ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு சமூகவிரோத குற்றங்களில் ஈடுபட்டு வருபவர்கள் மீது இரும்பு கரம் கொண்டு காவல்துறை தடுக்க வேண்டும். யாரோ சிலர் செய்யும் தவறான செயல்களால் உண்மையானவர்களும் பாதிக்க கூடிய இந்த அறிவிப்பை சென்னை போக்குவரத்து காவல்துறை திரும்ப பெற வேண்டும் என தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் வலியுறுத்துகிறது.

பத்திரிகைத் துறைக்கு சம்மந்தம் இல்லாத நபர்கள் வாகனத்தில் ஸ்டிக்கர் ஒட்டி முறைக்கேடு செய்தால் அவர்கள் மீது காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகன பரிசோதனையில் போக்குவரத்து காவல்துறைக்கு பத்திரிகையாளர்கள் முழு ஒத்துழைப்பு தருவார்கள். வாகன ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையில் இருந்து பத்திரிகையாளர்களுக்கு விலக்கு அளிக்க தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் வலியுறுத்துகிறது.

என்றும் பத்திரிகையாளர் நலனில்..
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்
தலைமையகம்
9840035480

பாடி பா.கார்த்திக்
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்
9381157520
Comments