🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳
தேதி: 11/5/2025
*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520
🌷 பேனாமுள் பத்திரிகை செய்திகள் 🌷
குறள் : 18
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு
மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.
*பேனாமுள் செய்திகள்*
✍️ இன்றைய
பெட்ரோல் விலை : 100.75
டீசல் விலை : 92.34
*பேனாமுள்செய்திகள்*
✍️ பங்கு சந்தை நிலவரம்
நிப்டி : 22055.2
பேங்க் நிப்டி : 47421.1
சென்செக்ஸ் : 72664.47
*பேனாமுள் செய்திகள்*
✍️ தமிழ்நாடு-புதுச்சேரியில் 91.55 சதவீத தேர்ச்சி S.S.L.C தேர்வு முடிவு வெளியீடு
3 மாணவிகள் மாநில அளவில் சாதனை 500 மதிபெண்ணுக்கு 499 பெற்றனர்.
*பேனாமுள் செய்திகள்*
✍️ அட்சய திருதியை முன்னிட்டு தங்க நகைகள் விற்பனை கடந்த ஆண்டைவிட 30 சதவீதம் அதிகரிப்பு
ஒரேநாளில் 3 முறை தங்கவிலை ஏறியது.
*பேனாமுள் செய்திகள்*
✍️ அமலாக்கத்துறையின் கடும் எதிர்ப்பையும் மீறி கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட அனுமதி வழங்கி உள்ளது
*பேனாமுள் செய்திகள்*
✍️ 5 வயது முதல் 12 வயது வரை குழந்தைகளுக்கு அரை கட்டணம் வசூலிக்க வேண்டும்: போக்குவரத்து துறை உத்தரவு
நமது கழக புறநகர் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் 5 வயது நிறைவடையாத குழந்தைகளுக்கு கட்டணமில்லா பயணம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். 5 வயதிற்கு மேற்பட்ட 12 வயது நிறைவடையாத குழந்தைகளுக்கு அரைக் கட்டணம் வசூலிக்க வேண்டும். குழந்தைகளின் வயது குறித்த சந்தேகங்கள் ஏற்படின், தக்க பிறந்த நாள் சான்று அல்லது ஆதார் அடையாள அட்டை மூலம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நடத்துனர்கள், மேற்படி அறிவிப்பினை எவ்வித புகார்களுக்கும் இடமளிக்கா வண்ணம் செயல்பட அறிவுறுத்தப்படுகிறது.
*பேனாமுள் செய்திகள்*
✍️ கொடைக்கானலில் 61-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா மே 17-ம் தேதி தொடங்கவுள்ளது: மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
கொடைக்கானலில் 61-வது மலர் கண்காட்சி மற்றும் கோடைவிழா-2024 ஆகியவை 17.05.2024-ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெறும் இவ்விழாவில் வரும் 17.05.2024 முதல் 26.05.2024 வரை 10 நாட்கள் தோட்டக்கலைத்துறை மூலமாக மலர்க்கண்காட்சியும், 17.05.2024 முதல் 26.05.2024 வரை 10 நாட்கள் சுற்றுலாத்துறை மூலமாக கோடைவிழாவும் நடத்தப்படவுள்ளது.
*பேனாமுள் செய்திகள்*
✍️ 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மே 13 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்: அரசு தேர்வுகள் இயக்ககம்
10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மே 13 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம். மதிப்பெண் சான்றிதழ் நகல் பெற மே 15-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
*பேனாமுள் செய்திகள்*
✍️ சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் ஆறுதல்!
சென்னை: திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஏலரப்பட்டி பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
*பேனாமுள் செய்திகள்*
✍️ 1 லட்சம் மலர்களால் ஆன ‘டிஸ்னி வேர்ல்டு’, 33 அடி நீளத்தில் மலை ரயில் .. ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி தொடங்கியது…!!
10ம் தேதி துவங்கி 10 நாட்கள் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதனை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கண்காட்சியையொட்டி பூங்கா பொலிவுப்படுத்தப்பட்டுள்ளது. பூங்கா முழுவதிலும் பல லட்சம் வண்ண மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. ஒரு லட்சம் கார்னேசன் மலர்களை கொண்டு 20 அடி உயரத்தில் டிஸ்னி வோர்ல்டு மலர் அலங்காரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
*பேனாமுள் செய்திகள்*
✍️ 10,12-ம் வகுப்பு தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து
விரைவில் நாம் சந்திப்போம் என்று உறுதி
*பேனாமுள் செய்திகள்*
✍️ வானில் 28 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் சென்ற சர்வதேச விண்வெளி நிலையம்
சென்னை,கோவை மக்கள் வெறும் கண்களால் பார்த்தனர்.
*பேனாமுள் செய்திகள்*
✍️ கோயம்பேட்டில் கத்தியை காட்டி போதை மாத்திரை பறித்த பிரபல ரவுடி ஓட ஓட வெட்டி கொலை
சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அருகே உள்ள முள் புதரில் ஒரு வாலிபரை 10 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றதாக அப்பகுதியில் உள்ள மக்கள் காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
*பேனாமுள் செய்திகள்*
✍️ திருவான்மியூரில் கழுத்து அறுத்து பெண் கொலை பக்கத்து வீட்டு சிறுவன், 2 நண்பர்களுடன் கைது: மது அருந்த, கஞ்சா புகைக்க தடையாக இருந்ததால் தீர்த்துக்கட்டியது அம்பலம்
திருவான்மியூரில் பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் பக்கத்து வீட்டு சிறுவன், தனது 2 நண்பர்களுடன் கைது செய்யப்பட்டார். மது அருந்த, கஞ்சா புகைக்க தடையாக இருந்ததால், தீர்த்துக்கட்டியதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
*பேனாமுள் செய்திகள்*
✍️ யுடியூபர் சங்கரின் சென்னை வீட்டில் 1 கிலோ கஞ்சா, லேப்டாப் பறிமுதல்
5 வழக்குகளில் கைது செய்யப்பட்ட சங்கரை சைபர் க்ரைம் போலீசார் 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 6வது வழக்கிலும் நேற்று கைது செய்தனர். சைபர் க்ரைம் போலீசார் பதிவு செய்துள்ள 3 வழக்குகளிலும் தனித்தனியாக சங்கரை காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். மேலும், சங்கருடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பான போலி ஆவணங்கள் தயாரிக்க உதவிய நபர்களையும் கைது செய்ய சைபர் க்ரைம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
*பேனாமுள் செய்திகள்*
✍️ நகைக்கடை சுவரை துளையிட்டு கொள்ளை லாக்கரை உடைக்க முடியாததால் 100 பவுனுக்கு மேல் நகை தப்பியது: தாம்பரத்தில் பரபரப்பு
தாம்பரத்தில் நகைக்கடை சுவரை துளையிட்டு மர்ம நபர்கள், நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். லாக்கரை உடைக்க முடியாததால் 100 பவுனுக்கும் மேல் நகைகள் தப்பியது. மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
*பேனாமுள் செய்திகள்*
*ஆவடி பருத்திப்பட்டில் உள்ள லட்சுமி கிரீன் சிட்டியில் மின் பற்றாக்குறை காரணமாக டிரான்ஸ்பார்ம் வேண்டி மக்கள் கோரிக்கை*
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 45 ஆவது வார்டு லட்சுமி கிரீன் சிட்டியில் இரண்டு வருடங்களுக்கு முன் மின் பற்றாக்குறை இருக்கிறது டி வி,லைட், போன்ற மின்சாரம் சார்ந்த பொருட்கள் தொடர்ந்து பழுதடைந்து வந்தது அதற்கு அந்தப்பகுதியில் மின்சாரத்தை அதிகப்படுத்த ட்ரான்ஸ்பார்ம் அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மனு எழுதி கொடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர்
அந்த லட்சுமி கிரீன் சிட்டியில் தொடர்ந்து மின் பற்றாக்குறை காரணமாக டிவி லைட் ஃபேன் போன்ற சாதனங்கள் பீஸ் போய்க் கொண்டே இருக்கிறது இதற்கு நிரந்தரமாக ஒரு டிரான்ஸ்பார்ம் அமைத்து தர வேண்டும் என்று பல வருடங்களாக அப்பகுதி மக்கள் போராடி வருகிறார்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட ஆவடி பருத்திப்பட்டு க்கு உட்பட்ட மின்வாரிய உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ட்ரான்ஸ்பார்மறை அமைத்து தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
குறிப்பு :
ஆவடி பருத்திப்பட்டில் உள்ள லட்சுமி கிரீன் சிட்டிக்கு உட்பட்ட மின்வாரியத்திற்கு பல மாதங்களுக்கு முன்பே ஒரு டிரான்ஸ்பார்மர் sanction ஆகியிருக்கிறது என்று தகவல் வந்திருக்கிறது.
*பேனாமுள் செய்திகள்*
✍️ சென்னை மாநகராட்சியில் இணைய வழியில் செல்லப்பிராணிகள் உரிமம் பெறும் வழிமுறைகள் வெளியீடு
பெருநகர சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கு உரிமம் பெறுவது கட்டாயம் என்ற அறிவிப்பினை தொடர்ந்து இணைய வழியில் செல்லப்பிராணிகள் உரிமம் பெறும் வழிமுறைகள் வெளியிட்டுள்ளனர். www.chennai corporation.gov.in என்ற இணையதளத்தில் செல்லப் பிராணிகள், மற்றும் உரிமையாளரின் விவரங்கள் அனைத்தும் பதிவு செய்து ரூ.50 கட்டணம் செலுத்தி உரிமத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
*பேனாமுள் செய்திகள்*
✍️ சென்னை அணி தோல்வி :
சுப்மன் கில், சாய் சுதர்சன் சதம் கைகொடுக்க, குஜராத் 35 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை அணியை துவக்கத்தில் ரச்சின் (1), ரகானே (1), ருதுராஜ் (0) ஏமாற்றினர். மிட்செல் (63), மொயீன் அலி (56) அரைசதம் அடித்து கிளம்பினர். துபே (21), ஜடேஜா (18) நிலைக்கவில்லை. சென்னை அணி 20 ஓவரில் 196/8 ரன் எடுத்து தோல்வியடைந்தது. தோனி (26) அவுட்டாகாமல் இருந்தார்.
*பேனாமுள் செய்திகள்*
✍️ முதலிடத்தை தொடருமா கேகேஆர்: மும்பையுடன் மோதல்
ஐபிஎல் தொடரின் 60வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.
என்றும் பேனாமுள் செய்திகளுக்காக உங்கள்
*பாடி பா.கார்த்திக்*