13/5/2025 ஆம் தேதி பேனாமுள்செய்திகள்
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳

தேதி: 13/5/2025

*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520


🌷 பேனாமுள் பத்திரிகை செய்திகள் 🌷

குறள் : 20
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு

எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.

*பேனாமுள் செய்திகள்*

✍️ பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

*பேனாமுள்  செய்திகள்*

✍️ 4ம் கட்ட மக்களவை தேர்தல்; 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு: அகிலேஷ் யாதவ் உள்பட 1,717 வேட்பாளர்கள் போட்டி

நாடு முழுவதும் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 96 தொகுதிகளில் 4ம் கட்ட மக்களவை தேர்தல் இன்று நடக்கிறது. இதில், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட 1,717 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

*பேனாமுள்  செய்திகள்*

✍️ சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவு

சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியது உள்பட 7 வழக்குகளில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

*பேனாமுள்  செய்திகள்*

✍️ கூகுள் மேப்பால் விபரீதம்; சென்னையில் 7 பேர் மீது காரை ஏற்றி இறக்கிய பெண்: போலீஸ் விசாரணை

சென்னை அசோக் நகரில் வீட்டில் இடப் பற்றாக்குறை காரணமாக வாசலில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏறியது. கூகுள் மேப்பை நம்பி முட்டுச் சந்துக்குள் காரை விட்ட வட மாநிலப் பெண் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

*பேனாமுள்  செய்திகள்*

✍️ மெரினாவில் பாய்மர படகு விளையாட்டு தளம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு

சென்னை மெரினா கடற்கரையில் ரூ.7 கோடி செலவில் பாய்மர படகு விளையாட்டு தளம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு படகு இல்லம் இருந்த இடத்தில் 2.75 ஏக்கர் பரப்பளவில் பாய்மர படகு அகாடமி அமைக்க திட்டமிட்டுள்ளது.

*பேனாமுள் செய்திகள்*

✍️ சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் 70வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய எடப்பாடி பழனிசாமி: மாஜி அமைச்சர்கள், கட்சியினர் வாழ்த்து

சேலம் மாவட்டம், மேச்சேரி ஒன்றியத்தில் இருந்து கட்சியினர் 70 கிலோ கேக்கை எடுத்து வந்திருந்தனர். மேலும் பலர் 70 கிலோ எடையுள்ள பல கேக்குகளை எடுத்து வந்திருந்தனர். இதனால், வீட்டு வாசலில் 300 கிலோவுக்கு மேல் கேக்கை வரிசையாக அடுக்கி வைத்தனர்.
பின்னர், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வந்து, அந்த கேக்கை வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்.

*பேனாமுள் செய்திகள்*

✍️ முத்திரைக்கட்டணம் உயர்வு அரசாணையை திரும்ப பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சமீபத்தில் உயர்த்தப்பட்ட முத்திரைக் கட்டணங்கள் குறித்தான அரசாணையை திரும்ப பெற வேண்டும் என அதிமுக பொதுச்செயலளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

*பேனாமுள் செய்திகள்*

✍️ வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு

வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 14ம் தேதி (நாளை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. மறுநாள் (15ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷபூஜை உள்பட வழக்கமான பூஜைகளுடன் படிபூஜை, உதயாஸ்தமய பூஜை உள்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

*பேனாமுள் செய்திகள்*

✍️ வைகையில் திடீர் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

மதுரை வைகை ஆற்றில் 2வது நாளாக இரு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதன் எதிரொலியாக நகரில் ஆற்றுப்பகுதியின் அருகே ஆங்காங்கே உள்ள இணைப்புச்சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வைகை கரையோர மக்களுக்கு மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா வெள்ள அபாய எச்சாிக்கை விடுத்துள்ளார். கரையோர பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

*பேனாமுள் செய்திகள்*

✍️ கோடை வெயில் காரணமாக வரத்து குறைவு; கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் இருமடங்கு விலை உயர்வு

கோயம்பேடு காய்கறி மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகளின் சங்க தலைவர் எஸ்.எஸ் முத்துகுமார் கூறுகையில், வரத்து குறைவு மற்றும் வெயிலின் தாக்கத்தால் கோயம்பேடு மார்க்கெட்டில் பீன்ஸ், பூண்டு, எலுமிச்சம்பழம் உட்பட அனைத்து காய்கறிகளும் விலை உயர்ந்து விற்பனையானது. இந்த விலை உயர்வு இம்மாதம் முழுவதும் நீடிக்கும், என்றார்.

*பேனாமுள் செய்திகள்*

 ✍️ குரூப் 2ஏ பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு வரும் 15ம் தேதி தொடக்கம்: சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடக்கிறது

*பேனாமுள் செய்திகள்*

✍️ திருப்பத்தூரில் ஓட்டலுக்கு அழைத்து சென்று பெண்ணுக்கு பாலியல் தொல்லை போலீஸ் ஏட்டு அதிரடி கைது: சஸ்பெண்ட் செய்து எஸ்பி உத்தரவு

*பேனாமுள் செய்திகள்*

 ✍️ அட்சயதிருதியை ஒட்டி 2 நாட்களில் மட்டும் ரூ.15 ஆயிரம் கோடிக்கு நகைகள் விற்பனை

சென்னை தங்கம், வைர வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் சாந்தகுமார் கூறியதாவது: கடந்த ஆண்டு மட்டும் அட்சய திருதியை அன்று ரூ.11 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை ஆனது. இந்தாண்டு 40 சதவீதம் அளவுக்கு விற்பனை அதிகரித்துள்ளது. அதாவது, தங்கம் விலை என்பது 20 சதவீதமும், அதேநேரத்தில் விற்பனை 20 சதவீதமும் அதிகரித்து காணப்பட்டது. 2 நாட்களில் மட்டும் 22 ஆயிரம் கிலோ அளவுக்கு தங்கம் விற்பனையானது.

*பேனாமுள் செய்திகள்*

✍️ மெட்ரோ, மாநகர பஸ், மின்சார ரயில் 'ஒரே டிக்கெட்' திட்டம் ஜூனில் அமல்?

'மாநகர பேருந்து, மெட்ரோ ரயில், புறநகர் மின்சார ரயிலில், ஒரே டிக்கெட்டில் பயணம் செய்வதற்கான, 'டெண்டர்' தொடர்பாக, ஜூனில் முடிவு எடுக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

*பேனாமுள் செய்திகள்*

✍️ பறக்கும் டாக்சி தயாரிப்பில் சென்னை ஐ.ஐ.டி., மும்முரம்

புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிப்பதில் முன்னோடியாக திகழும் சென்னை ஐ.ஐ.டி., நிறுவனம், தற்போது தனியார் நிறுவனத்துடன் இணைந்து, பறக்கும் டாக்சியை தயாரித்து வருகிறது. முழுதும் மின்சாரத்தில் இயங்கும் இந்த டாக்சி பயன்பாட்டுக்கு வந்தால், உலகின் முதல் பறக்கும் மின்சார டாக்சியாக இருக்கும்.

*பேனாமுள் செய்திகள்* 

✍️ டிரைவர் இருக்கைக்கு மேல் மின்விசிறி வெயிலுக்கு இதமாக பஸ்களில் வசதி

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், மாநகர பஸ்களில், ஓட்டுனரின் இருக்கைக்கு மேல்பகுதியில், மின்விசிறி பொருத்தப்பட்டு வருகிறது

*பேனாமுள் செய்திகள்*

.✍️ எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன்: அண்ணாமலை

அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும், பேசுவதை நிறுத்த மாட்டேன் என அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்

*பேனாமுள் செய்திகள்*

✍️ நாகை தொகுதி எம்.பி. செல்வராஜ் உடல்நலக்குறைவால் காலமானார்: தலைவர்கள் இரங்கல்

நாகை தொகுதி எம்.பி. செல்வராஜ் (67) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினரும் நாகை எம்.பி.யுமான செல்வராஜ் காலமானார்.

*பேனாமுள் செய்திகள்*

✍️ ராஜஸ்தானை வீழ்த்தியது சென்னை: சிமர்ஜீத் அபார பந்துவீச்சு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது

*பேனாமுள் செய்திகள்*

✍️ டில்லி அணியை வென்றது பெங்களூரு

பேட்டிங், பவுலிங்கில் அசத்திய பெங்களூரு அணி 47 ரன் வித்தியாசத்தில் டில்லியை வீழ்த்தியது.

பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள் 

*பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
Comments