🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳
தேதி: 14/5/2025
*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520
🌷 பேனாமுள் பத்திரிகை செய்திகள் 🌷
குறள் : 21
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு
ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.
*பேனாமுள் செய்திகள்*
✍️ பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை
*பேனாமுள் செய்திகள்*
✍️ பங்கு சந்தை நிலவரம்
நிப்டி : 22104.05
பேங்க் நிப்டி : 47754.1
சென்செக்ஸ் : 72776.13
*பேனாமுள் செய்திகள்*
*RNI ஆண்டறிக்கை சிறப்பு முகாம்* (E-filing Annual Statements Free Camp)
*தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்* சார்பில் RNI ஆண்டறிக்கை இலவச சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
நாளிதழ், வார இதழ், மாதமிருமுறை இதழ், மாத இதழ் உள்ளிட்ட RNI பதிவு பெற்ற பத்திரிகைகள் அனைத்தும் ஆண்டுதோறும் ஆண்டறிக்கை (e-filing Annual Statements) தாக்கல் செய்ய வேண்டும்.
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் நடைபெற உள்ள இந்த இலவச சிறப்பு முகாமை பத்திரிகை வெளியீட்டாளர்கள் & ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.
*நாள்: 15.05.2024 முதல் 25.05.2024 வரை*
இடம்: எண். 4/8, ஸ்டேட் பேங்க் காலனி 1வது தெரு, சாலிகிராமம், சென்னை.93
Landmark: ஜெய்கோபால் கரோடியா மேல் நிலைப்பள்ளி & சாலிகிராமம் பேருந்து நிலையம் அருகில்
மேலும் விபரங்கள் பெற:
*எஸ்.சரவணன் 9840035480*
*பேனாமுள் செய்திகள்*
✍️ 4ம் கட்ட மக்களவை தேர்தல் விறுவிறுப்பு; 96 தொகுதிகளில் 63% வாக்குப்பதிவு: ஆந்திராவில் பல இடங்களில் வன்முறை கல்வீச்சு, வாகனங்களுக்கு தீ வைப்பு
நான்காம் கட்ட மக்களவை தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் நடந்த தேர்தலில் 63 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. ஆந்திராவில் பல இடங்களில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் தொண்டர்கள் இடையே மோதல் நடந்தது. கல்வீச்சு, வாகனங்களுக்கு தீ வைப்பு சம்பவங்களால் அங்கு பதற்றம் நிலவியது.
*பேனாமுள் செய்திகள்*
✍️ பிளஸ் 1 தேர்வு முடிவு இன்று வெளியீடு
பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணிக்கு வெளியிடப்பட உள்ளன.
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் இன்று, www.dge.tn.gov.in இணையதளத்திற்கு சென்று, தங்கள் பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அடையாள எண் மற்றும் பாஸ்வேர்டு பயன்படுத்தி, பிளஸ் 1 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை, காலை 10:00 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
*பேனாமுள்செய்திகள்*
✍️ சிபிஎஸ்இ பொதுதேர்வு முடிவு வெளியீடு
கடந்த ஆண்டை காட்டிலும் தேர்ச்சி சதவீதம் அதிகம்
*பேனாமுள் செய்திகள்*
✍️ என் கல்லூரி கனவு” எனும் உயர்கல்வி வழிகாட்டுதல் திட்டம் 14ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெறும்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு “என் கல்லூரி கனவு” எனும் உயர்கல்வி வழிகாட்டுதல் திட்டம் இரண்டாம் கட்டமாக 14.05.2024 முதல் 21.05.2024 வரை நடைபெறுகிறது.
*பேனாமுள்செய்திகள்*
✍️ அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்!
அண்ணாமலைக்கு எதிரான கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளிக்கவில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அண்ணாமலைக்கு எதிரான கிரிமினல் வழக்கு குறித்து ஆளுநர் மாளிகைக்கு எந்த தகவலும் வரவில்லை. மேலும், வழக்குப்பதிவுக்கு அனுமதி தர ஆளுநர் மாளிகை உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை என்று தமிழ்நாடு ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார்.
*பேனாமுள் செய்திகள்*
✍️ நாகை எம்பி செல்வராஜ் மறைவு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
நாகை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் செல்வராஜ் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
*பேனாமுள் செய்திகள்*
✍️ மும்பையை சூறையாடிய புழுதிப்புயல் விளம்பர பேனர் சரிந்து 8 பேர் பலி: 57 பேர் காயம்
மும்பையில் நேற்று கடும் புழுதிப்புயல் வீசியது. இதனால் விமானம் மற்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டது. காட்கோபரில் விளம்பர பேனர் சரிந்து பெட்ரோல் பங்க் மீது விழுந்ததில் 57 பேர் காயம் அடைந்தனர். 8 பேர் இறந்தனர்.
*பேனாமுள் செய்திகள்*
✍️ காங்கிரசின் மகாலட்சுமி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்கப்படும்: சோனியா உறுதி
காங்கிரஸ் கட்சியின் ‘‘மகாலட்சுமி’’ திட்டத்தின் கீழ் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்கப்படும். காங்கிரசின் இந்த உத்தரவாதங்கள் ஏற்கனவே கர்நாடகா மற்றும் தெலங்கானாவில் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தகவல் அறியும் உரிமை, கல்வி உரிமை அல்லது உணவுப் பாதுகாப்பு என எதுவாக இருந்தாலும் காங்கிரஸ் கட்சியின் திட்டங்களின் மூலம் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு காங்கிரஸ் கட்சி பலத்தை அளித்துள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் கரம் மக்களுடன் என்றும் உள்ளது என உறுதியளிக்க விரும்புகிறேன். இவ்வாறு சோனியா கூறியுள்ளார்.
*பேனாமுள் செய்திகள்*
✍️ 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
இன்றும் திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும், கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். இதேநிலை 19ம் தேதி வரை நீடிக்கும்.
*பேனாமுள் செய்திகள்*
✍️ தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு
நேற்று தங்கம் விலை கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து, 6,725 ரூபாய்க்கும்; சவரனுக்கு 200 ரூபாய் சரிந்து, 53,800 ரூபாய்க்கும் விற்பனையானது.
*பேனாமுள் செய்திகள்*
✍️ இளங்கலை அறிவியல் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் படிப்பிற்கு சென்னை ஐஐடியில் விண்ணப்ப பதிவு தொடக்கம்: மே 26ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
மின்னணு தயாரிப்பு மற்றும் வடிவமைப்புக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை உருவாக்க இந்தியா செமிக்கண்டக்டர் மிஷன் திட்டத்துடன் இணைந்துள்ளது. இந்த படிப்பில் ஆர்வமுள்ள மாணவர்கள் மே 26ம் தேதி வரை https://study.iitm.ac.in/es/ என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
*பேனாமுள் செய்திகள்*
✍️ மெட்ரோ ரயில் உதவி மேலாளரை தாக்கிய வழக்கு பின்னணி பாடகர் வேல்முருகன் கைது
சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலை வேம்புலி அம்மன் கோயில் சிக்னல் அருகே மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக நேற்று முன்தினம் இரவு ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. அப்போது அவ்வழியாக பின்னணி பாடகர் வேல்முருகன் தனது காரில் வந்தபோது சாலையின் இடையே வைத்திருந்த தடுப்புகளை அகற்றிவிட்டு தனது காரை எடுத்து செல்ல முற்பட்டார்.
இதைப் பார்த்த மெட்ரோ ரயில் கட்டுமான நிறுவனத்தின் உதவி மேலாளர் வடிவேல், வேல்முருகனை வழிமறித்து இந்த வழியில் செல்லக் கூடாது என்று கூறியுள்ளார். இதனால் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட வாய் தகராறில் பாடகர் வேல்முருகன், உதவி மேலாளர் வடிவேலுவை தாக்கியதாக கூறப்பட்டது. இதுகுறித்து உதவி மேலாளர் வடிவேல் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் மீது 2 பிரிவுகளின் கீழ் பாடகர் வேல்முருகன் மீது வழக்குப் பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.
*பேனாமுள் செய்திகள்*
✍️ தயாநிதி மாறன் தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று ஆஜர்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கில் எடப்பாடி பழனிசாமி இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.
*பேனாமுள் செய்திகள்*
✍️ ரூ.200 கோடி மோசடி; நிதி நிறுவனம் மீது புகார்
நாமக்கல் - பரமத்தி சாலை, சந்தைப்பேட்டை புதுாரில், 35 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவனத்தில், சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பணம் முதலீடு செய்தனர்.
கடந்த மார்ச்சில் நிதி நிறுவனத்தை மூடி, அதன் நிர்வாகி தலைமறைவாகி விட்டதாக கூறி, முத லீட்டாளர்கள், 100க்கும் மேற்பட்டோர், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பெட்டியில் தங்கள் புகாரை அளித்தனர்.
*பேனாமுள் செய்திகள்*
✍️ ஆமதாபாத்தில் மழை ஆட்டம்... * பறிபோனது குஜராத் வாய்ப்பு
கோல்கட்டா, குஜராத் அணிகள் மோத இருந்த ஐ.பி.எல்., போட்டி மழையால் ரத்தானது.
இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து தரப்பட்டன.
இதனால் குஜராத் அணி 13 போட்டியில் 11 புள்ளி மட்டும் பெற்று, 'பிளே ஆப்' வாய்ப்பை இழந்தது. கோல்கட்டா அணி ஏற்கனவே 'பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறிவிட்டது.
பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்
*பாடி பா.கார்த்திக்*