🇮🇳🇮🇳✒️✒️✒️✒️✒️✒️✒️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏
தேதி : 1/5/2024
*வாசகர்கள் அனைவருக்கும் மே-1 தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்*
*ஆசிரியர்- பாடி பா.கர்த்திக்*
9381157520
குறள் : 8
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது
அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது
*பேனாமுள் செய்தி*
✍️ இன்றைய
பெட்ரோல் விலை: 100.75
டீசல் விலை : 92.34
*பேனாமுள் செய்தி*
✍️ பங்கு சந்தை நிலவரம் :
நிப்டி : 22604.85
நிப்டி பேங்க் : 49396.75
சென்செக்ஸ் : 74482.78
*பேனாமுள் செய்தி*
✍️ அமோனியா காஸ் கசிவு விவகாரம் கம்பெனிக்கு சீல் வைப்பு
காரமடை அருகே உள்ள சென்னி வீரம் பாளையம் கிராமத்தில் தனியார் சிப்ஸ் தயாரிக்கும் கம்பெனியில், நேற்று முன் தினம் இரவு, அமோனியா கசிவு காரணமாக பொதுமக்களுக்கு மூச்சு திணறல் மற்றும் கண் எரிச்சல் பாதிப்புகள் ஏற்பட்டது. இதையடுத்து வருவாய் துறையினர் கம்பெனிக்கு சீல் வைத்தனர். 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
*பேனாமுள் செய்தி*
✍️ தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது! கர்நாடகா திட்டவட்ட அறிவிப்பு
'எங்கள் மாநிலத்தின் தேவைக்கு மட்டுமேன போதுமானதாக இருப்பதால், அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது' என, காவிரி ஒழுங்குமுறை ஆலோசனை கூட்டத்தில், கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது
*பேனாமுள் செய்தி*
✍️ இறுதிகட்ட லோக்சபா தேர்தலுடன் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?
லோக்சபா தேர்தலில், இறுதி கட்டமாக நடத்தப்படும் ஏழாம் கட்ட ஓட்டுப்பதிவுடன், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., புகழேந்தி மறைவு காரணமாக, அத்தொகுதி, ஏப்ரல், 6 முதல் காலியாக உள்ளது. அதன் விபரத்தை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, தேர்தல் கமிஷனுக்கு முறைப்படி தெரியப்படுத்தி உள்ளார்
*பேனாமுள் செய்தி*
✍️ 'வாட்ஸாப் ஸ்டேடஸ்' வைத்து நடிகை அம்ரிதா தற்கொலை
பாட்னா, போஜ்புரி நடிகை அம்ரிதா பாண்டே, 27, துாக் கிட்டு தற்கொலை செய்து கொண்டது, சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
தற்கொலை செய்வதற்கு முன், 'வாட்ஸாப்'பில், 'அவளுடைய வாழ்க்கை இரண்டு படகுகளில் உள்ளது. நாங்கள் எங்கள் படகை மூழ்கடித்து அவளது பாதையை எளிதாக்கினோம்' என்ற வாசகத்தை, அவர் ஸ்டேட சாக வைத்திருந்தார்
*பேனாமுள் செய்தி*
✍️ வணிக பயன்பாட்டுக்கான 19கிலோ எடை கேஸ் சிலிண்டர் விலை ரூ.19 குறைந்தது.
சிலிண்டர் ரூ.1911க்கு விற்பனை
*பேனாமுள் செய்தி*
✍️ கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு ஆபத்தா ?
'கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு, மிக அரிதாக பக்க விளைவு ஏற்படும்' என, தடுப்பூசியை தயாரித்த, 'ஆஸ்ட்ரா ஜெனேகா' நிறுவனம், பிரிட்டன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
*பேனாமுள் செய்தி*
✍️ சாலை விபத்தால் ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே இன்று காலை(மே.,01) இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
*பேனாமுள் செய்தி*
✍️ கல்லுாரி மாணவியரை தவறாக வழி நடத்திய வழக்கு பேராசிரியை நிர்மலாதேவிக்கு 35 ஆண்டுகள் சிறை ஸ்ரீவி., மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு
கல்லுாரி மாணவியரை தவறாக வழிநடத்தும் வகையில், மொபைல் போனில் பேசிய அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவிக்கு, 35 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 2.42 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, ஸ்ரீவில்லிபுத்துார் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது
தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, 10 ஆண்டுகள் சிறை தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டிஇருக்கும்.
*பேனாமுள் செய்தி*
✍️ தமிழகம் ஏற்காடு 11-வது கொண்டை ஊசி மலைப்பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலி
ஏற்காட்டில் இருந்து தனியார் பேருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி வந்துகொண்டிருந்தது. அப்போது மலை பாதையில் 11-வது கொண்டைஊசி வளைவு பகுதியில் திடீரென நிலைதடுமாறி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த அனைவரும் படுகாயமடைந்தனர். தொடர்ந்து ஒரு சிறுவன், 3 ஆண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்
*பேனாமுள் செய்தி*
✍️ வெளிமணிப்பூரில் 81.46% வாக்குப்பதிவு
அவுட்டர் மணிப்பூர் கடந்த 26ம் தேதி நடந்த மக்களவை தேர்தலின்போது 6 வாக்குப்பதிவு மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மர்மநபர்கள் சேதப்படுத்தினார்கள். இங்கு நேற்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை. 81.46 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன
*பேனாமுள் செய்தி*
✍️ மாவட்டம் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தங்களில் கட்டண உயர்வு இன்று முதல் அமல்: நிர்வாகம் தகவல்
பயணிகள் அல்லாத 2 சக்கர வாகனங்களை நிறுத்த மாதாந்திர கட்டணமாக ரூ750, 24 மணி நேரம் நிறுத்துவதற்கு ரூ1500, மெட்ரோ கார்டு உள்ளவர்கள் ஒருமாதத்திற்கு 15 முறை பயணம் செய்து வாகனத்தை நிறுத்தினால் ரூ500, மெட்ரோ கார்டு உள்ளவர்கள் மாதம் முழுவதும் ரயில் பயணம் மேற்கொண்டால் அவர்களுக்கு ரூ250 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயணிகள் அல்லாதவர்கள் 4 சக்கர வாகனத்தை நிறுத்தினால் அவர்களுக்கு மாதம் ரூ1000, மெட்ரோ கார்டு உள்ளர்கள் மாதம் 15 முறை பயணம் செய்து 4 சக்கர வாகனத்தை நிறுத்தினால் ரூ700, மெட்ரோ கார்டு வைத்திருந்து மாதம் முழுவதும் பயணிக்கும் பயணிகளுக்கு மாதம் ரூ500 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு, இன்று முதல் அமலுக்கு வருகிறது, என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
*பேனாமுள் செய்தி*
✍️ மும்பை இந்தியன்சை வீழ்த்தியது லக்னோ
மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
*பேனாமுள் செய்தி*
✍️ சென்னையில் இன்று கிங்ஸ் மோதல்
ஐபிஎல் டி20 தொடரின் 49வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் சென்னையில் இன்று மோதுகின்றன.
*தினம் தினம் உங்களுக்காக செய்திகளை வழங்கி வருவது உங்கள் பேனாமுள் பத்திரிகை*
*பாடி.கார்த்திக்*