15/5/2024 ஆம் தேதி பேனாமுள் பத்திரிகை செய்திகள்
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳

தேதி: 15/5/2025

*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520

🌷 பேனாமுள் பத்திரிகை செய்திகள் 🌷

குறள் : 22
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று

பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ தொடர்ந்து 3வது முறையாக போட்டியிடுகிறார் வாரணாசியில் மோடி வேட்புமனு தாக்கல்: 3 மாநில முதல்வர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

மக்களவை தேர்தலில் தொடர்ந்து 3வது முறையாக போட்டியிடும் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது அவருடன் 3 மாநில முதல்வர்கள், ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் திரளாக உடனிருந்தனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. 91.17% மாணவர்கள் தேர்ச்சி… கோவை மாவட்டம் முதலிடம்!!

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பங்கு சந்தை நிலவரம் 
நிப்டி : 22217.85
பேங்க் நிப்டி : 47859.45
சென்செக்ஸ் : 73104.61

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ வாரயிறுதி நாட்களை ஒட்டி வரும் 17ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை. திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர். சேலம், ஈரோடு. திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 17/05/2024 (வெள்ளிக் கிழமை) அன்று 555 பேருந்துகளும் 18/05/2024 (சனிக்கிழமை) அன்று 645 பேருந்துகளும், 19/05/2024 (ஞாயிற்றுக் கிழமை) 280 பேருந்துகளும் கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி. ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 17/05/2024, 18/05/2024 மற்றும் 19/05/2024 ( வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை) அன்று 195 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ தேர்தல் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடைகோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!!

பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடைகோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் மதம், கடவுளின் பெயரால் மோடி வாக்கு சேகரிப்பதால் தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும் என கோரி பொதுநலன் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

*பத்திரிகை காண RNI ஆண்டறிக்கை  சிறப்பு முகாம்* (E-filing Annual Statements Free Camp)

*தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்* சார்பில் RNI ஆண்டறிக்கை இலவச சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

நாளிதழ், வார இதழ், மாதமிருமுறை இதழ், மாத இதழ் உள்ளிட்ட RNI பதிவு பெற்ற பத்திரிகைகள் அனைத்தும் ஆண்டுதோறும் ஆண்டறிக்கை (e-filing Annual Statements) தாக்கல் செய்ய வேண்டும்.

தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் நடைபெற உள்ள இந்த இலவச சிறப்பு முகாமை பத்திரிகை வெளியீட்டாளர்கள் & ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.

*நாள்: 15.05.2024 முதல் 25.05.2024 வரை*

இடம்: எண். 4/8, ஸ்டேட் பேங்க் காலனி 1வது தெரு,   சாலிகிராமம், சென்னை.93 
Landmark:  ஜெய்கோபால் கரோடியா மேல் நிலைப்பள்ளி & சாலிகிராமம் பேருந்து நிலையம் அருகில்

மேலும் விபரங்கள் பெற:            
எஸ்.சரவணன் 9840035480

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கரை மே 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மே 28ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டித்து கோவை 4வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. ஒரு நாள் போலீஸ் காவல் முடிந்து சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், நீதிமன்ற காவல் விதித்துள்ளனர். பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் காவல் நீட்டித்துள்ளனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ வாக்கு எண்ணிக்கை மையங்களில் குறைபாடா? மாவட்ட தேர்தல் அலுவலரிடம் முகவர்கள் புகார் தெரிவிக்கலாம்: சத்திய பிரதா சாகு பேட்டி

சத்திய பிரதா சாகு : தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் வேட்பாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் உள்ளனர். ஒரு சில இடங்களில் சில காரணங்களால் சிசிடிவி கேமராக்களில் சிறு பிரச்னை ஏற்பட்டது. அது உடனடியாக சரி செய்யப்பட்டது. ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் வேட்பாளரின் முகவர்கள், தேர்தல் உதவி அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார் தெரிவிக்கலாம். மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்தியாக உள்ளது என்றார்

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ உயிரிழந்த மகளுக்கு உறவினர்களை அழைத்து பூப்புனித நீராட்டு விழா: அன்னையர் தினத்தில் நெகிழ்ச்சி

இறந்த மகளின் ஆசையை நிறைவேற்ற, அவருக்கு கட்-அவுட் வைத்து பூப்புனித நீராட்டு விழா நடத்திய தாயை, உறவினர்கள், பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டினர்.

🌹 *பேனாமுள் செய்திகள்* 🌹

✍️ அண்மையில் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பை படம் எடுத்து அனுப்பியுள்ளது இஸ்ரோவின் ஆதித்யா எல் 1 விண்கலம்!

அண்மையில் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பை இஸ்ரோவின் ஆதித்யா எல் 1 விண்கலம் படம் எடுத்து அனுப்பியுள்ளது. மே 10 முதல் 12-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பை ஆதித்யா எல் 1 படம் எடுத்துள்ளது. ஆதித்யா எல்-1 விண்கலம் மூலம் எடுக்கப்பட்ட சூரிய வெடிப்பு புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பைக்கில் சென்றபோது காதலி தீக்குளிப்பு காதலன் சாவு

கடந்த 9ம்தேதி ஆகாஷ், சிந்துஜா ஆகியோர் பூம்புகார் கடற்கரைக்கு சென்று விட்டு மயிலாடுதுறைக்கு பைக்கில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அந்த பெண் தொடர்பான பிரச்னையில் சிந்துஜா பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தீக்குச்சியை கொளுத்தி பற்ற வைத்துக்கொண்டார். சிந்துஜா மீது எரிந்த தீ, ஆகாஷ் மீதும் பரவியது. படுகாயமடைந்த இருவரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு நேற்றுமுன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி ஆகாஷ் இறந்தார். சிந்துஜா மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி: கரூர் அருகே சோகம்

ஆண்டாங்கோயில் புதூர் பகுதிக்குட்பட்ட விவசாய நிலத்தில் உள்ள ஒரு கிணற்றோரம் 3 சிறுவர்களின் செருப்புகள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மூவரும் வெயிலுக்காக கிணற்றில் டைவ் அடித்து குளித்தபோது மூழ்கியிருக்கலாம் என தெரிய வந்தது. இதில் நள்ளிரவு 12 மணியளவில், மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டன.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நாகை எம்பி உடல் அடக்கம்

மறைந்த நாகை எம்பி எம்.செல்வராஜின் உடல் நேற்று அவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பெண் காவலர்கள் குறித்து அவதூறு பேச்சு யூடியூபர் பெலிக்ஸ் வீடு, ஆபீசில் திருச்சி போலீஸ் அதிரடி சோதனை: பணி செய்ய விடாமல் மனைவி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

திருச்சி போலீசார் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பெலிக்சின் வீடு மற்றும் அலுவலகத்தில் நேற்று சோதனை நடத்தினர். அப்போது போலீசாரிடம், வீட்டை சோதனையிடக்கூடாது என பெலிக்சின் மனைவி கடும் வாக்குவாதம் செய்தார். சோதனைக்கான நீதிமன்ற அனுமதியைக் காட்டி பின்னர் போலீசார் வீட்டில் சோதனை நடத்தினர். அலுவலகத்தில் இரவு வரை சோதனை நடந்தது. வழக்கு தொடர்பான பல முக்கிய ஆவணங்கள், பென் டிரைவ் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பப் பதிவு இன்றுடன் நிறைவு :

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பப் பதிவு இன்றுடன் நிறைவடைகிறது. விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள 19ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ இலங்கையில் இருந்து கடத்தி வந்த ரூ.10 கோடி தங்கம் பறிமுதல்: 5 பேர் கைது

இலங்கையில் இருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்ட ரூ.10.03 கோடி மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த வருவாய் புலனாய்வு துறையினர் 5 பேரை கைது செய்துள்ளனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றம் 3 நாட்களில் சவரன் ரூ.640 குறைந்தது: நகை வாங்குவோர் மகிழ்ச்சி

தங்கம் விலை தொடர்ந்து 3 நாட்களில் சவரனுக்கு ரூ.640 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ போரெல், ஸ்டப்ஸ் அதிரடி அரை சதம் லக்னோவை வீழ்த்தியது டெல்லி

லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 19 ரன் வித்தியாசத்தில் வென்றது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற லஞ்சம்; தாசில்தார்,போலீஸ்காரர் கைது

பரங்கிமலை இணை கமிஷனர் அலுவலக கார் ஓட்டுனரான போலீஸ்காரர் அருணிடம் அந்த பணத்தை கொடுத்த போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணைக்கு பின், தாசில்தார் சரோஜாவைவும் கைது செய்தனர்.

பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்

*பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
Comments