16/5/2024 ஆம் தேதி பேனாமுள் பத்திரிகை செய்திகள்
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳

தேதி: 16/5/2025

*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520

🌷 பேனாமுள் பத்திரிக்கை செய்திகள் 🌷

குறள் : 23
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு

பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

 ✍️ பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

🌹 *பேனாமுள்செய்திகள்* 🌹

✍️பங்கு சந்தை நிலவரம் 
நிப்டி : 22200.55
பேங்க் நிப்டி : 47687.45
சென்செக்ஸ் : 72987.03

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ தேர்தலுக்கு பின் நடந்த வன்முறை ஆந்திர தலைமை செயலாளர், டிஜிபிக்கு நோட்டீஸ்

ஆந்திராவில் மக்களவை தேர்தலுக்கு பின் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக தலைமை செயலாளர், டிஜிபி ஆகியோர் இன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ மனித மலம் கலக்கப்பட்டதாக கூறப்பட்ட குடிநீர் கிணற்றில் கிடந்தது அடை… தேன் அடை… விழுப்புரம் கலெக்டர் விளக்கம்

விக்கிரவாண்டி அருகே குடிநீர் கிணற்றில் மலம் கலந்ததாக கூறப்பட்ட நிலையில், அதில் தேனடை தான் கிடந்ததாக விழுப்புரம் கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த கஞ்சனூர் கே.பி பாளையம் கிராமத்தில் குடிநீர் கிணற்றில் மலம் கலக்கப்பட்டதாக சிலர் கூறியதால், நேற்று காலை பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ தமிழ்நாட்டில் கோவை, மதுரை, தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு

திருப்பூர், கோவை, மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் ஆகிய 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 சாலை விபத்துகள் : முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின இரங்கல் தெரிவித்துள்ளார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு; 26 மாவட்டங்களுக்கு மஞ்சள், ஆரஞ்சு அலர்ட்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கலெக்டர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் தற்போது வெப்பம் குறைந்துள்ள நிலையில், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதைஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் மேற்கண்ட நாள்களில் 26 மாவட்டங்களுக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுசெய்திகள்

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற போட்டி போட்டு விண்ணப்பம்; முறையான ஆவணங்கள் இல்லாததால் 3,500 விண்ணப்பங்கள் நிராகரிப்பு

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ வாங்கிய 7 மாதத்தில் 3 முறை பழுது; ஷோரூம் முன் வாஷிங் மெஷினை எரிக்க முயன்ற பெண்: அண்ணாசாலையில் பரபரப்பு

வாங்கிய 7 மாதத்தில் 3 முறை பழுதானதால் ஆத்திரமடைந்த பெண் ஒருவர் வாஷிங்மெஷினை வாங்கிய தனியார் ஷோரூம் முன் சாலையில் மண்ணெண்ணெயை ஊற்றி எரிக்க முயன்றார். இந்த சம்பவத்தால் அண்ணாசாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ போலி நகைகளை அடகு வைத்து ரூ.23 லட்சம் கடன் பெற்றதாக வங்கி நிர்வாகம் நோட்டீஸ்: பேங்க் பக்கமே வராத தொழிலாளி அதிர்ச்சி

வங்கி பக்கமே வராத கட்டிட தொழிலாளி, போலி நகைகளை அடமானம் வைத்து ₹23 லட்சம் கடன் பெற்றதாக வங்கி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது சிவகாசியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சிவகாமிபுரம் காலனியை சேர்ந்தவர் செல்வம் இவர் போலி நகைகளை கொடுத்து ₹22 லட்சத்து 90 ஆயிரம் கடன் பெற்றதாகவும், பணத்தை உடனடியாக திரும்ப கட்ட வேண்டும் என்றும், சிவகாசி பஸ் ஸ்டாண்ட் அருகே இயங்கி வரும் அரசுடைமை வங்கியில் இருந்து நோட்டீஸ் வந்தது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ ஊட்டி தொட்டபெட்டா செல்ல திடீர் தடை: வனத்துறை அறிவிப்பு

ஊட்டி தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்ல இன்று முதல் 22ம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு 5 நாள் அனுமதி

மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் வைகாசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு வரும் 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி நாளை துவக்கம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி நாளை துவங்கி வரும் 26ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறவுள்ளது. வழக்கமாக மலர் கண்காட்சி 2 நாள் மட்டுமே நடத்தப்படும். இந்த ஆண்டு 10 நாட்கள் நடத்தப்படவுள்ளன.

🌹*பேனாமுள் செய்திகள்*🌹

✍️ செல்போன் பறிப்பை தடுத்த வடமாநில வாலிபர் கொலை: திருப்பூரில் தொழிலாளர்கள் போராட்டம்

திருப்பூரில் செல்போன் பறிப்பை தடுத்த வடமாநில வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து வடமாநில தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ சர்ச்சை பேச்சு வழக்கில் திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் 100க்கும் மேற்பட்ட பெண் போலீசார் பாதுகாப்புடன் யூடியூபர் சங்கர் ஆஜர்: லால்குடி சிறையில் அடைப்பு

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ சென்னை மயிலாப்பூரில் அஜய் என்பவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1.59 லட்சம் திருட்டு

சென்னை மயிலாப்பூரில் அஜய் என்பவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1.59 லட்சம் திருடியுள்ளனர். ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என லிங்க் அனுப்பியுள்ளனர். லிங்க் அனுப்பியதை நம்பி, அஜய் வங்கி கணக்கு, சுய விவரங்களை பதிவு செய்துள்ளார். சிறிது நேரத்திலேயே 7 தவணைகளாக அஜய் வங்கி கணக்கில் இருந்து ரூ.1.59 லட்சம் மர்ம நபர்கள் திருடி உள்ளனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ 28 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 185 சவரன், 398 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு: ஆவடி காவல் ஆணையர் வழங்கினார்

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ தொழில் நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவை 7 மணி நேரம் பாதிப்பு; அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் இயல்புநிலை திரும்பியது

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ 5 விக்கெட் வித்தியாசத்தில் ராயல்சை வீழ்த்தியது பஞ்சாப்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ சன்ரைசர்ஸ் – டைட்டன்ஸ் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் டி20 தொடரின் 66வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ 1.16 கோடி அலைபேசி எண்களை சரிபார்க்க ஆசிரியர்களுக்கு கெடு

மாணவர்களின் 1.16 கோடி அலைபேசி எண்களை சரிபார்க்கும் பணியில் விடுமுறையிலும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எண்களை உறுதி செய்ய பெற்றோரிடம் ஓ.டி.பி., (ஒன் டைம் பாஸ்வேர்டு) கேட்பதால் 'மோசடி செய்யும் நோக்கில் பேசுகின்றனர்' என நினைத்து 'ஓ.டி.பி., எண்களை சொல்ல முடியாது' என பெற்றோர் மறுப்பதால் இப்பணி பெரும் சவாலாக உள்ளதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ நெடுஞ்சாலைத்துறை மறுசீரமைப்பு: 

நெடுஞ்சாலை துறையை, 14 ஆண்டுகளுக்கு பின், மறுசீரமைப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் துவக்கப்பட்டு உள்ளன.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ மூன்று நாட்களுக்குள் புதிய மின் இணைப்பு: வாரியம் உத்தரவு

புதிய இணைப்பு உள்ளிட்ட மின்சார சேவைகளை விரைந்து வழங்கும் வகையில், புதிய மின் வினியோக விதிகளை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம், பிப்ரவரியில் வெளியிட்டது. அதை அமல்படுத்தி மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

பேனாமுள் செய்திகளுக்காக உங்கள் 

*பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
Comments