17/5/2024 ஆம் தேதி பேனாமுள் பத்திரிகை செய்திகள்
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳

தேதி: 17/5/2025

*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520

🌷 பேனாமுள் பத்திரிக்கை செய்திகள்🌷

குறள் : 24
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து

அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பங்கு சந்தை நிலவரம் 
நிப்டி : 22403.85
பேங்க் நிப்டி : 47977.05
சென்செக்ஸ் : 73663.72

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ மன்னார் வளைகுடாவில் காற்று சுழற்சி மேலும் 3 நாட்களுக்கு 19 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு

மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக் கடல் பகுதி, தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ நெல்லையில் எச்சரிக்கையையும் மீறி அலட்சியம்; சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் பஸ்சை இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட்: 

சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் அரசு பஸ் ஓட்டி சிக்கிய விவகாரம் தொடர்பாக டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ வீட்டுவாசலில் விளையாடியபோது சிறுவனை கடித்து குதறிய பக்கத்து வீட்டு நாய்: தாய், மகள் மீது வழக்குப்பதிவு

விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஹரிஷ்குமாரை கண்டதும் திடீரென பாய்ந்து கடித்துக் குதறியது.இதில் சிறுவனுக்கு ஐந்து இடங்களில் காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் உடனடியாக சிறுவனை மீட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சம்பவம் தொடர்பாக பேசின் பிரிட்ஜ் போலீசார் ஸ்டெல்லா, அவரது மகள் ப்ரீத்தா மற்றும் பேரன் அரவிந்த் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

🌹 *பேனாமுள்செய்திகள்*🌹

✍️ லாரி மீது அடுத்தடுத்து 2 பஸ்கள் மோதி மருத்துவர் உள்பட 4 பேர் பலி: 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்

சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது அடுத்தடுத்து ஆம்னி பேருந்து, அரசு பேருந்து மோதிய விபத்தில் மருத்துவர் உள்பட 4 பேர் பரிதாபமாக பலியாகினர். 15க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ கேரள தம்பதி, மகனுடன் காரில் தற்கொலை: கம்பம் அருகே சோகம்

கேரளாவைச் சேர்ந்த தந்தை, தாய், மகன் காரில் தற்கொலை செய்து இறந்து கிடந்தது கம்பம் அருகே சோகத்தை ஏற்படுத்தியது.

தொழில் நஷ்டம் மற்றும் கடன் பிரச்னை காரணமாக குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு எடுத்துள்ளனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ யூடியூபர் சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல்

நீதிபதி, சங்கரை ஒரு நாள் மட்டும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி, இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும், 24 மணி நேரத்தில் அவரது வக்கீல் மூன்று முறை பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் சங்கரை, திருச்சி மாவட்ட சைபர் கிரைம் அலுவலகத்திற்கு அழைத்து சென்று, விடிய விடிய விசாரணை நடத்தினர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ குடும்ப அட்டைதாரர்களுக்கு துவரம் பருப்பு, பாமாயில் ₹418.55 கோடியில் கொள்முதல்

மே மாதத்திற்கு விநியோகிப்பதற்காக நியாயவிலைக் கடைகளுக்கு 5,405 மெட்ரிக் டன் துவரம் பருப்பு மற்றும் 31,19,722 பாமாயில் பாக்கெட்டுகள் நகர்வு செய்யப்பட்டுள்ளன. ஆகவே, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மே மாதத்திற்குரிய துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டுகள் வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ ராதிகா, சரத்குமார் குறித்து அவதூறு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கமிஷனர் அலுவலகத்தில் புகார்

காஞ்சிபுரத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் தன்னையும் மற்றும் தனது கணவரையும் இழிவாக பேசிய பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரைப்பட நடிகை ராதிகாவின் மேலாளர் நடசேன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ வார இறுதிநாள், முகூர்த்த தினத்தையொட்டி 460 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!!

வார இறுதிநாள், முகூர்த்த தினத்தையொட்டி விழுப்புரம் கோட்டம் சார்பில் 460 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று விழுப்புரம் கோட்டம் தெரிவித்துள்ளது. மே 17இல் 165, மே 18 இல் 200, மே 19இல் 95 என 460 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த மருத்துவக் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த, சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர் தனுஷ் (23) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வடசென்னை கொருக்குப்பேட்டை கேகேநகரை சேந்த தனுஷ் ஆவடியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 3ம் ஆண்டு பயின்று வந்தார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது. தலைமை ஆசிரியர்களுக்கு சீர்மிகு பாராட்டு விழா சென்னையில் நடைபெறும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ தயிர் வியாபாரியை மிரட்டி ரூ.35 ஆயிரம் பறித்த சிறப்பு எஸ்ஐ கைது: துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவு

போலீசார் ஏடியம் மையம் மற்றும் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று ஆய்வு செய்தனர். அதில், கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பு லோட்டஸ் கார்டன் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி (55) என்பவர், தயிர் வியாபாரி சித்திக்கை மிரட்டி பணம் பறித்து சென்றது தெரிந்தது.இவர், தற்போது ஐசிஎப் போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கோபி உத்தரவுப்படி, சிறப்பு உதவி ஆய்வாளர் ராமமூர்த்தியை கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்மீது துறை ரீதியான நடவடிக்கைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு வலை

சென்னை ராயப்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கொச்சியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. லண்டனில் மாடலிங் செய்ய நேர்முகத் தேர்வு என்ற பெயரில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது. நேர்முகத் தேர்வு என்ற பெயரில் பாலியல் தொல்லை கொடுத்த சித்தார்த் என்பவருக்கு ராயப்பேட்டை போலீசார் வலை வீசி வருகின்றனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பூங்கா, பொது கழிப்பறைகளை சிறப்பாக பராமரிக்க வேண்டும்: மாநகராட்சி ஆணையர் உத்தரவு

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் வடமலை தெரு சந்திப்பு முதல் குட்டி தெரு சந்திப்பு வரை நாளை முதல் 24ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

🌹 *பேனாமுள்செய்திகள்*🌹

✍️ கோவிஷீல்டை தொடர்ந்து கோவேக்சின் தடுப்புஊசி போட்டவர்களுக்கும் உடல் நல பிரச்சனைகள் ஆய்வில் தகவல்

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ குஜராத் - ஐதாராபாத் ஆட்டம் மழையால் ரத்து

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ மும்பை - லக்னோ அணிகள் இன்று மோதல்

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ இந்திய கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரி திடீர் ஓய்வு

 🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

 ✍️ தங்கம் மீண்டும் ₹54 ஆயிரத்தை கடந்தது ஒரே நாளில் சவரன் ₹560 எகிறியது

தங்கத்தின் விலை கடந்த ஏப்ரல் மாதம் அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ₹55 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹 

✍️ எஸ்பிஐ-யில் ஆண்டு வைப்புத்தொகை வட்டி 0.25% உயர்வு!!

ஓராண்டுக்கும் குறைவாக உள்ள நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டியை உயர்த்தியது பாரத ஸ்டேட் வங்கி. வைப்புத்தொகைக்கான வட்டியை கால் சதவீதம் முதல் முக்கால் சதவீதம் வரை உயர்த்தியது எஸ்.பி.ஐ. வைப்புத்தொகைக்கான வட்டி உயர்வை உடனடியாக எஸ்.பி.ஐ.அமலுக்கு கொண்டு வந்தது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ மின் வாரியத்திற்கு ரூ.13,811 கோடி இழப்பு

மின் உற்பத்திக்கு 22,407 கோடி ரூபாய்; கடன்களுக்கான வட்டிக்கு 6,359 கோடி ரூபாய்; இயக்கம் மற்றும் பராமரிப்புக்கு 10,701 கோடி ரூபாய் என, மொத்தம் 94,178 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.

வரவை விட செலவு அதிகம் இருப்பதால், 13,811 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

பேனாமுள் செய்திகளுக்காக உங்கள்

*பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
Comments