🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳
தேதி: 18/5/2025
*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520
🌷 பேனாமுள் பத்திரிகை செய்திகள் 🌷
குறள் : 25
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி
ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ பங்கு சந்தை நிலவரம்
நிப்டி : 22466.1
பேங்க் நிப்டி : 48115.65
சென்செக்ஸ் : 73917.03
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை புல்டோசரை வைத்து இடிப்பார்கள்: காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் மீது பிரதமர் மோடி
குற்றச்சாட்டு
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோயிலை புல்டோசரை கொண்டு இடித்து விடுவார்கள் என பிரதமர் மோடி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது காங்கிரஸ் சமாஜ்வாதி கட்சிகளின் ஆட்சி அமைந்தால் ராமர் மீண்டும் குடிசைக்கே திரும்ப வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவித்தார்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்த ஆண்டின் அரசுப் பொதுத் தேர்வுகளில் 100 சதவீதத் தேர்ச்சிகள் கண்டு சாதனை படைத்துள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களையும், தமிழ்ப் பாடத்தில் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ள மாணவ மாணவியர் அனைவரையும் சென்னைக்கு அழைத்துப் பாராட்டும் வகையில் சீர்மீகு விழா தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையில் விரைவில் நடத்தப்படவுள்ளது இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ 49 தொகுதிகளில் இறுதிகட்ட வாக்குசேகரிப்பு: 5ம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்கிறது: ராகுல், ராஜ்நாத் சிங், ஸ்மிருதி, உமர் அப்துல்லா போட்டி
உத்தரபிரதேசம் உட்பட 49 தொகுதிகளில் 5ம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. ராகுல் காந்தி, ராஜ்நாத் சிங், ஸ்மிருதி, உமர் அப்துல்லா போன்ற பிரபலங்களின் வெற்றி வாய்ப்பு இந்த தேர்தலில் தீர்மானிக்கப்படுகிறது.
🌹 *பேனாமுள் செய்திகள்* 🌹
✍️100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து என சமூக வலைதளங்களில் வெளியான செய்தி வதந்தி: மின்சார வாரியம் விளக்கம்
சமூக வலைத்தளம் மற்றும் காட்சி ஊடகத்தில் வெளிவரும் 100 யூனிட் இலவச மின்சாரம் குறித்த செய்தியானது உண்மை நிலைக்கு மாறானது. தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்பிற்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு எதிராக மின் இணைப்பு பெற்று பயன்படுத்தி வரும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து ஒருங்கிணைக்கும் பணி மேற்கொள்ளபடுகிறது
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ கொடைக்கானலுக்குச் செல்ல உள்ளூர் மக்களும் ஒரு முறை இ-பாஸ் எடுப்பது கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
கொடைக்கானலுக்குச் செல்ல உள்ளூர் மக்களும் ஒரு முறை இ-பாஸ் எடுப்பது கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அறிவித்துள்ளார். வெளிமாநிலம், வெளி மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் இ-பாஸ் பெற்றபின்னர் கொடைக்கானலுக்குள் அனுமதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் நடவடிக்கை எடுத்துள்ளனர். ‘epass.tnega.org’ என்ற இணையதள முகவரியில் இ-பாஸ் பெறலாம். மே30ம் தேதி வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்
🌹 *பேனமுள் செய்திகள்*🌹
✍️ தென்காசி மாவட்டம்; பழைய குற்றால அருவியில் குளித்தபோது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய சிறுவன் சடலமாக மீட்பு!
வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்ட சிறுவனை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர், போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வெள்ளப்பெருக்கில் சிக்கிய சிறுவனை தேடும் பனி தொடர்பாக குற்றாலத்தில் தென்காசி எஸ்பி நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், பழைய குற்றால அருவியில் குளித்தபோது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய நெல்லையை சேர்ந்த சிறுவன் அஸ்வின் சடலமாக மீட்கப்பட்டார். அருவியில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் சிறுவன் அஸ்வினின் சடலம் மீட்கப்பட்டது. வெள்ளப்பெருக்கு காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ அதிமுக முன்னாள் எம்எல்ஏ மலரவன் மறைவுக்கு எடப்பாடி இரங்கல்
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ கனமழை காரணமாக மே 18,19,20 ஆகிய தேதிகளில் நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் வர வேண்டாம்: மாவட்ட ஆட்சியர்
இன்று முதல் 3 நாட்களுக்கு நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். நீலகிரி மாவட்டத்திற்கு 18,19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட மூன்று நாட்கள் சுற்றுலா பயணிகள் நீலகிரி வருவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
🌹 *பேனாமுள் செய்திகள்* 🌹
✍️ வாத்து, கோழிகளுக்கு பறவை காய்ச்சல் கேரளாவில் 13 ஆயிரம் பறவைகளை கொல்ல முடிவு
கேரள மாநிலம் ஆலப்புழா, பத்தனம்திட்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான வாத்து, கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனால் 13 ஆயிரத்துக்கும் அதிகமான வளர்ப்புப் பறவைகளை கொல்ல தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ ஊட்டிக்கு டிரைவராக சென்றவர் பஸ்சில் சடலமாக திரும்பினார்
நேற்று சேலத்தில் இருந்து காவேரிப்பட்டணத்திற்கு வந்த பஸ், அதிகாலை 3 மணியளவில் காவேரிப்பட்டணம் பஸ் நிலையத்திற்கு வந்தது. அந்த பஸ்சில் சபரி சடலமாக மீட்கப்பட்டார். ஊட்டிக்கு சுற்றுலா சென்றவர்களை அழைத்துச் சென்ற சபரி, பஸ்சில் சடலமாக வந்ததால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். சபரியை மாற்று டிரைவராக அழைத்து சென்ற பெருமாளின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ பைக் திருடர்களை பிடிக்க ‘ஜியோ டேக்’ புது திட்டம்
கோவை அரசு மருத்துவமனை வளாகம், பீளமேடு மால் பகுதி ரோடு, பிரபல கல்லூரி பகுதி, காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் என 4 இடங்களில் அதிக வாகனங்கள் திருடப்பட்டுள்ளது. இந்த 4 இடங்களில் மாநகர போலீசார் ஜியோ டேக் என்ற புவியியல் அடிப்படையிலான கண்காணிப்பு திட்டத்தை அமலாக்க முடிவு செய்துள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ 10 நாட்கள் நடக்கிறது கொடைக்கானலில் மலர் கண்காட்சி: சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர்
சுற்றுலாப்பயணிகள் செல்பி, ரீல்ஸ் எடுத்து மகிழும் விதமாக முதல் முறையாக ‘360 டிகிரி டனல்’ என்ற புதிய செல்பி கருவியும் கண்காட்சி அரங்கில் நிறுவப்பட்டுள்ளது. வழக்கமாக மலர் கண்காட்சி 2 நாட்கள் மட்டுமே நடத்தப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு முதன்முறையாக 10 நாட்கள் நடத்தப்படுகிறது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ புதிய மின் இணைப்பு 3 முதல் 7 நாட்களில் வழங்க வேண்டும்: மின் வாரியம் உத்தரவு
புதிதாக மின் இணைப்பு கோரி விண்ணப்பிக்கும் நுகர்வோருக்கு 3 முதல் 7 நாட்களில் மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதிய மின் விநியோக விதிகளை வெளியிட்டது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ உடுமலைப்பேட்டை பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர எடப்பாடி கோரிக்கை
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் 17 வயது சிறுமியை 9 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் கேட்டு மிகுந்த அதிர்ச்சியுற்றேன். கடந்த சில மாதங்களாகவே, தொடர்ச்சியாக அந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், 4 மாத கர்ப்பமான நிலையிலேயே வெளியில் தெரியவந்துள்ளது.காவல் துறை விசாரணையில், இந்த கொடூரச்செயலை செய்த கும்பல் மேலும் ஒரு சிறுமியை இதேபோன்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதும் சமூக வலைதளங்கள் மூலமாகத் தெரியவந்துள்ளது.உடுமலைப்பேட்டை பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையை பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ 23ம் தேதி முதல் கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு தினமும் 85 பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்துத்துறை தகவல்
சென்னை: வரும் 23ம் தேதி முதல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 85 பேருந்துகள் தினசரி திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ பட்டதாரி ஆசிரியர் பணி கூடுதலாக 610 இடங்கள் வெளியீடு
பட்டதாரி ஆசிரியர்கள், வட்டார வளமைய பயிற்றுநர் காலிப் பணியிடங்களை நிரப்ப கூடுதலாக 610 இடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ கன்னியாகுமரி அருகே தீ விபத்து; கரும்புகை சூழ்ந்து கண் எரிச்சல்: வாகன ஓட்டிகள் அவதி
கன்னியாகுமரி முருகன்குன்றம் அருகே நேற்று மாலை திடீரென குப்பையில் தீ பிடித்தது. நேரம் செல்ல, செல்ல தீயின் வேகம் அதிகரித்தது. அந்த பகுதியில் குப்பைகள் மட்டுமின்றி உடைந்து போன படகுகள் உள்ளிட்ட பல்வேறு உடைந்த இயந்திர பொருட்களும் கிடந்தன. இதனால் அந்த பகுதி முழுவதுமே புகை மண்டலம் சூழ்ந்தது. கரும் புகை வெளியானது. இது குறித்து உடனடியாக கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்பு துறையினர் சென்று சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.கரும்புகை காரணமாக அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்களுக்கு கண் எரிச்சலும் ஏற்பட்டது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ ஊட்டி தாவரவியல் பூங்கா: மலர் கண்காட்சியில் புதிய அலங்காரம்
புதிதாக பல ஆயிரம் கார்னேசன் மலர்களை கொண்டு கித்தார், காளான் வடிவமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த மலர் அலங்காரங்களை நேற்று முதல் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். பல சுற்றுலா பயணிகள் அவற்றின் அருகே நின்று புகைப்படமும் எடுத்து செல்கின்றனர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ எண்ணூரில் மதுபோதையில் காவலரை தாக்கிய போதை டிரைவர்; சிசிடிவி பதிவுகள் வைரல்
எண்ணூரில் போக்குவரத்து சீரமைக்கும் பணியில் இருந்த காவலர்களை, ஆட்டோ டிரைவர் தகாத வார்த்தைகளில் பேசியதுடன், அவர்களை மதுபோதையில் சரமாரியாக தாக்க முயற்சித்த சிசிடிவி கேமரா பதிவுகள் வலைதளங்களில் வைரலாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ 3 தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்
எல்லை தாண்டி சென்றதாக தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
🌹 *பேனாமுள்செய்திகள்*🌹
✍️ திருச்சி விமான நிலையத்தில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் மலேசியா பறக்க முயன்ற 4 பேர் கைது: ராமநாதபுரம், சிவகங்கையை சேர்ந்தவர்கள்
பிறந்த தேதி, இருப்பிடத்தை மாற்றி போலி பாஸ்போர்ட்டில் இவர்கள் மலேசியா செல்ல முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து 4 பேரும் திருச்சி ஏர்போர்ட் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து 4 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ கர்நாடகாவில் இருந்து வாங்கி வந்து உயர் ரக போதை மாத்திரை விற்பனை: கோவையில் 5 பேர் கைது
பிரவின் செட்டி கர்நாடகா மாநிலம் ஹூப்ளி என்ற இடத்தில் மருந்துக்கடை நடத்தி வருகிறார். அவர் அங்கிருந்து உயர் ரக போதை மாத்திரைகளை கொண்டு வந்து சாகுல் அமீது, முருகன், ரியாஸ்கான், அக்பர் அலி ஆகியோர் மூலம் விற்பனை செய்ய முயன்றுள்ளார். 14 ரூபாய் மதிப்புள்ள இந்த மாத்திரைகளை ரூ.60 விற்று வந்தம் தெரியவந்து உள்ளது. இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ பூந்தமல்லி அருகே உணவு, தண்ணீரின்றி வீட்டில் அடைக்கப்பட்ட 18 நாய்கள் மீட்பு:
உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு விலங்குகள் நலவாரியம் நடவடிக்கை
பூந்தமல்லி அருகே வீட்டில் அடைக்கப்பட்டிருந்த 18 நாய்களை மீட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்து விலங்குகள் நலவாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ இன்று மற்றும் நாளை இரவு கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை பூங்கா ரயில் நிலையம் அருகே பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இன்று இரவு 9.30, 11.59 மற்றும் நாளை அதிகாலை 4.15 மற்றும் இரவு 9.30, 11.20, 11.40, 11.59, 10.40 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மேலும், நாளை மறுநாள் 20ம் தேதி காலை 4.15 மணிக்கு இயக்கப்படும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.மறுமார்க்கமாக தாம்பரம் – கடற்கரை இடையே இன்று மற்றும் நாளை மறுநாள் இரவு 10.40, 11.15, 11.20, 11.35, 11.40 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மேலும், செங்கல்பட்டு – கடற்கரை இடையே இன்று இரவு மற்றும் நாளை இயக்கப்படும் ரயில் இரவு 11 மணிக்கு இயக்கப்படும் ரயில் எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும். மற்றும் செங்கல்பட்டு – கடற்கரை இடையே இன்று மற்றும் நாளை இரவு 10.10 மணிக்கு இயக்கப்படும் ரயில் தாம்பரம் – கடற்கரை வரை மட்டும் இயக்கப்படும். கடற்கரை – செங்கல்பட்டு இடையே நாளை, நாளை மறுநாள் அதிகாலை 3.55 ,4.35 மணிக்கு இயக்கப்படும் ரயில் கடற்கரையிலிருந்து புறப்படாமல் எழும்பூரிலிருந்து புறப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ அபார வளர்ச்சியால் விரிவடையும் மாநகராட்சி புதிதாக 50 ஊராட்சிகளை இணைத்து 250 வார்டுகளாக அதிகரிக்க திட்டம்: ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் கமிட்டி அமைப்பு
சென்னை மாநகராட்சி எல்லையை மீண்டும் மிகப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் விரைவில் சென்னை மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 250ஆகவும், மண்டலங்களின் எண்ணிக்கை 20ஆகவும் மாறவுள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருவதாகவும், இந்தாண்டு இறுதிக்குள் அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி செந்தில்குமார் தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர், சோழிங்கநல்லூர் சட்டசபை தொகுதியில் உள்ள சில ஊராட்சிகள், திருவள்ளூர் மாவட்டத்தில் மதுரவாயல், பூந்தமல்லி, மாதவரம், பொன்னேரி தொகுதிகளில் சில ஊராட்சிகளும், அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் உள்ள சில ஊராட்சிகள் என மொத்தமாக 50 ஊராட்சிகள் சென்னையுடன் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
🌹 *பேனாமுளசெய்திகள்*🌹
✍️ தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்தது
நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.6,770க்கும், சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.54,160க்கும் விற்கப்பட்டது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ 2024ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.9சதவீதம்: ஐநா அறிக்கையில் தகவல்
வெளியிடப்பட்ட ஐநாவின் பொருளாதாரம் குறித்த சமீபத்திய மதிப்பீட்டு அறிக்கையில் , 2024ம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது 6.9 சதவீதமாக விரிவடையும். 2025ம் ஆண்டில் இது 6.6 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 2025ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 6.6 சதவீதமாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ பூரன் – ராகுல் அதிரடி ஆட்டம் மும்பையை வீழ்த்தியது லக்னோ
மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணி 18 ரன் வித்தியாசத்தில் வென்றது.
🌹 *பேனாமுள்செய்திகள்*🌹
✍️ பெங்களூரு - சென்னை அணிகள் இன்று பலபரீட்சை
பேனாமுள் செய்திகளுக்காக உங்கள்
*பாடி பா.கார்த்திக்*