19/5/2025 ஆம் தேதி் பேனாமுள் பத்திரிகை செய்திகள்
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳

தேதி: 19/5/2025

*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520

🌷 பேனாமுள் பத்திரிகை செய்திகள் 🌷

குறள் : 26
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ ✍️ பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ 49 தொகுதிகளில் 5ம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவு

மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் 49 தொகுதிகளுக்கான 5ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்றுடன் நிறைவடைந்தது. நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ நூறு நாள் வேலை திட்டத்தில் தினக்கூலி ரூ.319 ஆக உயர்வு!

மே 19- நுாறு நாள் வேலை திட்டத்தில் பணிபுரிவோருக்கான தினக்கூலி, 319 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 முதல் கணக்கிட்டு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ மாநிலங்களுக்கு இடையே மோதலை தூண்டும் மோடி பாஜவின் பிளவுவாத கனவு பலிக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை; பெண்களின் முன்னேற்றத்தை கண்டு அஞ்சுகிறார் என்றும் சாடல்

பிரதமர் மோடி பிற்போக்குத்தனமான வலதுசாரி சிந்தனைகள் கொண்ட ஆர்எஸ்எஸ் பின்புலத்திலிருந்து வந்தவர் என்பதால் பெண்களின் முன்னேற்றத்தைக் கண்டு அஞ்சுகிறார் என்றும் பாஜவின் பிளவுவாத கனவு பலிக்காது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ என்னுடன் விவாதம் நடத்த பிரதமர் மோடி வர மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்

அதானி மோசடிகள் குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்ல மோடி என்னுடன் விவாதத்துக்கு வர மாட்டார் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ ஊட்டியில் கனமழையால் பாறைகள் சரிந்து விழுந்தன: மலை ரயில் 2 நாட்கள் ரத்து

கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் பாறைகள் சரிந்து விழுந்ததால் மலை ரயில் போக்குவரத்து 2 நாள் ரத்து செய்யப்பட்டது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ இன்று மீண்டும் தொடங்குவதாக இருந்த நாகை-இலங்கை கப்பல் சேவை தற்காலிக நிறுத்தம்: 

நாகை-காங்கேசன் துறை கப்பல் போக்குவரத்து இன்று தொடங்குவதாக இருந்தது நிறுத்தப்பட்டுள்ளது. முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணத்தை திருப்பித்தர நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ வனத்துறையினருக்கு ரூட் போட்டு கூண்டில் சிக்க வைத்தது சிறுத்தையை பிடித்த மோப்ப நாய்:

மோப்பநாய் ரெக்ஸ் உதவியுடன் வனத்துறையினர் ஆய்வு செய்ததில் 2 பகுதிகளிலும் ஆடுகளை இழுத்துச் சென்றது, வெவ்வேறு சிறுத்தைகள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து 2 இடங்களிலும் சிறுத்தையை பிடிக்க தலா ஒரு ஆட்டைக் கட்டிப் போட்டு 2 கூண்டுகள் நேற்று முன்தினம் வைக்கப்பட்டன. இதனிடையே நேற்று முன்தினம் நள்ளிரவில் வேம்பையாபுரத்தில் வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது. இந்த பகுதியில் ஏற்கனவே 7 முறை கூண்டில் சிக்கிய நிலையில் தற்போது 8வது முறையாக சிறுத்தை சிக்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ நடுவானில் கோளாறு பெங்களூரு விமானம் திருச்சியில் தரையிறக்கம்

விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது, காற்றழுத்தக் குறைபாடு காரணமாக இயந்திரத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதில் பயணிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் மதியம் 1.40 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் அவசரமாக அந்த விமானம் தரையிறக்கப்பட்டது. உடனே விமான நிலைய அதிகாரிகள் துணையோடு பயணிகள் அனைவரும் பத்திரமாக திருச்சியில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் துபாயில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் மாலை 5 மணிக்கு 143 பயணிகளும் பெங்களூரு அனுப்பி வைக்கப்பட்டனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ ஊழியர்களின் பாதுகாப்புக்காக 100 மீட்டர் முன்பே மின்னழுத்தத்தை கணிக்கும் புதிய கருவி அறிமுகம்: மின் வாரிய அதிகாரிகள் தகவல்

மின்னழுத்ததைக் கண்டுபிடிக்க பயன்படுத்தப்படும் இந்த புதிய கருவிகளில் ஒயர்கள் மூலம் இணைப்பு கொடுத்து மின்னழுத்தத்தைக் கண்டுபிடிக்க இயலும். அதேநேரத்தில் இந்தக் கருவி 100 மீட்டர் தூரத்திற்கு முன்பே மின்னழுத்ததை கண்டறிந்து எச்சரிக்கை செய்யும். மேலும் சிவப்பு நிற லைட்டும், பீப் சத்தம் எழுப்பி ஊழியர்களை அந்த கருவி அலர்ட் செய்து விடும். இந்த கருவியில் பல்வேறு வோல்டேஜ்களை செட் செய்து கொள்ள முடியும். இருப்பினும் 230 கிலோவாட் என்பது இயல்பான அளவீடாக இடம் பெற்றிருக்கும். அனைத்து விதமான மின் கம்பிகளிலும் வோல்டேஜ் நிலவரத்தை கண்டறிந்து சரியாக சொல்லி விடும். இந்த கருவி தொடர்ச்சியாக 50 மணி நேரம் வரை இயங்கும்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ ஐஏஎஸ் அதிகாரி போல நடித்து பணம் பறித்த ஐ.டி. ஊழியர் கைது!

கல்வி நிறுவன அதிபர் இளங்கோ என்பவரிடம், ஐஏஎஸ் அதிகாரி போல நடித்து ரூ.27 லட்சம் பறித்த IT ஊழியர் ஆனந்த் கைது செய்யப்பட்டுள்ளார். இளங்கோவின் சொத்து வழக்கு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் சாதகமாக்கித் தருவதாக கூறி ரூ.27 லட்சம் வாங்கி ஏமாற்றியுள்ளார் ஆனந்த். சந்தேகமடைந்த இளங்கோ, குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்த நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ வார இறுதி நாட்களில் ₹100 கட்டணத்தில் நாள் முழுக்க மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம்: நிர்வாகம் அறிவிப்பு

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ₹100 மட்டும் செலுத்தி சுற்றுலா அட்டையை பயணிகள் பெற்றுக்கொள்ளலாம். நாள் முழுவதும் மெட்ரோ ரயிலில் இந்த அட்டையை பயன்படுத்தி பயணம் செய்ய முடியும். இந்த அட்டையை பெற ₹150 செலுத்த வேண்டும். பயணம் முடிந்ததும் அடையை திருப்பிக் கொடுக்கும் போது ₹50 திருப்பி அளிக்கப்படும்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் 1 லட்சத்து 77 ஆயிரம் யூனிட் சூரியஒளி மின்சார உற்பத்தி: மாநகராட்சி அசத்தல்

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரை சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் யூனிட் வரை தான் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தியாகும். ஆனால் இந்த ஆண்டு கடும் வெயில் காரணமாக, ஏப்ரல் மாதம் மட்டும் அதிகபட்சமாக 1 லட்சத்து 77 ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தியாகியுள்ளது. இது கடந்த ஏப்ரல் மாத மின் கட்டண செலவை ₹16 லட்சம் வரை குறைத்துள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 எகிறியது

தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.640 உயர்ந்தது. அதே நேரத்தில் மீண்டும் சவரன் ரூ.55 ஆயிரத்தை நெருங்குவதால் நகை வாங்குவோர் கலக்கமடைந்துள்ளனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசு: திமுக மாணவர் அணி தீர்மானம்

வரும் ஜூன் 3ம் தேதி கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, திமுக மாணவர் அணி சார்பில் திமுக கொடியேற்றி, எளியோர்களுக்கு பசியாற்றும் முகாம்கள், வேட்டி, சேலை வழங்குதல், மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகங்கள், கல்வி உதவித் தொகை வழங்குதல், மாவட்ட அளவில் அரசுப் பள்ளிகளில் பயின்று, 10 மற்றும் 12ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத் தொகை மற்றும் பரிசு வழங்குதல், விளையாட்டுப் போட்டிகள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ சென்னை குடிநீர் வாரியத்துக்கான ரூ.96 கோடி ஜி.எஸ்.டி., ரத்து

சென்னை பெருநகர குடிநீர் வடிகால் வாரியத்துக்கு, ஜி.எஸ்.டி., மற்றும் அதற்கான வட்டி, அபராதம் சேர்த்து 96 கோடி ரூபாய் செலுத்தும்படி கூறப்பட்டுள்ளது. நகராட்சி உள்ளிட்ட அரசு அமைப்புகள் வழங்கும் சேவைக்கு, ஜி.எஸ்.டி., விதிப்பில், மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது. எனவே, ஜி.எஸ்.டி., கூடுதல் ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்'என கூறப்பட்டுள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ 'நாட்டை உயர்த்த வேண்டியது கல்வி நிறுவனங்களின் கடமை!': கவர்னர் ரவி

உலகின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கும் அளவிற்கு, நாட்டை உயர்த்த வேண்டியது, கல்வி நிறுவனங்களின் கடமை,'' என, கவர்னர் ரவி பேசினார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை சதுரகிரியில் பக்தர்களுக்கு அனுமதியில்லை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் மே 20 முதல் 23 வரை சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் தெரிவித்துள்ளார்.

🌹 *பேனாமுள் பேனாமுள்*🌹

✍️ எவரெஸ்ட் சிக்கன் மசாலாவை பயன்படுத்த கூடாது உத்தரகன்னடா உணவு பாதுகாப்பு அதிகாரி உத்தரவு

'மசாலா தயாரிப்பு நிறுவனமான, எவரெஸ்ட் சிக்கன் மசாலாவில் அபாயமான அம்சம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்த வேண்டாம்,'' என, உத்தரகன்னடா உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜேஷ் அறிவுறுத்தினார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️  இலங்கை மீனவர்கள் 7 பேர் கைது

தூத்துக்குடி கடலோர காவல் படையினர், ரோந்து கப்பல் வைபவ்-வில் நேற்று காலை ரோந்த சென்றபோது, கன்னியாகுமரியில் இருந்து தென் கிழக்கே இந்திய கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இலங்கையைச் சேர்ந்த திர்ட்டி ‘மகா-6’ என்ற இலங்கை மீன்பிடி படகை சுற்றிவளைத்தனர். அதில் வந்த 7 இலங்கை மீனவர்களை கைது செய்தனர். படகையும் பறிமுதல் செய்தனர். அவர்களை இன்று மதியம் தூத்துக்குடி அழைத்து வரும் கடலோர காவல் படையினர், தருவைகுளம் மரைன் போலீசில் ஒப்படைக்கின்றனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 3 இடங்களில் ₹20 கோடி மதிப்பீட்டில் விலங்கு இனக்கட்டுப்பாடு மையங்கள்: 

சென்னையில் 3 இடங்களில் ₹20 கோடி மதிப்பீட்டில் விலங்கு இனக்கட்டுப்பாடு மையங்கள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. வரும் ஜூலை மாதம் இவை பயன்பாட்டுக்கு திறக்கப்படுகிறது, என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ சென்னை கனவு தகர்ந்தது

ஐ.பி.எல்., தொடரில் இருந்து வெளியேறியது நடப்பு சாம்பியன் சென்னை அணி. நேற்று பெங்களூருவிடம் 27 ரன்னில் தோற்று, 'பிளே ஆப்' வாய்ப்பை இழந்தது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பஞ்சாப் கிங்சுக்கு ஜிதேஷ் கேப்டன்

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான இன்றைய லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் கேப்டனாக சாம் கரனுக்கு பதிலாக ஜிதேஷ் ஷர்மா பொறுப்பேற்க உள்ளார்.

பேனாமுள் செய்திகளுக்காக உங்கள்

*பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
Comments