20/5/2024 ஆம் தேதி பேனாமுள் பத்திரிகை செய்திகள்
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳

தேதி: 20/5/2025

*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520

🌷பேனாமுள் பத்திரிகை செய்திகள்🌷

குறள் : 27
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ 5ம் கட்ட மக்களவை தேர்தல் 49 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு: 

மக்களவை தேர்தலில் 5ம் கட்டமாக 8 மாநிலங்களில் உள்ள 49 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதில், ராகுல் காந்தி, ராஜ்நாத் சிங், உமர் அப்துல்லா உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்களுடன் 695 பேர் போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன .

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ உபியில் பாஜவுக்கு 8 ஓட்டு போட்ட 16 வயது சிறுவன்: வீடியோ எடுத்து அவரே வெளியிட்டதால் சிக்கினான்

எடா மாவட்டத்தில் உள்ள கிரி பாமறன் கிராம வாக்குச்சாவடியில் 16 வயது சிறுவன் ஒருவர் தாமரை சின்னத்தில் பாஜவுக்கு தான் 8 ஓட்டு போட்டதை வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த சிறுவனின் தந்தை பாஜ நிர்வாகியாக உள்ளார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ ஏர் இந்தியா விமான இன்ஜினில் தீ: புறப்பட்ட சில நிமிடங்களில் தரையிறக்கம்

கொச்சி செல்வதற்கு பெங்களூருவிலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமான இன்ஜினில் தீப்பிடித்ததால் உடனடியாக அந்த விமானம் பெங்களூருவிலேயே தரையிறக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் விமானத்தில் பயணித்த யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ திருப்பதியில் தொடர்ந்து அலைமோதும் பக்தர்கள்; 2வது நாளாக 3 கி.மீ. நீண்ட வரிசை: 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை எதிரொலியாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தொடர்ந்து பக்தர்கள் அலைமோதுகின்றனர். இதனால் 2வது நாளாக நேற்றும் 3 கி.மீ. தூரம் நீண்ட வரிசையில் 24 மணிநேரம் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பேஸ்புக் மூலம் கடல் கடந்து காதல்: தென்கொரியா வாலிபருக்கும் கரூர் பெண்ணுக்கும் திருமணம்

கடல் கடந்து காதலால் தென்கொரியா வாலிபருக்கும் கரூர் பெண்ணுக்கும் தமிழ்முறைப்படி திருமணம் நடந்தது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ மாணவர்கள் வகுப்புகளை ‘கட்’ அடித்தால் பெற்றோருக்கு தகவல் பறக்கும்: பிரத்யேக வாட்ஸ்அப் குரூப்: பள்ளி கல்வித் துறை அதிரடி

பள்ளிக்கு இன்று மாணவர் வரவில்லை என்றால் அந்த தகவல் உடனடியாக பெற்றோருக்கு தெரிவிக்கப்படும். மேலும், பள்ளிக்கு வந்த பிறகு வகுப்பை கட் செய்து விட்டு வெளியில் சென்று விட்டாலும் அந்த விவரங்களும் பெற்றோருக்கு அனுப்பி வைக்கப்படும். இது தவிர மாணவர்கள் முறைகேடாக பள்ளிகளில் நடந்து கொண்டாலும், போதைப் பொருள்கள் பயன்படுத்தினாலும் அதுகுறித்த தகவல்களும் உடனடியாக பெற்றோருக்கு தெரிவிக்கப்படும். இதற்காக பெற்றோர் எண்களை இணைத்து பிரத்யேகமாக ஒரு வாட்ஸ் ஆப் குழுக்களை உருவாக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஒரே நாளில் 100 திருமணம்: விசாகத்தையொட்டி பாதயாத்திரையாக குவியும் பக்தர்கள்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைகாசி முகூர்த்தத்தையொட்டி நேற்று ஒரே நாளில் நூற்றுக்கணக்கான திருமணங்கள் நடந்தன.

*பேனாமுள் செய்திகள்*🌹
🌹
✍️ சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் 4வது மாடி பால்கனியில் இருந்து விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய் தற்கொலை: கோவையில் உள்ள பெற்றோர் வீட்டில் தூக்கில் தொங்கினார்

சென்னையில் உள்ள அபார்ட் மென்ட் பால்கனியில் இருந்து தவறி விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய், கோவையில் உள்ள பெற்றோர் வீட்டில் தூக்கில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவு

தமிழ்நாட்டில் நடப்பாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு இன்றுடன் முடிவடைகிறது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பொறியியல் படிப்புக்கு 1.73 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்: தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் தகவல்

தமிழகத்தில் பொறியியல் சேர்க்கை கலந்தாய்வுக்காக 1.73 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ 10, 11ம் வகுப்பு விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

🌹 *பேனாமுள்செய்திகள்*🌹

✍️ திருச்சி ரயில் நிலையத்தில் பரபரப்பு கவர்ச்சி நடனமாடி ரீல்ஸ் வெளியிட்ட இளம்பெண்கள்: அபராதம் விதித்து போலீஸ் எச்சரிக்கை

திருச்சி ரயில் நிலையத்தில் கவர்ச்சி நடனமாடி ரீல்ஸ் வெளியிட்ட 3 இளம்பெண்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பணம் திருடியவர்களை பிடிக்க முயன்றதால் நடைபாதையில் தூங்கிய வாலிபர் மீது ஆசிட் வீச்சு: 

ஓட்டேரி பகுதியில் நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்தவரிடம் திருட முயன்று, ஆசிட் வீசி தப்பிச் சென்ற 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ வாடிக்கையாளர் போல் நடித்து நகை கடையில் திருடிய பெண் கைது

போலீசார் கடையில் உள்ள சிசிடிவி பதிவுகள் மற்றும் ஆட்டோவின் பதிவு எண்களை வைத்து விசாரணை நடத்திய போது, மேற்கு மாம்பலத்தை சேர்ந்த பழைய குற்றவாளி சுபத்திர கல்யாணி (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து, சுபத்திர கல்யாணியை கைது செய்தனர். அவரிடம் இருந்து செயின் பறிமுதல் செய்யப்பட்டது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ தங்கை குறித்து ஆபாச பேச்சு நண்பனை தீர்த்துக்கட்டிய வாலிபர்

அதீத போதையில் இருந்த சரவணன், ரஞ்சித்குமாரிடம் அவரது தங்கை குறித்து ஆபாசமாக பேசி, உல்லாசத்துக்கு அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித்குமார், கத்தியால் சரவணன் தலையை வெட்டியதில் தலை சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து கொடுங்கையூர் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரஞ்சித்குமாரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பனை பொருட்கள் விற்பனை: களமிறங்குகிறது ஆவின்

சென்னை: பால் பொருட்கள் விற்பனையை தொடர்ந்து, பனை பொருட்கள் விற்பனையிலும், ஆவின் நிறுவனம் களமிறங்க உள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ என்னை போல யாரும் குடிக்கு அடிமையாகி விடக்கூடாது! முதல்வர் வீடு முன் போதை வாலிபர் ரகளை

நான் குடிபோதைக்கு அடிமையாகி விட்டேன்; என்னை போல வேறு எவரும் ஆகிவிடக் கூடாது' என, போலீஸ்காரரின் இரு சக்கர வாகனத்தில் வந்து, முதல்வர் ஸ்டாலின் வீட்டில் மனு கொடுக்க முயன்ற வாலிபர், ரகளையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ வீடுகளில் கிளி, மயில் வளர்த்தால் 7 ஆண்டு சிறை: பறவைகள் வளர்ப்போர் பதிவு செய்வது அவசியம்

வீடுகளில் செல்லப் பிராணிகளாகவும், வணிக நோக்கிலும் பறவைகள் வளர்ப்பதில் விதிகளை மீறினால், 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில், வரைவு விதிகளில் வனத்துறை மாற்றம் செய்துள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ தென்மேற்கு பருவமழை அந்தமானில் முன்னதாகவே தொடங்கியது: தமிழ்நாட்டுக்கு 22ம் தேதி வரை ரெட் அலர்ட்

வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை முன்னதாக அந்தமானில் நேற்று தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களில் நேற்று முதல் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. வரும் 22ம் தேதி வரை அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பி.ஆர்க், பி.பிளானிங் ஜேஇஇ தேர்வு முடிவுகள் வெளியீடு

ஜேஇஇ 2ம் கட்ட முதன்மை தேர்வுகளான பி.ஆர்க், பி.பிளானிங் ஆகிய படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ இந்தியாவில் 20 கோடி மக்களுக்கு உயர் ரத்த அழுத்தம்: ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல்

உயர் ரத்த அழுத்தம் பாதிப்பு மற்றும் அதன் சிகிச்சை பெறுவது குறித்து இந்திய உயர் ரத்த அழுத்த கட்டுப்பாட்டு செயலாக்கம் ( ஐஎச்சிஐ) Indian Hypertension Control Initiative) என்ற பெயரில் ஐசிஎம்ஆர் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவில் 20 கோடி மக்கள் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவால் காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு: அதிகபட்சமாக பீன்ஸ் கிலோ ரூ.250க்கு விற்பனை

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைந்ததால் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதில், அதிகபட்சமாக ஒரு கிலோ பீன்ஸ் ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ இத்தாலி ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக் சாம்பியன்

பேனாமுள் செய்திகளுக்காக உங்கள் 

*பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
Comments