🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳
தேதி: 21/5/2025
*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520
🌷பேனாமுள் பத்திரிகை செய்திகள்🌷
குறள் : 28
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்
பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ பங்கு சந்தை நிலவரம்
நிப்டி : 22502
பேங்க் நிப்டி : 48199.5
சென்செக்ஸ் : 74005.94
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமரா பழுது தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக்கூத்து: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமரா அடிக்கடி பழுதாகி செயல்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது, இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக்கூத்தாக உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ 5ம் கட்ட மக்களவை தேர்தல் விறுவிறுப்பு; 49 தொகுதிகளில் 58% வாக்குப்பதிவு: மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் வன்முறை, மோதல்
மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களில், 49 தொகுதிகளில் 5ம் கட்ட மக்களவை தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. இதில், 58 சதவீத வாக்குகள் பதிவாகின. மேற்கு வங்கத்தில் பல இடங்களிலும் வன்முறை, மோதல் சம்பவங்கள் நடந்ததால் பதற்றம் நிலவியது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ போலீஸ் ஸ்டிக்கர்’ ஒட்டிய போலீஸ் வாகனங்களுக்கும் ரூ.500 அபராதம் விதிப்பு: வேப்பேரி போக்குவரத்து போலீஸ் அதிரடி
சென்னை பெருநகர காவல்துறை அலுவலக பார்க்கிங்கில் ‘போலீஸ் ஸ்டிக்கர்’ ஓட்டிய வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் தலா ரூ.500 அபராதம் விதித்தனர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம் ரூ.1016 கோடியாக உயர்வு: நிர்வாக இயக்குனர் தகவல்
2023-24ம் நிதியாண்டில் சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம் 8 சதவீதம் அதிகரித்து ரூ.1016 கோடியாக உயர்ந்துள்ளது என வங்கியின் நிர்வாக இயக்குனர் தெரிவித்தார்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️தமிழ்நாட்டில் தொடர் மழை பெய்து வருவதால் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்: சுகாதாரத்துறை உத்தரவு
தமிழகத்தில் தொடர் மழை பெய்து வருவதால் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ மழையினால் வரத்து குறைந்தது கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை தொடர்ந்து உயர்வு: பூண்டு ரூ.150ல் இருந்து ரூ.380க்கு எகிறியது
கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மொத்த மற்றும் சிறு வியாபாரிகளின் தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறுகையில், மழை விட்டு விட்டு பெய்து வருவதால் தோட்டத்தில் இறங்கி காய்கறிகளை விவசாயிகள் பறிக்க முடியாத சூழ்நிலை இருப்பதால் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது என்றார்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு வருவதை தவிர்க்கவும்: பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளுக்கு 23ம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் கோடை வாசஸ்தலங்களுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️அனைத்து திட்டங்களிலும் பயன் பெற மாற்றுத்திறனாளிகள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்: தமிழக அரசு உத்தரவு
சென்னை: அரசின் அனைத்து திட்டங்களிலும் பயன்பெற மாற்றுத்திறனாளிகள் தங்கள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️செங்கல்பட்டு சிங்கபெருமாள்கோவில் இடையே மின்சார ரயில்கள் இன்று ரத்து
கடற்கரை- செங்கல்பட்டு இடையே மதியம் 12.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சிங்கபெருமாள்கோவில்- செங்கல்பட்டு இடையே இன்று ரத்து செய்யப்படுகிறது. அதைப்போன்று மறுமார்க்கமாக செங்கல்பட்டு- சென்னை கடற்கரை இடையே பிற்பகல் 3.05 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் செங்கல்பட்டு- சிங்கபெருமாள்கோவில் இடையே இன்று ரத்து செய்யப்படுகிறது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ அஜர்பைஜானில் இருந்து நாடு திரும்பியபோது ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் பலி: அமைச்சர் உள்ளிட்டோரும் மரணம் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இரங்கல்
அஜர்பைஜானில் இருந்து நாடு திரும்பிய போது, மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி பலியானார். அவருடன் பயணித்த வெளியுறவு அமைச்சர் ஹுசேன் அமிரப்துல்லாஹியன் உள்ளிட்டோரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. ஈரான் அதிபர் மறைவுக்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இரங்கல் தெரிவித்துள்ளன.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️மானாமதுரை வங்கியில் கொள்ளை முயற்சி: லாக்கர் அறையை திறக்கமுடியாததால் பல கோடி பணம், நகைகள் தப்பின
கொள்ளையர்கள் வங்கியின் பக்கவாட்டில் உள்ள ஜன்னல் கம்பிகளை வளைத்து உள்ளே இறங்கியுள்ளனர். பின் வங்கியினுள் இருந்த சிசிடிவி கேமரா இணைப்புகளை துண்டித்துள்ளனர். தொடர்ந்து மெயின்கேட்டை திறக்க வெல்டிங் மிஷின் மூலம் பூட்டை அறுத்துள்ளனர். வங்கியில் நுழைந்த அவர்கள், லாக்கர் முன் உள்ள இரும்புக்கதவை திறக்க முயற்சித்து முடியாததால் தப்பி சென்றுள்ளனர். இதனால் லாக்கரில் இருந்த கோடிக்கணக்கான பணம், நகைகள் தப்பியது’’ என்றனர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️மறைமலைநகர் அருகே பெரும் பரபரப்பு ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்து நின்ற 4 மின்சார ரயில்கள்: பயணிகள் அலறியடித்து ஓட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் – சிங்கபெருமாள்கோவில் இடையே ஒரே தண்டவாளத்தில் அடுத்தடுத்து 4 மின்சார ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த ரயில்கள் அனைத்தும் எதிரெதிரே மோதுவதுபோல் நெருக்கமாக நின்றதால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ ராயப்பேட்டை பகுதியில் செப்டம்பரில் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கம் தோண்டும் பணி தொடங்கும்: அதிகாரிகள் தகவல்
ராயப்பேட்டை பகுதியில் மெட்ரோ ரயிலுக்காக செப்டம்பர் மாதம் சுரங்கம் தோண்டும் பணிகள் தொடங்கப்படும் என மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து சவரன் ரூ.55 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது: வெள்ளியும் முதல் முறையாக கிராம் ரூ.100ஐ தாண்டியது: நகை வாங்குவோருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ சென்னையில் நான்காவது சம்பவம் சிறுமியை ஓடஓட விரட்டி கடித்து குதறிய தெருநாய்கள்: சிசிடிவி காட்சிகளால் மீண்டும் பரபரப்பு
பெரம்பூரில் சிறுமியை ஓடஓட விரட்டி தெருநாய்கள் கடிக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து சென்னையில் நான்காவது சம்பவம் அரங்கேறி உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ நெல்லையில் ஹோட்டல் வாசலில் வாலிபர் வெட்டிக்கொலை
சிசிடிவி கேமராவில் ஆறு பேர் கும்பல் காரில் காத்திருந்ததும், தீபக் ராஜா வெளியே வந்ததும் சரமாரியாக முகத்தில் மட்டும் அரிவாளால் வெட்டி விட்டு காரில் ஏறி தப்பி செல்வதும் பதிவாகி இருந்தது.
தீபக்ராஜா சில கொலை வழக்குகளில் குற்றவாளியாக உள்ளார். அவரால் பாதிக்கப்பட்ட யாராவது இக்கொலையை செய்திருக்கலாம் என, போலீசார் கருதினர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ கொடைக்கானலில் கனமழை; கயிறு கட்டி கடந்த கிராமத்தினர்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த கனமழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட, கிராமத்தினர் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் கயிறு கட்டி கடந்தனர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ எல்லா மின் சேவைக்கும் இனி ஒரே இணையதளம்
அனைத்து மின்சார சேவைகளுக்கும் விண்ணப்பிக்க, app1.tangedco.org/nsconline/ என்ற புதிய இணையதள முகவரியை மின் வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த இணையதள முகவரிக்கு சென்றதும், நேரடியாக மின்சார சேவைகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ புதுக்கோட்டை அருகே பட்டாசு குடோனில் வெடி விபத்து உரிமையாளர் உடல் கருகி பலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
சிவா, முருகேசன் என்ற 2 தொழிலாளிகள் வெல்டிங் வைத்த போது ஏற்பட்ட தீப்பொறி திடீரென குடோனில் விழுந்தது. இதில் உள்ளே இருந்த வெடிகள் மற்றும் வெடி மருந்துகள் வெடித்து சிதறியது. குடோனுக்குள் இருந்த கார்த்தி (27) உடல் கருகி உயிரிழந்தார். சிவா மற்றும் முருகேசனை தீக்காயத்துடன் மீட்டு திருச்சி மாவட்டம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
🌹 *பேனாமுள் செய்திகள்* 🌹
✍️ புரசைவாக்கத்தில் நண்பர்களுடன் மது அருந்திய வாலிபர் ஓட ஓட வெட்டி படுகொலை: தலைமறைவான 6 பேரை பிடிக்க தனிப்படை அமைப்பு
மனைவியுடனான கள்ளத்தொடர்பை கைவிடாததால் ஆத்திரமடைந்த ரவுடி தனது நண்பர்களுடன் இணைந்து மது அருந்திய வாலிபரை ஓட ஓட வெட்டி படுகொலை செய்தார். தலைமறைவாக உள்ள ரவுடி உட்பட 6 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்திற்கான கால அவகாசம் 24-ம் தேதி வரை நீட்டிப்பு: இதுவரை 2,34,883 பேர் விண்ணப்பம் சமர்ப்பிப்பு
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ மதுரை எய்ம்சுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு
திருப்பரங்குன்றம்: மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதியை தமிழக அரசு வழங்கியது.
🌹 *பேனாமுள்செய்திகள்*🌹
✍️ திருச்செந்தூரில் நாளை வைகாசி விசாகம்: பாதயாத்திரை பக்தர்கள் குவிந்தனர்
🌹 *பேனாமுள்செய்திகள்*🌹
✍️ பைனலில் யார்... * முதல் தகுதிச்சுற்று இன்று
இன்று ஆமதாபாத்தில் நடக்கும் தகுதிச்சுற்று 1ல் முதல் இரு இடம் பெற்ற கோல்கட்டா, ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி நேரடியாக பைனலுக்கு (மே 26, சென்னை) செல்லும். தோற்கும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு உண்டு. மே 24ல் சென்னையில் நடக்கவுள்ள தகுதிச்சுற்று 2ல் பங்கேற்கலாம்.
பேனாமுள் செய்திகளுக்காக உங்கள்
*பாடி பா.கரா்த்திக்*