🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳
தேதி: 22/5/2025
*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520
🌷 பேனாமுள் பத்திரிகை செய்திகள் 🌷
குறள் : 29
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது
நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
பங்கு சந்தை நிலவரம்
நிப்டி : 22529.05
பேங்க் நிப்டி : 48048.2
சென்செக்ஸ் : 73953.31
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ 33வது ஆண்டு நினைவு நாள் ராஜிவ்காந்தி நினைவிடத்தில் காங்கிரசார் மலர் அஞ்சலி: செல்வபெருந்தகை தலைமையில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
ராஜிவ்காந்தியின் 33வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரசார் நேற்று மலர் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் 33வது ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் அலங்கரிக்கப்பட்டிருந்த ராஜிவ்காந்தியின் திருவுருவப்படத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
🌹*பேனாமுள் செய்திகள்*🌹
✍️ தமிழக அரசு உடனடியாக பழைய பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை மக்களின் பயன்பாட்டிற்காக இயக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
அதிமுக அரசு பொது போக்குவரத்தை மக்களின் வசதிக்காக இயக்கியது. போக்குவரத்து கழகங்களின் நஷ்டத்தை அரசே ஈடு செய்தது. எனவே, தமிழக அரசு உடனடியாக பழைய பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை மக்களின் பயன்பாட்டிற்காக இயக்க வேண்டும். நிதி பற்றாக்குறை என்று திரும்ப திரும்ப கூறாமல் கடன் வாங்கிய ரூ.3.5 லட்சம் கோடியில், புதிய பேருந்துகளை வாங்குவதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்திட வலியுறுத்துகிறேன். என்று கூறினார்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ அமராவதி அணையின் நீர் ஆதாரத்தை தடுக்க சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரளா தடுப்பணை கட்ட முயற்சி: வைகோ கடும் கண்டனம்
அணை கட்டப்பட்டால் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, அணையை நம்பி இருக்கும் பொதுமக்களும், விவசாயிகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாவர். அமராவதி அணையின் முக்கிய நீர் ஆதாரமான சிலந்தி ஆற்றின் குறுக்கே தற்போது கேரள மாநில அரசு தடுப்பு அணை கட்ட முயற்சிப்பது கடும் கண்டனத்துக்குரியது. இந்த அணை கட்டப்பட்டால் அமராவதி அணைக்கு சொட்டு நீர் கூட வருவதற்கு வாய்ப்பில்லை. தமிழக அரசின் அனுமதியோ, ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் துறையின் முன் அனுமதியோ இன்றி தமிழகத்தை வஞ்சிக்கும் நோக்கத்தில் சட்ட விரோதமாக கேரள மாநில அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் உடனடியாகத் தடுத்து நிறுத்திட முன்வர வேண்டும் என்று கூறினார்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ மக்களவை 6ம் கட்ட தேர்தல் 58 தொகுதிகளில் நாளை பிரசாரம் ஓய்கிறது: டெல்லி உள்பட 7 மாநிலங்களில் 25ம் தேதி வாக்குப்பதிவு
மக்களவை 6ம் கட்ட தேர்தல் பிரசாரம் 58 தொகுதிகளில் நாளை மாலை முடிவுக்கு வருகிறது. 25ம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடக்கிறது. நாடு முழுவதும் ஏப்.19 தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடக்கிறது. இதுவரை 5 கட்ட தேர்தல்கள் முடிவுக்கு வந்துள்ளன.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ போதையில் கார் ஓட்டி 2 பேர் பலியான வழக்கில் சிறுவனின் தந்தை உட்பட 4 பேர் அதிரடி கைது
கொண்டிருந்தனர்.சுமார் 3 மணி அளவில் கல்யாணிநகர் பகுதியில் பைக் சென்று கொண்டிருந்த போது அதே சாலையில் வந்த கார் ஒன்று பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் மற்றொரு கார் மீது விழுந்தனர். இதில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கார் ஓட்டிய 17 வயது சிறுவனை கைது செய்த போலீசார் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். அவருக்கு 16 மணி நேரத்தில் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.இதற்கிடையே விபத்து நடப்பதற்கு சிறிது நேரத்துக்கு முன் அந்த சிறுவன் பாரில் மது அருந்தும் சிசிடிவி காட்சிகள் நேற்று வெளியானது. சிசிடிவி காட்சியை ஆதரமாக கொண்டு மது பான பார் உரிமையாளர் மற்றும் நிர்வாகிகள் 2 பேர் உட்பட 3 பேர் மீதும், கார் ஓட்டிய சிறுவனின் தந்தை மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் 4 பேரையும் நேற்று அதிரடியாக கைது செய்தனர். சிறுவனுக்கு மதுபானம் சப்ளை செய்த பார் சீல் வைக்கப்பட்டது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ சென்னை பழைய சட்டக்கல்லூரி அருகே குற்றவியல் நீதிமன்றங்களுக்கான 5 மாடி கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்ட தடையில்லை: இன்று நடக்க இருந்த விழாவை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவு
சென்னை பழைய சட்டக் கல்லூரி அருகில் ஐந்து மாடி கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை நடத்த அனுமதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ கோடை விழா இன்று தொடக்கம் ஏற்காட்டை சுற்றி பார்க்க ரூ.300 போதும்…போக்குவரத்து துறை சிறப்பு ஏற்பாடு
ஏற்காடு கோடை விழாவையொட்டி இன்று முதல் 26ம் தேதி வரை காலை 8.30 மணிக்கு சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பேக்கேஜ் பஸ் புறப்பட்டு ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலாதலமான கரடியூர் காட்சி முனை,சேர்வராயன் கோயில், மஞ்சகுட்டை காட்சி முனை, பக்கோடா பாயிண்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ்சீட், ரோஸ்கார்டன், ஏற்காடு ஏரி, அண்ணா பூங்கா, மான் பூங்கா, தாவரவியல் தோட்டம் ஆகிய இடங்களை கண்டு களித்து மீண்டும் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு இரவு 7 மணிக்கு பேக்கேஜ் நிறைவு செய்யும் வகையில் சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சிறப்பு பஸ்சுக்கு ஒரு பயணிக்கு ரூ.300 கட்டணம்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்
சென்னையில் கால்நடைகளை வளர்ப்போர், அவற்றை முறையாக வீட்டில் கட்டி வைத்து பராமரிக்காமல், சாலைகளில் திரிய விடுவதால், அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இந்நிலையில், சென்னையில் மாட்டு தொழுவங்களுக்கு லைசென்ஸ் கட்டாயம் என்ற புதிய விதி ஜூன் முதல் அமலுக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மாட்டு உரிமையாளர்கள் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் விண்ணப்பித்து உரிமம் பெற வேண்டி வலியுறுத்தப்பட உள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ பட்டா மாறுதல் கேட்டு சமூக வலைதளத்தில் கோரிக்கை வீடியோவை பார்த்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை
பட்டா மாறுதல் கேட்டு சமூக வலைதளத்தில் கோரிக்கை விடுத்த நபரின் வீடியோவை பார்த்து முதல்வர் உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுத்த சம்பவம் வைரலாகி வருகிறது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு வார இறுதி, விசேஷ நாட்களில் மட்டும் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை தகவல்
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வெள்ளி, சனி ஆகிய வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் ஜூன் மாதம் மாணவர் சேர்க்கை: அரசாணை வெளியீடு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பயிற்சி நிறுவனங்கள், சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மே 30ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட வேண்டும். மே 31 முதல் ஜூன் 3ம் தேதி வரை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும். மதிப்பெண் மற்றும் இன சுழற்சி அடிப்படையில் ஜூன் 7ம் தேதி முதல் மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும். ஜூன் 14ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்க வேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகிறது: தமிழ்நாட்டில் மழை நீடிக்கும்
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒன்று இன்று உருவாகும் என்றும், அது மேலும் வலுப்பெற்று 24ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்புள்ளது. அதனால் தமிழ்நாட்டில் அனேக இடங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ 37,000 அடி உயரத்தில் பறந்த போது விமானம் பயங்கரமாக குலுங்கியதில் ஒருவர் பலி: 30 பயணிகள் காயம்
இந்திய நேரப்படி மாலை 3.45 மணி அளவில் அந்தமான் கடல் பகுதியில் விமானம் 37,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது மோசமான வானிலை நிலவியது. புயல் எச்சரிக்கைக்கு மத்தியில், திடீரென காற்றின் வேகமும் திசையும் மாறியது. இதனால் இறக்கைகள் கட்டுப்பாடின்றி, விமானம் பயங்கரமாக குலுங்கத் தொடங்கியது.இதனால் விமானி படுவேகமாக விமானத்தின் உயரத்தை குறைத்தார். 37,000 அடி உயரத்தில் இருந்து 3 நிமிடத்தில் 6,000 அடி உயரம் குறைக்கப்பட்டது. அடுத்த 10 நிமிடத்திற்கும் குறைவாக 31,000 அடி உயரத்தில் பறந்த விமானம், அரை மணி நேரத்தில் பாங்காக்கில் உள்ள ஸ்வர்ணபூமி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்து இங்கிலாந்தை சேர்ந்த 73 வயது பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 30 பயணிகள் காயமடைந்தனர்.விமானம் தரையிறக்கப்பட்டதும் தயாராக இருந்த ஆம்புலன்ஸ் மூலமாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ பராமரிப்பு பணி காரணமாக புரசைவாக்கம் கழிவு நீரிறைக்கும் நிலையம் இன்று செயல்படாது: குடிநீர் வாரியம் தகவல்
வியாசர்பாடி கணேசபுரம் மேம்பால பணிகளுக்காக, டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலையில் கழிவுநீர் உந்து குழாய் இணைக்கும் பணி மேற்கொள்ளப்படுவதால் இன்று மாலை 4 மணி முதல் நாளை காலை 6 மணி வரை புரசைவாக்கம் கழிவு நீரிறைக்கும் நிலையம் செயல்படாது
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ தங்கம் விலையில் திடீர் மாற்றம்: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.320 குறைந்தது
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பைனலுக்கு முன்னேறியது கொல்கத்தா: ஸ்டார்க் அபார பந்துவீச்சு, ஷ்ரேயாஸ், வெங்கடேஷ் அரை சதம்
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ ஐபிஎல் தொடரின் 17வது சீசன் பிளே ஆப் சுற்று எலிமினேட்டர் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று மோதுகின்றன.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ கனவு இல்லம் திட்டம் ரூ.1 லட்சம் கடன் உண்டு
தமிழக அரசு, 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக, ஆறு ஆண்டுகளில், 8 லட்சம் குடிசை வாழ் மக்களுக்கு தலா, 3.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ கருவின் பாலின விவகாரம்: அரசு கடும் எச்சரிக்கை
மனைவி வயிற்றில் உள்ள குழந்தையின் பாலினத்தை வெளியிட்ட, யு டியூபர் இர்பானுக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. 'கருவின் பாலினம் அறிவிக்கும் செயலில் ஈடுபடுவோர் மீது, கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும், தமிழக அரசு எச்சரித்துள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ பெங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக கோவையில் 2 டாக்டர் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை: தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் கர்நாடகா சிறையில் இருந்தவர்கள்
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ பள்ளிக்கல்வி துறையில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்துவதன் மூலம் இந்தியாவில் கல்வி முன்னேற்றத்தில் தலைசிறந்து விளங்கும் தமிழ்நாடு என அரசு பெருமிதம்
கல்வியில் முன்னேற்றத்தைக் கொண்டு வந்து சாதனை படைத்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினை உலக நாடுகள் பாராட்டுகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் தொடக்கக் கல்வியின் வளர்ச்சியில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். புதிய புதிய திட்டங்களைத் தந்து குழந்தைகள் பள்ளிக்கு தொடர்ந்து வந்து கற்கும் சூழ்நிலையை மேம்படுத்தி வருகிறார். அந்த வகையில் முதலமைச்சர் உருவாக்கியுள்ள திட்டங்கள் மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன.
பேனாமுள் செய்திகளுக்காக உங்கள்
*பாடி பா.கார்த்திக்*