🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳
தேதி: 23/5/2025
*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520
🌷 பேனாமுள் பத்திரிகை செய்திகள் 🌷
குறள் : 30
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்
எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ பங்கு சந்தை நிலவரம்
நிப்டி : 22597.8
பேங்க் நிப்டி : 47781.95
சென்செக்ஸ் : 74221.06
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ ரேஷன் கடைகள் நேரம் மாறுகிறது: விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை மற்றும் புறநகரில் மதியம் ரேஷன் கடைகளை மூடி மீண்டும் திறப்பதற்கு, 2:30 மணி நேரம் இடைவெளி வழங்கப்படுகிறது. அந்த சமயத்தில் தான், கார்டுதாரர்கள் வாங்காத பொருட்களை, சில ஊழியர்கள் கடைக்கு வெளியே அனுப்புவது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுவதாக, கூட்டுறவு மற்றும் உணவு துறை உயரதிகாரிகள் நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
எனவே, ரேஷன் கடைகள் மதியம் மூடப்படும் நேரத்தை குறைக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகிறது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ இனி டிரைவிங் லைசென்ஸ் எடுக்க ஆர்.டி.ஓ., ஆபிஸ் செல்ல வேண்டாம்
இனி ஓட்டுனர் உரிமம் பெற போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் திறன் தேர்வு எழுத வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதிலாக, தனியார் ஓட்டுநர் பயிற்சி மையங்கள் இனி ஓட்டுநர் திறன் தேர்வுகளை நடத்தி சான்றிதழ்களை வழங்க அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதி வரும் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ அதிமுக ஆட்சிக்காலத்தில் நிலக்கரி வாங்கியதில் அதானி நிறுவனம் ரூ.6000 கோடி முறைகேடு: அறப்போர் இயக்கம் பரபரப்பு குற்றச்சாட்டு
ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு தரமற்ற நிலக்கரியை கொள்முதல் செய்து தரம் உயர்ந்த நிலக்கரி விலையில் விற்று அதானி குழுமம் முறைகேடு செய்திருப்பதை லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியுள்ளது. இந்த வகையில் அதானி நிறுவனம் ரூ.6 ஆயிரம் கோடி வரை முறைகேட்டில் ஈடுபட்டதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ வறுமை ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 5 லட்சம் குடும்பங்களை மேம்படுத்தும் தாயுமானவர் திட்டம் ஜூன் மாதம் தொடக்கம்
வறுமை ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 5 லட்சம் குடும்பங்களை மேம்படுத்தும் தாயுமானவர் திட்டம் தமிழ்நாடு முழுவதும் அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த 2 ஆண்டுகளில் சுமார் 5 லட்சம் ஏழை குடும்பங்களை வறுமையில் இருந்து மீட்பதற்காக தாயுமானவர் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காக ரூ.27,922 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது.
மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு அடுத்த மாதம் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒன்றிய அரசின் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 2.2% மக்களின் எண்ணிக்கை தாயுமானவர் திட்டத்தால் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ 6ம் கட்ட தேர்தல் 58 தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்கிறது: நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு
நாடு முழுவதும் ஏப்.19 தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடக்கிறது. இதுவரை 5 கட்ட தேர்தல்கள் முடிவுக்கு வந்துள்ளன. தற்போது வரை 428 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் 6ம் கட்டமாக 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 58 தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ தமிழ்நாடு மின்வாரியத்திற்கு நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு அதானி ஊழல் குறித்து விசாரணை: ராகுல்காந்தி அதிரடி அறிவிப்பு
தமிழ்நாடு மின்வாரியத்திற்கு நிலக்கரி வழங்கியதில் பாஜ ஆட்சியில் மிகப்பெரிய நிலக்கரி ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழல் மூலம் பிரதமர் மோடியின் அபிமான நண்பர் அதானி, தரம் குறைந்த நிலக்கரியை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு விற்று பல ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளார். இதனால் சாமானிய மக்கள் மின்கட்டணத்திற்கு மூன்று மடங்கு அதிக விலை கொடுத்துள்ளனர். இந்த வெளிப்படையான ஊழலில் ஈடி, சிபிஐ, ஐடி விசாரிக்காமல் அமைதியாக இருக்க எத்தனை டெம்போக்கள் பயன்படுத்தப்பட்டன என்பதை பிரதமர் சொல்வாரா? ஜூன் 4 க்குப் பிறகு, இந்த மெகா ஊழலை இந்தியா கூட்டணி அரசு விசாரிக்கும். பொதுமக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவிற்கும் கணக்கு கேட்கப்படும். இவ்வாறு ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ திடீர் உடல்நலக்குறைவு ஷாருக்கான் அட்மிட்
வெப்பத்தால் ஏற்படும் ஸ்டிரோக் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அகமதாபாத்தில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ ஜூன் 18ல் யு.ஜி.சி நெட் தேர்வு: விண்ணப்ப பதிவில் திருத்தம் செய்ய இன்றே கடைசி நாள்
யு.ஜி.சி நெட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பப் பதிவில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.நடப்பாண்டுக்கான யு.ஜி.சி நெட் தேர்வு அடுத்த மாதம் (ஜூன்) 18ம் தேதி நடைபெறுகிறது.இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த 20ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இந்த நிலையில், தேர்வர்கள் விண்ணப்பப் பதிவில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான கால அவகாசம் இன்று (மே 23ம் தேதி) நள்ளிரவு 11.59 மணியுடன் நிறைவடைகிறது. யு.ஜி.சி. நெட் தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், குறிப்பிட்ட இந்த கால அவகாசத்தை பயன்படுத்தி விண்ணப்பப் பதிவில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என்று யு.ஜி.சி. அறிவுறுத்தி உள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது; 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் வலுப்பெற்று நேற்று காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியது. இதனால் தமிழ்நாட்டின் பல இடங்களில் மழை பெய்யும் என்றும், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ கேபி.2 கொரோனா வைரஸ் பரவல்; தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் இல்லை: சுகாதாரதுறை இயக்குநர் தகவல்
இனிவரும் காலங்களில் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு கொரோனா வைரஸ் அலை வருவதற்கு வாய்ப்புள்ளதால், இதற்காக பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியுள்ளார். சிங்கப்பூர் நாட்டில் கேபி.2 (kp.2) என்ற கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் அந்நாட்டில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதனால் இத்தகைய கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இதே வைரஸ் நமதுநாட்டில் மேற்குவங்கம், ராஜஸ்தான், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பரவி வருகிறது. இந்த வைரஸ், தமிழ்நாட்டில் இதுவரை பரவவில்லை.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட டாக்டர்களுக்கு விலக்கு; விதி மீறினால் போலீசார் நடவடிக்கை எடுக்கலாம்: சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்றம், ஸ்டிக்கர் ஒட்டுவதை தவறாகப் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கலாம் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ ஆந்திராவில் தேர்தலின்போது வன்முறை வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த எம்எல்ஏ கைது: 10 நாட்களுக்கு பின் வெளியான வீடியோவால் சிக்கினார்
தேர்தலின்போது வாக்கு இயந்திரத்தை ஆளுங்கட்சி எம்எல்ஏ தூக்கி வீசி உடைத்துள்ளார். அவரை போலீசார் கைது செய்தனர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ வாரன்ட் இருந்தால் மட்டுமே கட்டணமின்றி பயணிக்கலாம்; பஸ்சில் போலீசாருக்கு இலவச பயணம் கிடையாது: போக்குவரத்து துறை தகவல்
வாரன்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும் என்றும் மற்ற அனைத்து நேரத்திலும் டிக்கெட் எடுத்து பயணிக்க வேண்டும் என்றும் போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ நோட்டு மற்றும் பாடப்புத்தகங்களை 31ம் தேதிக்குள் பள்ளிகளுக்கு விநியோகிக்க வேண்டும்: பள்ளி கல்வித்துறை இயக்குநர் அறிவுறுத்தல்
நடப்பு கல்வியாண்டு மாணவர்களுக்கான நோட்டு மற்றும் பாடப்புத்தகங்களை வரும் 31ம் தேதிக்குள் பள்ளிகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கடிதம் அனுப்பியுள்ளார்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரம்; 5 வயது மகளை கிணற்றில் தள்ளி கொன்ற தாய்
மேலூர் அருகே தகாத உறவுக்கு இடையூறாக இருந்த மகளை, கிணற்றில் தள்ளி கொலை செய்த தாய் கைதானார்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ உல்லாச வீடியோவை வெளியிடுவதாக கூறி ஒன்றிய அரசு அதிகாரியிடம் ரூ.2.70 லட்சம் பறித்த காதலி
தன்னுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி ஒன்றிய பொதுப்பணித்துறை செயற்பொறியாளரிடம் ரூ.2.70 லட்சம் பறித்த காதலி மற்றும் உடந்தையாக இருந்த மூமுக நிர்வாகி உள்பட 4 பேரை மயிலாடுதுறை போலீசார் நேற்று கைது செய்தனர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ ஈரான் அதிபர் ரைசியின் உடல் இன்று அடக்கம்
ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசியின் உடலுக்கு மத வழக்கப்படி இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. இன்று அவரது சொந்த ஊரில் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ சென்னையில் 9, 13, 14, 15வது மண்டலங்கள் மற்றும் தாம்பரம் பகுதிகளில் நாளை முதல் ஜூன் 2ம் தேதி வரை 2 நாளுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை : குடிநீர் வாரியம் தகவல்
நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பாராமரிப்பு பணி காரணமாக, நாளை (24ம் தேதி) முதல் ஜூன் 2ம் தேதி வரை சென்னையின் 9, 13, 14, 15வது மண்டலங்கள் மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படும், என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் மனநலம், நரம்பியல் துறைக்கு உலக தரத்தில் புதிய கட்டிடம்: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது
கீழ்ப்பாக்கம் மனநல காப்பக வளாகத்தில் மனநலம் மற்றும் நரம்பியல் துறைக்கு ₹35 கோடி செலவில் உலக தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள 6 தளங்கள் கொண்ட புதிய கட்டிடம் விரைவில் பயன்பாட்டிற்கு வருவுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ பூந்தமல்லியில் பரபரப்பு இந்து அமைப்பு மாநில தலைவர் வெட்டி படுகொலை: தப்பிய மர்ம நபருக்கு வலை
பூந்தமல்லியில் இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணியின் மாநில தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பிய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ மீண்டும் சென்னை திரும்பிய 'ஆகாஷா ஏர்லைன்ஸ்' விமானம்
நேற்று மதியம், அந்தமான் வான் வெளியை நெருங்கியது. அப்போது, அந்தமானில் கடும் சூறைக்காற்றுடன், மோசமான வானிலை நிலவி கொண்டு இருந்தது.
இதையடுத்து, ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணியர் விமானம், அந்தமானில் தரையிறங்க முடியாமல், நீண்ட நேரம் வானில் வட்டமடித்தபடி இருந்தது. வானிலை சீரடைய வில்லை.
இது குறித்து, விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டார். விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்து, விமானத்தை மீண்டும் சென்னைக்கு திருப்பிக் கொண்டு வரும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ ராஜஸ்தான் அணி அசத்தல் வெற்றி: வெளியேறியது பெங்களூரு
ஆமதாபாத்: 'எலிமினேட்டர்' போட்டியில் அசத்திய ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, பைனலுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. பெங்களூரு அணி பரிதாபமாக வெளியேறியது.
பேனாமுள் செய்திகளுக்காக உங்கள்
*பாடி பா.கார்த்திக்*