24/5/2024 ஆம் தேதி பேனாமுள் பத்திரிகை செய்தி
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳

தேதி: 24/5/2025

*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520

🌷 பேனாமுள் பத்திரிகை செய்திகள் 🌷

குறள் : 31
சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.

அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ கூகுள் நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாட்டில் புதிய செல்போன் ஆலை: முதல்முறையாக அமைப்பதால் முதல்வர் மு.க.ஸ்டாலினை தேர்தல் முடிவுக்கு பிறகு சந்திக்க திட்டம்

தமிழ்நாட்டில் முதன்முறையாக கூகுள் பிக்சல் செல்போன் தயாரிக்கும் தொழிற்சாலை அமைய உள்ளது. இதுதொடர்பாக சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை கூகுள் நிறுவன அதிகாரிகள் விரைவில் சந்திக்க உள்ளனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை பணிகளை நிறுத்துக: கேரள முதல்வருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்

காவிரிப் படுகையில், அமராவதி (பம்பார்) துணைப்படுகையின் ஒரு பகுதியான சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக சமீபத்தில் சில ஊடகங்களில் வந்த செய்திகளின் காரணமாக, அமராவதி ஆற்றில் நீர்வரத்து வெகுவாகக் குறையும் என்று தமிழ்நாட்டு விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் இப்பணியினை நிறுத்தி வைக்க வேண்டுமென்று வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பிரதமர் மோடியை கொன்று விடுவேன்” என்ஐஏ கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு இந்தியில் மர்ம நபர் கொலை மிரட்டல்: சென்னையில் பரபரப்பு

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு பிரதமர் மோடிக்கு மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பிரதமர் மோடியை கொலை செய்து விடுவேன் என இந்தியில் பேசிவிட்டு மர்மநபர் இணைப்பை துண்டித்தார். என்.ஐ.ஏ அதிகாரிகள் அளித்த புகாரை அடுத்து சென்னை மாநகர காவல் ஆணையர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ டெல்லி உள்ளிட்ட 8 மாநிலங்களில் 6ம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: 58 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

தலைநகர் டெல்லி உள்ளிட்ட 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் 6ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான பிரசாரம் நேற்றுடன் ஓய்ந்தது. நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்டப் படிப்புகள்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

பி.ஏ. பட்டப் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 30.05.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன்: கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்று கெஜ்ரிவால் தெரிவித்தார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ கொல்வதற்கு ரூ.5 கோடி; வங்கதேச எம்பியின் உடலை வெட்டி வீசிய கொடூரம்: ப்ரிட்ஜில் இருந்த பாகங்கள் பறிமுதல்

வங்கதேச எம்பி அன்வருல்அசீமை அவரது அமெரிக்க நண்பர் ரூ.5கோடி கொடுத்து கொன்றுள்ளதோடு, உடலை துண்டு துண்டாக வெட்டி வீசியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை – தென்கலை பிரிவினர் இடையே மோதல்:

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை – தென்கலை பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் வடகலை -தென்கலை பிரிவினர் இடையே திவ்ய பிரபந்தமர், வேத பாரயணம், ஸ்தோத்திர பாடல் பாடுவதில் ஒவ்வொரு ஆண்டும் மோதல் ஏற்படுகிறது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ குற்றாலத்தின் மெயின் அருவி தவிர மற்ற அருவிகளில் குளிக்க இன்று மாலை முதல் அனுமதி: பழைய குற்றாலத்தில் குளிக்க நேரகட்டுபாடு அறிவிப்பு

குற்றாலத்தின் மெயின் அருவி தவிர மற்ற அருவிகளில் குளிக்க இன்று மாலை முதல் அனுமதி வழங்கபட்டுள்ளது. பழைய குற்றால அருவியில் காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதிஅளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீர்மிகு திட்டங்களால் இந்தியாவிலேயே வேளாண்மைத் துறையில் முன்னணி மாநிலமாகத் திகழும் தமிழ்நாடு - தமிழகஅரசு பெருமிதம்

விவசாயத்தைப் பெருக்கிட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிய முத்தமிழறிஞர் கலைஞர் விவசாயிகளுக்கான ரூ.7,000 கோடி கூட்டுறவுக் கடன்களை ரத்து செய்தார். விவசாய பம்ப்செட்களுக்கு இலவச மின்சாரம் முதலிய பல்வேறு சலுகைகளை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகள்பால் மிகுந்த அன்பு கொண்டு விவசாயத்துறை, வேளாண்மைத்துறை என அழைக்கப்பட்ட துறையின் பெயரை – வேளாண்மை-உவர் நலத்துறை எனத் தாம் ஆட்சிப் பொறுப்பேற்ற 2021-ஆம் ஆண்டிலே அறிவித்து உழவர்களுக்காகப் பல சிறப்புத் திட்டங்களை நிறைவேற்றி வருகின்றார்கள். இத்திட்டங்களால் வேளாண் உற்பத்தி பெருகியுள்ளது. உழவர்கள் வளம் பெறுகின்றனர். தமிழ்நாடு உணவு உற்பத்தியில் முன்னேறியுள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ உச்ச நீதிமன்ற உத்தரவை மீறிய கேரள அரசு; முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது குறித்து 28ம் தேதி பரிசீலனை: ஒன்றிய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு திட்டம்

மாநிலங்களுக்கிடையே நீண்டகால பிரச்சனையாக இருப்பது முல்லைப் பெரியாறு அணை பிரச்னை. முல்லைப் பெரியாறு அணையின் தரம் காலாவதியாகி விட்டது என்றும், இயற்கை சீற்றங்களால் அணை உடைந்தால் அதன் சுற்று வட்டாரத்திலுள்ள மக்கள் பாதிக்கப்படுவார்கள் என கேரள அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது. உடனடியாக முல்லைப் பெரியாறுக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இதில் அணை குறித்து ஏற்கனவே வல்லுனர்களை கொண்டு ஆய்வு நடத்தி உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று முன்தினம் இரவு 7.16 மணிக்கு தொடங்கி, நேற்று இரவு 7.51 மணிக்கு நிறைவடைந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் மாலை தொடங்கி, இரவு முழுவதும் விடிய விடிய லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். அதன் தொடர்ச்சியாக, 2வது நாளாக நேற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அதிகாலை முதல் காலை 11 மணி வரை பக்தர்கள் கூட்டம் அதிகரித்திருந்தது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ கடன் தொல்லையால் 5 உயிர்கள் பறிபோன சோகம் மகன், மகள், மூன்று மாத பேத்தியை கொன்று ஆசிரியர் தம்பதி தற்கொலை: சிவகாசி அருகே பரிதாபம்

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு கட்டுப்பாட்டு அறையில் திடீர் தீ விபத்து: அதிகாரிகள் விசாரணை

விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்கள், தரையிறங்கும் விமானங்கள், விமான நிலையத்தில் தரையிறங்காமல் சென்னை வான்வெளியை கடந்து செல்லும் விமானங்கள் உள்பட அனைத்து விமான சேவைகளையும் கண்காணித்து இயக்கி வரும் மிக முக்கியமான பாதுகாக்கப்பட்ட இடம் ஏடிசி டவர்.இது 24 மணி நேரமும் இடைவிடாமல் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். இந்நிலையில் இந்த ஏடிசி டவரின் 4வது தளம் மொட்டை மாடியில் உள்ள ஒரு அறையில் நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக விமான நிலைய தீயணைப்பு துறையினருக்கு அவசர தகவல் கொடுத்தனர். இதனையடுத்து தீயணைப்பு பிரிவின், 3 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ இலங்கை தமிழர் மறுவாழ்வு இல்லத்தில் வசிக்கும் மாணவி பட்டப்படிப்பு படிக்க சேர்க்கை ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்று 600 சிறப்பு பஸ்கள் இயக்கம்

வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்று 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்: 

அனைத்து மாவட்டங்களில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ ஆழ்ந்த காற்றழுத்தம் நீடிப்பு இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகிறது: தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளதால் தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. இதனால், மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது. இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ அரசுப் பள்ளிகளுக்கு விநியோகம் செய்ய 3 கோடி புத்தகங்கள் தயார்: தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகம் தகவல்

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ துணை மருத்துவ படிப்புகளுக்கு ஜூன் 21 வரை விண்ணப்பிக்கலாம்

படிப்புகளில் சேர விரும்பும் மாணவ மாணவியர் இன்று முதல் ஜூன் 21ம் தேதி வரை www.tnmedicalselection.net என்ற இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதி பெற்றோர் பட்டியல் மேற்கண்ட இணைய தளத்தில் வெளியிடுவது குறித்தும், தற்காலிக ஒதுக்கீட்டு இடங்கள் குறித்தும் பின்னர் அறிவிக்கப்படும். சேர்க்கை குறித்த தேதி ஒதுக்கீட்டு ஆணையில் தெரிவிக்கப்படும். மேலும், இது தொடர்பான தகவல் தொகுப்பையும் இந்த இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ குண்டர் சட்டத்தில் அடைத்ததை எதிர்த்து வழக்கு; பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய யுடியூபர் சங்கருக்கு ஐகோர்ட் உத்தரவு

எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்வார். என்னவெல்லாம் செய்ய மாட்டார் என்று உத்தரவாதம் அளித்து பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யுமாறு யுடியூபர் சங்கருக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு எதிர்த்த வழக்கின் விசாரணையை நாளைக்கு (இன்று) தள்ளிவைத்துள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ தேசிய வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.7.5 கோடி மோசடி: மேலாளர் உட்பட 3 பேர் கைது

சிவகாசி வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.7.5 கோடி மோசடி செய்த வங்கி மேலாளர், துணை மேலாளர், உதவி மேலாளர் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்: இருவர் கைது

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குழந்தையை கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர். பீகாரை சேர்ந்த பின்ட் என்பவரின் 2 வயது குழந்தை கடத்தப்பட்டதாக ரயில்வே போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை தொடர்ந்து உடனடியாக சிசிடிவி பதிவுகளைக் கொண்டு, குழந்தையை கடத்திச் சென்ற 2 பேரை போலீஸ் பிடித்தது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த துர்கா (29) மற்றும் சித்தராமையா (18) என்பவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் குழந்தையை மீட்டு ஆந்திர தம்பதியிடம் போலீஸ் குழந்தையை ஒப்படைத்தது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் இன்று முதல் ஜூன் 2ம் தேதி வரை 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ லிங்க்கை தொட்டதால் தொழிலாளி வங்கி கணக்கில் பணம் அபேஸ்

ஆதம்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வினோத் (43). இவர் கடந்த 21ம் தேதி தன்னுடைய செல்போனில் பேஸ்புக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ‘500 ரூபாய் மந்திரம்’ நோட்டை தொட்டு வெற்றி பெறுங்கள், 5000 ரூபாய் கேஷ் பேக் பெறுங்கள் என்ற லிங்க் வந்துள்ளது. அதை தொட்டவுடன் உங்களுக்கு 5000 ரூபாய் வந்துவிட்டது.உங்கள் ஜிபே பேலன்ஸை பார்க்கவும் என்ற தகவலும் வந்துள்ளது. இதனை பார்த்ததும் ஆவலுடன் இருந்த வினோத், தனது ஜிபே அக்கவுண்ட்டில் பேலன்ஸை பார்த்தபோது வங்கி கணக்கில் இருந்த ரூ.4650 அபேஸ் செய்யப்பட்டது தெரிந்தது. அப்போதுதான், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதுகுறித்து வினோத் ஆதம்பாக்கம் போலீசாரிடம் செல்போனில் புகார் கொடுத்தார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ ஹெல்மெட் அணிந்து வந்து தனியாக செல்லும் மாணவிகளை வழிமறித்து பாலியல் தொந்தரவு: தனியார் நிறுவன ஊழியர் கைது

அனைத்து மகளிர் போலீசார் சம்பவ இடங்களில் உள்ள சிசிடிவி பதிவுகள் மற்றும் பைக் பதிவு எண்களை வைத்து விசாரணை நடத்திய போது, அயப்பன்தாங்கல் அண்ணாநகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்த மகேஷ் (21) என்பவர், தனியாக செல்லும் பள்ளி மாணவிகளை குறிவைத்து ஹெல்மெட் அணிந்து பாலியல் தொந்தரவு செய்த வந்தது தெரியவந்தது. மேலும், மகேஷ் அரும்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் சர்வீஸ் மேற்பார்வையாளராக பணியாற்றி வருவது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் மகேஷ் மீது போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு ரூ.880 குறைந்தது

தங்கம் விலை நேற்று காலையில் அதிரடியாக சவரனுக்கு ரூ.880 குறைந்தது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நேற்று முன்தினம் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரு சவரன் ரூ.54,880க்கு விற்கப்பட்டது.  நேற்று தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்தது. நேற்று மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 குறைந்து ஒரு கிராம் ரூ.6,750க்கும், சவரனுக்கு ரூ.880 குறைந்து ஒரு சவரன் ரூ.54 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் 2வது தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஐதராபாத்-ராஜஸ்தான் பலப்பரீட்சை

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பங்கு சந்தை நிலவரம் 
நிப்டி : 22967.65
பேங்க் நிப்டி : 48768.6
சென்செக்ஸ் : 75418.04

பேனாமுள் செய்திகளுக்காக உங்கள்

*பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
Comments