10/10/2025 இன்றைய பேனாமுள் பத்திரிகை செய்திகள்
தேதி
10/10/2025

🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷

*குறள்* : *486*
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.

ஊக்கம் மிகுந்தவன் அடங்கியிருத்தல் போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்க்காகப் பின்னே கால் வாங்குதலைப் போன்றது.

 பேனாமுள் Karthick
✍️  *அக்-10*
*பெட்ரோல் விலை*-100.80
  *டீசல் விலை*-92.39
   *சி.என்.ஜி* - 91.50

 பேனாமுள் Karthick
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
*நிப்டி : 25181.80*
*பேங்க் நிப்டி : 56192.05*
*சென்செக்ஸ் : 82172.10*

 பேனாமுள் Karthick
✍️ *தங்கம் விலை*
*24 Kதங்கம்/ g. : ₹ 12411*
*22 Kதங்கம்/ g. : ₹ 11380*
 *வெள்ளி    /g   : ₹ 177.00*

 பேனாமுள் Karthick
✍️ *சர்க்கரை நோய் அபாயம் - உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை*

இனிப்பு பிரியர்களுக்கான ஒரு எச்சரிக்கை என்ற தலைப்பில் உணவு பாதுகாப்பு துறை ஒரு பதிவை வெளியிட்டுள்ளது.

தினமும் 25 கிராமுக்கு அதிகமாக சர்க்கரை சாப்பிட்டால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

பேனாமுள் KARTHICK
9/10/2025 அன்று தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டம்
 பேனாமுள் Karthick
✍️ *மாவட்ட நீதிபதிகளாக பதவியேற்க தகுதி நிர்ணயம்*

7 ஆண்டுகள் தொடர்ச்சியாக வழக்கறிஞராக பணியாற்றியவர்கள் மாவட்ட நீதிபதிகளாக நேரடியாக நியமனம் செய்ய தகுதியுடையவர்கள் என உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *12 நாள் மாதவிடாய் விடுமுறை: கர்நாடகா அரசு அறிவிப்பு*

கர்நாடகாவில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு மாதவிடாய் விடுமுறையாக ஆண்டுக்கு ஊதியத்துடன் 12 நாட்கள் விடுமுறை அளிக்க வகை செய்யும் கொள்கை முடிவு ஏற்க்கப்பட்டுள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *நாகேந்திரன் உயிரிழப்பு*

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு மூளையாக செயல்பட்ட நாகேந்திரன் கல்லீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 பேனாமுள் Karthick
✍️ *நாளை திருவள்ளூரில் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்*

திருவள்ளூர் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலகங்களில் நாளை ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடக்கிறது என கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

 பேனாமுள் Karthick
✍️ *தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் காஸ் டேங்கர் லாரிகள் காலவரையற்ற ஸ்டிரைக்*

தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 பேனாமுள் Karthick
✍️ *கிராமசபை கூட்டங்களில் முதல்வர் கலந்துரையாடுகிறார்*

காந்தி ஜெயந்தி அன்று நடைபெற வேண்டிய கிராமசபைக் கூட்டம் 11ம் தேதி நடக்க இருப்பதால் அப்போது கிராம சபைக் கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பைபர் நெட் இணைப்பை பயன்படுத்தி 10 ஆயிரம் கிராமங்களில் உள்ளவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

 பேனாமுள் Karthick
✍️ *தங்க நகை தொழில் பூங்கா முதல்வர் அடிக்கல் நாட்டினார்*

கோவையில் ரூ.126 கோடியில் அமைக்கப்பட உள்ள தங்கநகை தொழில் பூங்காவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

 பேனாமுள் Karthick
✍️ *தீயணைப்பு நிலையங்களில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு வகுப்பு*

தமிழகம் முழுவதும் 375 தீயணைப்பு நிலையங்களில் ஒரே நேரத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் தீ பாதுகாப்பு குறித்து வாங்க கற்றுக்கொள்ளவோம் என்ற பெயரில் விழிப்புணர்வு வகுப்பு நிகழ்ச்சிக்கு தீயணைப்பு துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *54வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி அதிமுக பொதுக்கூட்டங்கள்*

அதிமுகவின் 54வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு 17, 18 ஆகிய இரண்டு நாட்கள் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது.

 பேனாமுள் Karthick
✍️ *தீபாவளி பண்டிகையையொட்டி ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 6 மாதம் சிறை*

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், பட்டாசுகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை ரயிலில் கொண்டு செல்லும் சம்பவங்களை தடுக்க தெற்கு ரயில்வே கடுமையான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ரயில் பயணிகள் தங்கள் பாதுகாப்புக்கு சந்தேகமான பொருட்கள் அல்லது பயணிகளை கண்டால் உடனடியாக ரயில்வே பாதுகாப்பு உதவி எண்களான 139 அல்லது 182க்கு தகவல் தருமாறு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *கிராம ஊராட்சிகளில் நாளை கிராம சபை கூட்டம்: தமிழக அரசு அறிவிப்பு*

தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை (11ம் தேதி) கிராம சபை கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *வைகோவிடம் நலம் விசாரித்தார் திருமாவளவன்*

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சளி மற்றும் இருமல் பிரச்னை காரணமாக சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று சென்னை அப்போலோ மருத்துவமனையில் வைகோவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

 பேனாமுள் Karthick
✍️ *வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை சாலைகளில் படிந்திருந்த மண் அகற்றம்: மாநகராட்சி தகவல்*

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னையில் உள்ள 7,835 சாலைகளிலிருந்து கடந்த 13 நாட்களில் 2,783 மெட்ரிக்டன் மண் மற்றும் மண் துகள்கள் அகற்றப்பட்டுள்ளன என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *வண்ண மீன் வர்த்தக மையம் முதல்வர் நாளை திறக்கிறார்*

 சென்னை வில்லிவாக்கம் சிவசக்தி நகரில் கட்டப்பட்டுள்ள கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தை நாளை மாலை 6 மணிக்கு முதல்வர் 
மு.க ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

 பேனாமுள் Karthick
✍️ *கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பு வார்டு*

 சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க 20 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *அம்பத்தூரில் புகையிலைப் பொருட்கள் விழிப்புணர்வு பேரணி*

 பள்ளி அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தடுக்கும் விதமாக 100 யார்ட்ஸ் எனும் புகையிலை பொருட்கள் தடை செய்யப்பட்ட பள்ளி மண்டலம் என்ற திட்டம் நேற்று அமுலுக்கு வந்தது. அம்பத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் ராமசாமி முதலியார் மேல்நிலைப் பள்ளியில் இந்த திட்டத்தை கமிஷனர் சங்கர் நேற்று துவக்கி வைத்தார்.
 பேனாமுள் Karthick
✍️ *சென்னையில் 9 இடங்களில் சார்ஜிங் மையம் அமைக்க நிறுவனம் தேர்வு*

 சென்னையில் மின் வாகனங்களுக்கு சார்ஜிங் செய்ய 9 இடங்களில் மையங்கள் அமைக்கும் பணிக்கு தனியார் ஒப்பந்த நிறுவனத்தை பசுமை எரிசக்தி கழகம் தேர்வு செய்துள்ளது.

 பேனாமுள் Karthick
 *ஸ்டாண்டர்ட் சார்ட்டட் ஆபீஸ் திறப்பு*

 சென்னை தரமணியில் டிஎல்எப் டவுண்டனில் புதிய அலுவலகத்தை ஸ்டாண்டர்ட் சார்ட்டட் நிறுவனம் திறந்துள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *கடற்கரை செங்கல்பட்டு தடத்தில் மின்சார ரயில்கள் இன்று ரத்து*

 செங்கல்பட்டு ரயில்வே தடத்தில் இன்று மேம்பாட்டுப் பணிகள் நடக்க உள்ளதால் 12 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *A T M இல் கொள்ளை முயற்சி*

 அண்ணா நகரில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயன்ற ஹோட்டல் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 பேனாமுள் Karthick
✍️ *சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்*

 சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்களை இடம் மாற்றி கமிஷனர் அருண் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

 பேனாமுள் Karthick
✍️ *ரேஷன் ஊழியர்களுக்கு உணவு வழங்கல் துறை உத்தரவு*

 ரேஷன் கடைகளில் முதியோர் ஓய்வூதிய திட்டப் பயனாளிகளுக்கு விரல் ரேகை சரிபார்ப்பு தோல்வி அடைந்தாலும் பதிவேட்டில் கையொப்பம் பெற்று இலவச வேட்டி சேலை விநியோகம் செய்யலாம் என ரேஷன் ஊழியர்களுக்கு உணவு வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *திருவள்ளூரில் இன்று விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்*

 திருவள்ளூர் மாவட்டத்தில் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு திருவள்ளூர் திருத்தணி பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில் நடக்கிறது.

 பேனாமுள் Karthick
 ✍️ *பெண்கள் அளிக்கும் புகார்களை விரைவில் விசாரணை முடிக்க கலெக்டர் அறிவுரை*

 பணிபுரியும் இடத்தில் பாதிக்கப்படும் பெண்கள் அளிக்கும் புகார் மீது 90 நாட்களுக்குள் விசாரணை நடவடிக்கை முடிக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் அறிவுறுத்தியுள்ளார்.

 பேனாமுள் Karthick
 ✍️ *சென்னையில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி இன்று துவக்கம்*

 நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வசந்த் அண்ட் கோ நிறுவனம் மற்றும் வீட்டு உபயோக பொருட்களின் தயாரிப்பாளர்கள் இணைந்து இன்று முதல் 13 ஆம் தேதி வரை இந்த கண்காட்சியை நடத்துகின்றனர்.

 கண்காட்சியில் அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களையும் மாதத்தவனை முறையில் வாங்கலாம் சிறப்பு சலுகைகளும் பம்பர் பரிசுகளும் வழங்கப்படும் என வசந்த் அண்ட் கோ நிறுவனம் அறிவித்துள்ளது. அனைவருக்கும் அனுமதி இலவசம்.

செய்தி
*பேனாமுள் இதழ்*
Comments