11/10/2025 இன்றைய பேனாமுள் பத்திரிகை செய்திகள்
தேதி
11/10/2025

🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷

*குறள்* : *487*
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்
துள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

 அறிவுடையவர் அப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ளமாட்டார் காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வார்.

 பேனாமுள் Karthick
✍️  *அக்-11*
*பெட்ரோல் விலை*-100.80
  *டீசல் விலை*-92.39
   *சி.என்.ஜி* - 91.50

 பேனாமுள் Karthick
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
*நிப்டி : 25285.35*
*பேங்க் நிப்டி : 56609.75*
*சென்செக்ஸ் : 82500.82*

 பேனாமுள் Karthick
✍️ *தங்கம் விலை*
*24 Kதங்கம்/ g. : ₹ 12367*
*22 Kதங்கம்/ g. : ₹ 11340*
 *வெள்ளி    /g   : ₹ 184.00*

 பேனாமுள் Karthick
✍️ *மலைப்பகுதி மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பயணம் விரிவாக்கம்*

மலைப் பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளி மற்றும் அவருக்கு துணையாக ஒருவர் இலவசமாக பஸ்சில் பயணிக்க அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *ஜாதி அடையாளமுள்ள தெருக்களின் பெயரை மாற்றம் செய்ய பொது மக்களுக்கு அதிகாரம்*

ஜாதி அடையாளத்துடன் கூடிய தெருக்களின் பெயர்களை மாற்றுவது குறித்து பொதுமக்களே முடிவு செய்யலாம் என ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.

 பேனாமுள் Karthick
 ✍️ *அக். 16 - 18 க்குள் வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்பு*

அக்.16 முதல் 18 ஆம் தேதிக்குள் தமிழகம் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *கோல்ட்ரிப் மருந்தில் அழகு சாதன தயாரிப்புக்கான மூலப்பொருள் கலப்பு*

மத்திய பிரதேசத்தில் 22 குழந்தைகள் இறப்புக்கு காரணமான கோல்ட்ரிப் மருந்துக்கு பயன்படுத்தப்பட்ட புரோப்பிலின் கிளைக்கால் மூலப்பொருள் அழகு சாதன பொருட்கள் தயாரிக்க பயன்படும் வகையை சார்ந்தது என மருந்து கட்டுப்பாட்டு துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *டேங்கர் லாரிகள் 2ம் நாள் ஸ்டிரைக்*

எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர் வேலை நிறுத்தம் இரண்டாம் நாளாக நேற்றும் நீடித்ததால் சுத்திகரிப்பு நிலையங்களில் 30,000 டன் எரிவாயு தேக்கமடைந்துள்ளது என தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர் சங்க தலைவர் சுந்தரராஜன் கூறினார்.

 பேனாமுள் Karthick
✍️ *த்ரிஷாவுக்கு திருமணமா? வதந்திக்கு முற்றுப்புள்ளி*

நேற்று த்ரிஷாவுக்கும் பஞ்சாப் மாநிலம் சண்டி கரை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருக்கும் திருமணம் என்ற தகவல் பரவியது.ஆனால் அதில் உண்மையில்லை என த்ரிஷா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

த்ரிஷா தன் சமூக வலைதள பக்கத்தில் என் வாழ்க்கையை பற்றி மக்கள் முடிவெடுப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. அப்படியே தேனிலவு செல்வதை பற்றியும் சொன்னால் நல்லது என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

 பேனாமுள் Karthick
✍️ *நல்லகண்ணு டிஸ்சார்ஜ்*

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு ஒன்றரை மாத சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

 பேனாமுள் Karthick
✍️ *பனை விதை நடும் திட்டம் துவக்கம்*

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 1.50 லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் திட்டத்தை மேயர் பிரியா நேற்று பாலவாக்கம் கடற்கரையில் துவக்கி வைத்தார்.

 பேனாமுள் Karthick
✍️ *மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவு கட்டமைப்புக்கு ஒப்பந்தம்*

மாதவரம் - சிறுசேரி மெட்ரோ ரயில் தடத்தில் 9 ரயில் நிலையங்களில் நுழைவு வாயில் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள 250 கோடி ரூபாய்க்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *தீபாவளி பண்டிகைக்கு 4 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு*

தீபாவளி பண்டிகையை ஒட்டி செங்கல்பட்டு- திருநெல்வேலி
சென்ட்ரல் -போத்தனுார் உட்பட நான்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 பேனாமுள் Karthick
✍️ *திருட வந்ததாக நினைத்து வாலிபரை கொன்று கால்வாயில் வீச்சு*

செங்குன்றம் அருகே திருடச் சென்றதாக வாலிபரை கம்பத்தில் கட்டி வைத்து அடித்து கொன்று கால்வாயில் வீசியதாக தனியார் தொழிற்சாலை உரிமையாளரின் மகன் உட்பட 4 பேரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

 பேனாமுள் Karthick
 ✍️ *புரசைவாக்கம் கழிவு நீரிறைக்கும் நிலையம் 2 நாள் செயல்படாது*

கழிவுநீர் பிரதான உந்து குழாய் மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வரும் 14ம்தேதி பிற்பகல் 2 மணி முதல் 15ம் தேதி இரவு 8 மணி வரை மண்டலம்-6க்கு உட்பட்ட புரசைவாக்கம் கழிவு நீரிறைக்கும் நிலையம் தற்காலிகமாக செயல்படாது.

 பேனாமுள் Karthick
✍️ *இன்று கிராமசபை கூட்டம்*

தமிழகம் முழுவதும் 12,480 கிராமங்களில் இன்று நடக்கும் கிராம சபை கூட்டத்தில் தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்குவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கிராம சபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் காணொலிக் காட்சி வாயிலாக பங்கேற்று பேசுகிறார்.

 பேனாமுள் Karthick
✍️ *தீபாவளி பலகாரம் தரம் குறைந்தால் ரூ.10 லட்சம் அபராதம் 6 மாதம் சிறை*

தீபாவளி பண்டிகை காலத்தில் பலகாரம் தயாரிப்பவர்கள் விதிமுறைகளை மீறினால் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

 பேனாமுள் Karthick
 ✍️ *இன்று இலக்கிய திறனறி தேர்வு*

தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு தமிழகத்தில் இன்று நடக்கிறது. இந்த தேர்வில் 2 லட்சத்து 70 ஆயிரத்து 508 பேர் எழுதுகின்றனர்.

 பேனாமுள் Karthick
 ✍️ *அரசு தளங்களில் ஏஐ தொழில்நுட்பம்*

மக்களின் எதிர்பார்ப்புகளை எளிதாக நிறைவேற்ற அரசு தளங்களில் ஏஐ தொழில்நுட்பம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

 பேனாமுள் Karthick
✍️ *S 49 சிற்றுந்து சேவை*

ஆவடியில் இருந்து திருநின்றவூர் வடக்கு பிரகாஷ் நகரை இணைக்கும் வகையில் ஆவடி, கவரப்பாளையம், நெமிலிச்சேரி வழியாக 'S49' என்ற அரசின் சிற்றுந்து சேவை 
கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்டது. இப்போது 'S49' சிற்றுந்து சேவை 6 ஆண்டுகளுக்கு பின் நேற்று மீண்டும் துவங்கப்பட்டது.

 பேனாமுள் Karthick
✍️ *10 லட்சம் வழிப்பறி 7 பேர் கைது*

 கடந்த 7தேதி கோடம்பாக்கத்தை சேர்ந்த சுதாகர் என்பவரிடம் இருந்து  அயனம்பாக்கத்தில் 2 பைக்குகளில் வந்த நபர்கள்  கத்தி முனையில் 10 லட்சம் ரூபாயை பறித்துச் சென்றதில் திருவேற்காடு போலீசார் விசாரித்த நிலையில் வழிப்பறியில் ஈடுபட்ட 7பேரை திருவேற்காடு போலீசார் கைது செய்துள்ளனர்.

 பேனாமுள் Karthick
✍️ *மின் கம்பியாயாள் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்*

 அக் 17 க்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
விண்ணப்பதாரர் மின் ஒயரிங் தொழிலில் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் செயல்முறை அனுபவம் உள்ளவராகவும் விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது நிரம்பியதாகவும் இருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

விண்ணப்ப படிவம் 
http://skilltraining.tn.gov.in இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.டிசம்பர் 13 மற்றும் 16ஆம் தேதி களில் மின்கம்பியாள் உதவியாளார் தகுதிகாண் தேர்வு நடைபெற உள்ளது.

செய்தி
*பேனாமுள் இதழ்*
Comments