தேதி
13/10/2025
🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷
*குறள்* : *489*
எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.
கிடைத்தற்கறிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச் செயல்களைச் செய்ய வேண்டும்.
பேனாமுள் Karthick
✍️ *அக்-13*
*பெட்ரோல் விலை*-100.80
*டீசல் விலை*-92.39
*சி.என்.ஜி* - 91.50
பேனாமுள் Karthick
✍️ *காலை உணவுத் திட்டம் தமிழ்நாடு முழுவதும் உள்ள குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: முதல்வர்*
காலை உணவுத் திட்டம் தமிழ்நாடு முழுவதும் உள்ள குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சூரியன் உதயம் ஆவதற்கு முன்பே குழந்தைகளுக்கான சமையல் கூடங்கள் தயாராகி விடுகின்றன; தினமும் 20 லட்சத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் நிறைந்த வயிறுடன் நாளை தொடங்குகின்றன என முதல்வர் தனது சமூக வலைதள பதிவில் கூறியுள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் டிசம்பர் 8ம் தேதி குடமுழுக்கு*
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் வரும் டிசம்பர் 8ம் தேதி குடமுழுக்கு நடைபெறும் என அமைச்சர் சேகர் பாபு தகவல் தெரிவித்துள்ளார்.
பேனாமுள் Karthick
*தீபாவளி விற்பனை அமோகம்*
தீபாவளி பண்டி்கையை ஒட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தீபாவளி பொருட்கள் வாங்க சென்னை தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை போன்ற பகுதிகளில் ஜவுளி உள்ளிட்ட பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
பேனாமுள் Karthick
✍️ *ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு டிக்கெட் கட்டணம் உயர்வு*
தீபாவளியை ஒட்டி சென்னையில் இருந்து சொந்த ஊருக்குச் செல்ல ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளது. இந்த கட்டண உயர்வு பொதுமக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *நாகேந்திரன் உடல் முன் இளைய மகன் திருமணம்*
சென்னை வியாசர்பாடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு மத்தியில், ரவுடி நாகேந்திரனின் உடல் முன், அவரது இளைய மகன் திருமணம் செய்து கொண்டார்.
மாலை 4:00 மணியளவில், நாகேந்திரனின் உடல் வியாசர்பாடி, முல்லை நகர் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
பேனாமுள் Karthick
✍️ *தீ பாதுகாப்பு விழிப்புணர்வு வகுப்பு 2 நாளில் 50,000 பேர் பங்கேற்பு*
தமிழகம் முழுவதும் 375 தீயணைப்பு நிலையங்களில் நடைபெற்ற தீ பாதுகாப்பு விழிப்புணர்வு வகுப்பில் கடந்த 2 நாட்களில் 50 ஆயிரம் பேர் பங்கேற்றதாக தீயணைப்பு துறை டிஜிபி சீமா அகர்வால் தகவல் தெரிவித்துள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *ஆரஞ்சு அலர்ட் அறிவிப்பு 13 மாவட்டத்தில் கனமழை*
திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், மாவட்டங்களில் 17ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *சட்டப்பேரவை அலுவல் ஆய்வு குழு இன்று கூடுகிறது*
சட்டசபை அலுவல் ஆய்வு குழு சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று கூடுகிறது. இதில் சட்டசபை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.
பேனாமுள் Karthick
✍️ *குழந்தைகள் உதவி மையம் மற்றும் ரயில்வே கியோஸ்க் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்*
சென்னை மாவட்டத்தில் குழந்தைகள் உதவி மையம் மற்றும் ரயில்வே கியோஸ்க் ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.
இதற்கான விண்ணப்பபடிவங்கள் மற்றும் விவரங்கள் https://chennai.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முகவரி : மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சென்னை - தெற்கு, எண்:1, புதுத்தெரு, மாநகராட்சி வணிக வளாகம், முதல் மாடி, ஆலந்தூர், சென்னை - 600016
பேனாமுள் Karthick
✍️ *சைனிக் பள்ளிகளில் சேர விண்ணப்பிக்கலாம்*
6, 9ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு ஆண்டுதோறும் தேசிய தேர்வுகள் முகமை(என்டிஏ) மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. 2026-27ம் கல்வியாண்டுக்கான தேசிய நுழைவுத் தேர்வு ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. https://exams.nta.nic.in/sainik-school-society/ என்ற இணையதளம் வழியாக அக்டோபர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங் களை www.nta.ac.in இணையதளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 011-40759000 என்ற தொலைபேசி மூலமாக அல்லது aissee@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடர்புக் கொண்டு உரிய விளக்கம் பெறலாம்.
பேனாமுள் Karthick
✍️ *சென்னையில் இ-ஸ்போர்ட்ஸ் போட்டி*
சென்னையில் இந்தியாவின் பிரமாண்ட இ-ஸ்போர்ட்ஸ் திருவிழா விரைவில் நடைபெறவுள்ளது.
விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழக அரசு இணைந்து ‘சென்னை இ-ஸ்போர்ட்ஸ் குளோபல் சாம்பியன்ஷிப்’ என்ற இந்தியாவின் சர்வதேச அளவிலான இ-ஸ்போர்ட்ஸ் (வீடியோ கேம்) போட்டியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நவம்பரில் சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *மக்கள் பாதுகாப்புக்காக மாம்பலம் காவல் நிலையத்தில் கட்டுப்பாட்டு அறை*
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தி.நகர் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தும் வகையில் மாம்பலம் காவல் நிலையத்தில் 24 மணி நேரம் இயங்கும் அதிநவீன வசதிகளுடன் கூடிய கட்டுப்பாட்டு அறையை சென்னை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் கண்ணன் நேற்று தொடங்கி வைத்தார்.
பேனாமுள் Karthick
✍️ *வேளச்சேரி நேரு நகரில் குளிரூட்டப்பட்ட திருமண மண்டபம்*
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், பெசன்ட்நகர் கோட்டத்திற்குட்பட்ட வேளச்சேரி, நேருநகர், காமராஜர் தெருவில் திருமண மண்டபம் வாடகை விடுவதற்கு தயாராக உள்ளதால் இதனை பொதுமக்கள் பயன்படுத்தி பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவுறுத்தியுள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *நாளை மின் குறைதீர் கூட்டம்*
அண்ணாநகர் அண்ணா சாலை கிண்டியில் நாளை காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர்க்க கூட்டங்கள் நடக்கின்றன.
பேனாமுள் Karthick
✍️ *மெரினாவில் கலை நிகழ்ச்சிகள்*
சென்னை மெரினா கடற்கரையில் மாநகராட்சி சார்பில் நேற்று மாலை நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் சிலம்பாட்டம், தப்பாட்டம், பம்பை வாத்தியம், தேவராட்டம், ஒயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பேனாமுள் Karthick
✍️ *அண்ணா நகரில் கார் விபத்து*
சென்னை அண்ணா நகரில் ரவுண்டானாவில் இருந்து 3 வது அவினியூ வழியில் சாலையோரம் நின்ற சுசுகி கார் ஒன்று ரிவர்சில் பின்னால் வந்துள்ளது. அப்போது மது போதையில் பெண் தோழியுடன் காரில் வேகமாக வந்த it ஊழியர் ரிவர்சில் வந்த காரின் மீது மோதியதில் சாலையிலே கவிழ்ந்து விபத்து குள்ளானது.
பேனாமுள் Karthick
✍️ *கழிவு நீர் டேங்கர் லாரி பறிமுதல்*
நேற்று முன் தினம் இரவு திருவேற்காடு நகராட்சி கமிஷனர் ராமன் தலைமையிலான அதிகாரிகள் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது வேலப்பன்சாவடி அடுத்த பள்ளி குப்பம் அணுகு சாலையில் உள்ள மழை நீர் வடிகாலில் லாரி ஒன்று கழிவுநீரை கொட்டி கொண்டு இருந்தது. இதனை பார்த்த அதிகாரிகள் அந்த லாரியை சுற்றி வளைத்து திருவேற்காடு போலீஸ் ஒப்படைத்தனர். இது தொடர்பாக திருவேற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.
பேனாமுள் Karthick
✍️ *திருவள்ளூரில் தற்காலிக பட்டாசு கடைக்கு விரைவில் அனுமதி*
திருவள்ளூர் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க 58 பேர் இணையத்தில் விண்ணப்பித்துள்ளனர்.
தற்காலிக பட்டாசு கடைகளை வருவாய், தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். ஒருங்கிணைந்த ஆய்வு முடிந்து வருவாய் கோட்டாட்சியர் அறிக்கை சமர்பித்ததும் அனுமதி வழங்கப்படும் என மாவட்ட காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பேனாமுள் Karthick
✍️ *ஆவடி அருகே வாக்கத்தான் போட்டி: அமைச்சர் சா.மு.நாசர் துவக்கினார்*
ஆவடி அருகே மிட்டினமல்லி, இந்திய விமானப் படை சாலையில் உலக இருதய தினத்தையொட்டி வாக்கத்தான் போட்டி நேற்று காலை நடைபெற்றது. போட்டியை அமைச்சர் நாசர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி