8/10/2025
🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷
*குறள்* : *484*
ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.
காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.
பேனாமுள் Karthick
✍️ *அக்-08*
*பெட்ரோல் விலை*-100.80
*டீசல் விலை*-92.39
*சி.என்.ஜி* - 91.50
பேனாமுள் Karthick
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
*நிப்டி : 25108.30*
*பேங்க் நிப்டி : 56239.35*
*சென்செக்ஸ் : 81926.75*
பேனாமுள் Karthick
✍️ *தங்கம் விலை*
*24 Kதங்கம்/ g. : ₹ 12198*
*22 Kதங்கம்/ g. : ₹ 11185*
*வெள்ளி /g : ₹ 167.00*
பேனாமுள் Karthick
அரசு கேபிள் நிறுவனத்திலிருந்து புதிய தலைமுறை தொலைக்காட்சி நீக்கப்பட்டுள்ளதை தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
அரசுக்கு எதிரான செய்திகள் வந்துவிடக் கூடாது என்ற நோக்கில் இருட்டடிப்பு செய்து முடக்க நினைப்பது கடும் கண்டனத்திற்குரியது. புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிபரப்பை நிறுத்துவது கருத்து சுதந்திர ஒடுக்குமுறையாகும். அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவது ஊடகங்களின் தார்மீக கடமையாகும்.
உடனடியாக அரசு கேபிளில் புதிய தலைமுறை சேனல் மீண்டும் ஒளிபரப்பு தொடர்வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டுமென தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் வலியுறுத்துகிறது.
பேனாமுள் Karthick
✍️ *இமாசல பிரதேசம்: நிலச்சரிவில் பஸ் சிக்கி 18 பேர் பலி*
ஷிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவில் சிக்கி பஸ் கவிழ்ந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேனாமுள் Karthic
✍️ *இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு*
அமெரிக்காவை சேர்ந்த ஜான் கிளார்க் மிச்செல் எச்.தேவோரெத் மற்றும் ஜான் எம். மார்டினிஸ் ஆகியோருக்கு நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *வீடியோ அழைப்பில் விஜய் ஆறுதல்*
கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினரிடம் வீடியோ அழைப்பில் தவெக தலைவர் விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *அரசு வேலையில் 3% இட ஒதுக்கீடு: உதயநிதி*
முதலமைச்சர் கோப்பையில் வெற்றி பெறும் வீரர்களுக்கு அரசு வேலையில் 3% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *டெங்கு பாதிப்பு அதிகரிப்பு*
டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பால் சென்னை, திருவள்ளூர், கோவை மாவட்டங்களுக்கு தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ டிச.21ம் தேதி தேர்வு*
குரூப் 5ஏ பணிகளில் காலியாக உள்ள 32 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி அறித்துள்ளது. இத்தேர்வுக்கு நவம்பர் 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *அரசின் தலைவராக 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பிரதமர் மோடி*
அரசின் தலைவராக 25வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தேசத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பதும், மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதும் தன் இடைவிடாத முயற்சி என குறிப்பிட்டுள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *ரயில் முன்பதிவு டிக்கெட்டை வேறு தேதிக்கு மாற்றிக்கொள்ளலாம்*
அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து உறுதியான ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்யாமல் வேறு தேதிகளுக்கு மாற்றிக்கொள்ளும் வசதி அறிமுகமாக உள்ளதாக அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *பாதசாரிகள் சைக்கிள்கள் இயக்கத்துக்கு புதிய சாலை விதிகள்*
மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் பொது இடங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் பாதசாரிகள் மற்றும் மோட்டார் அல்லாத வாகனங்களின் இயக்கத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் 6 மாதங்களுக்குள் சாலை விதிகளை உருவாக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் ராமதாஸ்*
அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வீடு திரும்பினார்.
பேனாமுள் Karthick
✍️ *கோல்ட்ரிப் இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு தமிழக அரசு நோட்டீஸ்*
காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து உட்கொண்டு மத்திய பிரதேசத்தில் 14 குழந்தைகள் இறந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து ஸ்ரீசன் பார்மா நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு தமிழக அரசு சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *மதுரையில் 12-ந்தேதி நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் தொடக்கம்*
தமிழகம் தலை நிமிர என்ற முழக்கத்துடன் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் பிரசார சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார்.
பேனாமுள் Karthick
✍️ *4 ரெயில்வே திட்டங்களுக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல்*
ரெயில்வே அமைச்சகத்தின் ரூ.24,634 கோடி மதிப்பிலான 4 திட்டங்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரி சபை குழு நேற்று ஒப்புதல்
அளித்தது.
பேனாமுள் Karthick
✍️ *ஆணழகன் போட்டியில் பதக்கம் வென்ற போலீஸ்*
ஹரியானா மாநிலம் போலீஸ் அகாடமியில் 74வது அனைத்திந்திய விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில் ஆணழகன் போட்டி கடந்த செப். 23ம் தேதி நடந்தது.
சைதாப்பேட்டை காவல் நிலைய தலைமை காவலர் புருஷோத்தமன் 85 கிலோ எடை பிரிவில் தங்க பதக்கமும் ஆயுதப்படை தலைமை காவலர் செல்வகுமார் 65 கிலோ எடை பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.
பதக்கங்கள் வென்று அசத்திய இருவருக்கும் சென்னை போலீஸ் கமிஷனர் அருண் நேற்று வெகுமதி வழங்கி பாராட்டினார்.
பேனாமுள் Karthick
✍️ *அண்ணனுாரில் பரபரப்பு*
ஆவடி அண்ணனுார் பகுதியில் உள்ள கங்கையம்மன் கோவில் குளத்தில் இறங்கியவர் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பேனாமுள் Karthick
✍️ *ரூ.3,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது*
திருநின்றவூர்:தற்காலிக மின் இணைப்பு வழங்க 3,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய மின் வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டார்.
பேனாமுள் Karthick
✍️ *வங்கக் கடலில் காற்று சுழற்சி 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்*
தென்மேற்கு வங்கக் கடலில் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அத்துடன் தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு அனேக இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
பேனாமுள் Karthick
✍️ *29 போலீசாருக்கு பாராட்டு: கமிஷனர் அருண் வெகுமதி வழங்கினார்*
சென்னையில் போதை பொருள் ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்றிய உதவி கமிஷனர் உள்பட 29 போலீசாரை நேரில் அழைத்து கமிஷனர் அருண் பாராட்டு தெரிவித்தார்.
பேனாமுள் Karthick
✍️ *8 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிய வீடுகள்: முதல்வர் திறந்து வைத்தார்*
விருதுநகர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் உள்ள 8 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.45 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 772 புதிய வீடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பேனாமுள் Karthick
✍️ *நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயில் நாளை முதல் கோவில்பட்டியில் நின்று செல்லும்*
கோவில்பட்டியில் நிறுத்தம் வழங்கிட தெற்கு ரயில்வே ஒப்புக் கொண்டது. அதன்படி நாளை (9ம் தேதி) முதல் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் வந்தேபாரத் ரயில் நின்று செல்லும்.
பேனாமுள் Karthick
✍️ *கோவையில் நாளை உலக புத்தொழில் மாநாடு*
கோவை பீளமேடு கொடிசியா வர்த்தக வளாகத்தில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சார்பில் உலக புத்தொழில் மாநாடு (ஸ்டார்ட் அப்) 2025 நாளை (9ம் தேதி) துவங்குகிறது. 10ம் தேதி வரை 2 நாட்கள் மாநாடு நடக்கிறது. மாநாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கவுள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *பிரதமர் மோடி-இங்கி. பிரதமர் மும்பையில் நாளை சந்திப்பு*
இந்தியாவுக்கு வரும் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மும்பையில் பிரதமர் மோடியை நாளை சந்தித்து பேச உள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *உற்பத்தி துறையின் லீடர் தமிழ்நாடு: முதல்வர் பேச்சு*
அனைத்து வகையான தொழில்களிலும் தமிழ்நாடு தடம் பதித்து, தமிழ்நாடு உற்பத்தி துறையில் லீடராக மாறிக்கொண்டு வருகிறது என விண்வெளி-பாதுகாப்பு சர்வதேச மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
பேனாமுள் Karthick
✍️ *உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்*
மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தால் கட்டித் தரப்பட்ட மகப்பேறு மருத்துவமனை இடிக்கப்படாது என்ற நகராட்சி ஆணையரின் கடிதத்தை தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பேனாமுள் Karthick
✍️ *அரபாத் ஏரியில் கழிவுநீர் கலப்பு மீன்கள் இறப்பு*
திருமுல்லைவாயல் அரபாத் ஏரி கழிவு நீரால் மாசடைந்து டன் கணக்கில் மீன்கள் செத்து மிதப்பதால் பகுதிமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
பேனாமுள் Karthick
✍️ *கஞ்சா கடத்திய பெண் கைது*
ஆவடி கமிஷனர் சங்கர் உத்தரவின்படி செங்குன்றம் மதுவிலக்கு போலீசார் வடமாநிலங்களில் இருந்து கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதை தடுக்க, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் நேற்று மீஞ்சூர் பகுதியில் ஒடிஷாவில் இருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 12 கிலோ கஞ்சா கடத்தி வந்த பெண்ணை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.
செய்தி
*பேனாமுள் இதழ்*