🇮🇳🇮🇳✒️✒️✒️✒️✒️✒️✒️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏
தேதி : 2/5/2024
*ஆசிரியர்- பாடி பா.கர்த்திக்*
9381157520
🌷 *பேனாமுள்* *பத்திரிகை செய்திகள்* 🌷
குறள் : 9
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்
*பேனாமுள் செய்திகள்*
✍️ இன்றைய பெட்ரோல் விலை : 100.75
டீசல் விலை : 92.34
*பேனாமுள் செய்திகள்*
✍️ தமிழகம் வரும் 25 நாட்கள் வெயில் கொளுத்தும்: நாளை மறுநாள் அக்னி நட்சத்திரம் தொடக்கம்.! வானிலை ஆய்வு மையம் தகவல்
இந்த கத்தரி வெயில் வருகிற 28-ந்தேதி வரை அதாவது, 25 நாட்கள் தொடர்ந்து வாட்டி வதைக்க காத்திருக்கிறது. பொதுவாக கத்தரி வெயில் காலத்தில்தான் வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும். ஆனால் கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்தே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதிலும் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே வெயில் சுட்டெரித்து வருகிறது.
*பேனாமுள் செய்திகள்*
✍️ தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளோம்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாட உள்ளோம் என்று மே தின நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
*பேனாமுள் செய்திகள்*
✍️ டேட்டா சயின்ஸ் படித்த 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு: சென்னை ஐ.ஐ.டி தகவல்
சென்னை ஐ.ஐ.டி, ‘பி.எஸ் தரவு அறிவியல் மற்றும் பயன்பாடுகள்’ எனும் 4 ஆண்டு படிப்பை கடந்த 2020ல் அமல்படுத்தியது. கல்லூரி மாணவர்கள், அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் என நாடு முழுவதும் தற்போது வரை 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பி.எஸ் டேட்டா சயின்ஸ் படிப்பை சென்னை ஐ.ஐ.டியில் பயில்கிறார்கள். இந்நிலையில், பி.எஸ் தரவு அறிவியல் மற்றும் பயன்பாடு படிப்பின் மூலம் பெற்ற பயிற்சியின் அடிப்படையில், 2,500 மாணவ, மாணவிகள் பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளதாக சென்னை ஐ.ஐ.டி தெரிவித்துள்ளது.
*பேனாமுள் செய்திகள்*
✍️ சென்னை விமான நிலையத்தில் மீண்டும் அச்சம்; 7 அடி உயர கண்ணாடி கதவு உடைந்து நொறுங்கியது: அதிகாரிகள் விசாரணை
சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தில், விஐபி பயணிகள் வருகை பகுதியான 4ம் எண் கேட்டில், 7 அடி உயர கண்ணாடி கதவு திடீரென பயங்கர சத்தத்துடன் உடைந்து நொறுங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*பேனாமுள் செய்திகள்*
✍️ ஒரே நாளில் 130 ரவுடிகள் கைது: ஆவடி காவல் ஆணையர் சங்கர் தகவல்
ஆவடி காவல் ஆணையர் சங்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கொலை, கொள்ளை, திருட்டு போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரவுடிகள் வேட்டை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், கொலை, கொள்ளை, போதை பொருள் மற்றும் கொடூர குற்ற வழக்குகளில் தொடர்புடைய 130 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.செங்குன்றம் காவல் மாவட்டத்தில் 20 கொலை குற்றவாளிகள் மற்றும் ஆவடி காவல் மாவட்டத்தில் 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
*பேனாமுள் செய்திகள்*
✍️ தி.மலை அண்ணாமலையார் கோயிலில் ரூ.2.23 கோடி, 365 கிராம் தங்கம் காணிக்கை
பங்குனி மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, அண்ணாமலையார் கோயில் 3ம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி, இரவு 7 மணிவரை நடந்தது.இதில் ரூ.2 கோடியே 23 லட்சத்து 71 ஆயிரத்து 962 மற்றும் 365 கிராம் தங்கம், 2,838 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக கிடைத்தது. மேலும், வெளிநாட்டு கரன்சிகளும் உண்டியலில் செலுத்தப்பட்டிருந்தது.
*பேனாமுள் செய்திகள்*
✍️ சோளிங்கர் நரசிம்மர் கோவிலில் பராமரிப்பு பணி காரணமாக 3 நாட்களுக்கு ரோப் கார் சேவை நிறுத்தம்
ராணிப்பேட்டை சோளிங்கர் நரசிம்மர் கோவிலில் பராமரிப்பு பணி காரணமாக 3 நாட்களுக்கு ரோப் கார் சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. சோளிங்கர் நரசிம்மர் கோவிலில் இன்று முதல் 4-ம் தேதி வரை ரோப் கார் சேவை நிறுத்தம் என கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
*பேனாமுள் செய்திகள்*
✍️ காரியாபட்டி அருகே பயங்கரம்: கல்குவாரி வெடி விபத்தில் 3 பேர் பலி; 5 கிமீ தூரம் சத்தம் கேட்டதால் அதிர்ச்சி
குடோனில் அதிகளவில் வெடிபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை 8 மணியளவில் இரண்டு சிறிய சரக்கு வாகனங்களில் வெடிமருந்து ஏற்றும் பணியில் காரியாபட்டி அருகே டி.புதுப்பட்டியை சேர்ந்த கந்தசாமி, தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த துரை, குருசாமி ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.அப்போது உராய்வு காரணமாக வெடிமருந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் வெடிமருந்து குடோன் முற்றிலும் தரைமட்டமானது. சரக்கு வாகனம் நீண்ட தொலைவுக்கு தூக்கி வீசப்பட்டது. இந்த சம்பவத்தில், பணியில் ஈடுபட்ட கந்தசாமி, துரை, குருசாமி ஆகியோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
*பேனாமுள் செய்திகள்*
✍️ வர்த்தகம் மே மாதத்தின் தொடக்க நாளான நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ920 சரிவு
மே மாதத்தின் தொடக்க நாளான நேற்று தங்கம் விலை அதிரடியாக சரிந்துள்ளது. கடந்த சில வாரங்களாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி வரும் சூழலில் நேற்று அதிரடியாக குறைந்து இருப்பது நகைப் பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு ஆறுதல் அளித்துள்ளது. அதாவது, தங்கம் விலை சவரனுக்கு நேற்று ரூ920 குறைந்து ஒரு சவரன் ரூ53,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தங்கம் கிராமுக்கு ரூ115 குறைந்து ரூ6,635க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று ஒரேநாளில் சவரனுக்கு ரூ920 குறைந்துள்ளது தங்கம் வாங்குவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
*பேனாமுள் செய்திகள்*
✍️ வர்த்தகம் 127 ஆண்டுகளுக்குப் பிறகு கோத்ரேஜ் குழுமம் இரண்டாகப் பிரிந்தது
127 ஆண்டுகள் பழமையான கோத்ரேஜ் குழுமம், கோத்ரெஜ் என்டர்பிரைசஸ் மற்றும் கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் என 2 குழுமமாக பிரிக்கப்பட்டுள்ளது. உரிய ஒப்புதலுக்கு பிறகு இந்த இரண்டு நிறுவனங்களும் தனித்தனியாக செயல்படும். எனினும், கோத்ரெஜ் பிராண்டை இரு நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ளும் என நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
*பேனாமுள் செய்திகள்*
✍️ வெப்ப அலை வீசுவதால் ஏரிகளில் வேகமாக ஆவியாகும் தண்ணீர்: மொத்தம் 6 டிஎம்சி நீர் இருப்பதால் அக்டோபர் வரை சீரான குடிநீர் சப்ளை:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13.222 டிஎம்சி. இந்த ஏரிகளில் நேற்றைய நிலவரப்படி நீர் இருப்பு 6.66 டிஎம்சியாக உள்ளது. ஒரு டிஎம்சி தண்ணீரை கொண்டு ஒரு மாதத்துக்கு குடிநீர் வழங்க முடியும். அதன் அடிப்படையில், 6 டிஎம்சி நீரினைக் கொண்டு அக்டோபர் மாதம் வரை தங்கு தடையின்றி குடிநீர் வழங்கிட முடியும்.
*பேனாமுள் செய்திகள்*
✍️ புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் ஜூன் மாதம் முதல் வழங்கப்படும். தமிழக அரசு நடவடிக்கை.
*பேனாமுள் செய்திகள்*
✍️ சிஎஸ்கேவை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்
சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது
*பேனாமுள் செய்திகள்*
✍️ கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவு ஏற்படுமா? பயப்பட தேவையில்லை என நிபுணர்கள் கருத்து
கொரோனா தடுப்பூசியில் பக்க விளைவு ஏற்படும் என்ற தகவல் வெகுவாக பரவியுள்ள நிலையில், இது பற்றி பயப்படத் தேவையில்லை என, பிரபல மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.
*பேனாமுள் செய்திகள்*
✍️ சனி, ஞாயிறுகளில் லீவு இல்லை: நீதிபதிகள் வேதனை
'உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்துக்கு நீண்ட கோடை விடுமுறை அளிப்பதை விமர்சிப்போர், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட, நீதிபதிகளுக்கு விடுமுறை இல்லை என்பதை புரிந்து கொள்வதில்லை' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
*பேனாமுள் செய்திகள்*
✍️ அட்சய திருதியைக்கு தங்கம் வாங்க வீடு வீடாக... அழைப்பு!
வீடு வீடாகச் சென்று நகை கடைகள் அழைப்பு கொடுக்க துவங்கியுள்ளன. தங்கம் விற்பனையை மூன்று நாள் கொண்டாட்டமாக விரிவுபடுத்தியுள்ள நகை கடைகள் விழாககோலம் பூண்டதுடன், சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளன.
வரும் 10ம் தேதி வெள்ளிக்கிழமை அட்சய திருதியை வருகிறது. சனி, ஞாயிறு சேர்த்து மூன்று நாட்கள் அட்சய திருதியை கொண்டாட நகை வியாபாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
*பேனாமுள் செய்திகள்*
✍️ பாடி திருவல்லீஸ்வரர் கோயில்களில் குரு பெயர்ச்சி வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.
*பேனாமுள் செய்திகள்*
*ஊடகத்தினர் PRESS / MEDIA என்ற ஸ்டிக்கர்களை வாகனத்தில் ஒட்டிக் கொள்ளலாம்.*
பத்திரிகை தோழர்கள் வாகனத்தில் பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டி கொள்ளுங்கள்..
முறையான நிறுவன அடையாள அட்டை மற்றும் வாகன ஆவணங்களுடன் பயணிக்க வேண்டுகிறேன்..
எண் தட்டுக்களில் (number plate) வாகன பதிவு எண்கள் மட்டுமே இருக்க வேண்டும்..
பத்திரிகைத் துறைக்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டி இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
போக்குவரத்து விதிகளுக்கு உட்பட்டு பயணிக்க வேண்டும். வாகன பரிசோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்..
பத்திரிகையாளர் நலன் கருதி..
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்
பேனாமுள் செய்திகளுக்காக
உங்கள்
*பாடி பா.கார்த்திக்*