🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳
தேதி: 25/5/2025
*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520
🌷பேனாமுள் பத்திரிகை செய்திகள் 🌷
குறள் : 32
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.
ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ பங்கு சந்தை நிலவரம்
நிப்டி : 22957.1
பேங்க் நிப்டி : 48971.65
சென்செக்ஸ் : 75410.39
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட ஆய்வு மேற்கொள்ளும் கேரள அரசின் கருத்தை பரிசீலிக்க கூடாது: ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு மேற்கொள்ள கேரள அரசு முன்மொழிந்துள்ள கருத்துருவினை ஒன்றிய அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது. தமிழ்நாட்டின் ஆட்சேபனைகள் கருத்தில் கொள்ளப்படவில்லை என்றால், தேவைப்படும் அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுக்கும் என ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ என் உடல்நிலை பற்றி பொய் பரப்பும் பாஜ: ஒடிசா முதல்வர் பட்நாயக் வேதனை
எனது உடல்நிலை குறித்து பாஜ தலைவர்கள் பொய்யை பேசுகின்றனர் என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வேதனை தெரிவித்தார். ஒடிசா மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய பாஜ தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், நவீன் பட்நாயக்குக்கு வயதாகி விட்டது. அவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். நவீன் பட்நாயக் சார்பில் வெளியிடப்படும் அறிக்கைகள் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி வெளியிடப்படுகிறது என பேசினர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ 6வது கட்ட மக்களவை தேர்தல்; 58 தொகுதிகளில் இன்று ஓட்டுப்பதிவு: டெல்லியில் பலத்த பாதுகாப்பு
மக்களவை தேர்தல் 6வது கட்டத்தில் 58 தொகுதிகளில் இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் தேர்தல் நடப்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ நடிகை லைலா கான் கொலை வழக்கில் வளர்ப்பு தந்தைக்கு தூக்குத்தண்டனை: மும்பை செசன்ஸ் கோர்ட் தீர்ப்பு
நடிகை லைலா கான், அவருடைய தாயார் ஷெலீனா உட்பட 6 பேரை கொலை செய்த வளர்ப்பு தந்தை பர்வேஸ் தக்கிற்கு செசன்ஸ் கோர்ட் நீதிபதி தூக்கு தண்டனை விதித்துள்ளார்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ கட்டுக்கட்டாக சிக்கிய பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் கஞ்சா விற்பனை செய்து கைதான ரவுடி வீட்டில் ரூ.1 கோடி பறிமுதல்:
சேலத்தில் கஞ்சா வழக்கில் கைதான ரவுடி வீட்டில் ரூ.1 கோடி மதிப்பிலான பழைய நோட்டுகள் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எடப்பாடியுடன் கைதான ரவுடி எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. இதில் அதிமுக பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ போக்குவரத்து விதிமீறல் அரசு பஸ்களுக்கு அபராதம் விதிப்பு
நெல்லையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற அரசு பேருந்தில் சீட் பெல்ட் அணியாத டிரைவருக்கு ரூ.500 அபராதம் விதிக்கபட்டது. மேலும் இரண்டு பேருந்து ஓட்டுநர்களிடம் சீட் பெல்ட் அணியவில்லை, போக்குவரத்து விதியை சரியாக கடைபிடிக்கவில்லை, சீருடை சரியாக அணியவில்லை என்று கூறி ரூ.500 அபராதம் விதித்து அதற்கான ரசீதை ஓட்டுநர்களிடம் கொடுக்கப்பட்டது.உளுந்தூர்பேட்டை டோல்கேட் அருகே போக்குவரத்து விதிமுறைகளை மீறி தடுப்புகளை அகற்றிவிட்டு உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் நோக்கி சென்ற 5 அரசு பேருந்துகளுக்கு உளுந்தூர்பேட்டை போக்குவரத்து காவல்துறை சார்பில் தலா ரூ.500 வீதம் ரூ.2500 அபராதம் விதிக்கப்பட்டது. கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தின் உள்ளே செல்லாமல் வெளியிலேயே பயணிகளை ஏற்றி, இறக்கி சென்ற 4 அரசு மற்றும் 6 தனியார் பேருந்துகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதித்தனர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ சென்ட்ரல் ரயில்வே ஆயுத கிடங்கில் துப்பாக்கி தோட்டா வெடித்து ஆர்பிஎப் காவலர் படுகாயம்
ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் ராவணன் என்பவர், நேற்று கார்பன் வகை துப்பாக்கியை எடுத்து அதில் தோட்டாக்கள் இல்லை என நினைத்து, ட்ரிகரை அழுத்தியபோது, பயங்கர சத்தத்துடன் துப்பாக்கி வெடித்தது. இதில், ஆயுதக் கிடங்கில் நின்றிருந்த ஆர்பிஎப் தலைமைக் காவலர் சிவகுமாரின் வலது கால் முட்டியில் தோட்டா பாய்ந்தது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்த விவகாரம் சைபர் கிரைம் போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு
மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் மோடிக்கு மிரட்டல் விடுத்த செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்திய போது, மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து அழைப்பு வந்தது தெரியவந்தது.அதைதொடர்ந்து சைபர் கிரைம் போலீசாரின் தனிப்படையினர் மத்திய பிரதேசத்திற்கு விரைந்துள்ளனர். இதற்கிடையே மோடிக்கு மிரட்டல் விடுத்த விவகாரம் தொடர்பாக சென்னை பெருநகர சைபர் கிரைம் போலீசார் ஐபிசி 506(2), 507 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ திருவள்ளுவர் படத்திற்கு காவி உடை தமிழ் அமைப்புகள் முற்றுகை அறிவிப்பு கவர்னர் மாளிகைக்கு கூடுதல் பாதுகாப்பு
காவி உடையுடன் திருவள்ளுவர் படத்தை வெளிட்ட கவர்னர் மாளிகையின் செயலை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தமிழ் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையை முற்றுகையிட போவதாக அறிவித்துள்ளனர்.இதையடுத்து கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு நேற்று காலை முதல் தடுப்புகள் அமைத்து உதவி கமிஷனர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் சுழற்சி முறையில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ கடந்த ஆண்டை விட மே மாதத்தில் பீர் விற்பனை அதிகரிப்பு
தமிழகம் முழுவதும் கோடை வெப்பம் கடந்த மார்ச் தொடக்கத்தில் இருந்தே வாட்டி வதைத்து வருகிறது. கோடை வெப்பம் என்றாலே டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்களின் முதல் தேர்வாக ‘பீர்’ தான் இருக்கும். அந்த வகையில், தற்போது டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது. டாஸ்மாக் நிர்வாகமும் புது வகை பீர்களையும் அறிமுகம் செய்துள்ளது.இந்த நிலையில், கோடை யில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ புயல் ரெமல் நாளை நள்ளிரவு கரையை கடக்கும் இன்று முதல் அடுத்த 5 நாட்கள் பரவலாக மழை பெய்யும்: புயல் நகரும்போது தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரிக்கும்
வங்கக்கடலில் இன்று காலை உருவாகும் இந்தாண்டின் முதல் புயல் ரெமல் நாளை நள்ளிரவு மேற்கு வங்காளம் கடற்கரை அருகே கரையை கடக்கும் என்றும், கேரளாவில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகம் முழுவதும் இன்று முதல் 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைத்ததை எதிர்த்த யூடியூபர் சங்கர் வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு: மனுவை மூன்றாவது நீதிபதி விசாரிக்க ஐகோர்ட் பரிந்துரை
யூடியூபர் சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்த வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட உத்தரவுகளை பிறப்பித்ததால் விசாரணையை 3வது நீதிபதிக்கு பரிந்துரை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
1 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலை பட்டப்படிப்புக்கு ஜூன் 21 வரை விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு தகவல்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலைப் பட்டப்படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 21 வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை
குடும்ப பிரச்னை காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது.நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் சுகமதி மற்றும் குழந்தைகள் எழுந்து வெளியே வரவில்லை.இதையடுத்து அவரது பெரியம்மா, வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது, சுகமதி மற்றும் குழந்தைகள் இருவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 3 பேரையும் மீட்டு, குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், 3 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாகவும், விஷத்தினால் இறந்திருப்பதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து தேவூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ ஈரான் அதிபர் மரணம்.. மோசமான வானிலையே காரணம்; தாக்குதல் நடைபெற்றதற்கான தடயம் ஹெலிகாப்டரில் இல்லை: தடவியல் நிபுணர்கள் திட்டவட்டம்!!
மறைந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய பின்னணியில் சதி செயல்கள் ஏதும் இல்லை என்று அந்நாட்டு ராணுவ தடயவியல் நிபுணர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ தண்டையார்பேட்டையில் இன்சுலேஷன் டேப் தயாரிக்கும் கம்பெனியில் பயங்கர தீவிபத்து: 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ மே மாத விடுமுறையை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா 28ம் தேதி திறந்திருக்கும்
மே மாத விடுமுறையை முன்னிட்டு, வருகிற 28ம் தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளுக்கு இணையவழியில் உரிமம்: தாம்பரம் மாநகராட்சி ஆணையர் தகவல்
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளுக்கு இணையவழி மூலம் உரிமம் வழங்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ சாதனை புரிந்த இளைஞர்கள் டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
சாதனை புரிந்த இளைஞர்கள் 2023ம் ஆண்டிற்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தகவல் தெரிவித்துள்ளார்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ தங்கம் விலை தொடர் சரிவு
நேற்றும் தங்கம் விலை வீழ்ச்சியை சந்தித்தது. அதாவது நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.6,650க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.53,200க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில், தொடர்ச்சியாக 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2000 வரை குறைந்துள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ ஐபிஎல்: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி
சென்னையில் நடைபெற்ற குவாலிபையர் போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சன்ரைசர்ஸ் அணி முன்னேறியது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ ரேஷன் கடை வாகனங்களை கண்காணிக்க ஜி.பி.எஸ்., கருவி
ரேஷன் பொருட்கள் பாதுகாப்பாக சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு, அவற்றை ஏற்றிச் செல்லும் வாகனங்களில், ஜி.பி.எஸ்., என்ற வாகன நகர்வு கண்காணிப்பு கருவிகள் பொருத்த நடவடிக்கை எடுக்குமாறு, முதன்மை சங்கங்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.
பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்
*பாடி பா.கார்த்திக்*