26/5/2024 ஆம் தேதி பேனாமுள் பத்திரிகை செய்திகள்
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳

தேதி: 26/5/2025

*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520


🌷 பேனாமுள் பத்திரிகை செய்திகள் 🌷


குறள் : 33

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ 6ம் கட்ட மக்களவை தேர்தல் விறுவிறுப்பு 58 தொகுதிகளில் 60% வாக்குப்பதிவு: ஜனாதிபதி முர்மு, சோனியா, ராகுல், கெஜ்ரிவால் வாக்களித்தனர், காஷ்மீர், மேற்குவங்கத்தில் பல இடங்களில் வன்முறை, மோதல்

மக்களவை தேர்தலில் 6ம் கட்டமாக 58 தொகுதிகளில் நடந்த வாக்குப்பதிவில் 60 சதவீத வாக்குகள் பதிவானது. தலைநகர் டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் வாக்களித்தனர். மேற்கு வங்கம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் வாக்குப்பதிவின் போது வன்முறை, மோதல் சம்பவங்கள் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ குஜராத்தில் பயங்கர தீ; 24 பேர் பலி

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள டிஆர்பி விளையாட்டு மண்டலத்தில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிறுவர்கள் உட்பட 24 பேர் உயிரிழந்தனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ மைசூரு நட்சத்திர ஓட்டலில் பிரதமர் மோடி தங்கியதில் ரூ.80 லட்சம் வாடகை பாக்கி: சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவிப்பு

நிலைஉயில் நட்சத்திர ஓட்டலின் பொது மேலாளர், கர்நாடகா மாநில வனத்துறை அதிகாரி பசவராஜுக்கு கடந்த 21ம் தேதி கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில், எங்கள் ஓட்டல் சேவைகளைப் பயன்படுத்திய 12 மாதங்களுக்குப் பிறகும் அதற்கான கட்டண தொகை தற்போது வரையில் செலுத்தப்படவில்லை. தொடர்ச்சியாக கடிதம் மூலம் வலியுறுத்தியும் வருகிறோம். எனவே நிலுவையில் உள்ள பாக்கிகளுக்கு ஆண்டுக்கு 18சதவீதம் என்று தாமதமாக செலுத்தும் வட்டியாக மொத்தம் ரூ.12.09 லட்சத்தை சேர்த்து அசல் தொகையை தர வேண்டும்.வரும் ஜூன் 1ம் தேதிக்குள் நிலுவைத் தொகையை செலுத்தாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ கூகுள் மேப்பால் கால்வாயில் சிக்கிய பயணிகள்: கேரளாவில் சோகம்

கூகுள் மேப் தவறாக வழிகாட்டியதால் கேரளா சென்ற சுற்றுலா பயணிகள் கால்வாய்க்குள் சிக்கி கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ 4 கி.மீ. தூரம் நீண்ட பக்தர்கள் வரிசை; திருப்பதியில் தரிசனத்துக்கு 30 மணி நேரம் காத்திருப்பு: இலவச பஸ் வசதிக்கு ஏற்பாடு

திருப்பதியில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகரித்து 4 கி.மீ. தூரம் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். இவர்கள் 30 மணிநேரம் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ ஐதராபாத்தில் பரபரப்பு; நடுரோட்டில் நண்பனுடன் பீர் குடித்தபடி இளம்பெண் ரகளை

ஐதராபாத்தில் அதிகாலை நடுரோட்டில் நண்பனுடன் பீர் குடித்தபடி ரகளையில் ஈடுபட்ட இளம்பெண், தட்டிக்கேட்ட பொதுமக்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் புகாரால் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ கூடலூர் அருகே ஆளில்லாத வீட்டுக்குள் பதுங்கிய சிறுத்தை: 8 மணி நேரம் போராடி மயக்க ஊசி போட்டு பிடித்தனர்

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ ஏற்காட்டில் மலர்கண்காட்சி மேலும் 4 நாட்கள் நீட்டிப்பு

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ இந்திய அரசு மருத்துவக்கல்லூரிகளில் முதல்முறையாக தேனியில் அறிமுகம்; உடல் உறுப்பை பதப்படுத்தும் பைபர் கிளாஸ் எம்பட்டிங் முறை : அரசு டாக்டர்கள் அசத்தல்

இந்திய அளவில் முதல்முறையாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி உடற்கூறியல் துறையில் உடல் உறுப்புகளைப் பதப்படுத்துவதில் புதிய முறையை கண்டுபிடித்து அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ நீயும் நானும் வேற இல்ல காவலர் – நடத்துனர் ஆரத்தழுவி ஒருவருக்கு ஒருவர் சமாதானம்: சமுக வலைத்தளங்ககளில் வீடியோ வைரல்

சம்பந்தப்பட்ட பிரச்சினையில் தொடர்புடைய காவலர் ஆறுமுகப்பாண்டி மற்றும் அரசுப் பேருந்து நடத்துநர் சகாயராஜ் ஆகியோர் பேசி கைகுலுக்கி, ஆரத்தழுவி சமாதானம் செய்து கொள்ளும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், காவலர் ஆறுமுகப்பாண்டியிடம், நடத்துநர் சகாயராஜ், ‘‘நாம் இருவருமே பொதுத் துறையில் வேலை செய்பவர்கள்.நீங்கள் காவல் துறையிலும், நான் போக்குவரத்துத் துறையிலும் பணி செய்கிறோம். நீங்கள் அன்று பேருந்தில் வந்தீர்கள். நீங்கள் உங்களது கருத்தை கூறினீர்கள். நான் என்னுடைய கருத்தைக் கூறினேன். அதன்பிறகு நீங்கள் பயணச்சீட்டு பெற்று பயணம் செய்தீர்கள். ஆனால், இந்தப் பிரச்சினை சமூக ஊடகங்களில் பரவி பிரச்சினையாகி இருக்கிறது. அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்கிறார்.அதற்கு, காவலர் ஆறுமுகப்பாண்டி, ‘‘நானும் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இனிமேல் இதுபோன்ற பிரச்னைகள் இல்லாமல், நாம் இரண்டு பேரும், இரண்டு துறைகளும் நண்பர்களாக பணியாற்றுவோம்’’ என்று கூறி இருவரும் ஆரத் தழுவி சமாதானம் தெரிவித்தனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ டாஸ்மாக் கடைகளும் கணினிமயம் அக்டோபர் மாதம் முதல் மதுபாட்டில்களுக்கு ‘பில்’: அதிகாரிகள் தகவல்

புதிய அமைப்பு முதலில் நகரம் மற்றும் மாவட்டங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகளில் தொடங்கப்படும். இது குறைபாடுகளைக் கண்டறிய உதவும். அனைத்து சிக்கல்களும் தீர்க்கப்பட்டவுடன், அக்டோபர் மாதத்தில் அனைத்து கடைகளிலும் செயல்படுத்தப்படும்.டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை ஸ்கேன் செய்தால், அந்த பாட்டில் எங்கே வாங்கப்பட்டது, எந்த தேதியில் வாங்கப்பட்டது, இது எந்த பேட்ஜை சேர்ந்தது, மதுபான ஆலையில் இருந்து எப்போது வெளியே கொண்டு வரப்பட்டது போன்ற பல்வேறு விவரங்களை தெரிந்து கொள்ள முடியும். இதன் மூலம் கள்ளச்சந்தையில் மது விற்பனை தடுக்கப்படும். டாஸ்மாக் நிறுவனம் மதுபாட்டில்களை ஸ்கேன் செய்ய வாடிக்கையாளர்களுக்கு மொபைல் போன் செயலியை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பள்ளிகளில் நலத்திட்ட பொருட்கள் விநியோகிக்கும் பணிக்கு மாணவர்களை பயன்படுத்த கூடாது: பள்ளிக்கல்வித்துறை அறிவுரை

நலத்திட்ட பொருட்கள் வழங்கும் பணிகளில் எக்காரணத்தைக் கொண்டும், மாணவ, மாணவிகளை பயன்படுத்தக் கூடாது என முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல், மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்ட பொருட்கள் குறித்த விவரங்களை கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும், அந்த விவரங்கள் பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்க வேண்டும் எனவும் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ வரத்து குறைவால் கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *பெட்ரோல் பங்கில் குடிக்க தண்ணீர் இல்லையா சமூக ஆர்வலர் காசிமாயின் பெட்ரோல் பங்க் மீது புகார்*

25/5/2025 அன்று காலை 6.30 மணியளவில் காரில் வெளியே சென்று இருக்கிறார் அப்போது அந்த வழியாக இருந்த பெட்ரோல் நிலையத்தில் வாகனத்தில் எரிபொருள் நிரப்பி கொண்டு இருக்கும் போது காரில் இருந்த முதியவருக்கு விக்கல் ஏற்பட்டிருக்கிறது உடனே பங்க் ஊழியரிடம் தண்ணீர் கேட்டிருக்கிறார் அதற்கு அந்த ஊழியர் தண்ணீர் இங்கு கிடையாது 7.00 மணிக்கு மேல் தான் கிடைக்கும் என்று கூறியிருக்கிறார் பிறகு எரிபொருள் நிரப்பியதற்கு G PAY மூலம் பணம் அனுப்பியதற்கும் ஏன் அதில் அனுப்பினீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார் ஒரு பெட்ரோல் நிலையத்தில் அத்தியாவசிய தேவைகள் கண்டிப்பாக இருக்க வேண்டும் தண்ணீர் கேட்டதற்கு இல்லை என்று மறுத்த அந்த பெட்ரோல் பங்க் மீது புகார் அனுப்பி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பி இருக்கிறார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️விண்ணப்பதாரர்களுக்கு 16 நாட்களுக்குள் கிடைக்க நடவடிக்கை பட்டா மாறுதல் உள்ளிட்ட 26 சான்றிதழ்களுக்கு இனி காத்திருக்க தேவையில்லை: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

ஆன்லைன் வழியாக வழங்கப்படும் பட்டா மாறுதல் உள்ளிட்ட 26 சான்றிதழ்களை 16 நாட்களுக்குள் கிடைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக ஒவ்வொரு தாலுக்காவுக்கும் சிறப்பு அலுவலரை நியமிக்க அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் கடிதம் எழுதியுள்ளார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ 9 வயது சிறுவனை கொன்ற 13 வயது மாணவன் கைது: செப்டிக் டேங்க் குழியில் உடலை மறைத்த கொடூரம்

மேலூர் அருகே நான்கு வழிச்சாலை சுங்கச்சாவடி கத்தப்பட்டியில் தனியார் பவுண்டேசன் சார்பில் உருது பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த 13 மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். நேற்று முன்தினம் அங்கு படித்த 9 வயது மாணவனை காணவில்லை என, பள்ளி நிர்வாகம் மேலூர் போலீசாருக்கு புகார் அளித்தது. இதுகுறித்து பள்ளிக்கு சென்ற போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, 9 வயது மாணவனை அதே பள்ளியில் படிக்கும் 13 வயது மாணவன் காய்கறி நறுக்கும் கத்தியால் கழுத்து, முதுகு பகுதியில் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. மேலும் இவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு படுகொலையில் முடிந்தது உறுதியானது.மேலும் கொலை செய்யப்பட்ட மாணவன் உடலை அப்பகுதியில் செப்டிக் டேங்க் அமைப்பதற்காக தோண்டியுள்ள பள்ளத்தில், இழுத்து சென்று போட்டுள்ளதும் தெரியவந்தது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரும் போதைப்பொருட்களை கண்டுபிடிக்க மேலும் 2 மோப்ப நாய்கள் வருகை: 9 மாதம் ராணுவ சிறப்பு பயிற்சி பெற்றவை

சென்னைக்கு விமானங்களில் கடத்தி வரப்படும் போதைப்பொருட்களை கண்டுபிடிக்க மேலும் 2 மோப்ப நாய்கள் வந்துள்ளன. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தலை கண்டுபிடிப்பதற்கு விமான நிலைய சுங்க துறையிடம் ஏற்கனவே ஓரியோ என்ற இரண்டு வயது ஆண் மோப்ப நாயும், ஓர்லி எனப்படும் இரண்டு வயது பெண் மோப்ப நாயும், பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ ஐபிஎல் டி20 சீசன் 17 சாம்பியன் யார்? இறுதி போட்டியில் இன்று ஐதராபாத் – கொல்கத்தா மோதல்: சென்னையில் இரவு 7.30க்கு தொடக்கம்

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ புயல் இன்று கரை கடக்கும்

'மத்திய வங்கக் கடல் பகுதியில் உருவாகி உள்ள, 'ரேமல்' புயல், இன்று நள்ளிரவு வங்கதேசம் கேப்புப்பாராவுக்கும், மேற்கு வங்கம் சாகர் தீவுக்கும் இடையே, கரையை கடக்கக் கூடும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ திருவள்ளூர் ஆவின் பொது மேலாளர் சஸ்பெண்ட்

லிட்டர் பால் வெளியில் சென்றதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு வந்த புகாரில் நேற்று முன்தினம் காக்களூர் ஆவினில் சோதனை நடந்தது.
இதையடுத்து ஆவின் பொது மேலாளர் ரமேஷ் குமார், ஆவின் துணை மேலாளர் கனிஷா மற்றும் இருவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம்; 10 கி.வாட் வரை ஒப்புதல் வேண்டாம்

 : வீடு உள்ளிட்ட கட்டடங்களில் 10 கிலோ வாட் வரை அமைக்கப்படும் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையத்திற்கு, தொழில்நுட்ப சாத்தியக்கூறு ஒப்புதல் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு மின் வாரியத்திற்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தர விட்டுள்ளது.

பேனாமுள் செய்திகளுக்காக உங்கள்
 
*பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
Comments