🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳
தேதி: 27/5/2025
*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520
🌷பேனாமுள் பத்திரிகை செய்திகள் 🌷
குறள் : 34
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற
ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகும் ஜூன் 4ம் தேதி வெற்றிக்கொடி ஏற்றுவோம்: ‘இந்தியா’வின் வெற்றியை கலைஞருக்கு காணிக்கையாக்குவோம், முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகும் ஜூன் 4ம் தேதி வெற்றிக் கொடி ஏற்றுவோம். இந்தியாவின் வெற்றியைத் தலைவர் கலைஞருக்கு காணிக்கையாக்குவோம் என்று தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ வேலைக்காக வெளிநாடு செல்லும் இளைஞர்கள் லாவோஸ், கம்போடியெ செல்லும் முன் எச்சரிக்கை அவசியம்:
சென்னை: வேலைக்காக வெளிநாடு செல்லும் இளைஞர்கள், பயணிப்பதற்கு முன் தாங்கள் பணிபுரியவுள்ள நிறுவனத்தை பற்றி நன்றாக விசாரித்து பணிக்கு செல்ல வேண்டும் என தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ இந்தியா குஜராத் பொழுதுபோக்கு விளையாட்டு மையத்தில் 9 சிறுவர்கள் உள்பட 32 பேர் தீயில் கருகி பலி:
தீ விபத்தில் 9 சிறுவர்கள் உட்பட 32 பேர் தீயில் கருகி பலியான நிலையில், பல மணி நேரம் போராடி கரிகட்டைகளாக சடலங்கள் மீட்கப்பட்டன. இந்த விபத்து சம்பவம் குறித்து எஸ்ஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ டெல்லி குழந்தைகள் நல மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 குழந்தைகள் பலி
கிழக்கு டெல்லியில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 குழந்தைகள் பலியாகினர். தீ விபத்தில் இருந்து 12 பிறந்த குழந்தைகள் மீட்கப்பட்டதாகவும், ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் உயிரிழந்ததாகவும், வென்டிலேட்டரில் உள்ள குழந்தை உட்பட 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ ஒர்க் ஃப்ரம் ஹோம் தெரியும் ஒர்க் ஃப்ரம் ஜெயில் பற்றி கேள்விப்பட்டதே இல்லை: கெஜ்ரிவால் பற்றி ராஜ்நாத் சிங் கிண்டல்
வீட்டில் இருந்து பணியாற்றுவது பற்றி தெரியும். ஆனால் சிறையில் இருந்து பணியாற்றுவது பற்றி இதுவரை கேள்விபட்டதே இல்லை என ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் விமர்சித்துள்ளார்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ இரவில் கரையை கடந்தது ரெமல் புயல் மேற்கு வங்கம், வங்கதேசத்தில் 9 லட்சம் பேர் வெளியேற்றம்: பிரதமர் மோடி ஆலோசனை
மேற்கு வங்காளம் மற்றும் வங்க தேசதிற்கு இடையே ரெமல் புயல் நேற்று இரவு கரையை கடந்தது. இதனால் முன்னெச்சரிக்கையாக, வங்கதேசத்தில் 8 லட்சம் பேரும் மேற்கு வங்கத்தில் 1 லட்சம் பேரும் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ கொள்ளிடம் பாலத்தின் டிவைடர் மீது டிவிஎஸ்-50ஐ 1.5 கி.மீ ஓட்டி அலப்பறை: வீடியோ வைரலால் வாலிபரை தேடும் போலீஸ்
திருச்சி கொள்ளிடம் பாலத்தில் சென்டர் மீடியனில் 1.5 கி.மீ தூரம் இளைஞர் ஒருவர் டிவிஎஸ்-50ஐ ஓட்டி அலப்பறை செய்துள்ளார். இந்த வீடியோ வைரலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ 100 யூனிட் விலையில்லா மின்சாரம் வாடகைதாரர்களுக்கும் கிடைத்திட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
100 யூனிட் விலையில்லா மின்சாரம், அனைத்து மக்களுக்கும் கிடைத்திட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு
அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவால் தக்காளி 1 கிலோ ரூ.60க்கு விற்பனை:
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவு காரணமாக தக்காளி ஒரு கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
🌹 *பேனாமுள்செய்திகள்*🌹
✍️ இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ தந்தை, மகள் உள்பட 3 பேர் குட்டையில் மூழ்கி பலி: சூலூர் அருகே பரிதாபம்
மணிகண்டன், தமிழ்ச்செல்வி, புவனா ஆகிய 3 பேரும் நேற்று மதியம் வீட்டின் அருகில் உள்ள குட்டையில் நீச்சல் பழகுவதற்காக சென்றனர். மணிகண்டன் கரையில் நின்றிருந்தார். சிறுமிகள் இருவரும் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தனர். திடீரென அவர்கள் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி தத்தளித்தனர்.அதை பார்த்த மணிகண்டன் அவர்களை காப்பாற்றுவதற்காக குட்டையில் குதித்தார். அப்போது அவரும் உள்ளே சிக்கிக்கொண்டார். இதனிடையே குட்டைக்கு சென்றவர்கள் வீடு திரும்பாததால் அவர்களை தேடி மணிகண்டனின் மனைவி குட்டை பகுதிக்கு வந்து பார்த்தார். அப்போது குட்டையின் கரையில் குழந்தைகளின் செருப்புகள் மட்டுமே கிடந்தன. இதனால் சந்தேகம் அடைந்த அவர், அளித்த தகவலையடுத்து தீயணைப்பு துறையினர் வந்து குட்டையில் இறங்கி ஆழமான பகுதியில் தேடினர். அப்போது மணிகண்டன், தமிழ்ச்செல்வி, புவனா ஆகியோரது உயிரற்ற உடல்கள் மீட்கப்பட்டன. இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ பதிவு பெறாமல் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்ட்டுகள் மீது கடும் நடவடிக்கை பாயும்: தமிழ்நாடு அரசு எச்சரிக்கை
ஒன்றிய அரசில் பதிவு பெறாமல் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் முகவர்கள், முகமைகள் மீது காவல்துறை மூலம் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ இன்டர்சிட்டி எக்ஸ்பிரசில் மீண்டும் மீண்டும் புகை: 2 முறை நடுவழியில் நிறுத்தம்; பயணிகள் அச்சம்
திருப்பரங்குன்றம் அருகே ரயிலின் பின்பகுதியில் இருந்து புகை அதிகளவில் வருவது தெரிந்தது. இதையடுத்து, கள்ளிக்குடி ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தினர். தகவலறிந்து வந்த ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் புகை வந்த கடைசிப் பெட்டியை ஆய்வு செய்தனர். புகையைக் கண்டு அச்சமடைந்த பயணிகள் பலரும் கீழே இறங்கி பிளாட்பாரத்தில் நின்றனர். ரயில்வே தொழில்நுட்ப அலுவலர்கள் ஆய்வு செய்ததில், ரயிலின் பிரேக் செயல் இழந்ததால் சக்கரங்கள் தண்டவாளத்தில் உரசியதால் ஏற்பட்ட புகை எனத் தெரிந்தது. இதனை சரி செய்தனர்.சுமார் அரை மணிநேரத்திற்கு பின்னர் ரயில் புறப்பட்டு சென்றது. இந்நிலையில் சாத்தூருக்கு 8 கிலோ மீட்டருக்கு முன்பாக மீண்டும் ரயில் பெட்டியின் கீழ் பகுதியில் இருந்து அதிக புகை வெளியானதால் 2வது முறையாக நடுவழியில் நிறுத்தப்பட்டது. அங்கும் கோளாறு சரி செய்யப்பட்டு. ரயில் புறப்பட்டுச் சென்றது. ஓடும் ரயிலில் அடுத்தடுத்து புகை வந்ததால் ரயில் பயணிகள் அச்சத்துடன் பயணித்தனர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ வாகன சோதனையின்போது உரிய ஆவணமில்லாத ரூ.15 லட்சம் பறிமுதல்
கொருக்குப்பேட்டையில் வாகன சோதனையின்போது, உரிய ஆவணம் இல்லாமல், மொபட்டில் எடுத்துச் சென்ற ரூ.15 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்து, வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ கான்ஸ் விழாவில் 3 விருதுகள் இந்தியர்கள் அசத்தல் சாதனை
கான்ஸ் திரைப்பட விழாவில், இந்த ஆண்டு இந்தியாவுக்கு சிறப்பாக அமைந்துள்ளது. இரண்டாவது உயரிய விருது உட்பட மூன்று விருதுகளை இந்தியர்கள் வென்று அசத்தியுள்ளனர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ கோயிலுக்கு நிலமளித்த இஸ்லாமியர்: கும்பாபிஷேகத்திற்கு சீர் வரிசையுடன் வருகை
காங்கேயம் அருகே விநாயகர் கோயில் கட்ட நிலம் வழங்கிய இஸ்லாமியர்கள், கும்பாபிஷேக விழாவுக்கு, சீர்வரிசை வழங்கினர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ பாம்பனில் துாக்கு பாலம்; கடலில் புதிய துாண்கள்
பாம்பன் கடலில், 550 கோடி ரூபாய் செலவில் புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணி நடக்கிறது. இப்பாலம் நடுவில் கப்பல்கள், படகுகள் கடந்து செல்லும் வகையில், 'லிப்ட்' முறையிலான துாக்கு பாலத்தை பொருத்த ரயில்வே அமைச்சகம் பணிகளை மேற்கொண்டுள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ கட்டடமே கட்டாமல் ரூ.36 லட்சம் 'ஸ்வாகா'; முன்னாள் எம்.எல்.ஏ., மீது வழக்கு
சென்னை : தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டடமே கட்டாமலும், தரமற்ற கட்டடம் கட்டியும், 36 லட்சம் ரூபாய் சுருட்டியதாக, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., தி.நகர் சத்யா மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உட்பட ஏழு பேர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ நாளை உலக பட்டினி தினம்: அன்னதானம் வழங்க விஜய் உத்தரவு
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி, பட்டினி இல்லாத உலகத்தை ஏற்படுத்த வேண்டும்.
அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, உலக பட்டினி தினத்தில் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். கட்சி நிர்வாகிகள் உரிய தேர்தல் வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றி, அன்னதானம் வழங்கி, மக்கள் நலப்பணியில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ ஜூன் 6க்குள் பள்ளி வகுப்பறைகளை சுத்தம் செய்ய வேண்டும்: பள்ளிக்கல்வி துறை
தமிழகத்தில் ஜூன் 6ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிகள் திறப்புக்கு முன்னரும், திறந்த பிறகும் செய்ய வேண்டிய கல்வி செயல்பாடுகள், கல்வி சாரா செயல்பாடுகள், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் போன்றவற்றை, பள்ளிக்கல்வி துறை வெளியிட்டுள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ 'பாஸ்ட் புட்' உணவால் 7 வயது சிறுமி உயிரிழப்பு
'லட்சுமிகுமாரி அடிக்கடி 'பாஸ்ட் புட்' உணவை விரும்பி கேட்டுள்ளார். தாத்தா, பாட்டியும் வாங்கி கொடுத்துள்ளனர். சம்பவத்தன்று 'பிரைடு ரைஸ்' சாப்பிட்டுள்ளார். பாஸ்ட் புட் உணவு தொடர்ந்து உட்கொண்டதால், குடலில் கொப்புளம் உண்டாகி வெடிப்பு ஏற்பட்டு, சிறுமி இறந்தது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது' என்றனர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ வீட்டில் வழுக்கி விழுந்த வைகோ; தோளில் எலும்பு முறிவு
ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ நெல்லையில் உள்ள வீட்டில் வழுக்கி விழுந்ததில் அவருக்கு தோளில் பலத்த காயம் ஏற்பட்டது.
இது குறித்து வைகோவின் மகன் துரை, எக்ஸ் சமூகவலைதளத்தில் இத்தகவலை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
எனது தந்தை , கன்னியாகுமரி மாவட்ட மதிமுக செயலாளர் வெற்றிவேல் மகளின் மணவிழாவில் பங்கேற்பதற்காக, நேற்று (மே-25) திருநெல்வேலி சென்று இருந்தார். இரவு, வீட்டில் கால் தடுமாறி விழுந்ததில், அவரது வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது.
மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் இதனால் அவர் சென்னைக்கு செல்ல உள்ளார். தந்தை விரைவில் நலம் பெறுவார். அச்சம் கொள்ளும் வகையில் எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ ஐதராபாத் அணியை வீழ்த்தி கோல்கட்டா அணி 3வது முறை சாம்பியன்
ஐ தராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 3வது முறையாக கோல்கட்டா அணி சாம்பியன் ஆனது.
பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்
*பாடி பா.கார்த்திக்*