29/5/2024 ஆம் தேதி பேனாமுள் பத்திரிகை செய்திகள்
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳

தேதி: 29/5/2025

*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520

🌷 பேனாமுள் பத்திரிகை செய்திகள் 🌷

குறள் : 36
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை

இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பங்கு சந்தை நிலவரம் 
நிப்டி : 22888.15
பேங்க் நிப்டி : 49142.15
சென்செக்ஸ் : 75170.45

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதி உள்பட 57 தொகுதியில் நாளை பிரசாரம் ஓய்கிறது: ஜூன் 1ல் கடைசி கட்ட ஓட்டுப்பதிவு

வரும் ஜூன் 1ம் தேதி கடைசி கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 57 தொகுதியில் நாளை பிரசாரம் ஓய்கிறது. பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசியில் நேற்று ராகுல் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ மிசோரமில் கனமழையால் நிலச்சரிவு 22 பேர் உயிருடன் புதைந்து பலி: கல் குவாரி இடிந்து விபத்து

மிசோரமில் கனமழையால் கல் குவாரி இடிந்தும், நிலச்சரிவில் சிக்கியும் 22 பேர் உயிருடன் மண்ணில் புதைந்து இறந்துள்ளனர். மேலும் சிலர் மாயமாகி உள்ளனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ அதிக டிடிஎஸ் பிடித்தம் தவிர்க்க மே 31க்குள் பான் எண்ணுடன் ஆதார் இணைக்க வேண்டும்: வருமான வரித்துறை தகவல்

வரி செலுத்துவோர் மே 31ம் தேதிக்குள் பான், ஆதாரை இணைக்க வேண்டும்.அதிக டிடிஎஸ் பிடித்தத்தை தவிர்க்க வேண்டுமெனில், கடைசி தேதிக்குள் பான், ஆதாரை இணைத்திடுங்கள்’’ என கூறி உள்ளது. மற்றொரு பதிவில், ‘‘வங்கி, பாரக்ஸ் டீலர்கள், தபால் அலுவலகங்கள், மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் எஸ்எப்டி (குறிப்பிடப்பட்ட பரிவர்த்தனை அறிக்கை) ரிட்டனை மே 31க்குள் தாக்கல் செய்து அபராதத்தை தவிர்க்க வேண்டும்’’ என வலியுறுத்தப்பட்டுள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பல்வேறு மாநிலங்களில் திருடி விற்கப்பட்ட 11 பச்சிளம் குழந்தைகள் மீட்பு; தெலங்கானா போலீசார் விசாரணையில் பரபரப்பு

பல்வேறு மாநிலங்களில் இருந்து பச்சிளம் குழந்தைகளை திருடி கடத்திச்சென்று விற்பனை செய்ததாக பெண் டாக்டர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 11 பச்சிளம் குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ கூகுள்பே, போன் பே, ரிலையன்சுக்கு போட்டியாக யுபிஐ, இ-காமர்ஸ் துறைகளில் நுழைய அதானி குழுமம் முயற்சி

கூகுள் பே, போன் பே, ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ மணிக்கு போட்டியாக யுபிஐ ஒன்றை புதிதாக தொடங்க லைசென்ஸ் கேட்டு விண்ணப்பிக்கும் நடவடிக்கைகளை அதானி குழுமம் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.அதோடு, வங்கிகளுடன் இணைந்து கிரெடிட் கார்டு தொழிலும் அதானி குழுமம் கால் பதிக்க உள்ளது. இந்த சேவைகள் அனைத்தையும், 2022ல் தொடங்கப்பட்ட அதானி ஒன் ஆப் மூலமாக ஒரே இடத்தில் வழங்கவும் தொழில்நுட்ப ரீதியாக தயாராகி வருகிறது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ டெல்லி ஏர்போர்ட்டில் பீதி வாரணாசி விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

விமானி ஒருவர் விமானத்தின் கழிவறைக்கு சென்ற போது அங்கு துண்டு பேப்பர் ஒன்றில், ‘வெடிகுண்டு @5.30’ என எழுதப்பட்டிருந்தது. இது குறித்து விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.உடனடியாக விமான நிலைய பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டு, அவசரகால வழியாக பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ ஒன்றரை மணி நேரத்தில் 10 செ.மீ கொட்டியது கொச்சியில் மேக வெடிப்பு

கேரளாவில் நேற்று பரவலாக கனமழை பெய்தது. கொச்சியில் மேக வெடிப்பு போல் ஒன்றரை மணி நேரத்தில் 10 செ.மீ மழை கொட்டியது. கனமழைக்கு ஒரே நாளில் 5 பேர் பலியாகினர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ மின் கம்பி அறுந்து 7 ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்

திருப்பத்தூர் ரயில் நிலையம் அருகே நள்ளிரவு 12 மணியளவில் வந்தபோது ரயில் இன்ஜினுக்கு செல்லும் உயரழுத்த மின் சப்ளை திடீரென தடைபட்டது.இன்ஜின் டிரைவர்கள் இறங்கி வந்து பார்த்தபோது உயர் மின்னழுத்த கம்பி தண்டவாளத்தில் அறுந்து கிடந்தது தெரியவந்தது.அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வந்து மின்கம்பியை சுமார் ஒரு மணி நேரம் போராடி சரி செய்தனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ நடிகை கவுதமியிடம் நிலத்தின் மதிப்பை உயர்த்திக் காட்டி மோசடி

நிலத்தின் மதிப்பை உயர்த்திக் காட்டி, நடிகை கவுதமியிடம் ரூ.3.16 கோடி மோசடி செய்தது தொடர்பாக, பாஜ பிரமுகர் உள்ளிட்ட 12 பேர் மீது ராமநாதபுரம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பாம்பை பிடித்து வீடியோ வெளியீடு பெண் உள்பட 2 பேர் கைது

உமா மகேஸ்வரி மனிதர்களிடம் இருந்து பாம்பையும், பாம்பிடம் இருந்து மனிதர்களையும் காப்போம் எனவும், பாம்புகளை யாரும் அடிக்க வேண்டாம்.உங்கள் பகுதியில் பாம்புகள் இருந்தால் பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் அளிக்கவும் என கூறி வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதையடுத்து உரிய அனுமதியின்றி பாம்பை பிடித்து அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டதற்காக, அப்துல் ரகுமான், உமா மகேஸ்வரி ஆகியோர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ முத்தமிழ் முருகன்’ மாநாட்டுக்கு தனி இணையதளம் தொடக்கம்: பங்கேற்பாளர்கள் ஜூலை 15க்குள் பதிவு செய்ய வேண்டுகோள்

வரும் ஆகஸ்ட் 24, 25ம் தேதிகளில் பழனியில் நடைபெறும் முத்தமிழ் முருகன் மாநாட்டு நிகழ்வுகளை அறிந்து கொள்ளவும், பங்கேற்போர் பதிவு செய்திடவும், ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கவும் தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளில் மே மாதத்துக்கான பாமாயில், துவரம் பருப்பை ஜூன் முதல் வாரம் வரை பெறலாம்: தமிழ்நாடு அரசு தகவல்

குடும்ப அட்டைதாரர்களின் நன்மையினைக் கருத்தில் கொண்டு மே 2024 மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட் பெற இயலாத அட்டைதாரர்கள் அவர்களுக்கான மே 2024 மாத துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை ஜூன் 2024 மாதம் முதல் வாரத்தில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ சென்னையில் 106 டிகிரி வெயில்

தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் நேற்று 106 டிகிரி வெயில் கொளுத்தியது. 31ம் தேதி மற்றும் ஜூன் 1ம் தேதிகளில் இயல்பை ஒட்டியும் வெப்பநிலை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ ஆவின் பால் கொள்முதல் 31 லட்சம் லிட்டரை தாண்டியது: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ கடன் தொல்லையால் விபரீத முடிவு காரைக்குடியில் காதலன் புதுகையில் காதலி தற்கொலை

கடன் தொல்லையால் காரைக்குடியில் காதலன் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து புதுக்கோட்டை தனியார் கல்லூரியில் இருந்த காதலியும் தற்கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ 15 மாதங்களில் 11 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை: சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை சாதனை

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ வரும் 31ம் தேதி முதல் பிளஸ் 1 மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 1 தேர்வு விடைத்தாள் கேட்டு விண்ணப்பித்தவர்கள் நாளை மதியம் இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அத்துடன், மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்ய விரும்புவோர் 31ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ வைகோ உடல் நலம் குறித்த வதந்தியை நம்ப வேண்டாம்: துரை வைகோ அறிக்கை

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் வைகோவுக்கு இன்று நடக்க இருப்பது சிறிய அறுவை சிகிச்சைதான். யாரும் பயப்பட வேண்டியது இல்லை. மருத்துவர்கள் அக்கறையுடன் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். தலைவருக்கு எலும்பு முறிவால் ஏற்படும் வலியை மட்டும் தாங்கிக் கொண்டிருக்கிறார்.எப்போதும் போல வழக்கமான உணவை எடுத்துக் கொள்கிறார். அவருக்கு மிகவும் பிடித்தமான டென்னிஸ் இப்போது நடைபெறும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகளை ஆர்வத்துடன் தொலைக்காட்சியில் பார்க்கிறார். செய்திகளை பார்த்து அவ்வப்போது தகவல்களை பரிமாறிக் கொள்கிறார். எனவே அவரைப் பற்றி வெளிவரும் வதந்திகளை நம்ப வேண்டாம். விரைவில் பூரண நலம் பெற்று வைகோ இல்லம் திரும்புவார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ கத்திரி வெயில் முடிந்தது வட மாவட்டங்களில் படிப்படியாக வெப்பம் அதிகரிக்கும்

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ 3 நாள் பயணமாக கன்னியாகுமரி வருகை விவேகானந்தர் மண்டபத்தில் மோடி 45 மணி நேரம் தியானம்: நாளை மாலை தொடங்குகிறார்

பிரதமர் மோடி 3 நாள் பயணமாக நாளை கன்னியாகுமரி வருகிறார். சிறப்பு படகு மூலம் நடுக்கடலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு செல்லும் பிரதமர், மாலை முதல் தியான மண்டபத்தில் அமர்ந்து 45 மணி நேரம் தியானத்தில் ஈடுபட உள்ளார். 1ம் தேதி மாலை திருவனந்தபுரம் செல்கிறார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டு இடங்களுக்கு போட்டி: குலுக்கல் முறையில் தேர்வு

தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்வதற்கு அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்ததால் குலுக்கல் முறையின் கீழ் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ குரோம்பேட்டை, தாம்பரம், குன்றத்தூர் பகுதிகளில் நள்ளிரவில் பயங்கரம் ஒரே நாளில் 4 பேர் வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை

குரோம்பேட்டை, தாம்பரம், குன்றத்தூர் பகுதிகளில் நள்ளிரவில் அடுத்தடுத்து ஆட்டோ டிரைவர் பெண் உட்பட 4 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ இளம் தொழிலதிபரை காரில் கடத்தி ரூ.50 லட்சம் பறித்த வழக்கு தனிமையில் சந்திக்கலாம் என்று இனிக்க இனிக்க பேசி அழைத்து சென்ற இளம் பட்டதாரி பெண் கைது: இரவு நேர பாருக்கு வரும் தொழிலதிபர்களை மயக்கி பணம் பறித்து வந்தது அம்பலம்

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ தங்கையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை கண்டித்ததால் பள்ளி மாணவன் கழுத்தறுத்து கொலை: 17 வயது சிறுவன் வெறிச்செயல்

கொலையாளியான சிறுவனுக்கு பிறந்தநாள் என்பதால் கேக் வெட்டுவதற்காக 13வயது சிறுவனின் தங்கையை தனது வீட்டுக்கு அழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளான்.தப்பி ஓடி வந்த சிறுமி தனது சகோதரனிடம் தெரிவித்துள்ளாள். இதையடுத்து 13வயது சிறுவன் சென்று கண்டித்தபோது, அவனது கைகளை பின்புறமாக துணியால் கட்டி வாயில் துணியை திணித்து, கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளான் என்றனர். இதையடுத்து 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ ஒன்றிய உணவுத்துறையில் பொறுப்பு தருவதாக சேலம் டாக்டரிடம் ரூ.2.48 கோடி மோசடி: சேலம் கோர்ட்டில் ஒருவர் சரண்; 2 பேருக்கு வலை

ஒன்றிய உணவுத்துறையில் பொறுப்பு வாங்கி தருவதாக கூறி பிரபல டாக்டரிடம் ரூ.2.48 கோடி மோசடி செய்த வழக்கில் ஒருவர் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ கோடை வெப்பத்தை தணிக்க இரவு நேரத்தில் கடற்கரை, பூங்காக்களுக்கு செல்லும் மக்களை துரத்துவதை எதிர்த்து வழக்கு: டிஜிபி,  கமிஷனர் பதில் தர ஐகோர்ட் உத்தரவு

கோடை வெப்பத்தை தணிக்க இரவு நேரங்களில் கடற்கரை, பூங்காக்களுக்கு செல்லும் மக்களை துரத்தக் கூடாது என்று காவல் துறைக்கு உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக டி.ஜி.பி.க்கும், சென்னை மாநகர காவல் ஆணையருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ சாலையில் நடந்து சென்ற வாலிபரை வெட்டி செல்போன் பறிப்பு

கிழக்கு தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் ஹேமநாதன் (30). இவர், சொந்த வேலை காரணமாக நேற்று முன்தினம் மின்சார ரயில் மூலம் நுங்கம்பாக்கம் வந்தார். பிறகு ரயில் நியைத்தில் இருந்து சூளைமேடு பகுதி நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த 2 பேர் ஹேமநாதனை வழிமறித்து செல்போன் பறிக்க முயன்றனர். சுதாரித்துக்கொண்ட அவர், திருடன் திருடன் என சத்தம் போட்டு பொதுமக்களை உதவிக்கு அழைத்தார்.இதனால் ஆத்திரமடைந்த 2 வழிப்பறி கொள்ளையர்கள் கையில் வைத்திருந்த கத்தியால் ஹேமநாதனை தலை மற்றும் காலில் வெட்டிவிட்டு அவரிடம் இருந்து செல்போனை பறித்து கொண்டு தப்பினர். இதில் படுகாயமடைந்த ஹேமநாதனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ இசிஆரில் பிறந்தநாளை கொண்டாட போதை மாத்திரை, கஞ்சாவுடன் சென்ற கல்லூரி மாணவர்கள்: வாகன சோதனையில் சிக்கினர்

இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் பிறந்தநாள் கொண்டாடுவதற்காக கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்வதாக கூறியுள்ளனர்.சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களை சோதனை செய்து பார்த்தபோது 10 பொட்டலங்கள் கொண்ட கஞ்சா, 10 போதை மாத்திரைகளை எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து பிடிபட்ட இளைஞர்களிடம் நடத்திய விசாரணையில், திருவொற்றியூர் காலடிப்பேட்டையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மோனிஷ், கோபாலகிருஷ்ணன் என்பது தெரிய வந்தது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ ஆதிதிராவிடர் உயர்நிலை பள்ளியில் எலக்ட்ரிக் பொருட்கள் திருட்டு: 3 பேர் கைது

சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய புளியந்தோப்பு மோதிலால் தெரு பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் (எ) ஏழுமலை (19), நரேந்திரன் (எ) நரி (23), சஞ்சய் (எ) கார்கோ (18) ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.அவர்களை நேற்று கைது செய்தனர். இவர்கள் திருடிய பொருட்களை ஓட்டேரி பகுதியில் உள்ள பழைய இரும்பு கடையில் போட்டு அந்த பணத்தில் மது குடித்ததாக தெரிவித்தனர். இதையடுத்து 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ திருமண மண்டபங்களில் மீதமாகும் உணவுகள்: விஜய் கட்சி புதுயோசனை

திருமண மண்டபங்களில் மீதமாகும் உணவுகளை சேகரித்து ஆதரவற்றோர், முதியோர்களுக்கு வழங்க முடிவெடுத்துள்ளோம்,” என, தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் கூறினார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்; ரைபாகினா முன்னேற்றம்

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹


✍️ சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் சாத்விக் – சிராக் ஜோடி அதிர்ச்சி தோல்வி

பேனாமுள் செய்திகளுக்காக உங்கள்

*பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
Comments