30/5/2024 ஆம் தேதி பேனாமுள் பத்திரிகை செய்திகள்
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳

தேதி: 30/5/2025

*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520

🌷பேனாமுள் பத்திரிகை 
செய்திகள் 🌷

குறள் : 37
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பங்கு சந்தை நிலவரம் 
நிப்டி : 22704.7
பேங்க் நிப்டி : 48501.35
சென்செக்ஸ் : 74502.9

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ சென்னை - ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கம் விலை 1கிராம் ₹ 6,776  ,
24 கேரட் தங்கம் விலை ₹ 7,392 (1 கிராம்)
வெள்ளி விலை ஒரு கிராம் ₹ 102.30

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில்45 மணி நேர தியானத்தை மோடி இன்று தொடங்குகிறார்

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் 45 மணி நேரம் தியானத்தை பிரதமர் மோடி இன்று தொடங்குகிறார். இதையொட்டி அங்கு கடற்படையினர் மற்றும் 11 எஸ்பிக்கள் தலைமையில் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ கடைசி கட்டதேர்தல்: 57 தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்கிறது

மக்களவை தேர்தல் கடைசி கட்டமாக 57 தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்கிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏப்.19 தொடங்கியது. இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. மீதமுள்ள 57 தொகுதிகளுக்கு வரும் ஜூன் 1ம் தேதி ஏழாவது மற்றும் கடைசி கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் விவசாயிகளின் முழு கடனும் தள்ளுபடி: பஞ்சாப்பில் ராகுல் வாக்குறுதி

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், விவசாயிகளின் மொத்த கடனும் ரத்து செய்யப்படும். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் தரப்படும்’ என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ 18 வயது ஆகாதவர்கள் வாகனம் ஓட்டினால் ஆர்.சி., ரத்து

18 வயதுக்கு உட்பட்டோர் மோட்டார் வாகனம் ஓட்டினால், 25,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். அவர் ஓட்டி வந்த வாகனத்தின் ஆர்.சி., எனப்படும், பதிவுச்சான்று ரத்து செய்யப்படும். 25 வயது வரை, அவருக்கு வாகன ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ கர்நாடகாவில் ரூ.1 லட்சம் பெற போஸ்ட் ஆபீஸ்களில் கணக்கு துவங்க குவியும் பெண்கள்

'ஆட்சிக்கு வந்தால், மகளிருக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்' என்ற காங்கிரசின் தேர்தல் வாக்குறுதியே இதற்கு காரணம்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ *RNI ஆண்டறிக்கை இலவச சிறப்பு முகாம்* (E-filing Annual Statements Free Camp)

தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் RNI ஆண்டறிக்கை இலவச சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

நாளிதழ், வார இதழ், மாதமிருமுறை இதழ், மாத இதழ் உள்ளிட்ட RNI பதிவு பெற்ற பத்திரிகைகள் அனைத்தும் ஆண்டுதோறும் ஆண்டறிக்கை (e-filing Annual Statements) தாக்கல் செய்ய வேண்டும்.

*2023 - 2024-ம் ஆண்டுக்கான RNI ஆண்டறிக்கை (E filing) முகாம் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்* சார்பில் நடைபெற உள்ள இந்த இலவச சிறப்பு முகாமை பத்திரிகை வெளியீட்டாளர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.

தேவையான ஆவணங்கள்: RNI Certificate, Aadhaar Card, Pan Card,
E-mail Id, Cell Phone Number, Nominee Details  

இடம்: எண். 4/8, ஸ்டேட் பேங்க் காலனி 1வது தெரு,   சாலிகிராமம், சென்னை.93

மேலும் விபரங்கள் பெற:
9840035480

தோழமையுடன்..
S.சரவணன்
தலைவர்
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்

*🌹 பேனாமுள் செய்திகள்*🌹

 ✍️ மீண்டும் ஆரோக்கியத்துடன் வருவேன்: வைகோ

நான் நன்றாக இருக்கிறேன். முன்பு போன்று இயங்க முடியுமா என, யாரும் சந்தேகம்பட வேண்டாம். முழு ஆரோக்கியத்தோடு வருவேன்; எனக்காக கவலைப்படும் உள்ளங்களுக்கு நன்றி.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ தென்மேற்கு பருவமழை இன்று துவக்கம்

தென்மேற்கு பருவமழை, கேரளா மற்றும் அதையொட்டிய தமிழக பகுதிகளில் இன்று(மே 30) துவங்க உள்ளது. அதேநேரத்தில், தமிழக வடமாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பருவநிலை மாற்றம் காரணமாக பல மாநிலங்களில் சுட்டெரிக்கும் வெயில்

சென்னையில் நேற்று 107 டிகிரி வெயில் கொளுத்தியது. டெல்லியில் வரலாறு காணாத அளவுக்கு 127.22 டிகிரி கொளுத்தியது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ ஒருவழிப்பாதையில் சென்றால் அபராதம் உறுதி: பேரிகார்டில் பொருத்தப்பட்ட 10 ஏஎன்பிஆர் கேமரா 

சென்னையில் ஒரு வழிப் பாதையில் செல்லும் வாகன ஓட்டிகளை அடையாளம் கண்டு அபராதம் விதிக்கும் வகையில் பேரிகார்டில் பொருத்தப்பட்ட 10 ஏஎன்பிஆர் கேமராக்கள் அறிமுகம் செய்யப்படுகிறது

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை பழைய பஸ் பாஸில் மாணவர்கள் பயணிக்கலாம்

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானை 11 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்பு

தேயிலை தோட்டத்தில் இருந்த சுமார் 30 அடி ஆழ குடிநீர் கிணற்றில் 2 வயது மதிக்கத்தக்க குட்டி யானை தவறி விழுந்தது.சுமார் 11 மணி நேர போராட்டத்திற்கு பின் கிணற்றில் இருந்து வெளியே வந்தது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹 

✍️ வாக்கு எண்ணும் மையங்களில் இருந்து தேர்தல் இறுதி முடிவு அறிவிக்கப்படும் வரை அதிமுக முகவர்கள் வெளியேறக் கூடாது: எடப்பாடி உத்தரவு

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 ஆண்டு ஆட்சியில் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கி சாதனை இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாகிறது தமிழ்நாடு

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ தொழிலாளர்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் இதுவரை 2.65 லட்சம் தொழிலாளர்கள் பயன்: சுகாதாரத்துறை இயக்குநர் தகவல்

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ இசைப் பள்ளிகள் மற்றும் கவின் கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது: இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க அழைப்பு

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ திருச்சுழி அரசு மருத்துவமனையில் சென்னை ஐடி ஊழியர் வெட்டிக்கொலை: தந்தை படுகாயம்: சொத்து பிரச்னையில் உறவினர் 

*🌹 பேனாமுள் செய்திகள்*🌹

✍️ ரூ32,000 லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளர்கள் கைது

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ சென்னையில் 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் கூடுதலாக47 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள்: சென்னை மாவட்ட தேர்தல் ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பெருங்குடி குப்பைக் கிடங்கில் பயோ மைனிங் முறையில் 84% குப்பை அகற்றம்: அடுத்த மாதம் பணிகளை முடிக்க மாநகராட்சி திட்டம்

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்; கார்சியாவை வீழ்த்தினார் கெனின்: 3வது சுற்றில் சிட்சிபாஸ்

பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்

*பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
Comments