🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳
தேதி: 31/5/2025
*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520
🌷 பேனாமுள் பத்திரிகை செய்திகள் 🌷
குறள் : 38
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்
ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.
🇮🇳 *பேனாமுள் செய்திகள்*🇮🇳
✍️ பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை
✒️ *பேனாமுள் செய்திகள்*✒️
✍️ பங்கு சந்தை நிலவரம்
நிப்டி : 22488.65
பேங்க் நிப்டி : 48682.35
சென்செக்ஸ் : 73885.6
🙏 *பேனாமுள் செய்திகள்*🙏
✍️ சென்னை - ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கத்தின் விலை (1 கிராம்) ₹ 6,729 ஆகவும், இதேபோல் 24 கேரட் தங்கம் விலை ₹ 7,341 (1 கிராம்) ஆகவும் வெள்ளி விலை ஒரு கிராம் ₹ 100.90 ஆகவும் உள்ளது.
✒️ *பேனாமுள்செய்திகள்*✒️
✍️ *நன்றி நன்றி நன்றி*
பாடி,88 வது வார்ட்,தேவர்நகர்,காந்தி தெரு,திருவல்லீஸ்வரர் காலனி,கம்பர் தெரு போன்ற தெருக்களில் தெருவிளக்கு எரியவில்லை என்று சம்பந்தப்பட்ட பெருநகர மாநகராட்சி மண்டலம்-7 மின்துறை அதிகாரிகளுக்கு பேனாமுள் பத்திரிகை மூலமாக தகவல் அனுப்பியிருந்தோம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அதிகாரிகளுக்கு பேனாமுள் பத்திரிகை சார்பகவும் அப்பகுதி மக்கள் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம் தொடங்கினார்:
கன்னியாகுமரியில் கடல் நடுவேயுள்ள சுவாமி விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி 45 மணி நேர தியானத்தை நேற்று மாலை தொடங்கினார். இதையொட்டி போலீஸ் கட்டுப்பாட்டில் கன்னியாகுமரி நகரம் கொண்டு வரப்பட்டது
🙏 *பேனாமுள் செய்திகள்*🙏
✍️ அனல் பறந்த பிரசாரம் ஓய்ந்தது மக்களவைக்கு நாளை இறுதிகட்ட தேர்தல்: ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை
மக்களவைத் தேர்தலையொட்டி, கடந்த இரண்டரை மாதமாக அனல் பறந்த பிரசாரம் நேற்றுடன் ஓய்ந்தது. இதைத் தொடர்ந்து, மக்களவை தேர்தலின் 7வது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு நாளை நடக்க உள்ளது. ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
🇮🇳 *பேனாமுள் செய்திகள்*🇮🇳
✍️ அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனத்தின் அக்னிபான் ராக்கெட் சோதனை வெற்றி
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நாட்டின் முதல் தனியார் ராக்கெட் அக்னிபான்- ஐ நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
✒️ *பேனாமுள் செய்திகள்*🇮🇳
✍️ திருமயம் கோயில்களில் அமித்ஷா மனைவியுடன் சாமி தரிசனம்
✒️ *பேனாமுள் செய்திகள்*✒️
✍️ ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு: ஜூன் 10ம் தேதி நடைபெறுகிறது
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ மொத்தமுள்ள 37,553 அரசுப் பள்ளிகளில் 20,332 பள்ளிகளுக்கு இணையதள வசதி: அரசு அறிவிப்பு
மொத்தமுள்ள 37,553 அரசுப் பள்ளிகளில் 20,332 பள்ளிகளில் இப்பணியானது முழுமையாக முடிக்கப்பட்டு, மீதமுள்ள 17,221 அரசுப் பள்ளிகளுக்கு ஜுன் மாத இரண்டாம் வார இறுதிக்குள் நிறைவடையும் வண்ணம் பணிகள் நடைபெற்று வருகிறது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ அரசுப் பணிக்கான தேர்வில் தமிழில் 40% மதிப்பெண் பெற வேண்டும் என்ற அரசாணை சரிதான்: உயர் நீதிமன்றம் உத்தரவு
🇮🇳 *பேனாமுள் செய்திகள்*🇮🇳
✍️ நீட் தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு
நீட் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான விடைக்குறிப்பை (கீ-ஆன்சர்) தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. தேர்வு எழுதியர்வர்கள் அதை பதிவிறக்கம் செய்து கொள்வதுடன், இதுகுறித்து சந்தேகம் இருந்தால் இன்று தெரிவிக்கலாம் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ புதுச்சேரியில் பள்ளிகளுக்கு ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிப்பு
புதுச்சேரி; புதுச்சேரியில் பள்ளிகளுக்கு ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடுமையான வெயில் காரணமாக விடுமுறையை நீட்டித்து அம்மாநில பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
🇮🇳 *பேனாமுள் செய்திகள்*🇮🇳
✍️ கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் கலைஞரின் வரலாற்று சிறப்பு புகைப்பட கண்காட்சி: ஜூன் 3 வரை பொதுமக்கள் பார்வையிடலாம்
✒️ *பேனாமுள் செய்திகள்*✒️
✍️ வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 57 ஐஏஎஸ் அதிகாரிகள் பொது பார்வையாளர்களாக நியமனம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ எஸ்.பி., கமிஷனர்கள் வாயிலாக போலீசாருக்கு 'ஸ்மார்ட் கார்டு'
காவலர்கள் - கண்டக்டர்கள் மோதலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், இரு துறை அதிகாரிகளும் ஆலோசித்து, மாவட்ட எஸ்.பி.,க்கள் மற்றும் கமிஷனர்கள் வாயிலாக, போலீசாருக்கு, 'ஸ்மார்ட் கார்டு' வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ சமூக வலைதளங்களில் போலி விளம்பரங்கள்: உஷாராக இருக்க எச்சரிக்கை
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைதளங்கள் மற்றும் இணையதள பக்கங்களில், வேலை, கடன் வசதி, குறைந்த விலையில் வீட்டு உபயோக பொருட்கள் என, பல வகைகளில் மோசடி கும்பல்கள், போலி டிஜிட்டல் பக்கங்களை உருவாக்கி, விளம்பரங்கள் செய்ய துவங்கி விட்டன.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ சிங்கப்பூர் பேட்மின்டன் ஓபன் வெளியேறினர் சிந்து, பிரணாய்
பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்
*பாடி பா.கார்த்திக்*