🇮🇳🇮🇳✍️✍️✍️✍️✍️✍️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏
தேதி : 3/5/2024
*ஆசிரியர்- பாடி பா.கர்த்திக்*
9381157520
*பேனாமுள்செய்திகள்*
குறள் : 10
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.
*பேனாமுள் செய்திகள்*
இன்றைய
பெட்ரோல் விலை : 100.75
டீசல் விலை : 92.34
*பேனாமுள்செய்திகள்*
✍️ பங்கு சந்தை நிலவரம் :
நிப்டி : 22648.2
நிப்டி பேங்க் : 49231.05
சென்செக்ஸ் : 74611.11
*பேனாமுள் செய்திகள்*
✍️ இணையவழி சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ளதால் விளம்பரங்களை ஒளிபரப்பும் நிறுவனம், பிரபலங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை
தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு இணையவழி சூதாட்ட தடை மற்றும் இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் 2022-ன்படி, இணையவழி சூதாட்டம் மற்றும் இணையவழி வாய்ப்பு விளையாட்டு, பந்தயம் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது. அவற்றில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றம்புரிபவர்களுக்கு 3 மாதம் வரை சிறை தண்டனையோ அல்லது ரூ.5,000 வரை அபராதமோ அல்லது இரண்டும் விதிக்கப்படும். இதுகுறித்த விளம்பரங்கள் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது.
*பேனாமுள் செய்திகள்*
✍️ பிரஸ், காவல், டாக்டர், வக்கீல் ஸ்டிக்கர்களுக்கான காலக்கெடு முடிந்த நிலையில் சென்னை முழுவதும் 150 இடங்களில் போக்குவரத்து போலீஸ் வாகன சோதனை: மோட்டார் வாகன சட்டப்படி ஸ்டிக்கர்களை கிழித்து அபராதம் விதிப்பு
மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வாகன நம்பர் பிளேட்டில் பிரஸ், காவல், டாக்டர், வக்கீல் ஸ்டிக்கர்கள் ஓட்டியவர்களை போக்குவரத்து போலீசார் நேற்று பிடித்து அபராதம் விதித்தனர். பத்திரிகை அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் மட்டும் பிரஸ் ஸ்டிக்கர் பயன்படுத்தலாம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
*பேனாமுள் செய்திகள்*
✍️ தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஜூன் 2வது வாரம் கூடுகிறது? துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீது விவாதம்
தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஆனாலும் 7 கட்ட தேர்தல் நடந்து முடிந்ததும், ஜூன் 4ம் தேதிதான் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஜூன் 2வது வாரம் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தொடர் சுமார் ஒரு மாதம் நடைபெறும். அப்போது, துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று அதற்கான நிதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.
*பேனாமுள் செய்திகள்*
✍️ காதலனுடன் கருத்து வேறுபாடு 4வது மாடியில் இருந்து குதித்து நர்சிங் மாணவி தற்கொலை
கோவை கல்லூரி மாணவி கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். சமீபத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த மாணவி, விடுதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
*பேனாமுள் செய்திகள்*
✍️ கல்குவாரியில் செல்பி எடுத்தப்போது உயிரிழந்த 3 கல்லூரி மாணவர்கள் சடலமாக மீட்பு: உயிர் தப்பிய இருவரிடம் போலீசார் விசாரணை
கூடுவாஞ்சேரி அருகே கீரப்பாக்கம் கல்குவாரியில் 300 அடி ஆழத்தில் குளிக்க சென்ற 5 கல்லூரி மாணவர்களில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர். இதனை தொடர்ந்து 10 மணி நேரம் போராடி மீட்டு குழுவினர் மீட்டனர்.
மேலும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவர்களது நண்பர்களான அப்துல்பாசித் (19), சூர்யா (19) ஆகிய இருவரிடம் காயார் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
*பேனாமுள் செய்திகள்*
✍️ அக்னி நட்சத்திரம் நாளை துவங்க உள்ள நிலையில் 17 இடங்களில் 100 டிகிரி வெயில் கொளுத்தியது
அக்னி நட்சத்திரம் நாளை துவங்க உள்ள நிலையில், தமிழ்நாட்டில் நேற்று 17 இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது. கரூரில் அதிகபட்சமாக 112 டிகிரியும், ஈரோட்டில் 111 டிகிரியும், வேலூரில் 110 டிகிரியும் பதிவானது. இந்நிலையில் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. 5ம் தேதி வரை தமிழ்நாட்டில் வெப்பத்தின் அளவு இயல்பைவிட அதிகரிக்க வாய்ப்புள்ளது, வட தமிழக மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்றும், சில இடங்களில் லேசான மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
*பேனாமுள் செய்திகள்*
✍️ டிஎன்பிஎஸ்சி மூலம் பல்வேறு துறைகளில் 1,163 பேர் தேர்வு
டிஎன்பிஎஸ்சி மூலம் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப 1,163 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) மூலம் கடந்த 8.3.2024 முதல் 30.4.2024 வரையிலான காலத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப் 1ல் அடங்கிய பதவிகளுக்கு 94 பேரும், குரூப் 2வில் அடங்கிய பதவிகளுக்கு 47 பேரும், ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு 851 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
*பேனாமுள் செய்திகள்*
✍️ கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை சரிவு: மல்லி கிலோ ரூ300க்கு விற்பனை
விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்கள் இல்லாததால் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. இதனால், சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பூக்களை வாங்கிச் சென்றதால் விற்பனையும் அமோகமாக நடந்தது.
*பேனாமுள் செய்திகள்*
✍️ தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு
நேற்று தங்கம் விலை கிராமுக்கு, 80 ரூபாய் உயர்ந்து, 6,715 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 640 ரூபாய் அதிகரித்து, 53,720 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
*பேனாமுள் செய்திகள்*
✍️ கொடைக்கானலில் இன்றும் தடை
கொடைக்கானல் பூம்பாறை மன்னவனுார் வனப்பகுதியில் தொடரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த ஏதுவாக சுற்றுலா வாகனங்கள், கனரக வாகனங்களுக்கு இன்றும் தடை செய்யப்படுவதாக கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
*பேனாமுள் செய்திகள்*
✍️ 'நான் முதல்வன்' திட்டத்தில் உதவித்தொகை பீடி தொழிலாளி மகள் ஐ.ஏ.எஸ்., ஆகிறார்
உதவித்தொகை பெற்று படித்த பீடித் தொழிலாளி மகள் இன்பா, மத்திய அரசின் குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
*பேனாமுள் செய்திகள்*
✍️ திருவிழாவில் இரு தரப்பினர் மோதல் பெட்ரோல் குண்டு வீச்சால் பதற்றம்
தீவட்டிப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே உள்ள ஹோட்டலில் சிலர் சாப்பிட வந்தனர். கோவிலில் இருந்தவர்களும் அங்கு குவிந்தனர். வாக்குவாதம் முற்றி, ஒருவருக்கு ஒருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர்.
தீவட்டிப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே உள்ள பழக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் தீப்பிடித்தது. இதில், அதன் அருகே இருந்த நகைக்கடையிலும் தீப்பற்றியது. காடையாம்பட்டி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர். கலவரக்காரர்களை தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர்.
*பேனாமுள் செய்திகள்*
✍️ கடைசி பந்தில் ராஜஸ்தான் தோல்வி
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் தோல்வியடைந்தது ராஜஸ்தான் அணி.
*பேனாமுள் செய்திகள்*
✍️ சென்னை சிக்னல்களில் நிழற்பந்தல் புதுச்சேரியை பின்பற்றுகிறது தமிழகம்
சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
சென்னையில் நிழற்பந்தல் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து, காவல் துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசித்து வருகிறோம்.அத்துடன், புதுச்சேரி யில் அமைக்கப்பட்டுள்ள நிழற்பந்தலின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் ஆராயப்பட்டு வருகின்றன. சென்னையில் பிரதான சிக்னல்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்கக்கூடிய சிக்னல்களில், முதற்கட்டமாக நிழற்பந்தல் அமைக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்படும்.
*தினம் தினம் உங்களுக்காக செய்திகளை வழங்கி வருவது உங்கள் பேனாமுள் பத்திரிகை*
*பாடி கார்த்திக்*