4/5/2024 ஆம் தேதி பேனாமுள் பத்திரிகை செய்திகள்
🇮🇳🇮🇳✒️✒️✒️✒️✒️✒️✒️🇮🇳🇮🇳

*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*

🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏

இன்றைய தேதி *4/5/2024*

*ஆசிரியர்- பாடி பா.கர்த்திக்*
9381157520

*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
குறள் : 11
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று

மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்.

*பேனாமுள் செய்திகள்*
✍️இன்றைய 
பெட்ரோல் விலை : 100.75
டீசல் விலை : 92.34 க்கு விற்பனை

*பேனாமுள் செய்திகள்*
பங்கு சந்தை நிலவரம் :
நிப்டி : 22475.85
நிப்டி பேங்க் : 48923.55
சென்செக்ஸ் : 73878.15

*பேனாமுள் செய்திகள்*
✍️ ரேஷன் 'பாய்ன்ட் ஆப் சேல்' கருவி பழுது செலவை எங்களிடமே வசூலிப்பதா?

ரேஷன் கடைகளில் பழுதான 'பாய்ன்ட் ஆப் சேல்' கருவிகளுக்கு கடை ஊழியர்களிடம் தொகையை வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு ஊழியர் சங்கம் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.

*பேனாமுள் செய்திகள்*
✍️ கத்திரி வெயில் இன்று துவக்கம்

அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் காலம் இன்று துவங்குகிறது.

தமிழகத்தில் சில மாவட்டங்களில், 44 டிகிரி செல்ஷியஸ் வரையிலும், சில மாவட்டங்களில், 40 டிகிரி செல்ஷியஸ் வரையிலும் வெயில் பதிவாகும். கடலோரம் அல்லாத வட மாவட்டங்களில், சில இடங்களில் வெப்ப அலை வீசும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

*பேனாமுள் செய்திகள்*
✍️ கோவையின் தாகம் தீர்த்த நீலகிரி! அப்பர்பவானி, எமரால்டு அணை தண்ணீர் திறப்பு

கோவை மக்களின் குடிநீர் பஞ்சத்தை போக்க அப்பர்பவானி, எமரால்டு அணைகளிலிருந்து பில்லுாருக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

நீலகிரிமாவட்டத்தில், 13 அணைகள் 12 மின்நிலையங்கள் உள்ளன. இதன் மூலம் நாள்தோறும், 833.65 மெகாவாட் மின்உற்பத்தி மேற்கொள்ள முடியும்.

*பேனாமுள் செய்திகள்*
✍️ மின் நுகர்வு மீண்டும் உச்சம் 41 நாளில் 1,400 மெகாவாட் உயர்வு

தமிழகத்தில் தற்போது வீசும் வெப்ப அலையால், 'ஏசி' உள்ளிட்ட மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் மின் நுகர்வு அதிகரித்து வருகிறது. ஏப்., 30ம் தேதி மாலை இதுவரை இல்லாத அளவாக 20,701 மெகா வாட்டாக அதிகரித்தது.

*பேனாமுள் செய்திகள்* 
✍️ பாம்பன் புதிய ரயில் பாலம் டிசம்பரில் திறக்க வாய்ப்பு

பாலம் கட்டுமானப் பணி இந்த ஆண்டு இறுதிக்குள் முடிந்து டிசம்பரில் பயன்பாட்டிற்கு வர உள்ளது என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

*பேனாமுள் செய்திகள்*
✍️ பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரேபரேலி தொகுதியில் ராகுல் போட்டி: பிரியங்கா போட்டியிடுவார் என கருதிய நிலையில் அமேதி தொகுதியில் கே.எல்.சர்மா நிற்கிறார்.

நேற்று ரேபரேலி மற்றும் அமேதியில் மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் நேற்று காலையில் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதில் சோனியா காந்தி போட்டியிட்டு வென்ற ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அமேதி தொகுதியில் சோனியா குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான கிஷோரி லால் சர்மா நிறுத்தப்பட்டார்

*பேனாமுள் செய்திகள்*
✍️ தமிழகம் திருவள்ளூரில் இன்று பராமரிப்புப் பணி காரணமாக மின்தடை: மின்துறை தகவல்

திருவள்ளூர் புழல் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்புப் பணி காரணமாக மின்தடை செய்யப்படும் என மின்துறை தகவல் அளித்துள்ளது. புழல், சூரப்பட்டு, விநாயகபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 – மதியம் 12 மணி வரை மின்தடை என தகவல் வெளியாகியுள்ளது.

தினம் தினம் செய்திகள் வழங்கிக் கொண்டிருப்பது உங்கள் பேனாமுள் பத்திரிகை செய்திகள்

*பேனாமுள் செய்திகள்*

✍️ நாடு முழுவதும் இளநிலை நீட் தேர்வு: நாளை நடக்கிறது.

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை, ‘நீட்’ நுழைவுத் தேர்வின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. அந்த வகையில், 2024-25ம் கல்வியாண்டுக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு, நாளை (மே 5) நடக்கிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு பிப்ரவரி 9ம் தேதி முதல் ஏப்ரல் 10ம் தேதி வரை நடந்தது. தேர்வை, 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள். தமிழகத்தில் ஒன்றரை லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள்.

*பேனாமுள் செய்திகள்*
✍️ ஊட்டி தாவரவியல் பூங்காவில் நுழைவு கட்டணம் உயர்வு

ஊட்டி தாவரவியல் பூங்காவில் இந்தாண்டு மலர் கண்காட்சி வரும் 10ம் தேதி துவங்கி 10 நாட்கள் நடக்கிறது. இதில் 60 ஆயிரம் மலர் தொட்டிகள் மூலம் 6.5 லட்சம் மலர்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் கண்காட்சி நடக்கும் 10 நாட்கள் பூங்காவுக்கான நுழைய கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.150ம், சிறியவர்களுக்கு ரூ.75ம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

*பேனாமுள் செய்திகள்*
✍️ 19 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திருவண்ணாமலை – சென்னை பீச் தினசரி ரயில் தொடங்கியது: ‘அரோகரா’ முழக்கத்துடன் மலர் தூவி உற்சாக வரவேற்பு

சென்னை பீச் ஸ்டேஷனில் இருந்து நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு புறப்பட்ட தினசரி பாசஞ்சர் ரயில், நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலை வந்தடைந்தது. அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலையில் இருந்து தனது முதல் பயணத்தை நேற்று அதிகாலை 4 மணிக்கு பயணிகள் ரயில் தொடங்கியது. அதையொட்டி, திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் வியாபாரிகள் சங்கத்தினர், பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் திரண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்று பக்தி முழக்கமிட்டு ரயில் மீது மலர்களை தூவி உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.

*பேனாமுள் செய்திகள்*
✍️ அட்சய திரிதியை நெருங்கும் நேரத்தில் தங்கம் விலை அதிரடி சரிவு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 குறைந்தது

நேற்று தங்கம் விலை அதிரடி சரிவை கண்டிருந்தது. அதாவது நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.6,615க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.52,920க்கும் விற்கப்பட்டது. இந்த விலை குறைவு வரும் 10ம் தேதி அட்சயதிரிதியைக்கு நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

*பேனாமுள் பத்திரிகை*
✍️ துஷாரா, பும்ரா அபார பந்துவீச்சு: மும்பையை வீழ்த்தியது கொல்கத்தா

மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 24 ரன் வித்தியாசத்தில் வென்றது.

*பேனாமுள் செய்திகள்*
✍️ஐசிசிடெஸ்ட்:ஆஸ்திரேலியா நம்பர் 1

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில், இந்திய அணியை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடத்துக்கு முன்னேறி உள்ளது.

*பேனாமுள் செய்திகள்*

✍️தேனியில் யூ டியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். 

யூ டியூபர் சவுக்கு சங்கரை கைது செய்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்
காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

தேனியில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை கோவைக்கு அழைத்து செல்வதாக தகவல்

*தினம் தினம் உங்களுக்கான செய்திகளை வழங்கிக் கொண்டிருப்பது பேனாமுள் பத்திரிகை செய்திகள்.*

*பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
Comments