🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳
தேதி: 6/5/2025
*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520
✍️குறள் : 13
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி
மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.
*பேனாமுள் செய்திகள்*
இன்றைய
பெட்ரோல் விலை : 100.75
டீசல் விலை : 92.34
*பேனாமுள் செய்திகள்*
✍️ 93 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது; நாளை 3ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு: 1351 வேட்பாளர்கள் போட்டி
மக்களவை தேர்தலில் 3ம் கட்டமாக 93 தொகுதிகளில் நேற்றுடன் பிரசாரம் ஓய்ந்தது. குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா உட்பட 11 மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதில் 1,351 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
*பேனாமுள் செய்திகள்*
✍️ கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்த ‘நீட்’ தேர்வு
தமிழ்நாட்டில் 1 1/2 லட்சம் பேர் எழுதினர்.
*பேனாமுள் செய்திகள்*
✍️ வட தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்ப அலை வீசும்: 2 இடங்களில் 111 டிகிரி வெயில்
இன்றும், நாளையும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிக பட்ச வெப்பநிலை 3-5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் வாய்ப்புள்ளது. அதன் தொடர்ச்சியாக வட தமிழக உள் மாவட்டங்களில் 5 நாட்களுக்கு சமவெளிப் பகுதிகளில் ஒரு சில இடங்்களில் 111 டிகிரி வரை இருக்கும் . இதர சமவெளிப் பகுதிகளில் 104 டிகிரி இருக்கும். அதனால் இன்றும் நாளையும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசும்.
*பேனாமுள் செய்திகள்*
✍️ வணிகர் தினத்தை முன்னிட்டு பெரும்பாலான கடைகள் சென்னையில் அடைப்பு: ஓட்டல்கள், மளிகைக்கடைகள் திறக்கப்படவில்லை
வணிகர் தினத்தை முன்னிட்டு சென்னையில் பெரும்பாலான கடைகள் நேற்று அடைக்கப்பட்டிருந்தது. ஓட்டல்கள், மளிகைக்கடைகள் திறக்கப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் மே 5ம் தேதி வணிகர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஒவ்வொரு வணிகர் சங்கமும் தங்களது சங்க நிர்வாகிகளை திரட்டி பல்வேறு தலைப்புகளில் மாநாடுகளை நடத்தி வருகிறது.
*பேனாமுள் செய்திகள்*
✍️ போலந்து நாட்டு பெண்ணுடன் கிருஷ்ணகிரி பேராசிரியர் டும்…டும்… தமிழ் கலாச்சார முறைப்படி நடந்தது
போலந்து நாட்டு பெண்ணை காதலித்த, கிருஷ்ணகிரி பேராசிரியர் இரு வீட்டார் சம்மதத்துடன் தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
*பேனாமுள் செய்திகள்*
✍️ ஊட்டி, கொடைக்கானல் செல்ல பொதுமக்கள் இ-பாஸ் பெறுவது எப்படி..? தமிழக அரசு தகவல்
இ-பாஸ் பெறுவதற்கு சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருபவர்கள் epass.tnega.org என்ற இணைய முகவரியில் உரிய தகவல்களை தெரிவித்து இன்று காலை 6 மணி முதல் இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம்.வெளிநாட்டுப் பயணிகள் தங்களுடைய இமெயில் முகவரியை பயன்படுத்தி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். உள்நாட்டுப் பயணிகள் தங்களுடைய தொலைபேசி எண்களை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். அவர்கள் விண்ணப்பிக்கும் போது தானாகவே இ-பாஸ் கிடைத்துவிடும். இந்த நடைமுறை வாகனங்களை முறைப்படுத்தி சுற்றுலா பயணிகள் எளிதாக வந்து செல்ல வழிவகுக்கும். சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இந்த நடைமுறையை நாளை (7ம் தேதி) முதல் ஜூன் 30ம் தேதி வரை பின்பற்றுவார்கள்.
*பேனாமுள் செய்திகள்*
✍️ சென்னை ஆவடியில், மதுபோதையில் காவலரை தாக்க முயன்ற இளைஞர்
ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் போதையில் பொதுமக்கள் மீது கற்கள் வீசி இளைஞர் அட்டூழியம் செய்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த தலைமை காவலர் சரவணனை இளைஞர் தாக்கியுள்ளார். இளைஞரை கட்டையால் தடுத்து நிறுத்தி, காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார். இளைஞரின் பெற்றோரை வரவழைத்து, எச்சரித்து அனுப்பியதாக, ஆவடி காவல் ஆணையரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
*பேனாமுள் செய்திகள்*
✍️ அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25ம் கல்வியாண்டுக்கு இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
*பேனாமுள் செய்திகள்*
✍️ சொந்த ஊரில் உடல் அடக்கம்; நெல்லை காங். தலைவர் சாவில் நீடிக்கும் மர்மம்: தனிப்படை தீவிர விசாரணை
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது சாவில் தொடர்ந்து மர்மம் நீடிப்பதால் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
*பேனாமுள் செய்திகள்*
✍️ கடல் சீற்றம் காரணமாக, திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க தடை
கடல் சீற்றம் காரணமாக, திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க தடை விதித்துள்ளனர். கடலில் அலையின் வேகம் மிக அதிகமாக இருப்பதால், கோயில் நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுத்துள்ளனர். கடலில் யாரும் குளிக்க கூடாது என ஒலிபெருக்கி மூலம் போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.
*பேனாமுள்செய்திகள்*
✍️ 28 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப்பை பந்தாடியது சென்னை:
பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், 28 ரன் வித்தியாசத்தில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியது.
*பேனாமுள் செய்திகள்*
✍️ சுனில் நரைன் அதிரடி ஆட்டம் நைட் ரைடர்ஸ் முதலிடம்
லக்னோ: சூப்பர் ஜயன்ட்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 98 ரன் வித்தியாசத்தில் வென்று முதலிடத்துக்கு முன்னேறியது.
*பேனாமுள் செய்திகள்*
✍️ 'சட்டம் - ஒழுங்கு பிரச்னையில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும்' : ஓபிஎஸ்
சட்டம் - ஒழுங்கு பிரச்னையில், முதல்வர் ஸ்டாலின் தனிக்கவனம் செலுத்த வேண்டும்' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
*பேனாமுள் செய்திகள்*
✍️அம்பத்தூர்,பாடி, மகாத்மா காந்தி மெயின் ரோட்டில் பல வருடங்களாக ரோடு சரியில்லாமல் தவித்து வரும் மக்களுக்கு ரோட்டை மிக விரைவில் சீர் செய்து தர வேண்டிய அப்பகுதி மக்கள் கோரிக்கை
அனைத்து பகுதிகளிலும், அனைத்து தெருகளிலும் புதிதாக ரோடு போட்டு வருகிறார்கள் ஆனால் எங்கள் பகுதியில் பல ஆண்டுகளாக மெட்ரோ வாட்டர் பிரச்சினையால் ரோடு இல்லாமல் தவித்து வருகிறோம் என்றும் உடனே ரோட்டை போட்டு சரி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள் அப்பகுதி மக்கள்
*பேனாமுள் செய்திகள்*
✍️தெருவில் திரியும் நாய்களாக இருந்தாலும் அதற்கு இணைக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து, மீண்டும் பிடித்த இடத்திலேயே விட வேண்டும் என்பது தான் மாநகராட்சிக்கு நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.*
*✍️நாய் பூனை போன்ற பிராணிகள் வளர்ப்பவர்கள் கட்டாயம் லைசென்ஸ் பெற வேண்டும், தவறாமல் தடுப்பூசி செலுத்த வேண்டும்"*
*- சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி*
*பேனாமுள்செய்திகள்*
✍️அரசு வெட்னரி மருத்துவமனையில் தடுப்பூசிகள்
நாய்கள் கடித்தால் விஷம் ஏறாமல் இருக்க தடுப்பூசிகள் தொடர்ந்து இல்லை என்று கூறி வருகிறார்கள்
அதை சம்பந்தப்பட்ட சென்னை பெருநகர மாநகராட்சி சம்பந்தப்பட்ட அரசு வெட்னரி மருத்துவமனைக்கு கொடுத்து அனைத்து தெரு நாய்களுக்கும் வீட்டில் வளர்க்கும் நாய்கள் மற்றும் பூனைகளுக்கு இலவசமாக ராபிட் மருந்து(கடித்தால் விஷம் ஏறாமல் இருக்க) தடுப்பூசிகள் செலுத்த வேண்டும் என்றும்
பொது மக்களின் பணிவான வேண்டுகோளாக உள்ளது.
செய்தி
*பாடி பா.கார்த்திக்*