7/5/2024 ஆம் தேதி பேனாமுள் பத்திரிகை செய்திகள்
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳

*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*

🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳

தேதி: 7/5/2025

*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520

🌹பேனாமுள் பத்திரிகை செய்திகள் 🌹

குறள் : 14
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்

மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.

*பேனாமுள் செய்திகள்*
சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒருசில மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது
சென்னை வானிலை மையம் தகவல்.

*பேனாமுள் செய்திகள்*
✍️ பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி: 

தமிழ்நாடு, புதுச்சேரியில் இயங்கும் பள்ளிகளில் படித்து பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவியருக்கான முடிவுகளை தேர்வுத்துறை நேற்று வெளியிட்டது. இந்த ஆண்டு தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே கூடுதலாக தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. இந்த ஆண்டில் மொத்த தேர்ச்சி வீதம் 94.56 சதவீதம்

*பேனாமுள் செய்திகள்*
✍️ சென்னையில் சிறுமியை கடித்த 2 நாய்களை வீட்டில் இருந்து அப்புறப்படுத்துங்கள்: சென்னை மாநகராட்சி நோட்டீஸ்

சென்னையில் சிறுமியை கடித்த 2 நாய்களை 7 நாட்களுக்குள் வீட்டில் இருந்து அப்புறப்படுத்த மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அப்புறப்படுத்த தவறினால் நாய் உரிமையாளர் மீது சட்ட விதிகளின்படி மேல் நடவடிக்கை தொடரப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது

*பேனாமுள் செய்திகள்*
✍️ மருத்துவ உலகிற்கு பேரிழப்பு!: குமரியில் கடல் அலையில் சிக்கி 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!!

கன்னியாகுமரி அருகே கடல் அலையில் சிக்கி உயிரிழந்த 5 மருத்துவ மாணவர்கள் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்

*பேனாமுள் செய்திகள்*
✍️ தமிழ்நாடு அரசின் 108 கட்டுப்பாட்டு மையம் சார்பில் +2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை

தமிழ்நாடு அரசின் 108 கட்டுப்பாட்டு மையம் சார்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. +2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஆலோசனை நடைபெற்று வருகிறது. மாணவர்களிடம் பேசி மன நிலையை அறிந்து கொள்ளவும், மாணவர்களிடம் பாதிப்பு கண்டறியப்பட்டால் உடனடி மனநல ஆலோசனை வழங்கவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

*பேனாமுள் செய்திகள்*
✍️ ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் போலீசார் சோதனை

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணம் தொடர்பாக, நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

*பேனாமுள் செய்திகள்*
✍️ விவசாயிகளுக்கு தடையற்ற மும்முனை மின்சாரம்: அன்புமணி வலியுறுத்தல்

தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு தடையற்ற மும்முனை மின்சாரம் விநியோகம் செய்ய வேண்டும்என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

*பேனாமுள் செய்திகள்*
✍️ மக்களவை 3ம் கட்ட தேர்தல் 93 தொகுதிகளில் இன்று ஓட்டுப்பதிவு: பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா அகமதாபாத்தில் வாக்களிக்கிறார்கள்

புதுடெல்லி: மக்களவை 3ம் கட்ட தேர்தலில் இன்று 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அகமதாபாத்தில் இன்று ஓட்டுப்போடுகிறார்கள்.

*பேனாமுள் செய்திகள்*
✍️ விசாரணைக்கு ஆஜராகும் மாவட்ட ஆட்சியர்களை காத்திருக்க வைத்து துன்புறுத்துவதா?.. அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

விசாரணைக்காக ஆஜராகிருந்த மாவட்ட ஆட்சியர்களை காலை எட்டு மணி முதல் மாலை ஆறு வரையில் விசாரணை எதுவும் நடத்தாமல் நீண்ட நேரம் தேவையில்லாமல் காத்திருக்க வைத்துள்ளனர் என்று தெரிவித்தனர். இதையடுத்து இந்த விவகாரத்தில் நிலுவையில் இருக்கும் ஆவணங்களை அமலாக்கத்துறை பிரமாணப் பத்திரமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் விசாரணைக்கு ஆஜராகும் மாவட்ட ஆட்சியர்களை தேவையில்லாமல் நீண்ட நேரம் காத்திருக்க வைத்து துன்புறுத்துவதா?. அதுபோன்று செய்யக் கூடாது என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்ததுடன் , விசாரணையை கோடைக்கால விடுமுறைக்கு பின்னர் ஒத்திவைத்தனர்.

*பேனாமுள் செய்திகள்*
✍️ பெண் போலீசார் குறித்து சர்ச்சை பேச்சு யூடியூபர் சங்கரை 4 நாட்கள் காவலில் விசாரிக்க கோரி மனு

சங்கரின் பேட்டியை ஒளிபரப்பியதாக யூ டியூப் சேனல் மீதும் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் சங்கரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வழங்கக்கோரி கோவை ஜே.எம்.எண் 5 கோர்ட்டில் போலீசார் நேற்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீது விரைவில் விசாரரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

*பேனாமுள் செய்திகள்*
✍️ குடும்ப தகராறில் விபரீதம்; கத்தியால் குத்தி மனைவி கொலை: கணவன் தற்கொலை முயற்சி

நேற்று முன்தினம் நள்ளிரவு செல்வத்திற்கும், பத்மினிக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றியதையடுத்து ஆத்திரம் அடைந்த செல்வம், காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து மனைவி பதிமினியை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த பத்மினி துடிதுடித்து உயிரிழந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்வம், அதே கத்தியால் தன்னைத்தானே குத்திக்கொண்டு கீழே விழுந்தார். இதில் செல்வத்தின் குடல் வெளியே சரிந்தது.

*பேனாமுள் செய்திகள்*
✍️ இன்ஜினியர் வீட்டில் 60 சவரன் கொள்ளை

குமரன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த சுமார் 60 சவரன் தங்க நகைகள் மற்றும் ₹50 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது. புகாரின் பேரில் பல்லாவரம் போலீசார், அவரது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தபோது 2 வாலிபர்கள் முகத்தை மறைத்தவாறு இரும்பு கம்பியால் வீட்டின் பூட்டுகளை உடைத்து, உள்ளே சென்று பணம் மற்றும் நகைகளை திருடிச் செல்வது பதிவாகி இருந்தது. அவர்களை தேடி வருகின்றனர்.

*பேனாமுள் செய்திகள்*
✍️ 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி: சூர்யகுமார் யாதவ் அதிரடி சதம்

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. வான்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை முதலில் பந்துவீசியது.

*பேனாமுள் செய்திகள்*
✍️ டெல்லியை மீண்டும் வீழ்த்தி பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யுமா ராஜஸ்தான்

ஐபிஎல் டி20 தொடரின் 56வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. ரிஷப் பன்ட் தலைமையிலான டெல்லி அணி பிளே ஆப் வாய்ப்பை தக்கவைக்க வெற்றி அவசியம்.

*பேனாமுள் செய்திகள்*
✍️ 'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவா? உண்மையில்லை என்கிறது என்.டி.ஏ.,

'இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத்தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக கூறப்படுவது முற்றிலும் ஆதரமற்றது; எவ்வித அடிப்படையும் இல்லாதது' என, தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.

*பேனாமுள் செய்திகள்*
✍️ விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

விடைத்தாளில் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பம், மறுமதிப்பீடுக்காக விடைத்தாள் நகல் பெறுவதற்கான விண்ணப்பத்தை, தேர்வு மையங்கள் வழியே, இன்று முதல், 11ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்

* மறுமதிப்பீடு தேவை என்றால், விடைத்தாள் நகல் கட்டாயம் பெற வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் பாடத்துக்கு, விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிக்க முடியாது. விடைத்தாள் நகல் பெற்ற பின், மறுகூட்டலோ, மறுமதிப்பீடோ செய்து கொள்ளலாம்.

*பேனாமுள் செய்திகள்*
✍️ இன்று 
பங்கு சந்தை நிலவரம் : 
நிப்டி : 22442.7
பேங்க் நிப்டி : 48895.3
சென்செக்ஸ் : 73895.54

*பேனாமுள் செய்திகள்*
✍️ இன்றைய 
பெட்ரோல் விலை : 100.75
டீசல் விலை : 92.34

*பேனாமுள் செய்திகள்*
✍️ ஜி.எஸ்.டி., கட்டமைப்பில் இரண்டு மைல்கற்கள்: நிர்மலா சீதாராமன்

ஜி.எஸ்.டி., மேல்முறையீட்டு தீர்ப்பாயத்துக்கு தலைவர் நியமிக்கப்பட்டுள்ளது மற்றும் ஏப்ரல் மாதத்துக்கான மொத்த ஜி.எஸ்.டி., வசூல் 2 லட்சம் கோடி ரூபாயை கடந்ததன் வாயிலாக, ஜி.எஸ்.டி., கட்டமைப்பில் இரண்டு குறிப்பிடத்தக்க மைல்கற்கள் எட்டப்பட்டுள்ளன.

பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக 

*பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
Comments