🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳
தேதி: 8/5/2025
*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520
🌷 பேனாமுள் பத்திரிகை செய்திகள் 🌷
குறள் : 15
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை
பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்
*பேனாமுள் செய்திகள்*
✍️ பெட்ரோல் விலை ரூ. 100.75, டீசல் விலை ரூ.92.34
*பேனாமுள் செய்திகள்*
✍️ பங்கு சந்தை நிலவரம் :
நிப்டி : 22302.5
பேங்க் நிப்டி :48285.35
சென்செக்ஸ் :73511.85
*பேனாமுள் செய்திகள்*
✍️ குஜராத், கர்நாடகா உள்பட 11 மாநிலங்களில் 3ம் கட்ட தேர்தல் 93 தொகுதிகளில் 63% வாக்குப்பதிவு
கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட 11 மாநிலங்களில் 93 தொகுதிகளில் 3ம் கட்ட மக்களவை தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில் மொத்தம் 63.13 சதவீத வாக்குகள் பதிவாகின. அகமதாபாத்தில் பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் வாக்களித்தனர்.
*பேனாமுள் செய்திகள்*
✍️ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான துணைத் தேர்வு அட்டவணை வெளியீடு..!
பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத் தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்ப்ட்டுள்ளது.
காலை 11 மணி முதல் மாலை 5 மணிக்குள் அவரவர் படித்த பள்ளிக்கு நேரில் சென்று மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். மாணவர்கள் பள்ளிக்கு நேரில் சென்றும் தனித்தேர்வர்கல் மாவட்ட சேவை மையங்களிலும் விண்ணப்பப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
12-ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு ஜுன் 24 முதல் ஜுலை 1 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
*பேனாமுள் செய்திகள்*
✍️ 5வயது சிறுமியை நாய்கள் கடித்து குதறிய சம்பவம் :
சென்னையில் நாய் வளர்க்க கடும் கட்டுபாடுகள்
மாநகராட்சி அதிரடி முடிவு
*பேனாமுள்செய்திகள்*
*சென்னை: இந்தியாவில் 23 நாய் இனங்களை வீட்டில் வளா்க்க தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை தடை செய்துள்ளது.*
வேட்டைக்கும், பாதுகாப்புக்கும் மட்டுமே வளா்க்கப்பட்டு வந்த நாய்கள் இன்று நகரவாசிகள் அதிகம் விரும்பும் செல்லப்பிராணியாக உள்ளன. குறிப்பாக, உள்நாட்டு நாயைவிட வெளிநாட்டு நாயை வளா்க்க கூடுதல் ஆா்வம் காட்டுகின்றனா்.
இந்த நிலையில், இந்தியாவில் 23 நாய் இனங்களை வளா்க்க தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை தடை செய்துள்ளது. இதில், பிட்புல் டெரியா், டோசா இனு, அமெரிக்கன் ஸ்டாபோா்ட்ஷையா் டெரியா், பிலா பிரேசிலேரோ, டோகோ அா்ஜெண்டினோ, அமெரிக்கன் புல்டாக், போயா்போல், கங்கல், சென்டா் ஏசியன் ஷெப்பா்ட், காகசியன் செப்பா்ட், தென் ரஷிய ஷெப்பா்ட், டோா்ன்ஜாக், சாா்பிலானிநாக், ஜப்பானிய டோசா, அகிதா, மாஸ்டிப்ஸ், ராட் வெய்லா், டெரியா்ஸ், ரோடிசியன் ரிட்ஜ்பேக், உல்ப், கனாரியோ, அக்பாஷ், மாஸ்கோ காா்ட், கேன் கோா்சா ஆகிய நாய்களை வளா்க்க, விற்க தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், செல்லப்பிராணிகளை வளா்க்க விரும்புவோா் உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிமம் பெற்று வளா்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
*பேனாமுள் செய்திகள்*
✍️ பொது அதிகார ஆவண பதிவு கட்டணம் அதிரடி உயர்வு
சொத்து விற்பனையில், பொது அதிகார ஆவண பதிவு கட்டண உயர்வுக்கானஅரசிதழ் அறிவிப்பை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.
வெளியார் பெயரில் பதிவு செய்யப்படும் பொது அதிகார ஆவணத்துக்கான கட்டணம், அந்த சொத்தின் சந்தை மதிப்பில், 1 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன், குடும்ப உறுப்பினர்களுக்கான பொது அதிகார பதிவு கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.
இது தொடர்பான அரசாணையை, பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ளார்.
*பேனாமுள் செய்திகள்*
✍️ ஆவினுக்கு போட்டியாக களமிறங்கியது அமுல்: 2 மாதங்களில் விற்பனைக்கு வருகிறது பால்
ஆவினுக்கு போட்டியாக தயிர், பனீர் விற்பனையில் இறங்கியுள்ள அமுல் நிறுவனம், இரண்டு மாதங்களில், பால் விற்பனையை துவக்க திட்டமிட்டு உள்ளது.
தமிழக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனமான ஆவின் வாயிலாக, பால் மட்டுமின்றி, 230க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுகின்றன.
*பேனாமுள் செய்திகள்*
✍️ அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு: கற்பழித்து கொலையா? என விசாரணை
திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடி, பூந்தமல்லி நெடுஞ்சாலையோரத்தில் முட்புதரில் அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பதாக திருவேற்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, முகம் சிதைக்கப்பட்டு உடல் அழுகிய நிலையிலும், அரைகுறை ஆடைகளுடனும் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கிடந்தது. சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பெண் இறந்து 3 நாட்களாகி இருக்கலாம் என்றும், உடலில் அரைகுறையாக ஆடைகள் உள்ளதால் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என்கிற கோணத்தில் விசாரணை நடப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
*பேனாமுள் செய்திகள்*
✍️ விவசாயிகளுக்கும், நுகர்வோர்களுக்கும் தமிழ்நாட்டில் தடையின்றி மின்சாரம் விநியோகம்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு தேவையான மின்சாரத்தை வழங்க 24 மணி நேரமும் மும்முனையில் இயங்கக்கூடிய பிரத்யேகமான மின் பாதையின் வாயிலாக தடையில்லா சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, கடந்த 3 ஆண்டுகளாக, மின்சாரத்துறையில் மேற்கொண்டு வரும் சீரிய நடவடிக்கைகளின் பயனாக, தமிழ்நாட்டில் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் மட்டுமல்லாமல் அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் தடையில்லா, சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
*பேனாமுள் செய்திகள்*
✍️ சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு ஊட்டி, கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை அமல்: சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது, காட்டேஜ், லாட்ஜ்களில் புக்கிங் ரத்து
இ-பாஸ் பெற்று வரும் வாகனங்களை சோதனையிடவும், கண்காணிக்கவும் மாவட்ட எல்லையான கல்லாறு, குஞ்சப்பணை, கக்கநல்லா, தாளூர், நாடுகாணி உட்பட அனைத்து சோதனை சாவடிகளிலும் நேற்று காலை முதல் வருவாய்த்துறை அதிகாரிகள் தலைமையிலான ஊழியர்கள் சோதனை மேற்கொண்டனர். இதனால், மாவட்ட எல்லைகளில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. சோதனை செய்த பின், இ-பாஸ் வைத்துள்ள வாகனங்களை மட்டும் நீலகிரி மாவட்டத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டது
*பேனாமுள் செய்திகள்*
✍️ 'கைரேகை பதியாவிட்டாலும் காஸ் சிலிண்டர் கிடைக்கும்'
கைரேகை பதிவு செய்யப்படுகிறது; இதற்கு கால அவகாசம் கிடையாது என்பதால், பதியாத வாடிக்கையாளர்கள் சிலிண்டர் கிடைக்காது என, அச்சம் கொள்ள வேண்டாம்' என, இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
*பேனாமுள் செய்திகள்*
✍️ செலவின பட்டியலை அனுப்புங்கள்: தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் பணிக்கு செலவிட்ட தொகை பட்டியல் அனுப்பச் சொல்லி, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாஹு உத்தரவிட்டுள்ளார்.
*பேனாமுள் செய்திகள்*
✍️ பேரனை வெட்ட வந்தவர்களை தடுத்ததால் வட்டி தொழில் செய்த பெண் வெட்டிக்கொலை: இருவர் கைது; முக்கிய குற்றவாளிக்கு வலை
எண்ணூர், சத்தியவாணி முத்து நகர் 2வது தெருவை சேர்ந்தவர் பாக்கியம் (65). அதே பகுதியில் பலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார். அப்போது, பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள் அவரை சுற்றி வளைத்து, கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் பாக்கியத்திற்கு தலை மற்றும் கழுத்து பகுதியில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டு ரத்தம் வெளியேறி துடிதுடித்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
*பேனாமுள் செய்திகள்*
✍️ காற்று திசை மாறுபாடு காரணமாக 14 மாவட்டங்களில் கன மழை வாய்ப்பு
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலுார், திருப்பத்துார் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.
நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்யும்.
*பேனாமுள் செய்திகள்*
✍️ நெல்லை ஜெயகுமார் விவகாரத்தில் திருப்பம் கொலை செய்து உடலை எரித்தது உறுதியானது கூலிப்படையை ஏவியவர் யார்?
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்., தலைவர் ஜெயகுமார் தனசிங், கூலிப்படையினரால் கொல்லப்பட்டு, பின் அவரது உடல் எரிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில், இதை உறுதி செய்துள்ள போலீசார், அடுத்தகட்ட விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.
*பேனாமுள் செய்திகள்*
✍️ 2017ம் ஆண்டு தங்க பத்திரத்தில் முதலீடு செய்திருந்தால் 147% லாபம்
ரிசர்வ் வங்கி, கடந்த 2017 - 18 நிதியாண்டில் வெளியிட்ட முதற்கட்ட தங்கப் பத்திரங்களை திரும்பப் பெற விண்ணப்பித்தவர்களுக்கு யூனிட் ஒன்றுக்கு 7,165 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்து உள்ளது. இது வெளியிடப்பட்ட அன்று இருந்த விலையை விட, கிட்டத்தட்ட 147 சதவீதம் அதிகமாகும்.
*பேனாமுள் செய்திகள்*
✍️ திருமண விழாவில் சாப்பிட்ட 2 பேர் பலி
திருமணம் முடிந்ததும் மண்டபத்தில் காலை உணவு பரிமாறப்பட்டது. திருமண விழாவுக்கு வந்த இரு வீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள், ஊர் பொதுமக்கள் என அனைவரும் சாப்பிட்டனர்.
இதில், புலியூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி திருவேங்கடம் (65), கிருஷ்ணமூர்த்தி(61), ராஜமாணிக்கம் மகன் ராஜ்குமார்(27), நாராயணசாமி(55) உள்பட 120க்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருவேங்கடம், நாராயணசாமிஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
*பேனாமுள் செய்திகள்*
✍️ உரிமம் ரத்து செய்யப்பட்ட பொருட்களை பதஞ்சலி நிறுவனம் விற்பனை செய்ய தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு
*பேனாமுள் செய்திகள்*
✍️ ஆவடி அருகே பரபரப்பு வங்கி மேலாளர் வீட்டில் 60 சவரன் நகை திருட்டு: சிசிடிவி காட்சிகள் மூலம் மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
*பேனாமுள் செய்திகள்*
✍️ சேலம் ஜி.ஹெச்சில் பணியில் இருந்த செங்கல்பட்டு மருத்துவர் கழிவறையில் சடலமாக மீட்பு
இருதய நோய் பிரிவில் உள்ள பொதுகழிவறை பகுதிக்கு சென்று பார்த்துள்ளனர். அதில் ஒரு கழிவறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால், அந்த கழிவறை பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, கழிவறைக்குள் தலைகுப்புற மருத்துவர் அருணகிரி விழுந்து கிடந்தார். அவரை தூக்கி பரிசோதித்து பார்த்ததில், இறந்திருந்தார். உடனே சேலம் அரசு மருத்துவமனை புறக்காவல்நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
*பேனாமுள் செய்திகள்*
*✍️ லாரி மீது கார் மோதி 4 பேர் பரிதாப பலி
அரியலூர் – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏலாக்குறிச்சி பிரிவு சாலை அருகே ஜல்லி ஏற்றி வந்த லாரி ஒன்று நேற்று மாலை சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அந்த வழியாக அரியலூரில் இருந்து சென்ற கார் நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன் பகுதி பலத்த சேதமானது. காரில் இருந்த 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
*பேனாமுள் செய்திகள்*
✍️ ராயல்சை வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் 20 ரன் வித்தியாசத்தில் வென்றது.
*பேனாமுள் செய்திகள்*
✍️ சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மே 9ம் தேதி தொடங்குகிறது
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மே 12ம் தேதி நடைபெறும் சென்னை – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மே 9ம் தேதி தொடங்கும் என சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக
*பாடி பா.கார்த்திக்*