9/5/2024 ஆம் தேதி பேனாமுள் பத்திரிகை செய்திகள்
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳

தேதி: 9/5/2025

*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520

🌷பேனாமுள் பத்திரிகை செய்திகள்🌷

குறள்: 16
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது

வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.

*பேனாமுள் செய்திகள்*

பங்கு சந்தை நிலவரம் : 
நிப்டி : 22302.5
பேங்க் நிப்டி :48021.1
சென்செக்ஸ் : 73466.39

*பேனாமுள் செய்திகள்*

✍️ அரசு பள்ளிகளில் பிளஸ் 2 வரை படித்து கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ1000: தமிழக அரசு அறிவிப்பு

அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் ‘தமிழ் புதல்வன்’ திட்டம் வரும் ஜூலை மாதம் தொடங்க உள்ளதாக தமிழக தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா கூறினார்.

*பேனாமுள் செய்திகள்*

✍️ தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்

தமிழ்நாடு அரசு பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து இணையதள வசதியை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டிலுள்ள 6,223 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இதுவரை 5,907 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 6,992 நடுநிலைப் பள்ளிகளில் 3,267 பள்ளிகளில் இவ்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தொடக்கப் பள்ளிகளில் மொத்தமுள்ள 24,338 பள்ளிகளில் 8,711 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பள்ளிகளுக்கு 100 Mbps அதிவேகம் கொண்ட இணைய இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 19,668 அரசுப் பள்ளிகளுக்கு இப்பணி இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் வண்ணம் பணிகள் நடக்கிறது.

*பேனாமுள் செய்திகள்*

✍️ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு நாளை வெளியீடு: மாணவர்கள் செல்போனுக்கு உடனடி தகவல்

கடந்த மார்ச் மாதம் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை காலை வெளியாகிறது. தேர்வு முடிவுகள் உடனடியாக அந்தந்த மாணவர்களின் செல்போனுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றும், தேர்வுத்துறையின் இணைய தளங்களிலும் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

*பேனாமுள் செய்திகள்*

✍️ தமிழ்நாட்டில் அரசு வேலைக்கு 53.74 லட்சம் பேர் பதிவு

தமிழ்நாட்டில் மாவட்ட, மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஏப்ரல் 30ம் தேதி நிலவரப்படி 53 லட்சத்து 74 ஆயிரம் பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர். இதில் ஆண்கள் 24 லட்சத்து 74 ஆயிரத்து 985 பேரும், பெண்கள் 28 லட்சத்து 98 ஆயிரத்து 847 பேரும் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 284 பேரும் பதிவு செய்துள்ளனர்.

*பேனாமுள் செய்திகள்*

 ✍️ தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள்: சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

*பேனாமுள் செய்திகள்*

 ✍️ ஐஎப்எஸ் இறுதி தேர்வு முடிவு வெளியீடு: இந்திய அளவில் 147 பேர் தேர்ச்சி

ஐஎப்எஸ் தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இந்திய அளவில் 147 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 9 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழகத்தில் மாதவரத்தை சேர்ந்த மாணவர் ஜத்தின் பாபு முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

*பேனாமுள் செய்திகள்*

✍️ தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை கோடை மழை பெய்யும்: படிப்படியாக வெப்பம் குறையும்

தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை கோடைமழை பெய்யும் என்றும், படிப்படியாக வெப்பம் குறையும் என்றும் சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

*பேனாமுள் எய்திகள்*

✍️ சென்னையில் உலக பத்திரிகை தினவிழா: பத்திரிகை சுதந்திரம் வலியுறுத்தும் ஆவணப்படம் வெளியீடு

சென்னை தரமணியில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா வளாகத்தில் உலக பத்திரிகை சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சென்னை அமெரிக்க துணை தூதரகம் மற்றும் பிரஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா சார்பாக ‘பேனி லவ் ஹமர்ஸ் அமெரிக்கா’ என்ற கருத்து சுதந்திரம் குறித்து பேசும் ஆவணப்படம் திரையிடப்பட்டது. பின்னர் திரைப்படம் உணர்த்தும் விஷயங்கள் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் சென்னை அமெரிக்கா துணை தூதரகத்தின் செய்தி பிரிவு அதிகாரி சமந்தா ஜாக்சன் மற்றும் பத்திரிகை துறையை சார்ந்த பலர் கலந்து கொண்டனர்.

*பேனாமுள் செய்திகள்*

✍️ அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் யுபிஐ வசதியுடன் மின்னணு டிக்கெட் இயந்திரம் அறிமுகம்: 

அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் யுபிஐ மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறும் மின்னணு டிக்கெட் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் கிரெடிட், டெபிட் கார்டு முலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம். 

அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 328 ஏசி பேருந்துகள் உள்பட 1,068 பேருந்துகளிலும் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இனி ஜிபே, போன் பே போன்ற யுபிஐ, கிரெடிட்,டெபிட் கார்ட், மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

*பேனாமுள் செய்திகள்*

✍️ சென்னையில் மீண்டும் ஒரு பதறவைக்கும் சம்பவம்; சிறுவனை கடித்து குதறிய காவலர் வீட்டு நாய்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

*பேனாமுள் செய்திகள்*

 ✍️ சிக்னல் கோளாறால் மின்சார ரயில் நிறுத்தம்; தண்டவாளத்தில் அமர்ந்து பயணிகள் மறியல் போராட்டம்

சிக்னல் கோளாறால் கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் நிறுத்தப்பட்டது. எனவே, தண்டவாளத்தில் அமர்ந்து பயணிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

*பேனாமுள் செய்திகள்*

✍️ மின்கம்பங்களை வேகத்தடைக்கு அருகில் அமைக்கக்கூடாது: மின் வாரியம் அறிவுறுத்தல்

மின்கம்பங்களை வேகத்தடைகளுக்கு அருகில் அமைக்காமல் சற்றுத் தள்ளி பாதுகாப்பான முறையில் அமைக்க வேண்டும் என மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் பழுதடைந்த மின் கம்பங்களை உடனே அகற்றி, புதிய மின் கம்பம் பாதுகாப்பான முறையில் அமைக்க வேண்டும். அகற்றப்பட்ட பழைய மின்கம்பங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். வேகத்தடை இருக்கும் இடத்திற்கு அருகில் மின்கம்பங்கள் இருந்தால் பாதுகாப்பான தூரத்திற்கு தள்ளிப்போட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதைஅனைத்து பிரிவு அலுவலர்களும் தவறாது பின்பற்ற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

*பேனாமுள் செய்திகள்*

✍️ ஊட்டியில் இ- பாஸ் ரத்து செய்யவில்லை எனில் ஓட்டல், காட்டேஜ்களை அடைத்து போராட்டம்: உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

இ-பாஸ் ரத்து செய்யவில்லை எனில் ஒரு நாள் ஓட்டல், காட்டேஜ்கள் மற்றும் அனைத்து வியாபாரிகளையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக காட்டேஜ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

*பேனாமுள் செய்திகள்*

✍️ சென்னை ஐஐடிக்கு ரூ513 கோடி நன்கொடை; ஏஐ பாடப்பிரிவை விரும்பி படிக்க வேண்டும்: ஐஐடி இயக்குநர் காமகோடி பேட்டி

*பேனாமுள் செய்திகள்*

✍️ ரஷ்யாவில் உயர்கல்வி பயில தமிழ்நாட்டில் கல்வி கண்காட்சி: மே 11 முதல் 17ம் தேதி வரை நடக்கிறது

இந்த மருத்துவப் படிப்புகளுக்கான ஸ்பாட் அட்மிஷன், மே 11, 12 ஆகிய தேதிகளில், ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நடக்கிறது. எம்.பி.பி.எஸ். மட்டுமல்லாது பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகளில் இளநிலை பட்டங்களுக்கும் ஸ்பாட் அட்மிஷன் வழங்கப்பட உள்ளது.மே 14ம் தேதி மதுரை ரெசிடென்சி ஓட்டலிலும், மே 15ம் தேதி திருச்சி ஃபெமினா ஓட்டலிலும், மே 16ம் தேதி சேலம் ஜி.ஆர்.டி. ஸைப் ஓட்டலிலும், மே 17ம் தேதி கோவை தி கிராண்ட் ரீஜெண்டிலும் கண்காட்சி நடைபெறும்.

*பேனாமுள் செய்திகள்*

✍️ கல்வி நிறுவனங்களில் வர்த்தக கண்காட்சிக்கு அனுமதி வழங்க தடை கோரி வழக்கு: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

*பேனாமுள் செய்திகள்*

✍️ அபிஷேக் – ஹெட் ருத்ர தாண்டவம் லக்னோவை ஊதித்தள்ளிய சன்ரைசர்ஸ்: 9.4 ஓவரில் இலக்கை எட்டியது

லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், அபிஷேக் ஷர்மா – டிராவிஸ் ஹெட் ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி புள்ளிப் பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியது.

*பேனாமுள் செய்திகள்*

✍️ பெங்களூரு – பஞ்சாப் அணிகள் இன்று மோதல்

ஐபிஎல் டி20 தொடரின் 58வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று மோதுகின்றன. இரு அணிகளும் இதுவரை 11 லீக் ஆட்டங்களில் விளையாடி தலா 8 புள்ளிகள் பெற்றிருந்தாலும், ரன்ரேட் அடிப்படையில் பெங்களூரு 7வது இடத்திலும், பஞ்சாப் 8வது இடத்திலும் உள்ளன.

பேனாமுள் செய்திகளுக்காக உங்கள்
*பாடி பா.கார்த்திக்* 
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
Comments