சென்னை அம்பத்தூர் ஏரி கரையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த இரண்டு இளைஞர்களை போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர் அவர்களிடமிருந்து 1140 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர் அம்பத்தூர் சத்யா நகர் ஏரிக்கரை ஓரமாக ஆட்டோவில் வைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக அம்பத்தூர் போலீசாருக்கு வெள்ளிக்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது
காவல் உதவி ஆய்வாளர் வேலய்யா பாண்டியன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர் அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் இருந்த இளைஞர்களை சோதனை செய்தபோது அவரிடம் போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்ததுடன் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர் அதில் அவர்கள் அம்பத்தூர் அன்னை சத்யா நகரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ரஞ்சித் மற்றும் அதே பகுதி காமராஜர் நகர் சேர்ந்த ஒப்பந்த தூய்மை பணியாளர் பார்த்திபன் என்பதும் இவர்கள் இருவரும் சேர்ந்து ஆந்திர மாநிலத்தில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து அம்பத்தூர் பகுதியில் உள்ள வட மாநில தொழிலாளர்களை குறிவைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது இவர்களிடமிருந்து 1140 போதை மாத்திரைகள் ₹20,000 ரொக்கம் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்
புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் காவல் ஆய்வாளர் டில்லிபாபு தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.