🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳
தேதி: 28/5/2025
*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520
பதிவு
28/5/2024
*அவசரம் அவசரம்*
*அவசரம் இரத்தம் தேவை*
*உடனடியாக இரத்தம் தேவை*
பெயர்: தேவகி வயது:62
கணவர் பெயர்: எத்திராஜ்
சென்னை,ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை GH மருத்துவமனை
பழய கட்டிடம்,வார்டு எண் : 49
தொடர்புக்கு
மகன் கோபால் : 9789093489
🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷
குறள் : 35
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்
பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ பங்கு சந்தை நிலவரம்
நிப்டி : 22932.45
பேங்க் நிப்டி : 49281.8
சென்செக்ஸ் : 75390.5
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ கடைசிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நாளான ஜூன் 1ல் இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம்: பிரதமர் வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசிக்க முடிவு
மக்களவை தேர்தலில் 7வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடக்கும் நாளான வரும் ஜூன் 1ம் தேதி இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடக்கும் இக்கூட்டத்தில், கூட்டணியின் தேர்தல் செயல்பாடு குறித்தும், பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ 3 நாள் பயணமாக மீண்டும் தமிழ்நாடு வருகிறாரா பிரதமர் மோடி?
3 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மே 30,31, ஜூன் 1 ஆகிய 3 நாட்களில் கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
🌹 *பேனாமுள்செய்திகள்*🌹
✍️ ரீமல் புயல் காரணமாக மேற்குவங்க மாநிலத்தில் 7 பேர் உயிரிழப்பு!
ரீமல் புயல் காரணமாக மேற்குவங்க மாநிலத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரீமல் புயலால் தெற்கு கடலோர பகுதிகளில் 24 பகுதிகளில், 79 நகராட்சிகளில் 15,000 வீடுகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 2,000க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்ததாகவும், 337 மின் கம்பங்கள் விழுந்ததாகவும், மேலும் அதிகளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு ஜூன் மாதம் முதல் மதிய உணவு திட்டம்!!
அரசுப்பள்ளி சத்துணவு மையத்தில் இருந்து அருகில் உள்ள சிறப்புப் பள்ளிகளுக்கு மதிய உணவு தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படும். உரிய நேரத்தில் மதிய உணவினை சூடாகவும் பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லவும் உணவினை முறையாக வழங்கிட பொறுப்பாளர்களை நியமிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1ம் தேதியில் இருந்தே சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு விநியோகிக்கப்படும் என்று மாற்றுத் திறனாளிகள் நல இயக்குனர் தெரிவித்துள்ளார்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ ஜெயலலிதா இந்துத்துவா தலைவர்: தமிழிசை பேட்டி
ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என்பதை யாரும் மறுக்க முடியாது என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். பல ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் ஜெயலலிதா. நல்ல நேரம் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்பவர் ஜெயலலிதா. ஜெயலலிதா இருந்திருந்தால், நிச்சயம் அயோத்தி ராமர் கோயில் சென்றிருப்பார். ஜெயலலிதாவை பெரிய வட்டத்திற்கு எடுத்து செல்ல விரும்புகிறோம்; ஜெயலலிதாவை அதிமுகவினர்தான் குறுகிய வட்டத்தில் சுருக்க நினைக்கின்றனர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ புனே சொகுசு கார் விபத்து விவகாரம் ரத்த பரிசோதனையில் குளறுபடி செய்த டாக்டர்கள் கைது
சிறுவனின் தந்தை சசூன் மருத்துவமனை தடயவியல் துறை டாக்டர் அஜய் தாவாரேவை தொடர்புகொண்டு, தனது மகனின் ரத்த மாதிரிக்கு பதிலாக வேறொரு ரத்த மாதிரியை மாற்றி வைக்குமாறு கேட்டது தெரியவந்தது. அதற்காக பணம் தருவதாகவும் ஆசை காட்டி இருக்கிறார். இதையடுத்து ரத்த பரிசோதனையின்போது டாக்டர்கள் அஜய் தாவாரே, ஸ்ரீஹரி ஹல்னார் மற்றும் மருத்துவமனை ஊழியர் அதுல் கத்காம்ப்ளே ஆகியோர் ரத்த மாதிரியை மாற்றி வைத்து மது குடிக்காத ஒருவரின் ரத்த மாதிரியை சோதனை செய்து அறிக்கை தந்தது தெரியவந்தது.இதையடுத்து டாக்டர்கள் அஜய் தாவாரே மற்றும் ஸ்ரீஹரி ஹல்னார், ஊழியர் அதுல் கத்காம்ப்ளே ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர், மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 3 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அங்கு வரும் 30ம் தேதிவரை 3 பேரையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் அனுமதி அளித்தது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ மைசூருவில் பிரதமர் தங்கியிருந்த ஓட்டல் பில் பாக்கி ரூ.80 லட்சத்தை மாநில அரசே செலுத்தும்: வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே உறுதி
பந்திப்புரா புலிகள் திட்டம் 50 ஆண்டு நிரம்பியதை தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மைசூரு வந்த பிரதமர் தங்கிய ஓட்டலின் பில் பாக்கியை மாநில அரசே செலுத்தும் என வனத்துறை அமைச்சர் ஈஸ்வர்கண்ட்ரே தெரிவித்தார்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ விடுதியில் லேப்டாப்பை சார்ஜ் போட்டபோது மின்சாரம் பாய்ந்து பெண் டாக்டர் பலி: நாமக்கல்லில் இருந்து பயிற்சிக்காக சென்னை வந்தபோது பரிதாபம்
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ காற்றாலை மின்சாரம் உற்பத்தி அதிகரிப்பு: 4 ஆயிரம் மெகாவாட்டை தாண்டியது
நெல்லை, குமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த 3 தினங்களாக காற்றின் வேகம் அதிகரித்து வரும் நிலையில், காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி தமிழகத்தில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த சீசனில் அதிகபட்சமாக 4,111 மெகாவாட் காற்றாலை மின்சாரம் நேற்று கிடைத்துள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ தவறான கல்வி கொள்கையால் படித்து முடித்த இளைஞர்கள் வேலைக்காக கையேந்தும் நிலை: துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் மீண்டும் சர்ச்சை பேச்சு
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ தோள்பட்டை எலும்பு முறிவு மருத்துவமனையில் வைகோ அனுமதி
தோள்பட்டையில் எலும்பு முறிவு காரணமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை சிறப்பு பிரிவினருக்கு இன்று கலந்தாய்வு
தமிழக உயர்கல்வித் துறையின் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இளநிலை பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு, கடந்த 6ம் தேதி தொடங்கி 24ம் தேதியுடன் நிறைவு பெற்றது. விண்ணப்ப பதிவில், 2 லட்சத்து 58 ஆயிரத்து 527 விண்ணப்பங்கள் குவிந்தன. இதில், 2 லட்சத்து 11 ஆயிரத்து 10 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளனர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ சென்னை விமான நிலையத்துக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்: 1 வாரத்தில் வெடிக்கும் என தகவல்
சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், அது ஒரு வாரத்தில் வெடிக்கும் என்று தனியார் விமான நிறுவனத்துக்கு வந்த மர்ம தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ பிளஸ் 2 மறு கூட்டல், மறு மதிப்பீட்டுக்கு மாணவர்கள் நாளை விண்ணப்பிக்கலாம்
பிளஸ் 2 தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்த மாணவ மாணவியர் தங்கள் விடைத்தாள் நகல்களை இன்று மதியம் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் தங்கள் பிறந்த தேதி, பதிவெண் ஆகியவற்றை பதிவு செய்து விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல்2 அல்லது மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணைய தளத்தில் வெற்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து 29ம் தேதி மதியம் 1 மணி முதல் ஜூன் 1ம் தேதி மாலை 5 மணி வரை அந்தந்த மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ தமிழகம் முழுவதும் விதிகளை மீறிய 1,054 வாகன உரிமையாளர்களிடம் ரூ1.09 கோடி அபராதம் வசூல்: போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் தகவல்
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நேரடி நியமனத்திற்கு, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி-IV பணிகள்)-இல் அடங்கிய பதவிகளுக்கான கொள்குறி வகை தேர்வு ஜூன்9ம் தேதி காலை நடைபெற உள்ளது.தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட ஹால் டிக்கெட் தேர்வாணையத்தின் இணைய தளங்களான www.tnpsc.gov.in www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண், பிறந்த தேதி, ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறது தமிழ்நாடு; உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் 49% பெற்று இந்தியாவிலேயே முதலிடம்: தமிழ்நாடு அரசு பெருமிதம்
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ ஆடு திருடியதாக கட்டப்பஞ்சாயத்து ரூ3 லட்சம் அபராதத்தால் தொழிலாளி தற்கொலை: நாட்டாண்மை உட்பட 4 பேர் கைது
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ இன்று காலை 11 மணி முதல் 3 வரை கடற்கரை-சிங்கபெருமாள்கோவில் வரை மட்டுமே மின்சார ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை எழும்பூர்-விழுப்புரம் இடையே செங்கல்பட்டு பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை (5 மணி நேரம்) ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.அதன்படி, சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.30, 10.56, 11.40 மதியம் 12.40 மணிக்கு செங்கல்பட்டிற்கு இயக்கப்படும் மின்சார ரயில் சிங்கபெருமாள்கோவில் வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல், காலை 11.30, மதியம் 1, 1.45 மற்றும் 3.50 மணிக்கு செங்கல்பட்டிலிருந்து இயக்கப்படும் மின்சார ரயில் சிங்கப்பெருமாள்கோவிலிருந்து இயக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ முதல்முறையாக 76,000 புள்ளிகளை கடந்த சென்செக்ஸ் சரிவுடன் நிறைவு
முதல்முறையாக 76,000 புள்ளிகளை கடந்த சென்செக்ஸ் சரிவுடன் நிறைவு பெற்றது. வரலாறு காணாத அளவில் முதல்முறையாக 76,000 புள்ளிகளை கடந்து சென்செக்ஸ் புதிய உச்சம் தொட்டது. பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 550 புள்ளிகள் அதிகரித்து 76,000 புள்ளிகளைக் கடந்தது. 76,000 புள்ளிகளை முதல்முறையாக கடந்து சாதனை படைத்த சென்செக்ஸ் இறுதியில் சரிவுடன் முடிந்தது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு
6,720 ரூபாய்க்கும்; சவரனுக்கு, 520 ரூபாய் அதிகரித்து, 53,760 ரூபாய்க்கும் விற்பனையானது.
வெள்ளி கிராமுக்கு, 1.50 ரூபாய் உயர்ந்து, 97.50 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ நடிகை கவுதமியிடம் ரூ.3.16 கோடி நிலம் மோசடி: 12 பேர் மீது வழக்கு
எஸ்.பி., உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார்புகாரில் குறிப்பிட்ட அழகப்பன், நாச்சியாள், நெல்லியான் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிந்து இன்ஸ்பெக்டர் இளவேனில் தலைமையில் விசாரணை நடக்கிறது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ 2வது சுற்றில் ஸ்வியாடெக் மர்ரேவை வீழ்த்தினார் வாவ்ரிங்கா
பேனாமுள் செய்களுக்காக உங்கள்
*பாடி பா.கார்த்திக்*