12/6/2024 ஆம் தேதி பேனாமுள் பத்திரிகை செய்திகள்
இன்றைய முக்கிய செய்திகள்



🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳

தேதி: 12/6/2024

*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520

🌹🇮🇳🇮🇳🔥🙏🔥👍🥶✍️✍️✒️🙏🇮🇳🔥😂

🌷 பேனாமுள் பத்திரிகை செய்திகள் 🌷

குறள் : 49
அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.

அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.

🌹 *பேனாமுள்செய்திகள்*🌹

✍️ பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பங்கு சந்தை நிலவரம் 
நிப்டி : 23264.85
பேங்க் நிப்டி : 49705.75
சென்செக்ஸ் : 76456.59

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ சென்னை - ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கத்தின் விலை (1 கிராம்) ₹ 6,646 ஆகவும், 24 கேரட் தங்கம் விலை ₹ 7,250 (1 கிராம்) ஆகவும்,வெள்ளி விலை ஒரு கிராம் ₹ 94.90 ஆகவும் உள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

*தமிழக முதல்வருக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காதா ஆவடி மின்வாரியம் 
 ஆவடி, பருத்திப்பட்டில் உள்ள 48 வது வார்ட், லட்சுமி கிரீன் சிட்டியில் இரண்டு வருடங்களாக லோ வோல்டேஜ் வந்து கொண்டிருக்கும் நிலையில் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் அனைத்தும் வீணாகி கொண்டே இருக்கிறது அதற்கு மின்சாரத்தை அதிகபடுத்த ட்ரான்ஸ்பார்ம் பொருத்தி மின்சாரத்தை சரி செய்ய வேண்டி பலமுறை தகவல் தெரிவித்தும் ஆவடி பருத்திப்பட்டுக்கு உட்பட்ட மின்வாரிய அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை*

 தொடர்ந்து மின்சாரத்திற்காக போராடிவரும் ஆவடி, பருத்திப்பட்டு, 48 வது வார்டில் உள்ள பகுதியில் மின் பற்றாக்குறை குறித்து மக்கள் கூறியது போல் இரண்டு வருடங்களாக வந்து வேலை செய்யாத மின்சார வாரியம் இப்போதா வந்து செய்யும் என்று கூறினார்கள்
 
அந்த மின் பற்றாக்குறை குறித்து பல தடவை 
பல முறை மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சாலை மறியலில் ஈடுபடபோவதாகவும் தகவல் தெரிவித்தார்கள் தெரிவித்த மறுநாளே சம்பந்தப்பட்ட மின்வாரிய A D அவர்கள் நேரில் வந்து இதுகுறித்து பேசி சமாதானம் செய்து மறுநாளே டிரான்ஸ்பார்மர் வேலை தொடங்கப்படும் என்று அறிவித்தார் 
ஆனால் இதுவரை அந்த பகுதியில் ஒரு குண்டூசி கூட அந்த இடத்தில் அசைக்கப்படாமல் இருக்கிறது 
இரண்டு மூன்று நாட்களாக தொலைபேசியில் பலமுறை தொடர்பு கொண்டாலும்  தொலைபேசியை இந்நேரம் வரை எடுக்கவே இல்லை சம்மந்தப்பட்ட மின்வாரிய A D 

அப்பகுதியில் உள்ள மக்கள் தொடர்ந்து மின்பற்றாக்குறை காரணமாக எங்க வீட்டு பொருள்கள் அனைத்தும் வீணாகி கொண்டே தான் இருக்கிறது 
இதற்கு மின்வாரிய அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை போராட்டம் மட்டுமே இதற்கு தீர்வு போராட்டம் செய்தால்தான் அவர்கள் உடனடியாக இந்த டிரான்ஸ்பார்மர் பொருத்தி மின் பற்றாக்குறையை தீர்த்து வைப்பார்கள் என்று தெரிவிக்கிறார்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட மின்வாரிய உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அரசுக்கு எந்த கெட்ட பெயரும் ஏற்படுத்தாதவாறு  உடனடியாக நடவடிக்கை எடுத்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் கல்விக்கடன் ரூ.5 லட்சமாக உயர்வு: 2ம் ஆண்டு, 3ம் ஆண்டு பயிலும் மாணவர்களும் பெறலாம், தமிழக அரசு அறிவிப்பு

🌹 *பேனாமுள்செய்திகள்*🌹

✍️ விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுவார் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

*பேனா முள் பத்திரிகையின் 9ம் ஆண்டை முன்னிட்டு 15/6/2024 ஆம் தேதி காலை 10.00 மணிக்கு அயப்பாக்கம் மெயின் ரோடு பருத்திப்பட்டு VGN Plantina சென்னை - 600077 அருகில் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது..*

பேனா முள் பத்திரிகையின் 9ம் ஆண்டு நிகழ்ச்சியில் நண்பர்கள் அனைவரும் கலந்துக் கொண்டு வாழ்த்திட வேண்டுகிறேன்.

அனைவரும் வருக! வருக!! என வரவேற்கும்

*பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்-பேனாமுள் இதழ்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் அரசு மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை: சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தகவல்

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடி மருத்துவ இடங்களுக்கு கடும் போட்டி

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்க வரும் 30ம்தேதி வரை அவகாசம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ இலக்கிய துறையில் சிறப்பான தொண்டு எழுத்தாளர் பாமாவுக்கு அவ்வையார் விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பெற்றோருக்கு தெரியாமல் இரவில் கார் ஓட்டி பழகிய 2 சிறுவர்கள் பலி: எதிரே வந்த காருடன் மோதி பரிதாபம்

பரமத்திவேலூர் அருகே இரவு நேரத்தில் பெற்றோருக்கு தெரியாமல் கார் ஓட்டி பழகிய போது, மற்றொரு காருடன் நேருக்குநேர் மோதியதில் 2 சிறுவர்கள் பலியாகினர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ திருச்சி விமான நிலையத்தில் ரூ.1,112 கோடியில் கட்டப்பட்ட புதிய முனையம் பயன்பாட்டுக்கு வந்தது: முதலில் வந்த விமானத்துக்கு தண்ணீர் பீய்ச்சி வரவேற்பு

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ இடைநிலை ஆசிரியர் தேர்வு ஜூலை 21க்கு ஒத்திவைப்பு: வாரியம் அறிவிப்பு

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹 

✍️ ஜூலை 1 முதல் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்பது வதந்தி: தமிழ்நாடு அரசு தகவல்

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ தமிழ்நாடு பதிவெண் இல்லாத ஆம்னி பஸ்கள் 14ம் தேதி முதல் தடை: போக்குவரத்து துறை அறிவிப்பு

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ ஆயுத பூஜைக்கு 3 நாள் தொடர் விடுமுறை சில நிமிடங்களில் முடிந்தது ரயில் டிக்கெட் முன்பதிவு

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ தமிழகத்தில் 17ம் தேதி வரை வெப்பம் அதிகரிக்கும் மிதமான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ கிராமங்கள் வாரியாக சந்தை வழிகாட்டி பதிவேடு தயாரிப்பு: ஆட்சேபணைகள் 15 நாட்களுக்குள் தெரிவிக்கலாம்

சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பினை சீரமைத்தல் தொடர்பாக ஆட்சேபணைகள், கருத்துரைகளை 15 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என்று மதிப்பீட்டு துணைக்குழு தெரிவித்துள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ புதுமைப்பெண் திட்டம் போல மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் ‘தமிழ் புதல்வன் திட்டம்’ விரைவில் துவக்கம்: மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ கடைக்குள் புகுந்த பஸ் டிரைவர் 'சஸ்பெண்ட்'

திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டிலிருந்து தேனிக்கு புறப்பட்ட அரசு பஸ், பிரேக் பிடிக்காமல் நேற்று முன்தினம் மதியம் ரோட்டோர கடைகளுக்குள் புகுந்தது. இதில், டிரைவர் பழனிசாமி காயமடைந்தார்.அரசு பஸ்சில் எந்த கோளாறும் இல்லை. கவனக்குறைவாக பஸ்சை இயக்கியதால் தான் விபத்து நடந்ததாக கூறி டிரைவர் பழனிசாமியை போக்குவரத்து கழக நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பாகிஸ்தானுக்கு எதிராக ஆரோன் ஜோன்ஸ் அரைசதம் விலாசல்
✍️ ஹாட்ரிக் வெற்றி யாருக்கு? இந்தியா – அமெரிக்கா இன்று பலப்பரீட்சை: ‘சூப்பர் 8’ சுற்றுக்கு முன்னேற முனைப்பு

🙏 *பேனாமுள் செய்திகள்*🙏

✍️ பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

பேனாமுள் பத்தரிகை செய்திகளுக்காக உங்கள் 

*பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
Comments