1/6/2024 ஆம் தேதி பேனாமுள் பத்திரிகை செய்திகள்
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳

தேதி: 1/6/2025

*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520

🌷பேனாமுள் பத்திரிகை செய்திகள் 🌷

குறள் : 39
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல

அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ தொடர்ந்து மக்களின் பேர் ஆதரவோடு பேனாமுள் பத்திரிகையின் 9 ஆம் ஆண்டை முன்னிட்டு பாடி,தேவர்நகரில்,உள்ள ஸ்ரீ கருமாரி அம்மன் ஆலயத்தில் 31/5/2024 ஆம் தேதி காலை அம்மனுக்கு புடவை மற்றும் ஆளுயர மாலை அணிவித்து பூஜை நடத்தப்பட்டது கோவிலுக்கு வந்த 
பொது மக்களுக்கு சர்க்கரை பொங்கலும் வழங்கப்பட்டது.

🔥 *பேனாமுள் செய்திகள்*🔥

✍️ பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பங்கு சந்தை நிலவரம் 
நிப்டி : 22530.7
பேங்க் நிப்டி : 48983.95
சென்செக்ஸ் : 73961.31

🙏 *பேனாமுள் செய்திகள்*🙏

✍️ சென்னை - ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கத்தின் விலை (1 கிராம்) ₹ 6,729 ஆகவும், இதேபோல் 24 கேரட் தங்கம் விலை ₹ 7,341 (1 கிராம்) ஆகவும்,வெள்ளி விலை ஒரு கிராம் ₹ 99.90 ஆகவும் உள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

ஆவடி ஆணையரகத்திற்கு உட்பட்ட T -3 கொரட்டூர் காவல்நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் டி.மகேந்திரவர்மன் மற்றும் டி.மோகன் ஆகியோருக்கு பாரட்டுவிழா கொளத்தூர் ரங்கா மஹாலில் 31/5/2024 அன்று வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணியளவில் நடைபெற்றது இதில் ரெட்ஹில்ஸ் மாவட்ட துணை ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் அம்பத்தூர் உதவி ஆணையர் கிரி ஆகியோர்  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பாராட்டி பேசினார்கள்.

*🔥பேனாமுள் செய்திகள்🔥*

✍️ பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உள்பட 57 தொகுதிகளில் இன்று கடைசிக்கட்ட தேர்தல்:

இன்று இறுதிகட்டமாக பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உள்பட 57 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு மேல் தேர்தல் கருத்துக்கணிப்புகள் வெளியாக உள்ளன.

🇮🇳 *பேனாமுள் செய்திகள்*🇮🇳

✍️ நாடு முழுவதும் வாட்டி வதைக்கும் வெயில் 25 தேர்தல் அதிகாரிகள் உள்பட 61 பேர் ஒரே நாளில் பலி: 

நாடு முழுவதும் வாட்டி வதைக்கும் வெயிலுக்கு 25 தேர்தல் அதிகாரிகள் உள்பட 61 பேர் நேற்று ஒரே நாளில் பலியானார்கள். நாடு முழுவதும் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 23 தேர்தல் அதிகாரிகள் உள்பட 61 பேர் வெயில் கொடுமைக்கு பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

✒️ *பேனாமுள் செய்திகள்*✒️

✍️ தள்ளிப்போகிறது பள்ளிகள் திறப்பு 

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு, 10ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளதால், பெற்றோரும், ஆசிரியர்களும் நிம்மதி அடைந்துள்ளனர். சுட்டெரிக்கும் கடும் வெயில் காரணமாக, தமிழக அரசு இம்முடிவை எடுத்துள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ உடல் உறுப்பு தானம் வழங்கியவர்களுக்கு அறுவை சிகிச்சைக்கு பிறகு மருத்துவ செலவுக்காக 3 ஆண்டுக்கு உதவி தொகை வழங்க நடவடிக்கை: மாநில அளவிலான குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

🇮🇳 *பேனாமுள் செய்திகள்*🇮🇳

✍️ மாதவரம் அருகே கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை:

மாதவரம் அருகே சட்ட விரோதமாக தாய்ப்பாலை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்த கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி 90 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

✒️ *பேனாமுள் செய்திகள்*✒️

✍️ சென்னை சொகுசு பஸ், காரில் நள்ளிரவு சோதனை ரூ.1.61 கோடி ரொக்கப்பணம், 1.5 கிலோ தங்கம் சிக்கியது: 

ஆந்திராவில் நள்ளிரவு நடத்திய வாகன தணிக்கையில் சென்னை சென்ற சொகுசு பேருந்து, சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு வந்த காரில் ரூ.1.61 கோடி ரொக்கப்பணம், 1.5 கிலோ தங்க கட்டிகள் சிக்கியது. இதுதொடர்பாக பெண்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ 36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: 

திருவான்மியூரில் உள்ள மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில், 36 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா, வரும் ஜூலை 12ம் தேதி வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது, என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

🙏 *பேனாமுள் செய்திகள்*🙏

✍️ நாளை சரண் அடைகிறார் கெஜ்ரிவால்: பெற்றோர் நிலை குறித்து கவலை

திஹார் சிறையில் நாளை(ஜூன் 2) சரணடைய இருப்பதாக தெரிவித்துள்ள டில்லி முதல்வர் கெஜ்ரிவால், தன் பெற்றோரை பார்த்துக் கொள்ளும்படி டில்லி மக்களுக்கு வேண்டு கோள் விடுத்துள்ளார்.

✒️ *பேனாமுள் செய்திகள்*✒️

✍️ 1 கோடி பள்ளி மாணவர் விபரம் ஓ.டி.பி., வாயிலாக சரிபார்ப்பு

அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த, ஒரு கோடி மாணவர்களின் மொபைல் போன் எண்ணின் உண்மைத்தன்மை, ஓ.டி.பி., வழியே சரிபார்க்கப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

🇮🇳 *பேனாமுள் செய்திகள்*🇮🇳

✍️ 19 இடங்களில் கொளுத்திய வெயில்: வேலுாரில் 111 டிகிரி பாரன்ஹீட்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று ஒரே நாளில், 19 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானது. வேலுாரில், 111 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் தகித்தது.

✒️ *பேனாமுள் செய்திகள்*✒️

✍️ பெயின்ட் கம்பெனியில் திடீர் தீ விபத்து; கருகிய நிலையில் இருவர் சடலம் மீட்பு

திருவள்ளூர் அடுத்த காக்களூர் தொழிற்பேட்டையில், தனியார் பெயின்ட் மற்றும் கெமிக்கல் கம்பெனியில் நேற்று மாலை திடீர் விபத்து ஏற்பட்டு, தகர கூரை வெடித்துச் சிதறியது.
இதில், சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி ஒருவர் பலியானார். மேலும், கம்பெனிக்குள் இரண்டு பேர் சடலங்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டன.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ கால்நடை மருத்துவ படிப்பு: 3ல் விண்ணப்ப பதிவு துவக்கம்

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு, நாளை மறுதினம் முதல் விண்ணப்பிக்கலாம்.

✒️ *பேனாமுள் செய்திகள்*✒️

✍️ வீரப்பன், வீரமணியை என்கவுன்டர் செய்தவர் ஏடிஎஸ்பி வெள்ளதுரை சஸ்பெண்ட் ரத்து: தமிழக அரசு உத்தரவு

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ வரும் 4ம் தேதி 39 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை சட்டம் – ஒழுங்கு தொடர்பாக தலைமை செயலாளர் ஆலோசனை: டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்பு

🇮🇳 *பேனாமுள் செய்திகள்*🇮🇳

✍️ 2 குழந்தைகளுடன் இளம்பெண் மர்ம சாவு விஷம் குடித்த கணவனும் உயிரிழப்பு

தர்மபுரி: வீட்டிற்குள் 2 குழந்தைகளுடன் இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.. மேலும், விஷம் குடித்த கணவனும் பலியானார்

🙏 *பேனாமுள் செய்திகள்*🙏

✍️ அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் கைது

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்; 4வது சுற்றில் கோகோ காஃப்

பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட, அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப் தகுதி பெற்றார்.
 
பேனாமுள் செய்திகளுக்காக உங்கள்

*பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
Comments