*🌹பேனாமுள் செய்திகள்*🌹
பதிவு
17/6/2024
தமிழக அரசு தமிழக மின் பற்றாக்குறையை போக்கும் விதமாக பல நல்ல நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் தமிழக அரசின் பெயரை கெடுக்கும் விதமாக பலமுறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத ஆவடி மின்வாரியம்
*தமிழக முதல்வருக்கு தகவல் தெரிவித்தும் மதிக்காத ஆவடி மின்வாரியம் ஆவடி, பருத்திப்பட்டில் உள்ள 48 வது வார்ட், லட்சுமி கிரீன் சிட்டியில் இரண்டு வருடங்களாக லோ வோல்டேஜ் வந்து கொண்டிருக்கும் நிலையில் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் அனைத்தும் வீணாகி கொண்டே இருக்கிறது அதற்கு மின்சாரத்தை அதிகபடுத்த ட்ரான்ஸ்பார்ம் பொருத்தி மின்சாரத்தை சரி செய்ய வேண்டி பலமுறை தகவல் தெரிவித்தும் ஆவடி பருத்திப்பட்டுக்கு உட்பட்ட மின்வாரிய அதிகாரிகள் ஆமை வேகத்தில் நடவடிக்கை எடுத்து வருவதாக அப்பகுதி மக்கள் தகவல்*
தொடர்ந்து மின்சாரத்திற்காக போராடிவரும் ஆவடி, பருத்திப்பட்டு, 48 வது வார்டில் உள்ள பகுதியில் மின் பற்றாக்குறை குறித்து மக்கள் கூறியது போல் இரண்டு வருடங்களாக வந்து வேலை செய்யாத மின்சார வாரியம் இப்போதா வந்து செய்யும் என்று கூறி ஆமை வேகத்தில் வேலை நடக்கிறது
அந்த மின் பற்றாக்குறை குறித்து பல தடவை
பல முறை மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சாலை மறியலில் ஈடுபடபோவதாகவும் தகவல் தெரிவித்தார்கள் தெரிவித்த மறுநாளே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரி அவர்கள் நேரில் வந்து இதுகுறித்து பேசி சமாதானம் செய்து மறுநாளே டிரான்ஸ்பார்மர் வேலை தொடங்கப்படும் என்று அறிவித்தார்
ஆனால் அந்த பகுதியில் ஆமை வேகத்தில் வேலை நடக்கலாமா வேண்டாமா என்ற என்னத்தில் வேலை நடக்கிறது
இரண்டு மூன்று நாட்களாக தொலைபேசியில் பலமுறை தொடர்பு கொண்டாலும் தொலைபேசியை இந்நேரம் வரை எடுக்கவே இல்லை சம்மந்தப்பட்ட ஆவடி,பருத்திப்பட்டு மின்வாரிய அதிகாரிகள்
அப்பகுதியில் உள்ள மக்கள் தொடர்ந்து மின்பற்றாக்குறை காரணமாக எங்க வீட்டு பொருள்கள் அனைத்தும் வீணாகி கொண்டே தான் இருக்கிறது
இதற்கு மின்வாரிய அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை போராட்டம் மட்டுமே இதற்கு தீர்வு போராட்டம் செய்தால்தான் அவர்கள் உடனடியாக இந்த டிரான்ஸ்பார்மர் பொருத்தி மின் பற்றாக்குறையை தீர்த்து வைப்பார்கள் என்று தெரிவிக்கிறார்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட மின்வாரிய உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அரசுக்கு எந்த கெட்ட பெயரும் ஏற்படுத்தாதவாறு உடனடியாக நடவடிக்கை எடுத்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹