20/6/2024 ஆம் தேதி பேனாமுள் பத்திரிகை செய்திகள்
🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏

🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳

தேதி: 20/6/2025

*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520

🌹🇮🇳🇮🇳🔥🙏🔥👍🥶✍️✍️✒️🙏🇮🇳🔥😂

🌷பேனாமுள் பத்திரிகை செய்திகள்🌷 

குறள் : 57
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.

மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்பு முறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தான் காக்கும் கற்பே சிறிந்தது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

.✍️ பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பங்கு சந்தை நிலவரம் 
நிப்டி : 23516
பேங்க் நிப்டி : 51398.05
சென்செக்ஸ் : 77337.59

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ சென்னை - ரீடைல் சந்தையில் 
தங்கம் விலை இன்று 
18 K  தங்கம்/ g : ₹ 5486
22 K தங்கம்/ g. : ₹ 6697
24 K தங்கம்/g   : ₹ 7306
    வெள்ளி    /g   : ₹ 95.50

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹 

✍️ பதிவு 
20/6/2024

நன்றி நன்றி நன்றி


தொடர் போராட்டத்திற்கு வெற்றி 

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக இந்த ஆவடி பருத்திப்பட்டில் உள்ள லட்சுமி கீரீன் சிட்டியில் மின் பற்றாக்குறை இருந்து வருகிறது இதனால் அப்பகுதியில் உள்ள வீட்டு உபயோகப்படும் பொருள்கள் வீணாகிக் கொண்டே இருக்கிறது என்றும் இதற்கு நிரந்தர தீர்வாக டிரான்ஸ்பாமர் அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நமது பேனாமுள் பத்திரிகைக்கு இரண்டு மாதத்திற்கு முன் தகவல் தெரிவித்தனர்

 நாம் சம்பந்தப்பட்ட மின்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து செய்திகள் அனுப்பி வந்த நிலையில் நேற்று 19/6/2024 அன்று டிரான்ஸ்பார்மர் பொருத்தப்பட்டிருக்கிறது இதனால் அப்பகுதி மக்களின் மின் பற்றாக்குறை பிரச்சனை தீர்ந்துவிடும் உடனடியாக நடவடிக்கை எடுத்த மின்வாரிய SC,EE,AD,AE ஆகியோருக்கு அப்பகுதி மக்கள் சார்பாகவும் பேனாமுள் பத்திரிகை சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ கள்ளக்குறிச்சி அருகே மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்த 16 பேர் பலி: 

சென்னை: கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்த 16 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து சிபிசிஐடி விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், கலெக்டர் மாற்றப்பட்டுள்ளார். எஸ்பி மற்றும் மதுவிலக்குப் போலீசார் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்: முதல்வர் எச்சரிக்கை

முதல்வரின் எக்ஸ் வலைதளப் பதிவு :
இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ தனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நன்றி

சென்னை: தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார். ‘வாழ்த்துக்கு நன்றி சகோதரரே இன்றைய தினம் தனக்கு ஸ்வீட் பாக்ஸ் வரும் என காத்திருக்கிறேன்’ என ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ 2024-25ம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் விலை ரூ.117 உயர்வு: குவிண்டால் ரூ.2300 ஆனது; மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு ரூ.117 உயர்த்தி உள்ளது. இதன் மூலம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,300 ஆக உயா்ந்துள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் நாளை காங்கிரஸ் போராட்டம்

புதுடெல்லி: நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் நீதி கேட்டு நாடு முழுவதும் நாளை காங்கிரஸ் போராட்டம் நடத்துகிறது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹 

✍️ திருப்பதிக்கு நடைபாதையில் வரும் பக்தர்கள் ஏழுமலையான் தரிசன டிக்கெட்டை ஸ்கேன் செய்தால் மட்டுமே அனுமதி: தேவஸ்தானம் அறிவிப்பு

நேற்று முதல் ஸ்ரீவாரிமிட்டா மற்றும் அலிபிரி மலைப்பாதைகளில் தரிசன டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்யும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. ஸ்கேனிங் செய்யாத டிக்கெட் வைத்திருக்கும் பக்தர்களுக்கு திவ்ய தரிசன வரிசையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ ஆர்டர் செய்த பொருளுடன் உயிருள்ள பாம்பு சப்ளை செய்த அமேசான்: வாடிக்கையாளர் அதிர்ச்சி

பெங்களூரு: அமேசான் நிறுவன பணியில் குளறுபடியால், எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலருடன் உயிருள்ள பாம்பு சப்ளை செய்யப்பட்டது. இதனை வாங்கிய வாடிக்கையாளர் கடும் அதிர்ச்சியடைந்தார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி, அம்பேத்கர் சிலைகளை பழைய இடத்திற்கு மாற்றுங்கள்: சபாநாயகருக்கு கார்கே கடிதம்

மக்களவை சபாநாயகர் மற்றும் மாநிலங்களவை தலைவர் ஆகியோருக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று எழுதிய கடிதத்தில்
காந்தி, அம்பேத்கர் மற்றும் பிற தேசியத் தலைவர்களின் சிலைகள் உரிய மரியாதையுடன் மீண்டும் அதன் பழைய இடங்களுக்கே மாற்றப்பட வேண்டும்’’ என கூறி உள்ளார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ ஆந்திர துணை முதல்வராக பதவி ஏற்றார்பவன் கல்யாண்: 

திருமலை: ஆந்திர மாநில துணை முதல்வராக பவன் கல்யாண் நேற்று பொறுப்பேற்று கொண்டு, முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ கோவில்பட்டி ஆர்டிஓ ஆபீசில் காக்கி சட்டை, லுங்கி அணிந்து விஜிலென்ஸ் போலீஸ் ரெய்டு:

கோவில்பட்டி: கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், கைலி-காக்கி சட்டை அணிந்து ஆட்டோ டிரைவர்கள் போல லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நுழைந்து அதிரடி சோதனை நடத்தியதால பரபரப்பு ஏற்பட்டது.ஆர்டிஓ ஆபீஸ் பணியாளர்கள் மற்றும் புரோக்கர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 910ஐ லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. அங்கிருந்த கழிவறையில் வீசப்பட்டிருந்த பணத்தையும் போலீசார் கைப்பற்றினர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ நடுரோட்டில் கால்மேல் கால்போட்டு தூங்கிய குடிமகன் லாரி மோதி பலி: 

இடைப்பாடி: குடிபோதையில் நடுரோட்டில் சாவகாசமாக கால் மீது கால் போட்டபடி படுத்திருந்த மேட்டூர் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர் மீது, டேங்கர் லாரி ஏறியதில் தலை நசுங்கி பலியானார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பள்ளி வேன் குளத்தில் கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்

தொண்டைமான் ஊரணி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் அருகில் உள்ள குளத்தில் கவிழ்ந்து, குமிழிக்கட்டையில் மோதி சாய்ந்தது. இதில் 15 மாணவர்கள் காயமடைந்தனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ சசிகலா, ஓபிஎஸ்சை கலாய்த்த எடப்பாடி :

தஞ்சாவூர்: அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்று கூறிய சசிகலா, ஓபிஎஸ்சை எடப்பாடி கலாய்த்து பேட்டி அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

என்னது சசிகலா ரீ என்ட்ரியா? வேலைக்கு போறதா? இன்னிக்கு வேலைக்கு போயிட்டு 3 வருஷம் நின்னுட்டு மறுபடியும் வேலைக்கு சேர்ந்துக்கறதா? பொது வாழ்வில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு இப்போ ரீ என்டரினு சொல்றாங்க?. இப்போதுதான் கட்சியை காப்பாற்ற போறாரா? இத்தனை நாள் கட்சியை காப்பாற்றியது யாரு? தொண்டன்.அதிமுகவுக்கும், சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை 
இவ்வாறு அவர் கூறினார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ தமிழ்நாடு வேளாண்மை பல்கலை தரவரிசை பட்டியல் வெளியீடு 4 மாணவிகள் முதலிடம்: 

விழுப்புரம், திருநெல்வேலி, கடலூர், அரியலூரை சேர்ந்த 4 மாணவிகள் முதலிடம் பிடித்துள்ளனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

 ✍️ சிதம்பரம் அண்ணாமலை பல்கலை பெயரில் போலி சான்றிதழ்கள் தயாரித்த தீட்சிதர் உள்பட 2 பேர் கைது

புவனகிரி: சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலை பெயரில் போலி சான்றிதழ்கள் தயாரித்த தீட்சிதர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ தீ விபத்தில் பலியானவர் குடும்பங்களுக்கு தலா ரூ.12 லட்சம் இழப்பீடு: குவைத் அரசு அறிவிப்பு

துபாய்: குவைத் நாட்டில் உள்ள மங்காப் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் கடந்த 12 ம்தேதி பயங்கர தீவிபத்து ஏற்பட்டதில் 46 இந்தியர்கள் உட்பட 50 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.12.5 லட்சம் இழப்பீடு வழங்க குவைத் மன்னர் ஷேக் மேஷால் அல் அகமது அல் ஜபேர் அல் சபா உத்தரவிட்டுள்ளார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலை விபத்தில் 2 பேர் பலி ஆட்டோ ரேஸில் ஈடுபட்ட டிரைவர்கள் உள்பட 7 பேர் கைது: 

மீஞ்சூர் – வண்டலூர் வெளிவட்ட சாலையில் விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவத்தில், ஆட்டோ ரேஸில் ஈடுபட்ட டிரைவர்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், 3 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ சட்டசபை கூட்டம் இன்று துவக்கம்: பலத்தை காட்ட அ.தி.மு.க., முனைப்பு

சென்னை: லோக்சபா தேர்தலுக்குப்பின், தமிழக சட்டசபை கூட்டம், இன்று(ஜூன் 20) காலை துவங்குகிறது. இக்கூட்டத் தொடரில், மாநிலத்தின் பல்வேறு பிரச்னைகளை எழுப்பி, தங்கள் பலத்தை காட்ட அ.தி.மு.க., உள்ளிட்ட எதிர்கட்சிகள் முனைப்புடன் உள்ளன.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ ரேபிஸ் நோயால் 16 பேர் உயிரிழப்பு: 1 லட்சம் தடுப்பூசி மருந்து கையிருப்பு

சென்னை : தமிழகத்தில் இந்தாண்டில், 'ரேபிஸ்' என்ற வெறிநாய் நோயால் பாதிக்கப்பட்டு, 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ சந்துரு அறிக்கையின் பரிந்துரையை ஏற்கக்கூடாது: ஹிந்து அமைப்புக்கள் எதிர்ப்பு

சென்னை: ''ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அறிக்கையின் பரிந்துரைகள், ஒரு சார்பாக இருக்கின்றன; அவற்றை ஏற்கக்கூடாது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்; பல்வேறு ஹிந்து அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

 ✍️ தென் ஆப்ரிக்கா 5வது வெற்றி: அமெரிக்காவை வீழ்த்தியது

✍️ சூப்பர்-8 சுற்றில் இன்று: இந்தியா – ஆப்கான் மோதல்

✍️ 4 ரன் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி

பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்

*பாடி பா.கார்த்திக்* 
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
Comments