🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳
தேதி: 23/6/2025
*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520
🌹🇮🇳🇮🇳🔥🙏🔥👍🥶✍️✍️✒️🙏🇮🇳🔥😂
🌷பேனாமுள் பத்திரிகை செய்திகள்🌷
குறள் : 60
மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.
மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்: நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்று கூறுவர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ சென்னை - ரீடைல் சந்தையில்
தங்கம் விலை இன்று
18 K தங்கம்/ g : ₹ 5484
22 K தங்கம்/ g. : ₹ 6695
24 K தங்கம்/g : ₹ 7304
வெள்ளி /g : ₹ 96.50
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
*ஆவடி, பருத்திப்பட்டு, 48வது வார்ட், லட்சுமி கிரீன் சிட்டியில் டிரான்ஸ்பார்மர் பொருத்தி திறந்து வைத்த நிலையில் பொம்மை போல் உள்ளது ஒயர்கள் அங்கங்கே சுருட்டி வைக்கப்பட்டு மின்சாரம் கொடுக்காமல் இருந்து வருகிறது டிரான்ஸ்பார்மர் திறந்த வைத்த நிலையிலும் மின்சாரம் இல்லாமல் மக்கள் தவித்தவிப்பு*
ஆவடி பருத்திப்பட்டில் உள்ள லட்சுமி க்ரீன் சிட்டி 48வது வார்டில் இரண்டு வருடங்களாக லோவேல்டேஜ் (மின்சாரம்) வந்து கொண்டிருந்த நிலையில் வீட்டில் உள்ள பல பொருட்கள் வீணாகிக் கொண்டிருந்தது இதனால் சம்பந்தப்பட்ட பருத்திப்பட்டு மின்வாரிய அதிகாரியிடம் மின் பற்றாக்குறை காரணமாக ட்ரான்ஸ்ஃபார்மர் வைத்து லட்சுமி கிரீன் சிட்டி பகுதி மக்கள் குறைகளை தீர்க்க வேண்டும் என்று மனு கொடுத்திருந்தார்கள் அந்த செய்தி மூன்று மாதத்திற்கு முன்பே நமது பத்திரிகைக்கு தகவல் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு இப்பகுதியில் தொடர்ந்து மின்பற்றக்குறை இருந்து வருகிறது அதற்கு நிரந்தர தீர்வாக டிரான்ஸ்பார்ம் பொருத்தி மின் பற்றாக்குறையை தீர்க்க வேண்டும் என்று மூன்று மாதங்களாக தொடர்ந்து அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து வந்தோம் 19/6/2024 அன்று டிரான்ஸ்பார்மர் அப்பகுதி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது ஆனால் இந்நாள் வரை டிரான்ஸ்பார்மரில் கரண்ட் இல்லாமல் பொம்மை போல் உள்ளது மின்சார ஒயர்கள் அங்கங்கே சுருட்டி வைக்கப்பட்டுள்ளது அவசர அவசரமாக திறந்து வைக்கப்பட்ட காரணம் என்ன
திறந்து வைப்பது மட்டும் இல்லாமல் மின்சார கொடுக்காமல் இருப்பதற்கான காரணம் என்ன
உடனடியாக சம்பந்தப்பட்ட மின்வாரிய உயர் அதிகாரிகள் இதில் தலையிட்டு மின் பற்றாக்குறைவிலிருந்து அப்பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில் முறைகேடு செய்தால் 10 ஆண்டு சிறை ரூ.1 கோடி அபராதம்: அதிரடி சட்டம் அமலுக்கு வந்தது*
நீட், நெட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை தொடர்ந்து, ஒன்றிய அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் முறைகேடு செய்தால் அதிகபட்சம் 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 கோடி அபராதமும் விதிக்கக் கூடிய கடுமையான சட்டம் அமலுக்கு வந்துள்ளது
🌹 *பேனமுள் செய்திகள்*🌹
✍️ *அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டி வந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகம் இடிப்பு: ஆந்திராவில் பரபரப்பு*
ஆந்திராவில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு வந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகம் பொக்லைன் கொண்டு இடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *பீகாரில் மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்தது*
பீகாரில் அடுத்தடுத்து 2 பாலங்கள் இடிந்த நிலையில் மேலும் ஒரு பாலம் இடிந்துள்ளது.
🌹 *பேனாமுள் செய்தகள்*🌹
✍️ *புதிய அரசு அமைந்த பின் முதன்முறையாக பிரதமர் மோடி – வங்கதேச பிரதமர் சந்திப்பு*
பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில் முதன் முறையாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியா வந்துள்ளார். பிரதமர் மோடியை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையில் பல்வேறு ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டன. இந்தியா-வங்கதேசம் இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
🌹 *பேனாமுள் செய்தகள்*🌹
✍️ *குஜராத்தில் மின்னல் வேகத்தில் சென்ற பள்ளி வேனில் இருந்து கீழே விழுந்த 2 மாணவிகள்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்*
குஜராத்தில் அதிவேகமாக சென்ற வேனில் இருந்து கீழே விழுந்த மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். டிரைவர் கைது செய்யப்பட்டார்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *சென்னை உள்பட 21 ஏர்போர்ட்களில் அதிவேக இமிக்ரேஷன் அறிமுகம்: அமித்ஷா தொடங்கி வைத்தார்*
சென்னை உள்பட 21 ஏர்போர்ட்களில் பாஸ்ட் டிராக் இமிக்ரேஷன் -டிரஸ்டட் டிராவலர் திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.
🌹 *பேனாமுள் செய்தகள்*🌹
✍️ *திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியது*
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பகுதியில் நேற்று காலை சிறிது நேரம் கடல் நீரானது சுமார் 60 அடி உள்வாங்கி காணப்பட்டது. இதனால் கடலில் பாறைகள் வெளியே தெரிந்தது. பின்னர் கடல் இயல்பு நிலைக்கு மாறியது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *பின்னால் இருந்து நெம்புவதற்கு பதிலாக பக்தர்கள் பக்தி பரவசத்தில் இழுத்ததால் நெல்லையப்பர் தேர் வடம் அறுந்தது: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்*
தேரை பின்னால் இருந்து நெம்புவதற்கு பதிலாக பக்தர்கள் பக்தி பரவசத்தில் ஒரே நேரத்தில் இழுத்ததன் காரணமாகவே தேர்வடம் அறுந்தது என விளக்கினார்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *பம்ப் செட்டில் குளித்தபோது மின்சாரம் பாய்ந்து 2 சிறுவர்கள் பலி*
இருவரும், நேற்று மதியம் அங்குள்ள வயல்வெளியில் உள்ள மோட்டார் பம்ப்செட்டில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது மேலே ஒரு கம்பத்திலிருந்து மற்றொரு கம்பத்திற்கு செல்லும் மின் கம்பி அறுந்து இவர்கள் மேல் விழுந்து தண்ணீரில் மின்சாரம் பாய்ந்தது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *பேரவையில் பேச அனுமதிக்கவில்லை என கூறி அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு*
கள்ளக்குறிச்சி விஷசாராய பலி குறித்து அதிமுக உறுப்பினர்கள் நேற்றும் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டு, வெளிநடப்பு செய்தனர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *கல்லூரி பாடத்தில் அரியர்ஸை முடிக்குமாறு அறிவுரை கூறிய தாய், தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்து உடல்களை சாக்குமூட்டையில் கட்டிய மாணவன்*
அரியர்ஸை முடிக்குமாறு அறிவுரை கூறிய தாய், தம்பியை கழுத்தில் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு, சாக்குமூட்டையில் உடல்களை கட்டிய சம்பவம் திருவொற்றியூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த திருவையாறு வாலிபர் அதிரடி கைது*
சென்னை விமான நிலையத்திற்கு வந்த 6 வெடிகுண்டு மிரட்டல்களில், ஒரு வெடிகுண்டு மிரட்டலில் சம்பந்தப்பட்ட திருவையாறை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
🌹 *பேனாமுள் செய்தகள்*🌹
✍️ *கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து மருத்துவமனையில் உள்ள 76 நபர்களின் உடல்நிலை முன்னேற்றம்:பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு*
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்த 76 நபர்களின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து உள்ளது.சிறப்பு மருத்துவ குழுவை சேர்ந்த வெளி மாவட்ட டாக்டர்கள் 56 பேர் 24 மணி நேர கண்காணிப்பில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.பலி எண்ணிக்கை 55ஆக உயர்ந்துள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 8ம் தேதி முதல் தொடங்குகிறது*
அனைத்துவகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 8ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *20 நாளுக்குள் 4 மாவட்டங்கள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் சென்னை மாநகராட்சி வார்டுகள் 200ல் இருந்து 300ஆக உயரும்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்*
அடுத்த 20 நாட்களுக்குள் 4 மாவட்டங்கள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்றும், சென்னை மாநகராட்சியில் வார்டு எண்ணிக்கை 200ல் இருந்து 300 ஆக உயர வாய்ப்புள்ளது என்றும், தரம் உயர்த்துவதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
✒️ *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *தமிழக மீனவர்கள் 18 பேர் இலங்கை கடற்படையால் கைது*
ராமேஸ்வரம் மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இன்று(ஜுன் 23) அதிகாலையில் மீனவர்கள் 18 பேரை கைது செய்து காங்கேசன் துறைமுகத்துக்கு இலங்கை கடற்படையினர் அழைத்துச் சென்றனர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *84 ஊர்களில் 808 பேர் கைது 15,000 லிட்டர் சாராயம், ஊறல்கள் அழிப்பு*
கள்ளக்குறிச்சி சம்பவத்தை தொடர்ந்து, தமிழகத்தில் 84 இடங்களில், கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட 808 பேர், கைதாகியுள்ளனர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை*
நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில், இன்று மிக கன மழை பெய்யும். திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி,கன்னியாகுமரி கன மழை பெய்யும்.
கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில், நாளை முதல் இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
இரவு நேரங்களில், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.36 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும்.
🌹பேனாமுள் செய்திகள்🌹
✍️ *அமெரிக்காவை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்: ஹோப் அதிரடி அரை சதம்*
🌹பேனாமுள் செய்திகள்🌹
✍️ *காலை 9.15 மணிக்குள் வரவில்லை என்றால் மத்திய அரசு ஊழியர்களுக்கு அரைநாள் சம்பளம் பிடித்தம்: புதிய உத்தரவு அமல்*
மத்திய அரசின் பணியாளர் நலத்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில், ‘நாட்டின் அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் காலை 9.15 மணிக்குள் அலுவலகத்திற்கு வரவேண்டும்.அங்குள்ள பயோமெட்ரிக் வருகை முறையை பின்பற்ற வேண்டும். மூத்த பணியாளராக இருந்தாலும் அல்லது இளைய பணியாளராக இருந்தாலும், அனைத்து ஊழியர்களும் பயோமெட்ரிக் வருகைப் பதிவு கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அலுவலகத்திற்கு தாமதமாக வந்தால் அரை நாள் வருகை பதிவு பதியப்படும்.
பேனாமுள் செய்திகளுக்காக உங்கள்
*பாடி பா.கார்த்திக்*