🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳
தேதி: 24/6/2025
*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520
🌹🇮🇳🇮🇳🔥🙏🔥👍🥶✍️✍️✒️🙏🇮🇳🔥😂
🌷*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*🌷
குறள் : 61
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.
பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம் மதிப்பதில்லை.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *பெட்ரோல், டீசல் விலையில் 100வது நாளாக மாற்றம் இல்லை*
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K தங்கம்/ g : ₹ 5483
22 K தங்கம்/ g. : ₹ 6694
24 K தங்கம்/g : ₹ 7303
வெள்ளி /g : ₹ 96.40
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
*ஆவடி, பருத்திப்பட்டு, 48வது வார்ட், லட்சுமி கிரீன் சிட்டியில் டிரான்ஸ்பார்மர் பொருத்தி திறந்து வைத்த நிலையில் பொம்மை போல் உள்ளது ஒயர்கள் அங்கங்கே சுருட்டி வைக்கப்பட்டு மின்சாரம் கொடுக்காமல் இருந்து வருகிறது டிரான்ஸ்பார்மர் திறந்த வைத்த நிலையிலும் மின்சாரம் இல்லாமல் மக்கள் தவித்தவிப்பு*
ஆவடி பருத்திப்பட்டில் உள்ள லட்சுமி க்ரீன் சிட்டி 48வது வார்டில் இரண்டு வருடங்களாக லோவேல்டேஜ் (மின்சாரம்) வந்து கொண்டிருந்த நிலையில் வீட்டில் உள்ள பல பொருட்கள் வீணாகிக் கொண்டிருந்தது இதனால் சம்பந்தப்பட்ட பருத்திப்பட்டு மின்வாரிய அதிகாரியிடம் மின் பற்றாக்குறை காரணமாக ட்ரான்ஸ்ஃபார்மர் வைத்து லட்சுமி கிரீன் சிட்டி பகுதி மக்கள் குறைகளை தீர்க்க வேண்டும் என்று மனு கொடுத்திருந்தார்கள் அந்த செய்தி மூன்று மாதத்திற்கு முன்பே நமது பத்திரிகைக்கு தகவல் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு இப்பகுதியில் தொடர்ந்து மின்பற்றக்குறை இருந்து வருகிறது அதற்கு நிரந்தர தீர்வாக டிரான்ஸ்பார்ம் பொருத்தி மின் பற்றாக்குறையை தீர்க்க வேண்டும் என்று மூன்று மாதங்களாக தொடர்ந்து அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து வந்தோம் 19/6/2024 அன்று டிரான்ஸ்பார்மர் அப்பகுதி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது ஆனால் இந்நாள் வரை டிரான்ஸ்பார்மரில் கரண்ட் இல்லாமல் பொம்மை போல் உள்ளது மின்சார ஒயர்கள் அங்கங்கே சுருட்டி வைக்கப்பட்டுள்ளது அவசர அவசரமாக திறந்து வைக்கப்பட்ட காரணம் என்ன
திறந்து வைப்பது மட்டும் இல்லாமல் மின்சார கொடுக்காமல் இருப்பதற்கான காரணம் என்ன
உடனடியாக சம்பந்தப்பட்ட மின்வாரிய உயர் அதிகாரிகள் இதில் தலையிட்டு மின் பற்றாக்குறைவிலிருந்து அப்பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *நீட் தேர்வில் முறைகேடு சிபிஐ விசாரணை தொடங்கியது*110 மாணவர்கள் தகுதி நீக்கம்*
நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *கருணை மதிப்பெண் பெற்ற 1,563 பேருக்கு நடத்தப்பட்ட நீட் மறுதேர்வை 750 பேர் எழுதவில்லை*
கருணை மதிப்பெண் பெற்ற 1,563 பேருக்கு நடத்தப்பட்ட நீட் மறுதேர்வை 750 பேர் எழுதவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் முக்கிய குற்றவாளி உள்பட 3 பேர் கைது*
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் பதுங்கியிருந்த சிவகுமார் என்ற முக்கிய குற்றவாளியை மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவு போலீஸ் கைது செய்தது. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர், விஷச் சாராயம் தயாரிக்க மெத்தனால் விநியோகம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இதுவரை 10 பேரை கைது செய்துள்ளனர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *கள்ளகுறிச்சியில் விஷசாராயம் குடித்த மேலும் 3 பேர் சாவு பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு*
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *விண்ணுக்கு செயற்கைக்கோள்களை சுமந்துசென்று பூமிக்கு மீண்டும் திரும்பும் ஏவுகணை சோதனை வெற்றி*
விண்ணுக்கு செயற்கைக்கோள்களை சுமந்துசென்று பூமிக்கு மீண்டும் திரும்பும் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *சாலையோர தெருக்குழாயில் குடிநீர் பிடித்துக்கொண்டிருந்த பெண்கள் கூட்டத்தில் கார் மோதி 3 பேர் பலி*
திருச்செந்தூர் அருகே முக்காணியில் சாலையோர குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்த பெண்கள் கூட்டத்தில் அதிவேகமாக வந்த கார் மோதியதில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர். இவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி அளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *பதவி உயர்வு இடமாறுதல் இல்லை: அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி*
அரசு பள்ளி ஆசிரி யர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங்கில், பதவி உயர்வு இடமாறுதல் வழங்கப்படாததால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *மெட்ரோ ரயில்களில் டைனமிக் ரூட் மேப்: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது*
மெட்ரோ ரயிலில் புதிதாக பயணிக்கும் பொதுமக்ளுக்கு, வழித்தட விவரம் மற்றும் அடுத்த நிறுத்தம் உள்ளிட்ட தகவல்களை வழங்குவதற்காக டைனமிக் ரூட் மேப் என்ற புதிய சிஸ்டம் ஒன்றை சென்னை மெட்ரோ ரயிலில் பொருத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *திருவொற்றியூரில் தாய், தம்பி கொலை செய்யப்பட்ட சம்பவம் வெளிநாட்டில் இருந்து கணவர் திரும்புவதில் தாமதம்*
பாஸ்போர்ட்டை புதுப்பிக்காததால் சிக்கல், கைதான கல்லூரி மாணவன் கதறி அழுதார்.
திருவொற்றியூரில் தாய், தம்பியை கத்தியால் குத்தி உடல்களை சாக்குமூட்டையில் கட்டிய சம்பவத்தில், கொலையுண்ட பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருந்து திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கொலை செய்யப்பட்ட இருவரது உடல்களும் அடக்கம் செய்வதில் தாமதம் ஏற்பட்டு பரபரப்பு நிலவுகிறது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *மதுரவாயலில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாநகராட்சி கழிவுநீர் தொட்டியில் தொழிலாளி சடலமாக மீட்பு*
சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் 11வது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் மாநகராட்சி சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டியில் சரண்ராஜ் சடலமாக கிடந்தார்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *திருவொற்றியூரில் மாடு முட்டியதால் படுகாயமடைந்த பெண்ணின் தொடை பகுதி அழுகியது: மாநகராட்சி உதவ கோரிக்கை*
திருவொற்றியூரில் மாடு முட்டியதில் படுகாயமடைந்த பெண்ணின் தொடை பகுதி அழுகியதால் சென்னை மாநகராட்சி உதவ வேண்டும் என அவரது கணவர் கோரிக்கை வைத்துள்ளார்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு: 3 விசைப்படகுகளும் பறிமுதல், இன்று முதல் வேலைநிறுத்தம்*
மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்களை விடுவிக்க கோரி இன்று முதல் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *முதுநிலை நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது ஆயிரக்கணக்கான மருத்துவர்களை நம்பிக்கை இழக்கச் செய்துள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்*
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *கள்ளக்குறிச்சி சம்பவம் அதிமுக இன்று ஆர்ப்பாட்டம்*
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *ஒருநாள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது: உயர்கல்வி, பள்ளி கல்வி, வருவாய் துறை மானியக்கோரிக்கை விவாதம் நடக்கிறது*
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் நூலகங்கள் : மெட்ரோ அதிகாரிகள் தகவல்*
ரயில் பயணிகளின் வசதிக்காக சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் நூலகங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
🌹 *பேனாமுள் செய்தகள்*🌹
✍️ *மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக எம்பிக்கள் நாளை பதவியேற்பு*
மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற தமிழகத்தை சேர்ந்த 39 எம்பிக்கள் நாளை பதவியேற்கின்றனர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *தமிழ்நாட்டின் மலைப்பகுதி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு*
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *திருச்செந்தூர் கடலில் தவறவிட்ட 5 சவரன் தங்க நகை மீட்பு: 4 மணி நேரம் தேடுதலுக்கு பின் ஒப்படைப்பு*
திருச்செந்தூர் கடலில் நீராடும்போது பக்தர் தவறவிட்ட தங்க நகையை கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் சுமார் 4 மணி நேரம் தேடுதலுக்கு பிறகு மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *நாடாளுமன்றம் இன்று கூடுகிறது புதிய எம் பி கள் பதவி ஏற்கிறார்கள்*
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *திருவாரூர் அருகே வீடு கட்டும்போது 5 கிலோ எடை ஐம்பொன் விஷ்ணு சிலை கண்டெடுப்பு: 12ம் நூற்றாண்டை சேர்ந்தது*
திருவாரூர் அருகே வீடு கட்டும் பணியின் போது, 12ம் நூற்றாண்டை சேர்ந்த 5 கிலோ எடையுடைய ஐம்பொன் விஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *சென்னையில் இன்று இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்பு*
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *இன்னும் 4 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்*
'இன்று முதல் நான்கு நாட்களுக்கு, இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *வீட்டில் பேன் சுவிட்ச் போட்டபோது மின்சாரம் பாய்ந்து தாத்தா, பேரன் பலி*
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ *ஆப்கானிடம் வீழ்ந்தது ஆஸ்திரேலியா*
✍️ *6 விக்கெட் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றி; தென் ஆப்ரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா*
✍️ *இங்கிலாந்துக்கு எதிராக அமெரிக்கா திணறல்*
✍️ *இந்தியா- ஆஸ்திரேலியா இன்று மோதல்*
பேனாமுள் செய்திகளுக்காக உங்கள்
*பாடி பா.கார்த்திக்*